அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-25
-
குருதேவரின் பக்தர்களுள் லட்சுமி நாராயணன் என்ற மார்வாரியும் ஒருவர். ஒரு நாள் குருதேவரின் படுக்கை விரிப்பு அழுக்காக இருப்பதைக் கண்டார் அவர். எனவே குருதேவரின் பெயரில் பத்தாயிரம் ரூபாயை வங்கியில் போட்டு அதிலிருந்து வரும் வட்டியைக் கொண்டு குருதேவர் தம் செலவுகளைப் பார்த்துக் கொள்ளும் படி வேண்டினார். துறவே உருவாக இருந்த குருதேவர் அந்த வேண்டுகோளுக்கு இணங்கவில்லை. மீண்டும் அந்தப் பேச்சை த் தம்மிடம் எடுக்க வேண்டாம் என்று கடுமையாகக் கூறிவிட்டார். அந்தப் பக்தர் விடாமல் வற்புறுத்தினார். அவரது தொந்தரவிலிருந்து விடுபடுவதற்காக எனக்கு இந்தப் பணம் தேவையில்லை. ஒரு வேளை சாரதை விரும்பினால் வாங்கிக் கொள்ளட்டும் எனக்கு ஆட்சேபனை இல்லை என்று கூறினார். ஆனால் அன்னையின் துறவுள்ளமும் சளைத்ததாக இருக்கவில்லை . எனவே அவரும் பணத்தை வாங்க மறுத்து , ‘ நான் வாங்கினாலும் அவரது சேவைகளுக்குத்தான் செலவாகும் . அது அவர் வாங்கியதுபோல்தானே ! ’ என்று கூறி , பணத்தை வாங்க மறுத்துவிட்டார் . அன்னையின் இந்தச் செயலால் குருதேவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார் .
-
எதைப்பேச வேண்டும் எதைப் பேசக் கூடாது என்கிற யோசனைகளைச் சிலவேளைகளில் இழந்துவிடுவார் கோலாப்மா . அவர் ஒருநாள் அன்னையிடம் சொன்னார் . ‘ அம்மா , நேற்று இங்கு வந்து மனமோகனின் தாய் என்னிடம் , “ குருதேவரோ முற்றும் துறந்த துறவியாக இருக்கிறார் . ஆனால் அன்னையோ கம்மல் , வளையல் என்று எல்லா அணிந்து அலங்கார தேவியாக இருக்கிறாள் . இது பார்ப்பதற்கு நன்றாகவா இருக்கிறது ? என்று கூறினாள் . ’ அப்போது அன்னை அதற்கு எதுவும் சொல்லவில்லை . அமைதியாக அமர்ந்திருந்தார் . மறுநாள் யோகின்மா அன்னையைக் காண நகபத் சென்றபோது அவர் உருவம் மாறிப் போயிருந்தது . கைகளில் அணிந்திருந்த இரண்டு வளையல்களைத் தவிர எல்லா நகைகளும் கழட்டப்பட்டிருந்தன் . யோகின்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை . ஏதோ நடந்திருக்கிறது என்பதை மட்டும் அவரால் ஊகிக்க முடிந்தது. அவர் எவ்வளவோ வற்புறுத்திய பின்னர் தான் கம்மலையும் வேறு ஓரிரு நகைகளையும் அன்னை அணிந்தார். ஆயினும் அதன் பிறகு ஆபரணங்கள் அனைத்தையும் மொத்தமாக அவர் அணியவே இல்லை. ஏனைன்றால் இந்த நிகழ்ச்சிக்குச் சிறிது காலத்திற்கெல்லாம் குருதேவர் மீளமடியாத நோயில் படுத்துவிட்டார். இவ்வாறு கணவனுக்கேற்ற மனைவியாக வாழ்ந்தார்அன்னை. குருதேவரின் லட்சியங்களை ஏற்றுக் கொண்டு இல்லற லட்சியத்தை வாழ்ந்து காட்டினார். இதன்மூலம் குருதேவரின் முப்பரிமாணங்களுள் ஒன்றாகிய நிறை மனிதப்பரிமாணத்தை நிறைவு செய்தார்.
