Sunday, 9 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-19


அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-19


தட்சிணேசவரத்தில்  அன்னையின்  முக்கிய வேலை  சமையல்  . குருதேவரின்  வயிறு மென்மை வாய்ந்ததாக  இருந்தது .  சில குறிப்பிட்ட  முறையில்  சமைக்கப்பட்ட   உணவை மட்டுமே  அவரால் ஜீரணம்  செய்ய முடிந்தது .  சமையல் முறை கொஞ்சம்  மாறினாலும்  வயிற்றுக்  கோளாறினால்  துன்பப்படுவார் .  எனவே  அவருக்கு   கண்ணுங்கருத்துமாக  உணவு தயாரிக்க  வேண்டியிருந்தது .  இப்படி   அவருடைய  உடல்நலம்  சிறிதும் பாதிக்கப்படாத வகையில்  உணவைத்  தயாரிக்கும்  திறன்  அன்னைக்கு இருந்தது .   
-
ஆரம்ப காலத்தில் குருதேவருக்கும்  அவருடைய  தாய் சந்திரமணி  தேவிக்கு தேவையான  உணவை மட்டுமே  அன்னை சமைத்து  வந்தார் .  புண்ணிய   கங்கைக்  கரையில்  வசிக்க வேண்டும் என்ற எண்ணத்தடன்  தட்சிணேசுவரம் வந்து நகபத்தின்  மாடி அறையில் தங்கியிருந்தார்  சந்திரமணி  தேவி . கீழே நகபத்தில் வேலைகளில் மூழ்கியிருந்தாலும் , அன்னை  மாடியிலும் கவனம் வைத்திருப்பார் . ‘ சாரதா ’  என்று சந்திரா தேவி முழுப் பெயரையும் சொல்லி முடிப்பதற்குள்  அத்தனை படிகளையம் தாண்டிப்  பறந்து மாமியாரின்  முன்னால்  நிற்பார் .  அவர் இவ்வளவு  வேகமாக  ஒடிச்    செல்வதைக் காணும்  யோகின்மா , ‘ இப்படி   கண்மண் தெரியாமல் ஓடினால்  வாசற்படியில்  இடித்துக்கொண்டு . படிகளில்  உருண்டு விழும்படி ஆகிவிடுமே ’  என்று பதறி   அன்னையைத் தடுப்பார் .  ஆனால்  அன்னையோ  , ‘ நான் விழுந்தாலும் பரவாயில்லை .  அவர் என்னைவிட  பெரியவர் , என் தாய்க்கு நிகரானவர் , வயதானவர் ,  அவர் அழைத்த உடனே  நான் போகாது போனால் , அதனால்  அவருக்கு ஏதாவது கஷ்டங்கள் நேரலாம் . அதற்காகத்தான்  இவ்வளவு வேகமாக ஓடுகிறேன் ’ என்று கூறுவார் .    
