அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-21
-
ஒருமுறை கோலாப்மா தன் வெகுளிதனத்தால் இந்த வாய்ப்பையும் பறித்துக் கொண்டு விட்டார் . குருதேவர் தன்னை உணவு பரிமாறச் சொன்னதனைப் பெரிதாக எடுத்துக் கொண்டு , தான் பரிமாறினால் அவர் மிகவும் மகிழ்வதாகச் சொல்லிக் கொண்டாள் .
அதன்பின் தினமும் அவரே நகபத்திலிருந்து குருதேவருக்கு உணவு கொண்டு செல்லத் தொடங்கினார் . அன்னைக்கு இருந்த ஒரே ஒரு வாய்ப்பும் பறிபோனது
இரவு நேரத்தில் குருதேவர் கோயிலின் வட எல்லையிலிருக்கும் சவுக்குத் தோப்பிற்கு இயற்கைக் கடன்களைக் கழிப்பதற்காகப் போகும்போதும் வரும்போதும் நகபத்தைக் கடந்து செல்லும்போது பார்த்துக் கொள்வார் . குருதேவரைப் பார்க்க முடியாததால் மிகுந்த வேதனையுற்றாலும் இதுபற்றி யாரிடமும் எதுவும் கூறாமல் தமக்குள்ளேயே அனைத்தையும் தாங்கிக் கொண்டார் அன்னை .
-
‘ இறைவன் எல்லோருக்கும் உரியவன் என்று குருதேவர் கற்பித்திருந்தாரே . அது போல் குருதேவரும் எல்லோருக்கும் உரியவர் என்று தம்மைத்தாமே தேற்றிக்கொள்வார்.பின்னாளில் அந்த நாட்களைப்பற்றி அன்னை கூறினார். சில வேளைகளில் அவரை ஒரு முறை கூட பார்க்காமல் இரண்டு மாதங்கள் கடந்து சென்று விடும். அப்போதெல்லாம் நான் என் மனத்திடம் மனமே, அவரை தினமும் தரிசிக்கும் அளவிற்கு நீ அப்படி என்ன புண்ணியம் செய்து விட்டாய்.? என்று கூறி என்னை நானே தேற்றிக் கொள்வேன். ஆனால் அன்னையின் நினைவுகள் மட்டும் அவரையே எப்போதும் வலம் வந்தன. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மூங்கில் தட்டியின் அருகில் சென்று துவாரம் வழியாக குருதேவரின்அறையில் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பார். பறவைகள் பறக்கும் போதும் இலைகள் சலசலக்கும் போதும் நீ வருவதாக அவள் எண்ணுகிறாள். நனைந்த கண்களுடன் உன் வரவை எதிர் பார்க்கிறாள். கண்ணனைப் பிரிந்து வாடிய ராதையின் மனநிலையை இங்கு அன்னையிடம் நாம் காண்கிறோம்.
-
குருதேவர் அன்னையின் இதய ஏக்கத்தை அறியாமல் இருக்கவில்லை. எனவே அவர் தமது அறையில் நடப்பவற்றை அன்னை காண்பதற்காக வடக்கு வாசலை எப்போதும் திறந்தே வைத்திருப்பாராம். மூங்கில் தட்டியிலுள்ள துவாரம் வரவரப் பெரிதாகிக் கொண்டே போவதை க் கண்ட அவர் ஒரு நாள் தமது அண்ணன் மகனிடம் வேடிக்கையாக ஓ ராம்லால் ”தட்டின் துவாரம் பெரிதாகிக்கொண்டே வருகிறது. ஒரு நாள் உன் சித்தியின் முகத்திரை விரதம் காற்றில் பறக்கப்போகிறது பார் என்றார். அதற்கு ராம்லால் சித்தப்பா அதற்கு நீங்கள் தான் பொறுப்பு . நான் அந்த வடக்கு வாசலை மூடினாலும் நீங்கள் தாம் மீண்டும் மீண்டும் திறந்து வைக்கிறீர்கள் என்றான்.
-
பக்தி, சேவை ஈடிணையற்ற புனிதம் இவற்றின் வாயிலாக அன்னையிடம் இந்த நாட்களில் உயர் நிலை யோக சித்திகளும் , எங்கும் இறையுணர்வை உணர்கின்ற ஆற்றலும் வெளிப்பட்டிருந்தன. தமது அனுபவத்தைப் பின்னாளில் அவர் நிவேதிதைக்கு எழுதிய கடிதத்தில் அற்புதமாக இவ்வாறு குறிப்பிடுகிறார். இந்தப் பிரபஞ்சத்தின் உயிர்த்துடிப்பான இறைவன் தன் மகிமையைத் தானே இசைத்து க் கொண்டிருக்கிறான். ஆதி அந்தமற்ற இடையீடற்ற அந்த சங்கீதத்தையே அழியக் கூடிய இந்தப் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு பொருளிலும் நீ கேட்கிறாய். மரங்களும் , மலைகளும், பறவைகளும் அவன் புகழைப்பாடிக் கொண்டிருக்கின்றன. தட்சிணேசுவரத்தில் அடர்ந்து பரந்த ஆலமரம் இருக்கிறதே. அது அன்னை காளியின் மாட்சிமையைப் போற்றிக் கொண்டிருக்கிறது. அதைக் கேட்பதற்கான காதுகளைப் பெற்றவன் புண்ணியவான்.
