சுவாமி விவேகானந்தரின்
விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-14
🌸
முட்டாள்களைச்
சந்திப்பது
ராஜபுதனத்தில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்
சுவாமிஜி. அந்தப் பெட்டியில் அவரைத் தவிர இரண்டு வெள்ளையர்கள் இருந்தனர். சுவாமிஜியை
ஆங்கிலம் அறியாதவர் என்றெண்ணி அவரைக்கேலி செய்தும் ஏசியும் சிரித்தபடி வந்தனர். சுவாமிஜி
அமைதியாக இருந்தார். தமக்கு ஆங்கிலம் தெரிந்தது போலவே காட்டிக்கொள்ளவில்லை. ரயில் ஒரு
நிலையத்தில் நின்றதும் அங்கிருந்த ஒருவரிடம், தண்ணீர் வேண்டும்” என்று ஆங்கிலத்தில் கேட்டார் சுவாமிஜி ஆங்கிலம் பேசுவதைக்கேட்ட
அந்த வெள்ளையர்கள் இருவரும் துணுக்குற்றனர். சுவாமிஜியிடம் வந்து, நாங்கள் இவ்வளவு
உங்களைக்கேலி செய்தும் நீங்கள் எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தீர்களே, அது
என்ன? என்று கேட்டனர். அதற்கு சுவாமிஜி, அது ஏனா? ஏனெனில் நண்பர்களே, நான் முட்டாள்களைச்
சந்திப்பது இது முதல் தடவை அல்ல” என்றார். ஆங்கிலேயர்களுக்கு ஆத்திரம்
வந்தது. அவரை அடிப்பதற்குத் தயாராயினர். சுவாமிஜி அதற்கும் தயாராக எழுந்தார். அவரது
உடம்மையும் வலுவான கைகளையும் கண்ட வெள்ளையர்கள் அவரிடம் பணிந்து போவதே மேல் என்று அமைதி
யாகி விட்டார்கள்.
அடுத்தது கேத்ரியில் நடந்த சம்பவம். ஒர் ஊரில் மக்கள் சுவாமிஜியிடம்
கூட்டம் கூட்டமாக வந்தார்கள். சுவாமிஜி அவர்களிடம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்.
சுவாமிஜியின் வார்த்தைகளிலேயே அந்த நிகழ்ச்சியைப் பற்றி கேட்போம். நம்புவதற்கே கடினமாகத்
தான் இருக்கும். ஆனால் மூன்று நாட்கள் இரவும் பகலும் எனக்கு ஒரு கணம் கூட ஓய்வே கிடைக்கவில்லை.
தூக்கம், உணவு எதுவும் கிடையாது. யாரும் அதைப்பற்றி கவலைப் படவும் இல்லை. அவர்கள் வந்து
கொண்டே இருந்தார்கள். நானும் பேசிக்கொண்டே இருந்தேன். மூன்றாம் நாள் இரவு வந்தது. அனேகமாக
எல்லாரும் போய் விட்டார்கள். அப்போது தாழ்ந்த ஜாதியைச்சேர்ந்த ஒருவன் என்னிடம் வந்தான்.
சுவாமிகளே. மூன்று நாட்களாக உணவோ உறக்கமோ இல்லாமல் நீங்கள் பேசவதை நான் பார்க்கிறேன், என் மனம் வேதனையில் துடிக்கிறது.
பசியும் களைப்பும் உங்களுக்கும் இருக்கத்தானே செய்யும்! ஒரு டம்ளர்தண்ணீர் கூட நீங்கள் குடிக்கவில்லையே!
என்று பரிவுடன் கூறினான். அவனது அன்பு என்னை நெகிழச்செய்தது. சாப்பிட ஏதாவது நீ தருவாயா?
என்று அவனிடமே கேட்டேன். தர வேண்டும் என்றுதான் என் இதயம் ஏங்குகிறது. ஆனால் என்ன செய்வேன்?
நான் தாழ்ந்த ஜாதியைச்சேர்ந்தவன். சக்கிலியன். நான் சப்பாத்தி செய்து உங்களுக்குத்
தரமுடியாது. மாவும் மற்ற பொருட்களும் கொண்டு
தருகிறேன். நீங்களே செய்து சாப்பிடுங்கள். என்றான் அவன். அதற்கு நான், பரவாயில்லை,
நீயே செய்து கொண்டு வா, நான் சாப்பிடுகிறேன், என்றேன். அவன் நடுங்கிப்பொனான். சக்கிலியனான
அவன் ஒரு துறவிக்கு உணவளித்தது தெரிந்தால் தண்டிக்கப் படுவான். ஏன், நாடு கடத்தவே செய்வார்கள்.
ஆனால் நான் அவனை ஆசுவாசப்படுத்தினேன். தண்டனை கிடைக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன்
என்று உறுதியளித்தேன். அவன் என் உறுதியை அவ்வளவாக நம்பவில்லை. இருந்தாலும்என்மீதுள்ள அன்பு காரணமாகச் சப்பாத்தி
கொண்டு வந்தான். நானும் சாப்பிட்டேன். தேவர் தலைவனான இந்திரன் ஒரு தங்கக்குவளையில்
தேவாமிர்தத்தைத் தந்திருந்தால் அது கூட இவ்வளவு ருசித்திருக்காது.என்றே எனக்குத்தோன்றியது.