-
நாட்கள் செல்லச்செல்ல  குருதேவரைச்  சற்றி பக்தர்   கூட்டம் பெருகியது  அன்னையின் சமையல் வேலையும் அதிகரித்தது .  பல  பக்தர்கள்  அவ்வப்போது  குருதேவருடன்  தங்குவது  வழக்கமாகி விட்டது . அவர்கள்  அனைவருக்கும்  அன்னையே சமைக்க வேண்டியிருந்தது . தமது  அந்தக் கால கடுமையான  வாழ்க்கையைப்பற்றி   அன்னை பின்வருமாறு குறிப்பிடுகிறார்   ‘ குருதேவருக்கான  உணவை  நான்தான்  சமைப்பேன்  . அவரது  ஜீரணசக்தி  மிகவும் குறைவு . காளி   கோயில்   பிரசாதத்தை அவரால்  உட்கொள்ள முடியாது .  குருதேவரின் பக்தர்களுக்கும்  நான்தான் சமைப்பேன் .  லாட்டு அவருடன் தங்கியிருந்தான்  .  ராமசந்திர  தத்தரின்  வீட்டில்   வேலை செய்து கொண்டிருந்த  அவன்   அங்கிருக்கப்  பிடிக்காமல்  குருதேவரிடம்    வந்துவிட்டான் . “ லாட்டு  நல்ல  பையன்    சப்பாத்திக்கு மாவு  பிசைவதில்  உனக்கு  உதவியாக  இருப்பான் ”  என்று    குருதேவர் அவனை  என்னிடம்  அனுப்பி வைத்தார் .  இரவுபகலாகச் சமையல் வேலை   இருந்துகொண்டே இருக்கும் . ராமசந்திர  தத்தர்  குருதேவரைக் காண   வருவார் . வண்டியிலிருந்து  இறங்கும்போதே  , ‘ இன்று எனக்குச் சப்பாத்தியும் பருப்பும் வேண்டும் ’  என்று உரக்கச்  சொல்லிக்கொண்டே   குருதேவரின்  அறைக்குள் நுழைவார் . அவரது  வார்த்தைகள்   காதில்  விழுந்து  உடனேயே நான்  வேலையைத் தொடங்கவேன் .  ஒரு நாளைக்கு  இரண்டு  மூன்று படி மாவு  பிசைந்து  , சப்பாத்தி   செய்ய  வேண்டியிருந்தது .   ‘ ராக்கால் குருதேவருடன்  தங்கியிருந்தபோது  அவனுக்காக  அடிக்கடி  கிச்சுடி தயார் செய்வேன்  .  ஒருநாள்  நரேனுக்காகச்  சமைக்கும்படி   குருதேவர் கூறினார் .  நான் சப்பாத்தியும்   பருப்புக்கூட்டும்   செய்தேன் .  சாப்பிட்டு  முடிந்ததும் குருதேவர்  அவனிடம் ,  “ சாப்பாடு   எப்படி இருந்தது ? ”  என்று கேட்டார்  அதற்கு அவன் சிரித்தவாறே , “ பத்தியச் சாப்பாடுபோல் மிக நன்றாக இருந்தது ” என்றான்  . உடனே  குருதேவர்  என்னிடம்   “ நீ என்ன   தயாரித்தாய்  ? அவனுக்கு கனமான சப்பாத்திகளும் கெட்டியான  பருப்புக் குழம்பும்  செய்திருக்க  வேண்டும் ”  என்றார் . அதன்பின்  அவர் சொல்லியபடியே நான் செய்தேன்  . நரேனும் அவற்றை   ருசித்துச் சாப்பிட்டான் . 
-
சுரேந்திரநாத்  மித்ரர்  பக்தரகளின்  உணவிற்காக  மாதம்  பத்து ரூபாய்  தருவார் . மூத்த  கோபால்தான்  சாமான்கள் வாங்கி வருவார் . ’ ‘ இரண்டுமூன்று படி  மாவில்  சப்பாத்தி  செய்வதுடன்  , அன்னை மடிக்கும் வெற்றிலைச்  சுருளுக்குக்  கணக்கே  இருக்காது  .   குருதேவருக்குத் திரட்டு பாலில்  விருப்பம்  என்பதால்  , நெடுநேரம்  மிகுந்த  கவனத்தோடு பாலையம் காய்ச்சியபடி இருப்பார் ’ என்று யோகின்மா  அந்த  நாட்களைப்பற்றிக் கூறினார் 
-
 சாப்பாடு மட்டுமல்ல  , ஒவ்வொருவரின்  பிற தேவைகளையும்  அறிந்து  அவற்றைச் செய்வார்  அன்னை . சாரதா பிரசன்னா  பெற்றோருக்குத்  தெரியாமல்  குருதேவரிடம்  வர  வேண்டியிருந்தது . ஒருமுறை குருதேவர்  அவனை அன்னையிடம்   அழைத்தச் சென்று  , அவன்  திரும்பிச்  செல்வதற்கு  வண்டி வாடகைக்காக  ஓர் அணா  கொடுக்குமாறு  கூறினார் .  அன்னையும்  அன்று மட்டுமல்ல  , அதன்பின்  சாரதாபிரசன்னன்  வந்தாலே  நகபத்  வாசலில்   ஓர் அணா  வைத்துவிடுவார் .  திரும்பிப் போகும்போது அவன்  எடுத்துக் கொள்வான் .  இப்படி  அனைவரின் தேவைகளையும்  ஒரு  தாய்போல் பார்த்துப் பார்த்துச் செய்வார் .  