அன்னையின் ஆயத்தமும் குருதேவரின் ஆயத்தமும்
குருதேவரின் மூன்று பரிமாணங்களையும் அவற்றின் லட்சிய நிறைவுக்காக அன்னையின் வாழ்க்கை அவருடன் இணைந்தது. என்பதையும் கண்டோம். குருதேவருக்கு ஓர் உத்தம பத்தினியாக வாழ்ந்து அவரது லட்சியங்களை ஏற்றுக்கொண்டு இல்லற லட்சியத்தை வாழ்ந்து காட்டியதன் மூலம் அவரது நிறைமனித பரிமாணத்தை நிறைவு செய்தார் அன்னை.
-
அன்னையின் அடுத்த பரிமாணம் குரு
-
இந்த பரிமாணத்தை நிறைவு செய்ய அன்னை குருதேவியாக வேண்டும். ஞானத்தை வழங்கப் பிறந்தவள் ஆகிய அன்னை அதனைப் பிறருக்கு வழங்க வேண்டும். குருதேவரின் அவதார வரிஷ்டர் என்ற மற்றொரு பரிமாணத்தை நிறைவு செய்ய அன்னை அவரது அருளின் வடிவாக ”பிரபஞ்சம் தழுவிய தாய்மை”யின் பொலிவாக விளங்க வேண்டும். அவற்றிற்கு ஏற்றாற்போல் இந்தக் காலக்கட்டத்தில் அதாவது தட்சிணேசுவர நாட்களின் இறுதிப்பகுதியில் அன்னையிடம் மூன்று முக்கிய வெளிப்பாட்டைக் காண்கிறோம்.1. பிராத்தனை வாழ்வு 2.குரு நிலை 3. தாய்மையின் பொலிவு. அன்னையின் அவதாரப்பணிக்கு அமைந்த இந்த மூன்றையும் விளக்குகின்ற சில நிகழ்ச்சிகளை இப்போது காண்போம்.
-
அன்னையின் வாழ்க்கையை ஒரு பிராத்தனைத் தொடராகக் கண்டாள் நிவேதிதை. குருதேவரைப்போலவே அன்னை எல்லாவற்றிற்கும் இறைத்துணையையே நாடி நின்றார்.குருதேவர் பல விஷயங்களில் அன்னையைக் கலந்தாலோசிப்பார் என்று கண்டோம்.அவர் கேட்கும் போது உடனே தமது கருத்தைச் சொல்ல மாட்டார் அன்னை. சற்று பொறுங்கள் . சிறிது நேரம் கழித்துச் சொல்கிறேன் என்பார். அதற்கு குருதேவர் ஏன் இப்போது ஏன் சொல்ல மாட்டாய்? யாருடன் கலந்து ஆலோசிக்கப்போகிறாய் ? என்று கேட்டு வற்புறுத்துவார்.அப்போதும் அன்னை மன்னியுங்கள் . நான் சிறிது யோசித்து விட்டு அது விஷயமாக உங்களிடம் பேசுகிறேன் என்றே கூறுவார். பின்னர் நேராக நகபத்திற்கு வந்து தேவியிடம் அம்மா நான் என்ன சொல்ல வேண்டும் என்பதை அருள் கூர்ந்து தெரிவி என மனமுருகிப் பிரார்த்திப்பார். பிராத்தனையின் பலனாக அவருக்கு கிடைக்கின்ற விடையையே குருதேவரிடம் கூறுவார்.