-
மற்றொரு முறை ஒரு பக்தையிடம் கூறினார். நிலவு காய்கின்ற இரவுகளில் நான் நகபத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து தியானம் செய்வேன். எங்கும் பேரமைதி நிலவும். கங்கையில் இரவில் மீன் பிடிக்கின்ற மீனவர்கள் பாடுவது மட்டும் அவ்வப்போது அந்த அமைதியை ஊடுருவியபடியே எழுந்து அடங்கும். சில வேளைகளில் யாரோ புல்லாங்குழல் வாசிப்பார்கள். குழலோசையின் அந்த இனிய நாதம் என்னைத் தழுவிச் செல்லும். என்னவோ அந்த நாதம் இறைவனிடமிருந்து வருவது போன்றே எனக்குத் தோன்றும். அந்தக் கடவுளைக் காண வேண்டும் என்று என் மனம் வேட்கையுற்று எழும். அப்படியே நான் சமாதியில் ஆழ்ந்து விடுவேன். இவ்வாறு பலமுகப் பரிமாணங்களை, அமைதியாக ஆனால் அழுத்தமாகக் காட்டியவாறே சென்றது அன்னையின் வாழ்வு. அவரது வாழ்க்கையின் ஒரு முக்கியமான கட்டமாகிய தட்சிணேசுவர நாட்களில் நடந்த ஒரு சில நிகழ்ச்சிகளையும்
அவருக்கும் குருதேவருக்கும் இடையில் இருந்த உறவுப் பிணைப்பையும் இப்போது காண்போம்.
-
அன்னையின் வாழ்வை இது வரை தொடர்ந்து வந்த நாம். அவர் மேலான ஆன்மீக அனுபவங்களைப் பெற்றவர், மிக உயர்ந்த ஆன்மீக நிலையில் இருப்பவர் என்பதைக் காண்கிறோம். நமது வியப்புக்குரிய விஷயம் இதுவல்ல.இத்தகைய உயர்நிலையிலுள்ள ஒருவர் தமது கணவருடன் கொண்டிருந்த அதிசய உறவு தான் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்துகிறது. இத்தகைய உறவுக்கு அந்தக் கணவரும் உயர் ஆன்மீக நிலையில் இருப்பவர் என்பது ஒரு காரணமாக இருந்தாலும் அது மட்டும் தான் காரணம் என்று கூறிவிட முடியாது. அதை விட முக்கியக் காரணம் அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டிருந்தார்கள் என்பது தான். இல்லற வாழ்வில் இது மிக முக்கியமான ஒன்று .
-
எங்கோ பிறந்த இருவர் சேர்ந்து வாழும் போது பிரச்சனைகள் எழுவது இயல்பே. கணவனின் வாழ்க்கை இது என்று மனைவியும், மனைவியின் வாழ்க்கை இது என்பதை கணவனும் புரிந்து கொண்டு வாழ்க்கை நடத்தும் போது அது சுமுகமாகச் செல்கிறது இத்தகைய புரிந்து கொள்தலுக்கு மிக முக்கியமான தேவை உயர் லட்சியம். இல்லற வாழ்க்கையில் உணவு, உடை போன்ற தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வது வம்ச விருத்தி போன்ற சாதாரண நோக்கங்களுக்கும் மேல் உயர் லட்சியம் ஒன்று தேவை. அப்போது மட்டுமே வாழ்க்கை பயனுடையதாக அமையும்.
-
அத்தகைய உயர் லட்சியத்தைக் கைக்கொள்ளும்போது இல்லறக் கடமைகளைச் சரிவரச்செய்ய முடியாமல் போகிறது என்று பலர் கூறுவதுண்டு ஆனாலும் அது முற்றிலும் தவறு என்பது மட்டுமல்ல உயர் லட்சியம் இருந்தால் மட்டுமே கணவன் மனைவி உறவு சிறப்பாக அமையும் என்பதை க் காட்ட வந்ததே அன்னையின் வாழ்வு.
