அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-23
‘ (வயதில் சிறியவர்களை நீ என்று தமிழில் அழைக்கிறோம். வங்காளத்தில் அதை துயீ என்று அழைப்பார்கள்.குருதேவர் நீங்கள் என்றே அழைத்தார்) என்னை ‘துயீ“ என்று அழைக்காத ஒருவரை மணக்கின்ற பேறு பெற்றேன் நான் . ஒரு மலரை எறிந்துகூட என்னை வேதனைப்படுத்த எண்ணாதவர் அவர் ’ என்று அன்னை பெருமைப்படுகின்ற அளவுக்க குருதேவர் அன்னையின் நலம் பேணினார் .
-
ஒருமுறை அன்னை குருதேவருக்காக உணவு கொண்டு வைத்துவிட்டுச் சென்றார் . வந்தது லட்சுமி என்று நினைத்த குருதேவர் . ‘ துயீ ’ என்ற சொல்லை உபோயகித்து , ‘ கதவைச் சாத்திவிட்டுப் போ ’ என்று கூறினார் . அன்னை , ‘ சரி ’ என்ற சொன்னபோதுதான் வந்தது லட்சுமி அல்ல என்பது அவருக்குத் தெரிந்தது . அவ்வளவுதான் , தாம் ஏதோ அவமரியாதை செய்தவிட்டதுபோல் , ‘ ஆ நீயா , லட்சுமி என்று நினைத்து விட்டேன் . பொறுத்துக் கொள் ’ என்று மீண்டும் மீண்டும் அன்னையிடம் வருத்தத்துடன் கூறினார் . அத்துடன் நின்றதா ? மறுநாள் பொழுது விடிந்ததும் நகபத் வாசலில் சென்று , ‘ இதோ பார் , நான் , நான் அப்படிச் சொல்லியதை எண்ணியெண்ணி என்னால் இரவு முழுவதும் தூங்கவே முடியவில்லை ’ என்று கூறினாராம் . அதுமட்டுமல்ல அன்னை அவருக்கு எண்ணெய் தேய்த்தோ , கால்களை பிடித்துவிட்டோ பணிவிடைகள் செய்தால் , அதன்பின்னர் அவரைக் கைகூப்பி வணங்குவாராம் அவர் .
-
அன்னையின் வார்த்தைகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார் குருதேவர். பல விஷயங்களில் அவர் அன்னையுடன் கலந்தாலோசித்த பின்னரே எதையும் செய்வார். ஒரு முறை எங்கோ ஓரிடத்திற்குச் செல்ல வேண்டும் என்று குருதேவர் எண்ணியிருந்தார். அன்னையிடம் கேட்ட போது வேண்டாம் என்று அன்னை தடுத்து விட்டார். இதைக் குறிப்பிட்டு குருதேவர் பின்னாளில் வேடிக்கையாக அவள் வேண்டாம் என்றதும் நான் போகாமலிருந்து விட்டேன். என் நிலைமையே இப்படியென்றால் சாதாரண இல்லத்தார்களின் கதி என்னவாக இருக்கும் என்றார்.
-
அன்னையின் ஆன்மீக உயர்வை அறிந்திருந்த குருதேவர் தாம் அவருக்கு மரியாதை காட்டியதுடன் பிறரும் அவ்வாறே காட்ட வேண்டும் என்பதிலும் கவனமாக இருந்தார். அன்னையை அவமதிப்பவர்கள் எவ்வளவு கடுமையான விளைவுகளை அனுபவிக்க நேரும் என்பதை அவர் தெளிவாக அறிந்திருந்தார். ஒரு முறை குருதேவரின் முன்னிலையிலேயே ஹிருதயன் அன்னையை மரியாதைக் குறைவாகப் பேசினான். அன்னை அதைப் பொறுத்துக் கொண்டார். ஆனால் ஹிருதயனது செயலின் விளைவை அறிந்திருந்த குருதேவர் இதோ பார் நீ என்னை எவ்வளவோ நிந்தனை செய்கிறாய் ! ஆனால் அவளிடம் மட்டும் விளையாடாதே. எனக்குள் இருக்கும் சக்தி சினந்தாலும் ஒரு வேளை நீ பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் அவளிடம் இருக்கும் சக்தி சீறி எழுந்தால் பிரம்மா, விஷ்ணு, மகேசுவரர்கள் வந்தாலும் உன்னைக் காப்பாற்ற முடியாது என்று அவனை எச்சரித்தார். தம்மாலும் அன்னையின் மனம் எந்த விதத்திலும் புண்பட்டுவிடாதபடி குருதேவர் எச்சரிக்கையாகவே இருந்தார்.