-
காலப்போக்கில் ஆன்மீக தாகம்கொண்ட பல இளைஞர்கள் குருதேவரிடம் வரத் தொடங்கினர். அவர்களுள் பலர் அவ்வப்போது தட்சணேசுவரத்தில் தங்கி இரவிலும் தியானம், ஜபம் என்று ஆன்மீக சாதனைகளில் ஈடுபட்டார்கள். இரவில் அதிகமாக உண்பது சாதனை வாழ்விற்குத் தடை என்பதால் குருதேவர் அவரவர் சக்திக்கேற்ப இத்தனை சப்பாத்திதான் இரவில் சாப்பிட வேண்டும் என்ற நியதியை வகுத்திருந்தார். ஒரு நாள் அவர் பாபுராமிடம் ஆமாம், இரவில் நீ எத்தனை சப்பத்தி சாப்பிடுகிறாய்? என்று கேட்டார். ஐந்தோ ஆறோ” என்றார் பாபுராம். இது மிகவும் அதிகம். ஏன் அவ்வளவு சாப்பிடுகிறாய்? என்று கேட்டார் குருதேவர். அதற்கு பாபுராம், அன்னை தருவதை அப்படியே சாப்பிடுவதாகக் கூறினார். உடனே நகபத் சென்றார் குருதேவர். அன்னையை அழைத்து , இப்படி அளவுக்கு மீறி உண்ணக்கொடுப்பது அவர்களின் ஆன்ம நலனைக் கெடுக்கும் என்று குற்றம் சாட்டினார். அன்னையின் பதில் உறுதியான குரலில் வந்தது. இரண்டு சப்பாத்தி அதிகம் சாப்பிட்டான் என்பதற்காக ஏன் இவ்வளவு கவலைப்படுகிறீர்கள். அவர்கள் சாப்பிடுவதை நீங்கள் பெரிதுபடுத்த வேண்டாம். அவர்களின் நலனை நான் பார்த்துக் கொள்கிறேன். இங்கு சொன்னவரையும் கேட்டவரையும் நாம் சற்று எண்ணிப் பார்க்க வேண்டும். சொன்னவர் அன்னை , குருதேவரையே தமது வாழ்வின் அனைத்துமாகக் கொண்டவர். எவ்வளவு தூரம் தம் ஆற்றலை, தமது குருநிலையை உணர்ந்திருந்தால் ஈசுவரகோடிகள் என்று குருதேவரே குறிப்பிட்ட பாபுராம் போன்றோரின் ஆன்ம நலனைத் தாம் பார்த்துக் கொள்வதாக குருதேவரிடமே கூறுவார். அடுத்தது கேட்டவர்,அதாவது குருதேவர். யார் எதைச் சொன்னாலும் ஏற்றுக் கொண்டு விடுபவரல்ல அவர். அன்னையால் அவர்களின் நலனைப் பார்த்துக் கொள்ள முடியும் என்பதை உணர்ந்திருந்ததால் தான் அப்படியே ஏற்றுக் கொண்டு மறுப்பேச்சின்றி அங்கிருந்து அகன்றார்.
-
பின்னாளில் பக்தர் ஒருவர் அன்னையிடம் குருதேவரின் மறைவிற்குப் பிறகு உங்களால் எப்படி உயிர் தரித்து வாழ முடிந்தது என்று கேட்டார். அதற்கு அன்னை அனைத்தையும் தாய் வடிவாகக் கண்டார் குருதேவர். அந்தத் தாய்மையை உலகிற்கு உணர்த்தவே என்னை விட்டு சென்றார். என்று கூறினார். உலகையே அரவணைக்கின்ற , நல்லவர் கெட்டவர் என்றெல்லாம் பாகுபடுத்தாமல் அனைவரையும் ஏற்றுக் கொள்கின்ற அந்தத் தாய்மை வெளிப்பாடுகளை தட்சணேசுவர நாட்களிலேயே அன்னையின் வாழ்வில் நாம் காண முடிகிறது.
-
சிறிது காலமாக வயதானவள் ஒருத்தி நகபத்திற்கு அடிக்கடி வந்து மணிக்கணக்காக அன்னையுடன் பேசிக்கொண்டிருக்க ஆரம்பித்தாள். அவள் தூய்மையற்ற வாழ்க்கை நடத்தியவள். எனவே அந்தப் பெண்ணுடன் நெருங்கிப் பழகுவது அவ்வளவு விரும்பத்தக்கதல்ல என்று குருதேவர் அன்னையிடம் தெரிவித்தார். அத்தகைய பெண்களின் கூட்டுறவு அன்னையைப் பாதிக்காது என்பது அவருக்குத் தெரியும். பிற பக்தைகள் அவளுடன் தொடர்பு கொள்ள நேரும் என்பதற்காக அவர் அன்னையைத் தடுத்திருக்கலாம். ஆனால் அம்மா என்றழைத்தபடி தம்மிடம் வரும் அந்தப் பெண்ணை வராதே என்று கூற அன்னையின் தாயுள்ளம் இடம் தரவில்லை. எனவே குருதேவர் தடுத்தும் அந்த முதியவள் வந்தால் அன்போடு உள்ளே அழைத்து அமரச்செய்து, கனிவாகப்பேசி சாப்பிடுவதற்கோ வீட்டிற்கு எடுத்துச் செல்வதற்கோ ஏதாவது பொருளைக் கொடுத்து அனுப்பி வந்தார் அன்னை. குருதேவர் இதனைப் பார்த்தாலும் அதன்பிறகு அன்னையிடம் எதுவும் சொல்லவில்லை.
-
தொடரும்..

No comments:
Post a Comment