அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-27
அன்னையின் தட்சிணேசுவர நாட்களைக் குறிப்பிட்டு ஓர் அற்புதக் கருத்தைக் கூறுகிறார் சவாமி தபஸ்யானந்தர்.
இன்று நாம் அன்னையை ஓர் அவதாரப் பெண்ணாக பக்திக் கண்ணுடன் பார்க்கிறோம். இதனால் அவரது தட்சிணேசுவர நாட்களுடைய சிரமங்களின் உண்மைப் பரிமாணத்தை அறிய முடிவதில்லை. இத்தனை சிரமங்களுடன் வாழ்ந்து குருதேவருக்கு சேவை செய்வதன் மூலம் உயர்நிலை பக்தியின் ஒர் உன்னத லட்சியமாகத் திகழ்கிறார் அன்னை. குருதேவரின் வேறு எந்த பக்தரும் இத்தகைய சிரமங்களையும் அசௌகரியங்களையம் தாங்க வேண்டியிருக்கவில்லை. குருதேவரின் இறுதி நாட்களில் இரவும், பகலும் அவருடனே தங்கி சேவை செய்து வந்த சுவாமி ராமகிருஷ்ணானந்தர் போன்ற ஓரிருவரை வேண்டுமானால் ஓரளவுக்கு நாம் சொல்ல முடியும்.
அன்னையின் இந்த சேவை பக்தி-சாதனையாக ஆகிவிட்டது.
தான் படுகின்ற துன்பங்களும் தான் பக்தி செய்கின்றவரின் மகிழ்ச்சிக்காக அல்லது நன்மைக்காகவே என்பதை அறிகின்ற பக்தனின் மனம் ஆனந்தப் பெரு வெள்ளத்தில் திளைக்கிறது.
அன்னை பின்னாளில் கூறினார். அந்த நாட்களில் எந்தத் துன்பமும் எனக்குத் துன்பமாகவே பட்டதில்லை. குருதேவரின் சேவைக்காக என்னும்போது எந்த அசௌகரியமும் என்னைத் தொடமுடிந்ததில்லை. சிரமங்களுக்கு இடையிலும் என் நாட்கள் ஆனந்தமாகவும் அமைதியாகவும் கழிந்தன.
ஆ, என்ன ஆனந்தம் அது! அப்போதெல்லாம் தட்சிணேசுவரம் ஓர் ஆனந்தச் சந்தையாகவே திகழ்ந்தது.
பக்தர்கள் வருவதும் ஆடிப்பாடுவதும் பரவச நிலைகளுமாக குருதேவரின் அறை ஆனந்த ச் சந்தையாகத் திகழும். ஆனால் அவரையே கணவரும் குருவும் தெய்வமுமாகக் கொண்ட அன்னையோ அதில் கலந்து கொள்ள முடியாமல் தவிப்பார். நான் மட்டும் பக்தர்களுள் ஒருவராக இருந்திருந்தால் எப்போதும் அவரது அருகிலேயே இருக்க முடியும் அவரது அமுத மொழிகளைக் கேட்டிருக்க முடியும் என்று ஏங்குவார். ஆனால் புல்லைவிடத் தாழ்ந்தவராக, பூமியை விடப் பொறுமையுடையவராகத் தன்னைக் கருதுகின்ற உயர்நிலை பக்தையாகிய அவர் தமது ஏக்கங்கள் எதையும் வெளிப்படுத்தியதில்லை, தமக்கென எந்தத் தனி உரிமையைக்கோரவும் இல்லை. குருதேவருக்கான சிறுசிறு பணிவிடைகளை அவ்வப்போது சென்று செய்து வருவதிலே அவர் நிறைவு கொண்டார். அந்த வாய்ப்புகளுக்குப் பங்கம் வந்த போதும் அவற்றை அமைதியாக ஏற்றுக் கொண்டார்.
ஒரு நாள் ஒரு பெண் அன்னையிடம், நீ ஏன் அடிக்கடி குருதேவரிடம் போக வேண்டும்? என்று கேட்டுவிட்டாள். இந்தக்கேள்வியால் அன்னை ஆத்திரப்படவில்லை மாறாக இவள் குருதேவருக்குச் சேவை செய்ய விரும்புகிறாள் போலும் என்று எண்ணியது அவர் மனம். எனவே தாம் சென்று செய்ய வேண்டிய பல வேலைகளை அந்தப் பெண்ணுக்காக விட்டுவிட்டார்.
