Sunday, 14 June 2020

இந்துமதம்-வகுப்பு-8

இந்துமதம்-வகுப்பு-8🕉️
நாள்--27-5-2020
..
ஆதிகால மொழி
..
பழைய காலத்தில் எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஒவ்வொரு காடுகளில் வாழும் மக்கள் பேசும் மொழியும் வேறுபடுகிறது.
தற்போதுகூட இந்தியாவில் நூற்றுக்கணக்கான மொழிகள் மக்களால் பேசப்படுகிறது.
மிகப்பழைய காலத்தில் ஆயிரக்கணக்கான மொழிகள் பேசப்பட்டிருக்கும்.
..
இனங்கள் ஒன்று சேரும்போது,மொழிகளும் ஒன்றுசேர்கின்றன.
ஒரு பொருளுக்கு பல பெயர்கள் கொடுக்கப்படுகின்றன.
இவ்வாறு பல ஆயிரம் ஆண்டுகளில் பல இனங்கள் ஒன்று கலந்து மிகப்பெரிய மொழி ஒன்று உருவானது.
அதற்கு வேதமொழி என்று பெயர்.இந்த மொழியில்தான் வேதம் பேசப்பட்டது.
வேதமொழிக்கு எழுத்துக்கள் இல்லை.
..
எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்படாத அந்த காலத்திலேயே வேதங்கள் வழக்கத்தில் இருந்தன.
எழுத்துக்கள் இல்லாமல் ஒரு மொழி எப்படி இருக்க முடியும்?
காடுகளில் வாழும் மனிதர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள்.ஆனால் அவர்களிடம் எழுத்துக்கள் இல்லை.
அதுபோல பல ஆயிரம் ஆண்டுகளாக எழுத்துக்கள் இல்லை.ஆனால் மொழி இருந்தது.
..
குரு வாய் மூலம் கூறுவார்.சிஷ்யன் காது வழியாக கேட்டுக்கொள்வான். எனவே வேதங்களுக்கு ஸ்ருதி என்று பெயர்
இவ்வாறு பல ஆயிரம் ஆண்டுகளாக வேதங்கள் வாய் மூலமாகவே ஒரிவரிடமிருந்து இன்னொருவருக்கு போதிக்கப்பட்டது.
வேதத்தை மனப்பாடம் செய்வது பிராமணர்களின் முக்கிய வேலை
வேதத்தின் ஒவ்வொரு வரியையும் ஓசை பிசகாமல் அப்படியே ஒப்பிக்க வேண்டும்.
சிறிது ஓசை மாறினாலும் பொருளே மாறிவிடும்.
..
அரசர்கள் ஒரு தகவலை இன்னொருவரிடம் தெரிவிக்க வேண்டுமானால் ஆதாரப்பூர்வமாக ஏதாவது ஒன்று தேவைப்படுகிறது. மன்னரிடம் ஒன்றைக்கேட்டுவிட்டு இன்னொருவரிடம் இன்னொன்றை சொல்வதற்கு வாய்ப்பு உள்ளது.எனவே மொழிக்கு எழுத்துக்கள் உருவாக ஆரம்பித்தன.
..
ஆதிகாலத்தில் வாழ்ந்த அரசர்கள் தகவல் பரிமாற்றத்திற்கான பொதுவான மொழியை உருவாக்கினார்கள்.
இது படிப்படியாக வளர்ச்சியடைந்தது.
தென்னிந்தியாவில் காணப்படும் ஆதிகால எழுத்துகளுக்கும் வடஇந்தியாவில் காணப்படும் ஆதிகால எழுத்துக்களுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.
மக்கள் பல மொழிகளை பேசினாலும் தகவல்பரிமாற்றத்திற்கான எழுத்துக்கள் பொதுவாக இருந்திருக்கலாம்.
..
ஒரு மொழி என்பது தனிமனிதன் உருவாக்குவதல்ல.பல இனங்களில் பேசப்படும் மொழிகள் ஒன்று சேர்ந்து புதிய மொழிகள் உருவாகின்றன.
..
வடஇந்தியாவில் எழுத்துக்களுடன்கூடிய பிராகிருதம் என்ற மொழி உருவானது.
தென்னிந்தியாவில் ஆதிதமிழ் மொழி உருவானது.
இந்த இரண்டு மொழியின் எழுத்துக்களுக்கும் பல ஒன்றுமைகள் உள்ளன.
இலக்கணங்களில்கூட அதிக ஒற்றுமைகள் உள்ளன.
எழுத்துக்களிலும் இலக்கணங்களிலும் ஒன்றுமை இருந்தாலும் பெயர்கள்,உச்சரிப்புகளில் வேறுபாடுகள் உள்ளன.
..
பிராகிருதமொழி படிப்படியாக வளரச்சியடைந்து சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு பாணினி என்ற முனிவரால் சமஸ்கிருதமொழி உருவாக்கப்பட்டது.
தமிழ்மொழியும் படிப்படியாக வளர்ச்சியடைந்தது.
இவ்வாறு பாரததேசத்தில் இரண்டுபெரும் மொழிகள் உருவாகின.
வடஇந்தியாவில் காணப்படும் அனைத்து மொழிகளும் சமஸ்கிருதத்திலிருந்து உருவானது.
தென்னிந்தியாவில் காணப்படும் மொழிகள் தமிழிலிருந்து உருவானது.
..
ஹிந்திமொழியின் எழுத்துக்களும் சமஸ்கிருதமொழியின் எழுத்துக்களும் ஒன்றே.
வாங்காள மொழியின் எழுத்துக்களும்,உச்சரிப்பும் வேறுபட்டிருந்தாலும் பிறவற்றில் அது சமஸ்கிருதத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது.
உருது என்பது ஹிந்தியும் அரேபிய மொழியும் கலந்து உருவானது.
தமிழும்,சமஸ்கிருதமும் கலந்து மலையாளம்,தெலுங்கு,கன்னடம் என்ற தென்னிந்திய மொழிகள் உருவானது.
எனவே சமஸ்கிருதம் என்பது அழிந்துபோனமொழி என்று யாராவதுகூறினால் அது தவறு.
..
மரப்பட்டைகள்,மர இலைகள், கல்வெட்டுகள் போன்றவற்றில் எழுத ஆரம்பித்தார்கள்.
இவ்வாறு மொழி படிப்படியாக வளர்ச்சியடைந்தது.
எழுத ஆரம்பித்தபிறகு மனப்பாடம் செய்வது குறைந்துபோனது.

No comments:

Post a Comment