-
குடும்ப விஷயத்திலும் சரி வேறு எதிலும் சரி தன் விருப்பம் இது தான் என்பதை அன்னை உறுதியாகச் சொல்லிவிட்டால் அவருடைய விருப்பத்தை எதிர்க்கவோ அதற்கு மாறாக நடக்கவோ அவர் முயல மாட்டார்.
-
அந்தக்காலத்தில் குருதேவரைக் காண வரும் பக்தர்கள் அவருக்கு ஏராளமான பழங்களும் இனிப்புகளும் கொண்டு வருவார்கள். அன்னை அவற்றில் ஒரு சிறு பகுதியை குருதேவருக்காக எடுத்து வைத்து விட்டு மற்றதையெல்லாம் அங்கு வரும் பக்தர்களுக்கும் அண்டைஅயலில் உள்ள குழந்தைகளுக்கும் மற்றவர்களுக்கும் கொடுத்து விடுவார். எதையும் மிச்சமாகவே வைக்க மாட்டார். ஒரு நாள் அன்னை இவ்வாறு வாரி வழங்குவதை க் கண்ட குருதேவர் இவ்வாறு கண்ட படி செலவு செய்தால் நீ எப்படிக் குடும்பம் நடத்துவாய்? என்று கேட்டார். பொதுவாக அன்னை தமது உணர்ச்சிகளை வெளிக்காட்டுபவர் அல்ல. ஆனால் குருதேவர் இப்படிக்கேட்டதும் அவரது முகம் வாடி விட்டது. பசித்து தன்னிடம் வருபவர்களுக்கு ப் பசி தீர ஏதாவது கொடுக்கின்ற தம் தாய்மை உணர்ச்சிக்கு குருதேவர் இப்படித் தடை விதிக்கிறாரே என்று நினைத்து மனம் வாடினார்.ஆனால் எதுவும் கூறாமல் நகபத்திற்குச் சென்று விட்டார். அன்னையின் மனநிலையை குருதேவர் உடனே புரிந்து கொண்டார். அருகிலிருந்த ராம்லாலைப் பரபரப்போடு அழைத்து டேய் ராம்லால் உன் சித்தி கோபித்து க் கொண்டு போய்விட்டாள் .ஓடு, ஓடு ! ஓடிப்போய் அவளைச் சமாதானப் படுத்து. இல்லையென்றால் என் பாடு அவ்வளவு தான்! என்று அன்னையைச் சமாதானம் செய்ய ராம்லாலை அனுப்பி வைத்தார்.
-
அன்னையின் வாழ்க்கையையும் தேவைகளையும் குருதேவர் அறிந்திருந்தது போலவே குருதேவரின் உயர் ஆன்மீக நிலைகளை அன்னையும் உணர்ந்திருந்தார். ஒரு முறை குருதேவர் அன்னையிடம் அறை படுக்கை முதலியவற்றைச் சுத்தம் செய்யும் படி கூறிவிட்டு காளிகோயிலுக்குச் சென்றார். அவர் திரும்பி வருவதற்குள் வேலைகளை முடித்து விட வேண்டும் என்று அன்னை விரைவாக வேலையில் ஈடுபட்டார்.