-
அன்னையின் இந்த வேலைகள்  அத்தனையிலும்  அன்பு ஒன்று மட்டுமே இழையோடியது . ஒருநாள்  அவர் வெற்றிலைச் சுருள்  தயாரித்துக்  கொண்டிருந்தார் .  சில சுருளில்  ஏளகாய் போன்ற   வாசனைப்  பொருட்களை வைத்தும்  , சிலவற்றில்  அது  இல்லாமலும்  செய்தார் .   இதனைப்  பார்த்துக் கொண்டிருந்த  யோகின்மா , ‘ அம்மா  , இது என்ன ? இப்படி இரண்டு விதமாக  ஏன் செய்தீர்கள் ? ’ என்று கேட்டார் . அதற்கு  அன்னை  மென்முறுவலுடன்  , ‘ யோகின்  , வாசனைப் பொருட்கள்  எல்லாம்  வைத்துத் தயாரிப்பது  பக்தர்களுக்காக .  என்  அன்பாலும்  கவனிப்பாலும்  அவர்களை என்னுடையவர்கள்  ஆக்க வேண்டும் அல்லவா ? மற்றது குருதேவருக்கு . அவர்  எற்கனவே  என்னுடையவர்தானே ’ என்றார் . 
-
அன்னை ஜெயராம்பாடி  சென்றுவிட்டால்  குருதேவர்  உணவு விஷயத்தில்  மிகவும்  சிரமப்பட  நேரும் . சிலவேளைகளில்  அன்னைக்கு  ஆளனுப்பி  , உடனே  அவரை  தட்சிணேசவரம்  அழைத்துக் கொள்வார் .  மாதத் தீட்டு நாட்களில்  அன்னை சமைப்பதில்லை .  எனவே  குருதேவர்  காளிகோயில் பிரசாதத்தை உண்ண நேரும் .  உடனே அஜீரண கோளாறினால்  அவதிப்படவும்  செய்வார் .    ஒருமுறை இப்படி மிகவும்  கஷ்டப்பட்ட போது  அன்னையிடம்  வந்து சமைக்கும்படிக் கூறினார் .  அதற்கு அன்னை  தயங்கியபடி , ‘ இந்த நாட்களில் பெண்கள்  சமைக்கக் கூடாது  ’ என்று கூறினார் . உடனே  குருதேவர்  , ‘ யார் அப்படிச்  சொன்னது  ? நீ எனக்காகச் சமையல்  செய் .  அதனால்  உனக்கு எந்தப் பாவமும் வராது . ஆமாம் , தீட்டு  , அசுத்தம் என்றெல்லாம்  சொல்கிறாயே , உன்  உடம்பின் எந்தப் பகுதி  தீட்டாகியுள்ளது என்று சொல்வாயா – தோலா , சதையா , எலும்பா , இல்லை மஜ்ஜையா ?  எது அசுத்தமாகியுள்ளது , இதோ பார்  , சுத்தம் அசுத்தம்   என்பவையெல்லாம் மனத்தில்தான்  உள்ளன வெளியில் எதுவும் இல்லை ’ என்றார் . ஆசார அனுஷ்டானங்களில்  ஊறிய  கிராமப் பெண்ணாக  இருந்தாலும்  குருதேவர்  கூறியதை ஏற்றக் கொண்டார் அன்னை .  அதன்பிறகு அவரே எப்போதும் சமையல்  செய்தார் .  
-
அன்னை சாரதாதேவி-ஸ்ரீராமகிருஷ்ணர் வாட்ஸ்அப் குழுவில் இணைய 9003767303 க்கு வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் அனுப்பவும்

No comments:

Post a Comment