-
அன்னையும் குருதேவரும் எழுபத்தைந்து அடி தூரத்தில் வாழ்ந்தும் தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை இருவரும் சந்திக்காமல் இருந்திருக்கின்றனர். இருப்பினும் அவர்களுக்கிடையில் நிலவிய உறவு தான் எத்தனை அற்புதமானது. இருவரும் கொண்டிருந்த உயர் லட்சியம் தான் அவர்களை இத்தகைய உன்னத உறவில் பிணைத்திருந்தது
குருதேவர் மற்றும் அன்னையின் தெய்வீக உறவைப்பற்றி பேசுகையில் கௌரிமா அன்னையும் குருதேவரும் 75 அடி தூரத்தில் தான் வாழ்ந்து வந்தார்கள்.என்றாலும் ஒருவரையொருவர் பல நாட்கள் தொடர்ந்து சந்திக்க முடியவில்லை. ஆனாலும் இருவருக்கு மிடையே எவ்வளவு ஆழமான அன்புறவு இருந்தது. ஒரு முறை அன்னைக்கு தலைவலி ஏற்பட்ட போது குருதேவர் ராம்லாலிடம் சிறிய குழந்தையைப்போல் ராம்லால் என்ன காரணத்தாலடா அவளுக்குத் தலைவலி வந்தது.? என்று மிகுந்த வேதனையுடன் அடிக்கடி கேட்டு க்கொண்டிருந்ததை நான் பார்த்திருக்கிறேன் என்று குறிப்பிட்டார்.
-
குருதேவர் முற்றும் துறந்தவராக இருந்தும் பெண்களின் மனநிலையை . நன்றாக அறிந்தவராக இருந்தார். தன் தேவைகளையும் சின்னச்சின்ன ஆசைகளையும் கூட கணவனே கவனித்து நிறைவேற்றுவதை விழையும் பெண்ணுள்ளம் . எனவே தம்மால் முடிந்தவரை அவர் அன்னையின் ஆசைகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்தார். அன்னைக்கு நகைகள் அணிவதில் ஆசை இருந்தது. எனவே அவருக்கு நகை செய்த தர விரும்பினார் குருதேவர். கோயிலிலிருந்து மாதச்சம்பளமாக அவருக்கு ஏழு ரூபாய் கிடைத்து வந்தது. அந்தப் பணத்தை ஒரு பெட்டியில் போட்டிருப்பது வழக்கம். அதைக் கொண்டு அன்னைக்கு நகைகள் செய்ய எண்ணினார் அவர். இதைப்பற்றி அன்னை கூறினார் எனக்கு நகை அணிவதில் இருந்த ஆசையைக் குறிப்பிட்டு அவர் அவளது பெயர் சாரதை, அவள் சரஸ்வதியின் அவதாரம் . அதனால் தான் நகைகள் அணிய விரும்புகிறாள் என்பார். ஒரு நாள் ஹிருதயனிடம் உனது அந்தப் பெட்டியில் எவ்வளவு பணம் இருக்கிறதென்று பார். அவளுக்கு நல்ல தங்க நகை ஏதாவது செய்ய வேண்டும் என்றார். அவருக்கு அப்போது உடல் நிலை சரியில்லை. இருந்தும் முன்னூறு ரூபாய் செலவு செய்து எனக்கு நகைகள் செய்து தந்தார்.இங்கு நாம் கருத்தில் கொள்ள வேண்டியது அவர் பணத்தைத் தொடமுடியாதவர் என்பதைத்தான் .அன்னை கைகளில் அணித்திருக்கின்ற தங்க வளையல்கள் அப்போது குருதேவர் செய்து அணிவித்தவையே.
-
குருதேவர் ஆன்மீக சாதனைகள் புரிந்த காலத்தில் பஞ்சவடியில் அவருக்கு சீதாதேவியின் காட்சி கிடைத்தது. சீதை அணிந்திருந்த பல வைரங்கள் பதிக்கப்பட்ட தங்க வளையல் அவரது கருத்தைக் கவர்ந்தது. அந்தக் காட்சியில் கண்டவை போன்ற வளையல்களையே அவர் அன்னைக்காக செய்தார் என்று கூறப்படுகிறது. நான் நகை செய்து போடும் அளவுக்கு எனக்கும் அவளுக்கும் உறவு உண்டு என்று குருதேவர் வேடிக்கையாகக் கூறுவாராம். இந்த நகை தவிர தங்க அட்டிகை, மூக்கில் வளையம், கம்மல், பொன் வளையல் என்று வேறு பல ஆபரணங்களையும் அன்னை அணிந்திருந்தார்.இவை குருதேவரின் சாதனைக்காலத்தில் அவருக்காக மதுர்பாபு செய்து கொடுத்தவை. கிடைக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பிலும் குருதேவர் அன்னையை மகிழ்ச்சியாக வைக்க முயன்றார்.வேடிக்கை நிகழ்ச்சிகளுக்கும் குறைவில்லை.
-
தொடரும்..

No comments:
Post a Comment