ஆனால் குருதேவர் சீக்கிரமே திரும்பி விட்டார் . வரும்போது மிதமிஞ்சிக் குடித்தவர்போல் கண்கள் சிவந்து , நடைபின்ன , தள்ளாடிக்கொண்டே வந்தார் . வந்தவர் பின்னாலிருந்து திடீரென அன்னையை தொட்டு , தள்ளாடியவாறே ஆமாம் சாரதா , நான் என்ன மது அருந்தியிருக்கிறேனா ? என்று வாய் குளரியபடியே கேட்டார் . குருதேவர் அருகில் வரும்வரை அன்னை அவரைக் கவனிக்கவில்லை . திடீரென அவரது குரலைக் கேட்டதும் அதிர்ந்து போனார் . மறுகணமே தம்மைச் சுதாரித்துக்கொண்டு , ‘ ஏன் , நீங்கள் எதற்காக மது குடிக்க வேண்டும் ! ’ என்று கேட்டார் . அதற்கு குருதேவர் , ‘ பின் நான் ஏன் தள்ளாடுகிறேன் ? ஏன் என் வாய் குளுறுகிறது ? ஒருவேளை கொஞ்சம் குடித்திருப்பேனோ ? ’ என்றார் . ‘ இல்லவே இல்லை . நீங்கள் ஏன் குடிக்க வேண்டும் ! அன்னை காளியின் அன்பெனும் அமுதை அல்லவா நீங்கள் பருகியுள்ளீர்கள் ! ’ என்றார் அன்னை . இந்தப் பதில் குருதேவருக்கு மிகுந்த திருப்தியை அளித்தது . தன் உண்மை நிலையை அன்னை புரிந்து கொண்டிருப்பதை எண்ணி உள்ளம் பூரித்தவராய் , ‘ உண்மைதான் , நீ சரியாகச் சொன்னாய் ’ என்று கூறினார் .
-
மற்றொரு முறை குருதேவர் பக்தர்களுடன் பாணிஹாட்டி என்ற ஊரில் நடைபெறுகின்ற பிரபலமான திருவிழாவிற்குச் செல்வதாக இருந்தார் . ஆண்களும் பெண்களுமாக மூன்று படகில் எல்லோரும் புறப்படத் தயாராயினர் . அன்னையும் உடன் செல்ல விரும்பினார் . தமது ஆவலை ஒரு பக்தையின் மூலம் குருதேவருக்குத் தெரிவித்து அனுமதி கேட்டார் . அதற்கு குருதேவர் , ‘ அவள் விரும்பினால் வரட்டும் ’ என்று கூறினார் . இதனை அந்த பக்தை வந்து அன்னையிடம் தெரிவித்தார் . குருதேவரின் வார்த்தைகளைக் கேட்ட அன்னை தமது விருப்பத்தை மாற்றிக்கொண்டவராய் , ‘ ஓ , இங்கிருந்து பலர் போகின்றனர் , அங்கேயும் பெருக்கூட்டமாக இருக்கும் . இதில் வந்து திருவிழாவைப் பார்ப்பது கடினம் . நான் வரவில்லை ’ என்று அந்த பக்தையிடம் கூறி போகாமல் இருந்தவிட்டார் . மற்ற எல்லோரும் சென்று இரவில் திரும்பினர் . வந்த பின்னர் குருதேவர் ஒரு பக்தையிடம் , ‘ அவள் வராதது நல்லதாகப் போயிற்று . என்ன கூட்டம் ! எனது பரவச நிலைகளின் காரணமாக எல்லோர் பார்வையும் என்மீதே இருந்தது . அவளை என் அருகில் பார்த்திருந்தால் “ ஹம்சரும் ஹம்சியும் வந்திருக்கிறார்கள் ” என்று கேலியாகப் பேசயிருப்பார்கள் . அவள் அபாரமான நுண்ணுணர்வு படைத்தவள் . அதனால்தான் இங்கேயே இருந்தவிட்டாள் .’ என்று கூறினார் . இதைப்பற்றிக் கேட்டபோது அன்னை , ‘ நான் போவதை அவர் விரும்பவில்லை என்பதை அவர் பதில் கூறியவிதத்திலிருந்தே புரிந்துக்கொண்டேன் . மனமார அவர் விரும்பியிருந்தால் , “ தாராளமாக வரட்டுமே ” என்று சொல்லியிருப்பார் . ஆனால் . ‘ அவள் விரும்பினால் வரட்டும் ” என்று கூறி முடிவை என்னிடம் விட்டபோதே , போகாமலிருப்பதே உசிதம் என்று நான் முடிவு செய்துவிட்டேன் ’ என்றார் .
-
தொடரும்..

No comments:
Post a Comment