அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-18
நகபத் அறையச் சுற்றியுள்ள வெளி வாரத்தில் கிழக்குப் பகுதியில் மாடிக்குச் செல்வதற்கான படிக்கட்டுகள் உள்ளன . இந்தப் படிக்கட்டின் கீழ்ப்பகுதிதான்
அன்னையின் சமையலறை . மாடியில் குருதேவரின் தாய் வாழ்ந்து வந்தார் .
கீழே அன்னை தங்கினார் .
அந்த அறை மிகவும் வசதி குறைவானது . அதில் ஒருவர் கால்நீட்டிப் படுப்பதற்குக்கூட முடியாது .
அரிசி மற்றும் பருப்பு மூட்டைகள் , காய்கறிக் கூடைகள் எல்லாம் அங்கேதான்
. போதாக்குறைக்கு , குருதேவருக்கான உணவு வைத்துள்ள பானைகள்
வைக்கப்பட்ட உறிகள் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் . அ ன்னையின்
தனிமை வாழ்க்கைக்காக வராந்தாவைச் சுற்றி ஆளுயரத்திற்கு மூங்கில் தட்டிகள் வைக்கப்பட்டன .
இதனால் சூரிய ஒளி உள்ளே வருவதும் தடைபட்டது . அந்த நாட்களைப்பற்றி அன்னை கூறுவார் .
‘ ஓ ,
நகபத்தில் வாழ்ந்து
குருதேவருக்கு சேவை செய்த நாட்களில் அங்கிருந்த சிரமங்களைச் சொல்லி
முடியாது . சமையல் , சாப்பாடு , தூக்கம் என்று என் உலகமே
அதனுள்தான் . பல நாட்கள் தனிமையில்தான் கழியும் . ஏதோ சில நாட்கள்
கோலாப் ,
கௌரி என்று யாராவது வருவார்கள் .... அறையின் வாசல் மிகவும் குட்டையாக இருந்ததால் , மேல்
சட்டம் அடிக்கடி என் தலையில் இடித்துவிடும் . ஒருநாள் இடித்துக் கொண்டதில் காயமே ஏற்பட்டுவிட்டது . ஆனால் நாட்கள் போகப்போகப் பழகிவிட்டது
. வாசலின்
அருகே வந்ததும்
என் தலை தானாகவே குனிந்து கொள்ளும்
. கல்கத்தாவிலிருந்து பெரிய
இடத்துப் பெண்கள் சிலர் என்னைக் காண
வருவார்கள் .
பருத்த தேகம்கொண்ட அவர்களால் அந்த அறைக்குள் நுழைய முடியாது .
எனவே வாசல்
சட்டத்தைப் பார்த்து , ‘ ஆ ,
நம் பெண்
எவ்வளவு சிறிய அறையில்
வாழ்கிறாள்
. சீதையின் வாழ்க்கைபோல் அல்லவா உள்ளது இது ! ”
என்பார்கள் . உண்மைதான் . கஷ்டத்தில் பெரிய கஷ்டம் எது தெரியமா
? குளிப்பதும் இயற்கைக் கடன்களைக் கழிப்பதும் தான்
. ‘ அதிகாலையில் குளித்தபின் அறைக்குள் சென்று விட்டேனானால் நான் வெளியே வருவதே அபூர்வம் . அந்த நாட்களில் என் கூந்தல் கருகருவென்று அடர்த்தியாக நீண்டு
வளர்ந்திருந்தது
. அதைக்கூட
, பிற்பகலில் ஆள் நடமாட்டம் இல்லாத வேளையாகப் பார்த்து
வெளியில் வந்து
வாசற்படியில் அமர்ந்து உலர்த்திக் கொள்வேன் .
-
ஒருநாள் அதிகாலை இருட்டில் அன்னை கங்கையில் குளிக்கச் சென்றபோது ,
படித்துறையில் ஒதுங்கியிருந்த முதலை
ஒன்றைத் தெரியாமல் மிதிக்கச் சென்றுவிட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக , ஆள் அரவம் கேட்ட
முதலை தண்ணீருக்கள் சென்றுவிட்டது
. அதன்பின்னர் விளக்கு எடுத்துக் கொண்டு
குளிக்கச் செல்லுமாறு குருதேவர் அவரிடம் கூறினார் .
-
பிற்காலத்தில் தம்பியின் பெண்களிடம் அன்னை தம்
தட்சிணேசவர வாழ்க்கையப் பற்றிக் கூறும்போது , ‘ அந்த மாதிரி
அறையில் உங்களால் ஒருநாள்கூட இருக்க முடியாது
’ என்றார் .
அவர்களும் , ‘ உண்மைதான் அத்தை ! என்று எல்லோரும் சிரித்துக் கொண்டே கூறினார்கள் . நகபத்தில் அன்னையின் வாழ்க்கை அதிகாலை மூன்று மணிக்கே ஆரம்பித்துவிடும் . அவரது வாழ்க்கை
முறையைப்பற்றி யோகின்மா
பின்னாளில் கூறினார் . ‘ அந்த நாட்களில் அன்னை பெரிய
சிவப்புக்கரையிட்டு புடவை உடுத்துவார் . வகிட்டில் சிவப்பு குங்குமம் இட்டுக் கொள்வார் .