உணவு எடுத்துச் செல்லும் நேரங்களில் மட்டுமே இப்போது அன்னையால் குருதேவரின் அருகில் இருக்க முடிந்தது. ஒரு முறை கோலாப்மா தன் வெகுளித்தனத்தால் இந்த வாய்ப்பையும் பறித்துக்கொண்டு விட்டார். குருதேவர் தன்னிடம் உணவு பரிமாறச் சொன்னதைப் பெரிதாக எடுத்துக்கொண்டு தான் பரிமாறினால் அவர் மிகவும் மகிழ்வதாகச் சொல்லிக் கொண்டாள். அதன் பின் தினமும் அவரே நகபத்திலிருந்து குருதேவருக்கு உணவு கொண்டு செல்லத் தொடங்கினார். அன்னைக்கு இருந்த ஒரே ஒரு வாய்ப்பும் பறிபோனது.
இரவு நேரத்தில் குருதேவர் கோயிலின் வட எல்லையிலிருந்த சவுக்குத்தோப்பிற்கு இயற்கைக்கடன்களைக் கழிப்பதற்காகப் போகும் போதும் வரும் போதும் நகபத்தைக் கடந்து செல்லும் போது பார்த்துக் கொள்வார்.
குருதேவரைப் பார்க்க முடியாததால் மிகுந்த வேதனையுற்றாலும் இது பற்றி யாரிடமும் எதுவும் கூறாமல் தமக்குள்ளேயே அனைத்தையும் தாங்கிக்கொண்டார். அன்னை.
இறைவன் எல்லோருக்கும் உரியவர் என்று குருதேவர் கற்பித்திருந்தாரே அது போல் குருதேவரும் எல்லோருக்கும் உரியவர் என்று தம்மை தாமே தேற்றிக் கொள்வார்.
பின்னாளில் இந்த நாட்களைப்பற்றி அன்னை கூறினார். சில வேளைகளில் அவரைஒரு முறை கூட பார்க்காமல் இரண்டு மாதங்கள் கடந்து சென்று விடும். அப்போதெல்லாம் நான் என் மனத்திடம் மனமே அவரை தினமும் தரிசிக்கும் அளவிற்கு நீ அப்படி என்ன புண்ணியம் செய்து விட்டாய்? என்று கூறி என்னை நானே தேற்றிக் கொள்வேன். ஆனால் அன்னையின் நினைவுகள் மட்டும் அவரையே எப்போதும் வலம் வந்தன. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மூங்கில் தட்டியின் அருகில் சென்று துவாரம் வழியாக குருதேவரின் அறையில் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பார்.
பறவைகள் பறக்கும் போதும், இலைகள் சலசலக்கும் போதும் நீ வருவதாக அவள் எண்ணுகிறாள். நனைந்த கண்களுடன் உன் வரவை எதிர்பார்க்கிறாள். கண்ணனை பிரிந்து வாடிய ராதையின் மனநிலையை இங்கு அன்னையிடம் நாம் காண்கிறோம்.
குருதேவர் அன்னையின் இதய ஏக்கத்தை அறியாமல் இருக்கவில்லை. எனவே அவர் தமது அறையில் நடப்பவற்றை அன்னை காண்பதற்காக வடக்கு வாசலை எப்போதும் திறந்தே வைத்திருப்பாராம். மூங்கில் தட்டியிலுள்ள துவாரம் வரவரப் பெரிதாகிக் கொண்டே போவதைக் கண்ட அவர் ஒரு நாள் தமது அண்ணன் மகனிடம் வேடிக்கையாக ஓ ராம்லால், தட்டியில் துவாரம் பெரிதாகிக் கொண்டே வருகிறது. ஒரு நாள் உன் சித்தியின் முகத்திரை விரதம் காற்றில் பறக்கப் போகிறது பார் என்றார். அதற்கு ராம்லால் சித்தப்பா அதற்கு நீங்கள் தான் பொறுப்பு. நான் அந்த வடக்கு வாசலை மூடினாலும் நீங்கள் தாம் மீண்டும் மீண்டும் திறந்து வைக்கிறீர்கள் என்றான்.
பக்தி, சேவை, ஈடிணையற்ற புனிதம் இவற்றின் வாயிலாக அன்னையிடம் இந்த நாட்களில் உயர்நிலை யோக சித்திகளும், எங்கும் இறையுணர்வை உணர்கின்ற ஆற்றலும் வெளிப்பட்டிருந்தன.
