சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்-பகுதி 6
----
காலமெல்லாம் உலகம் இது வரையிலும் பெற்று வந்திருக்கும் அறிவு முழுவதும், மனதிலிருந்துதான் வந்திருக்கிறது.
-----
பிரபஞ்சத்திலுள்ள அறிவு முழுவதும் நிரம்பிய மிகப் பெரிய நூல் நிலையம் உன்னுடைய உள்ளத்திலேயே அடங்கியிருக்கிறது. வெளி உலகம் வெறும் ஒரு தூண்டுதலாக மட்டும் அமைகிறது; அது உன்னுடைய உள்ளத்தை நீ ஆராய்வதற்குத் தேவையான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
----
நல்ல ஒழுக்கத்தை உருவாக்குவதாகவும், மனவலிமையை வளர்ப்பதாகவும், விரிந்த அறிவைத் தருவதாகவும், ஒருவனைத் தன்னுடைய சுயவலிமையைக்கொண்டு நிற்கச் செய்வதாகவும் இருக்கக்கூடிய கல்விதான் நமக்குத் தேவை.
-----
வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம் ஒரு போராட்டம். இதை மக்கள் எதிர்கொள்வதற்கும், அதில் வெற்றி பெறுவதற்கும் உரிய தகுதியைத் தருவதாகக் கல்வி இருக்க வேண்டும்.
----
உறுதியான நல்ல ஒழுக்கத்தைத் தருவதாகக் கல்வி இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மிகப் பெரிய ஆர்வத்தைத் தருவதாகக் கல்வி இருக்க வேண்டும். சிங்கம் போன்ற மனஉறுதியை வெளிப்படுத்துவதற்குப் பயன்படுவதாகக் கல்வி இருக்க வேண்டும்.
----
கல்வி என்பது ஒருவனுக்குத் தன்னம்பிக்கையைத் தருவதாக இருக்க வேண்டும். கல்வி, ஒருவன் தன்னுடைய சொந்தக் கால்களில் நிற்பதற்கு உதவி செய்வதாக இருக்க வேண்டும்.
----
வெறும் புள்ளி விவரங்களைச் சேகரித்துக் கொண்டிருப்பதல்ல மனதை ஒருமுகப்படுத்துவதுதான் என்னைப் பொறுத்த வரையில் கல்வியின் அடிப்படையான இலட்சியமாகும்.
---
சமுதாயத்தில் ஆண் பெண் அனைவருக்கும், உண்மையான கல்வியை அளிப்பது நமது கடமையாகும். அந்தக் கல்வி மூலமாக அவர்கள் தங்களுக்கு, நல்லது எது, கெட்டது எது என்பதைத் தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள்; அதன் மூலம் கெட்டதை நீக்கி விடுவார்கள். அதன் பிறகு சமுதாயத்தில் வலிந்து ஒன்றை நிறுவவோ எதையும் அழிக்கவோ வேண்டியதில்லை

No comments:
Post a Comment