அவரது கூந்தல் கருகருவென்று அடர்த்தியாக , கால்
முட்டுகளைத் தொடும் அளவிற்கு நீண்டு
வளர்ந்திருக்கும்
. தங்க அட்டிகை
, மூங்கில் வளையம் , கம்மல் , பொன் வளையல் போன்ற
ஆபரணங்கள் அணிந்து
சீதைபோன்றே நகபத்தில் வாழ்ந்தார் அன்னை . எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கின்ற அதிகாலை வேளையில் எழுந்து .
கங்கையில் குளித்துவிட்டு , மக்கள் நடமாட்டம் ஆரம்பிக்கும் முன்பே
அறைக்குத் திரும்பிவிடுவார் .
பின்னர் தியானம் செய்ய அமர்வார் .
தியானம் நிறைவுற்ற பிறகு
பூஜையும் ஜபமும் தொடங்கும் . எல்லாம் முடிய ஒன்றரை மணி நேரம்
ஆகும் .
அதன்பின் மாடிப்படிக்கட்டின்
கீழ் சமையலைத் தொடங்குவார். சமையல் முடிந்தபின் , வாய்ப்பிருந்தால் , குருதேவர் குளிக்குமுன் அவர் உடம்பில்
எண்ணை தேய்த்துவிடுவார் . அவர் குளிக்கச் சென்றதும் அவருக்காக வெற்றிலைச் சுருள்
தயாரிப்பார்
. அவர் குளித்துவிட்டு வந்ததும் அவருக்காகச் சிறிய தடுக்கு ஒன்றை விரிப்பார் . குருதேவர் காலை பத்தரை முதல் பதினொரு மணிக்குள் சாப்பிட அமர்வார் .
அன்னை தட்டில் உணவு
எடுத்து வந்து
, குருதேவருக்கப் பரிமாறிவிட்டு , அருகிலேயே அமர்ந்து
பேசிக் கொண்டிருப்பார் .
இதன்மூலம் அவர் திடீரென உயர் பரவச நிலையில் ஆழாமல்
தடுத்து விடுவார் . இந்த விஷயத்தில் அன்னைக்கு நிகர்
அன்னைதான்
. குருதேவர் சாப்பிட்டு முடிந்ததும் தாமும் விரைவாகச் சிற்றுண்டி எதாவது
அருந்திவிட்டு , ஒரு
டம்ளர் தண்ணீர் குடிப்பார்
. பின்னர் மீண்டும்
வெற்றிலைச் சுருள் செய்வார் . அப்போத
சிலைவேளைகளில் மெல்லிய குரலில்
பாடுவார் . அன்னையின் குரல் பூக்கள் உதிர்வது போன்றது
மென்மையாக இருக்கும் அதனுடன் இனிமையென்றால் அப்படியோர் இனிமை அவர் குரலில்
தவழும் . ஆனால் தாம்
பாடும்போதும் யாரும்
கேட்டுவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பார் அவர் .
இதற்குள் அருகிலுள்ள ஆலையில் பகல் ஒரு மணி சங்கொலி கேட்கும்.அதன்பின்னர் சாப்பிட அமர்வார்.முடியும்போது ஒன்றரை மணி ஆகிவிடும்.பிறகு சிறிதுநேரம் ஓய்வெடுப்பார்.பிற்பகல் 3 மணியளவில் வெளியில் வந்து அமர்ந்து கூந்தலை அவிழ்த்து உலர்த்துவார்.பின்னர் அவரது மாலைவேலை ஆரம்பிக்கும்.முதலில் விளக்குத்திரியையெல்லாம் வெட்டிச் சீராக்குவார்.அதன்பின் நகபத்திற்கு உள்ளயே எடுத்து
வைத்திருக்கின்ற தண்ணீரில் உடம்பைக் கழுவிக்கொண்டு துணிகளையும் நனைத்துக் கொள்வார் . சந்தியா வேளையானதும் விளக்குகளைக் கொளுத்திவிட்டு , தெய்வப் படங்களுக்க தூபம் காட்டுவார் . பின்னர்
தியானத்திற்காக அமர்வார் .
அதன்பிறகு இரவு உணவு
சமைப்பார்
. எல்லோரும் சாப்பிட்டபின் தாமும் உண்பார் . சிறிதுநேரம் கழித்து படுத்துக் கொள்வார் .
-
நகபத்தே அன்னையின் உலகமாக
இருப்பதை யோகின்மா
கூறியதிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது . பிறர்
யாரும் அவரைப் பார்க்க முடிந்ததில்லை . பட்டாச்சாரியாரின்(குருதேவர்) மனைவி இங்கு வசிப்தாகக் கேள்விப்பட்டிருக்கிறோம் . ஆனால்
நாங்கள் ஒருநாள்கூட அவரைப் பார்த்ததில்லை ’ என்று கோயில் அலுவலர்கள் கூறுமளவிற்கு அவர் யார் கண்களிலும் படாமல் வாழ்ந்தார்
-
தொடரும்..
No comments:
Post a Comment