தமது அனுபவத்தைப் பின்னாளில் அவர் நிவேதிதைக்கு எழுதிய கடிதத்தில் அற்புதமாக இவ்வாறு குறிப்பிடுகிறார். இந்த பிரபஞ்சத்தின் உயிர்துடிப்பான இறைவன் தன் மகிமையைத் தானே இசைத்துக் கொண்டிருக்கிறான். ஆதி அந்தமற்ற இடையீடற்ற அந்த சங்கீதத்தை யே, அழியக் கூடிய இந்தப் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு பொருளிலும் நீ கேட்கிறாய். மரங்களும் மலைகளும் பறவைகளும் அவன் புகழைப்பாடிக் கொண்டிருக்கின்றன. தடசிணேசுவரத்தின் அடர்ந்து பரந்த ஆலமரம் இருக்கிறதே. அது அன்னை காளியின் மாட்சிமையைப் போற்றிக் கொண்டிருக்கிறது. அதைக் கேட்பதற்கான காதுகளைப் பெற்றவன் புண்ணியவான்.
மற்றொரு முறை ஒரு பக்தையிடம் கூறினார், நிலவு காய்கின்ற இரவகளில் நான் நகபத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து தியானம் செய்வேன் . எங்கும் பேரமைதி நிலவும். கங்கையில் இரவில் மீன்பிடிக்கின்ற மீனவர்கள் பாடுவது மட்டும் அவ்வப்போது அந்த அமைதியை ஊடுருவியபடியே எழுந்து அடங்கும். சில வேளைகளில் யாரோ புல்லாங்குழல் வாசிப்பார்கள்.குழலோசையின் அந்த இனிய நாதம் என்னைத்தழுவிச் செல்லும். என்னவோ அந்த நாதம் இறைவனிடமிருந்து வருவது போன்றே எனக்குத்தோன்றும். அந்தக் கடவுளைக் காண வேண்டும் என்று என் மனம் வேட்கையுற்று எழும். அப்படியே நான் சமாதி யில் ஆழ்ந்து விடுவேன்.
இவ்வாறு பலமுகப் பரிமாணங்களை, அமைதியாக ஆனால் அழுத்தமாகக் காட்டியவாறே சென்றது அன்னையின் வாழ்வு. அவரது வாழ்க்கையின் ஒரு முக்கியமான கட்டமாகிய தட்சிணேசுவர நாட்களில் நடந்த ஒரு சில நிகழ்ச்சிகளையும் அவருக்கும் குருதேவருக்கும் இடையில் இருந்த உறவுப் பிணைப்பையும் இப்போது காண்போம்.
-
தொடரும்...
13- அற்புதத் தம்பதியர்
அன்னையின் வாழ்வை இது வரை தொடர்ந்து வந்த நாம், அவர் மேலான ஆன்மீக அனுபவங்களைப் பெற்றவர் . மிக உயர்ந்த ஆன்மீக நிலையில் இருப்பவர் என்பதைக் காண்கிறோம். நமது வியப்புக்குரிய விஷயம் இது வல்ல. இத்தகைய உயர்நிலையிலுள்ள ஒருவர் தமது கணவருடன் கொண்டிருந்த அதிசய உறவுதான் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது. இத்தகைய உறவுக்கு அந்தக் கணவரும் உயர் ஆன்மீகநிலையில் இருப்பவர் என்பது ஒரு காரணமாக இருந்தாலும், அது மட்டும் தான் காரணம் என்று கூறிவிட முடியாது. அதை விட முக்கியக் காரணம் அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டிருந்தார்கள் என்பது தான். இல்லற வாழ்வில் இது மிக முக்கியமான ஒன்று எங்கோ பிறந்த இருவர் சேர்ந்து வாழும் போது பிரச்சனைகள் எழுவது இயல்பே. கணவனின் வாழ்க்கை இது என்று மனைவியும் மனைவியின் வாழ்க்கை இது என்பதைக் கணவனும் புரிந்து கொண்டு வாழ்க்கையை நடத்தும் போது அது சுமுகமாக ச் செல்கிறது. இத்தகைய புரிந்து கொள்தலுக்கு மிக முக்கியமான தேவை உயர் லட்சியம். இல்லற வாழ்க்கையில் உணவு உடை போன்ற தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வது வம்ச விருத்தி போன்ற சாதாரண நோக்கங்களுக்கும் மேல் உயர் லட்சியம் ஒன்று தேவை. அப்போது மட்டுமே வாழ்க்கை பயனுடையதாக அமையும்.
