சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்-பகுதி 8
----
தமக்குத்தாமே உதவிக்கொள்ளுமாறு மக்களுக்குப் பயிற்சி தராவிட்டால், உலகின் செல்வம் அனைத்தையும் சேர்த்தாலும் ஒரு சிறிய இந்தியக் கிராமத்திற்குக்கூட உதவி செய்ய முடியாது.
----
புராணங்கள், இதிகாசங்கள், வீட்டு வேலைகள், கலைகள், குடும்ப வாழ்வின் கடமைகள், சிறந்த ஒழுக்கத்தை வளர்க்கும் அடிப்படைக் குணங்கள் முதலியவற்றை நவீன விஞ்ஞானத்தின் உதவியுடன் பெண்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். அத்துடன் தர்மம், நீதி, ஆன்மிகம் முதலியவற்றிலும் மாணவியருக்குப் பயிற்சி தர வேண்டும்.
...
கல்வியும், அறவாழ்க்கையில் ஈடுபாடும் கொண்ட பெண்கள் உள்ள குடும்பங்களில்தான் மாமனிதர்கள் பிறப்பார்கள்.
---
கல்வியாக இருக்கட்டும் அல்லது, வேறு எதுவாக இருக்கட்டும், ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என்றால் அதில் சில குறைபாடுகள் நேர்வது இயல்புதான். இப்போது ஆன்மிகத்தை மையமாகக்கொண்டே பெண் கல்வியைப் பரப்ப வேண்டும்.
---
நாம் மீண்டும் எழுச்சி பெற வேண்டுமானால், சாதாரண மக்களிடையே கல்வியைப் பரப்ப வேண்டும்.
---
உலகத்தின் ஒரு பகுதியில் ஆன்மீகம் தேவைப்பட்டு, அதே நேரத்தில் அது மற்ற எந்தப் பகுதியிலாவது இருக்கவும் செய்யுமானால், அதைப் பெறுவதற்கு நாம் மனப்பூர்வமாக விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தேவைப்படுகிற இடத்தில் அது வந்துசேர்ந்து குலைந்த சமநிலையைச் சீர்செய்து விடுகிறது.
---
அரசியல், சமுதாயம், ஆன்மீகம் என்று ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு குறிப்பிட்ட பங்கு உள்ளது.ஒட்டுமொத்த மனித அறிவிற்கு இந்தியாவின் பங்கு ஆன்மீகமும் தத்துவமும் ஆகும்.
--
தற்போது இந்தியாவில் மகத்தான மத மறுமலர்ச்சி தோன்றியுள்ளது. இதில் பெருமை இருப்பதைப் போலவே ஆபத்தும் உள்ளது.ஏனெனில் சில வேளைகளில் இந்த மறுமலர்ச்சி கொள்கைவெறியை வளர்க்கிறது, சில நேரங்களில் அந்த வெறி எல்லை கடந்து போய்விடுகிறது. மறுமலர்ச்சிக்குக் காரணமானவர்கள் கூட அதைக் கட்டுப்படுத்த முடியாத நிலை வருகிறது. எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

No comments:
Post a Comment