அத்தகைய உயர் லட்சியத்தைக் கைக்கொள்ளும் போது இல்லறக் கடமைகளைச் சரிவரச் செய்ய முடியாமல் போகிறது. என்று பலர் கூறுவதுண்டு. ஆனால் அது முற்றிலும் தவறு என்பது மட்டுமல்ல, உயர் லட்சியம் இருந்தால் மட்டுமே கணவன் மனைவி உறவு சிறப்பாக அமையும் என்பதைக் காட்ட வந்ததே அன்னையின் வாழ்வு. அன்னையும் குருதேவரும் எழுபத்தைந்து அடி தூரத்தில் வாழ்ந்தும் தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை இருவரும் சந்திக்காமல் இருந்திருக்கின்றனர். இருப்பினும் அவர்களுக்கிடையில் நிலவிய உறவுதான் எத்தகைய அற்புதமானது! இருவரும் கொண்டிருந்த உயர் லட்சியம் தான் அவர்களை இத்தகைய உன்னத உறவில் பிணைத்திருந்தது.
குருதேவர் மற்றும் அன்னையின் தெய்வீக உறவைப்பற்றி பேசுகையில் கௌரிமா, அன்னையும் குருதேவரும் 75 அடி தூரத்தில் தான் வாழ்ந்துவந்தார்கள். என்றாலும் ஒருவரையொருவர் பல நாட்கள் தொடர்ந்து சந்திக்க முடியவில்லை. ஆனாலும் இருவருக்குமிடையே எவ்வளவு ஆழமான அன்புறவு இருந்தது!
ஒரு முறை அன்னைக்குத் தலைவலி ஏற்பட்டபோது குருதேவர் ராம்லாலிடம், சிறிய குழந்தையைப்போல், ராம்லால் என்ன காரணத்தாலடா அவளுக்குத் தலைவலி வந்தது? என்று மிகுந்த வேதனையுடன் அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்ததை நான் பார்த்திருக்கிறேன் என்று குறிப்பிட்டார்.
குருதேவர் முற்றும் துறந்தவராக இருந்தும் பெண்களின் மனநிலையை நன்றாக அறிந்தவராக இருந்தார். தன் தேவைகளையும், சின்னசின்ன ஆசைகளையும் கூட கணவனே கவனித்து நிறைவேற்றுவதை விழையும் பெண்ணுள்ளம். எனவே தம்மால் முடிந்தவரை அவர் அன்னையின் ஆசைகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்தார்.
அன்னைக்கு நகைகள் அணிவதில் ஆசை இருந்தது. எனவே அவருக்கு நகை செய்து தர விரும்பினார் குருதேவர். கோயிலிலிருந்து மாதச்சம்பளமாக அவருக்கு ஏழு ரூபாய் கிடைத்து வந்தது. அந்தப்பணத்தை ஒரு பெட்டியில் போட்டு வைத்திருப்பது வழக்கம். அதைக் கொண்டு அன்னைக்கு நகைகள் செய்ய எண்ணினார் அவர் .
இதைப்பற்றி அன்னை கூறினார்., எனக்கு நகை அணிவதில் இருந்த ஆசையைக் குறிப்பிட்டு அவர் அவளது பெயர் சாரதை, அவள் சரஸ்வதியின் அவதாரம். அதனால் தான் நகைகள் அணிய விரும்புகிறாள் என்பார். ஒரு நாள் ஹிருதயனிடம் , உனது அந்தப் பெட்டியில் எவ்வளவு பணம் இருக்கிறதென்று பார்.
அவளுக்கு நல்ல தங்கநகை ஏதாவது செய்ய வேண்டும்.என்றார். அவருக்கு அப்போது உடல்நிலை சரியில்லை. இருந்தும் முன்னூறு ரூபாய் செலவு செய்து எனக்கு நகைகள் செய்து தந்தார்.
இங்கு நாம் கருத்தில் கொள்ள வெண்டியது. அவர் பணத்தைத் தொட முடியாதவர் என்பதைத்தான் அன்னை கைகளில் அணிந்திருக்கின்ற தங்க தங்க வளையல்கள். அப்போது குருதேவர் செய்து அணிவித்தவையே. குருதேவர் ஆன்மீக சாதனைகள் புரிந்த காலத்தில் பஞ்சவடியில் அவருக்கு சீதா தேவியின் காட்சி கிடைத்தது. சீதை அணிந்திருந்த பல வைரங்கள் பதிக்கப்பட்ட தங்க வளையல் அவரது கருத்தைக் கவர்ந்தது.
அந்தக் காட்சியில் கண்டவை போன்ற வளையல்களையே அவர் அன்னைக்காக செய்தார் என்று கூறப்படுகிறது. நான் நகை செய்து போடும் அளவுக்கு எனக்கும் அவளுக்கும் உறவு உண்டு என்று குருதேவர் வேடிக்கையாகக் கூறுவாராம்.
இந்த நகை தவிர, தங்க அட்டிகை, மூக்கில் வளையம், கம்மல், பொன் வளையல் என்று வேறு பல ஆபரணங்களையும் அன்னை அணிந்திருந்தார். அவை குருதேவரின் சாதனைக் காலத்தில் அவருக்காக மதுர்பாபு செய்து கொடுத்தவை.
கிடைக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பிலும் குருதேவர் அன்னையை மகிழ்ச்சியாக வைக்க முயன்றார். வேடிக்கை நிகழ்ச்சிகளுக்கும் குறைவில்லை.
ஒரு முறை குருதேவரின் திரு முன்னர் போட்டி ஒன்று நடந்தது. போட்டியாளர்களுள் அவரும் ஒருவர். அவருக்குப் போட்டியாகக் கலந்து கொண்டது பக்தர் ஒருவரின் மருமகன். இரண்டு பேருமே பொன்னிறம்.
யார் அதிக நிறத்துடன் இருக்கிறார்கள் என்பது தான் போட்டி. நடுவர் யார்? அன்னை தான்.
பஞ்சவடியின் அருகில் இருவரும் அன்னை காணும் படி நடந்து காட்டினார்கள். அன்னை இருவரின் நிறத்தையும் தொலைவில் இருந்தபடி கண்டார். நடுநிலை தவறாத அவர், இறுதியில் பக்தரின் மருமகன் குருதேவரை விட ஒரு மாற்று அதிக நிறமுடையவர் என்று தீர்ப்பளித்து அவரே வெற்றி பெற்றதாக அறிவித்தார்.
தம் துணைவியின் பிற்கால நலனுக்காகப் பணமும் சேர்த்து வைத்தார் குருதேவர். பணத்தையே தொட முடியாத அந்தத் துறவி செய்த இந்தச் செயலே அவர் தம் மனைவியிடம் கொண்டிருந்த ஆழ்ந்த உறவின் உன்னத வெளிப்பாடாகத் திகழ்கிறது.
அன்னை கூறினார், குருதேவர் துறவு என்ற சொல்லுக்கு இலக்கணமாக விளங்கினார் என்றாலும் என்னைப் பற்றிய கவலை அவருக்கு இருந்தது.
ஒரு நாள் அவர் என்னிடம் உன் செலவிற்கு மாதம் எவ்வளவு பணம் தேவைப்படும், என்று கேட்டார். ஐந்தோ ஆறோ ரூபாய் போதும்” என்றேன் நான். பிறகு சரி இரவில் எத்தனை சப்பாத்திகள் சாப்பிடுவாய்? என்று கேட்டார். வெட்கத்தால் குன்றிப் போனேன் நான். இதற்கு எப்படிப் பதில் சொல்வது என்று புரியாமல் தவித்தேன். ஆனால் அவரோ மீண்டும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார். வேறு வழியில்லாமல் ” ஐந்து அல்லது ஆறு சாப்பிடுவேன் ” என்று கூறினேன். அன்னை கூறியதை மனத்தில் வைத்துக்கொண்டு குருதேவர் சுமார் 600 ரூபாய் வைப்புத்தொகை இருந்தால் ,அதிலிருந்து வரும் வட்டியில் அன்னையால் சிரமின்றி வாழ முடியும் என்று கணக்கிட்டார். அவ்வாறே அந்தத் தொகையை பலராம் போஸிடம் கொடுத்து வைத்தார். அவர் அதனைத் தன் எஸ்டேட்டில் முதலீடு செய்து வட்டிப் பணமாகிய ரூபாய் முப்பதை ஆறுமாதத்திற்கு ஒரு முறை அன்னைக்கு அனுப்பிவைக்க எண்ணினார்.

No comments:
Post a Comment