என் நெஞ்சம் அன்பாலும் நன்றியாலும் நிறைந்தது. கண்கள் கண்ணீரை பொழிந்தன.
கேத்ரி மன்னருடன்
எனக்குப் பழக்கம் ஏற்பட்ட பிறகு நான் அவரிடம் இதனைத் தெரிவித்தேன். அவர் உடனடியாக அவனை
வரவழைத்தார். தனது தவறுக்குத் தண்டனை கிடைக்கப்போகிறது என்று அவன் நடுங்கியபடியே வந்தான்.
மன்னர் அவனைப் புகழ்ந்ததுடன் அவனுக்குப் பொன்னும் பொருளும் கொடுத்து அனுப்பினார்.
கட்ச் பகுதியில் சுவாமிஜி பயணம் கொண்டிருந்தபோது நடந்த நிகழ்ச்சி. பாலைவனம் வழியாகச்சென்று
கொண்டிருந்தார் அவர். கடும் வெயில், தாகத்தால் அவரது தொண்டை வறண்டது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மனித நடமாட்டத்தையே காணோம். அவர்
தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தார். திடீரென்று தொலைவில் ஒரு கிராமம் தெரிந்தது. குளங்களும்
தென்பட்டன. அவரது வார்த்தைகளிலேயே கேட்போம்.
ஒரு மறை
மேற்கு இந்தியாவில் ஒரு பாலைவனப் பிரதேசத்தில் நான் பயணம் செய்து கொண்டிருந்தேன். நாட்கணக்கில்
அந்தப் பாவைனத்தின் வழியாக நான் நடந்துசென்றேன். ஆச்சரியம் என்னவென்றால்அழகிய ஏரிகள் அங்கே தினமும் என் கண்களில்
தென்படும். சுற்றிலும் மரங்கள் உயர்ந்து நிற்கும். அந்த மரங்களின் நிழல்கள், ஏரிகளில்
உயர்ந்து நிற்கும். அந்த மரங்களின் நிழல்கள், ஏரிகளில் தலைகீழாக அசைந்து கொண்டிருப்பதையும்
நான் பார்த்தேன். ஆகா! எத்தனை அற்புதமாக இருக்கிறது.இதைப்போய் பாலைவனம் என்கிறார்களே!
என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.இவ்வாறு அழகிய ஏரிகளையும் மரங்களையும் பார்த்தவாறே
ஒரு மாதம் பயணம் செய்தேன். ஒரு நாள் எனக்கு மிகவும் தாகம் எடுத்ததுஇ தண்ணீர் குடிப்பதற்காக
இந்தத் தெளிந்த நீர் நிறைந்த அழகிய ஏரிகளுள் ஒன்றைநோக்கிச்சென்றேன். நான் அதைநெருங்கியபோதோ
அது மறைந்துவிட்டது.ஆ! வாழ்நாள் முழுவதும் நான் கேள்விப்பட்ட கானல் நீர் இது தான்” என்று எண்ணிக்கொண்டேன்.
ஒரு மாதமாகத் தினந்தோறும் கானல் நீரையே பார்த்தும், அது கானல் நீர் என்று தெரியவில்லையே
என்ற எண்ணம் தோன்றியது. அடுத்த நாள் காலையில் மறுபடியும் பயணத்தைத் தொடங்கினேன். மறுபடியும்
ஏரிகள் தெரிந்தன. ஆனால் அது வெறும் கானல் நீரே, ஏரியல்ல என்ற அறிவும் கூடவே தோன்றியது.
கானல் நீர் உவமை சுவாமிஜியின் சொற்பொழிவில் அடிக்கடி
இடம்பெறுவதைக் காணலாம். ஓர் இடத்தைப் பார்ப்போம்..
இந்தப் பிரபஞ்சத்தைப்
பற்றிய விஷயமும் இப்படித்தான் கானல் நீராகிய
இந்த உலகில் நாட்கணக்காக , மாதக் கணக்காக வருடக்கணக்காக, மாதக்கணக்காக, வருடக்கணக்காக
அது கானல் நீர் என்று தெரியாமலே பயணம் செய்து கொண்டிருக்கிறோம். ஒரு நாள் இந்தத் தோற்றம் மறையும். ஆனால் மறுபடியும்
வரும்.வினைப்பயனின் சக்திக்குக் கட்டுப்பட்டே உடல் இயங்குகிறது. எனவே அது தீரும் வரை
இந்தக் கானல் நீர் தோன்றவே செய்யும். முன்பிருந்தது போலவே ஆண், பெண், மிருகங்கள், தாவரங்கள்,
ஆசாபாசங்கள், கடமைகள் என்று எல்லாம் வந்து சேரவே செய்யும். ஆனால் இவையெல்லாம் முன்னைப்போல்
அவ்வளவு சக்தி உடையவனாக இருக்காது.
அடுத்ததும்
ஒரு போலீஸ் நிகழ்ச்சி தான். இது வராக நகர நாட்களில் நடந்திருக்கலாம். சுவாமிஜியும்
சகோதரத்துறவிகளும் ஊருக்கு ஒதுக்குப்புறமான
பாழடைந்த பங்களா ஒன்றில் ஆன்மீக சாதனைகளும் படிப்புமாக வாழ்ந்து வந்தகாலம். அவரது குடும்ப
நண்பர் ஒருவர் புலனாய்வுத்துறையில் போலீஸ்
அதிகாரியாக இருந்தார். பட்டங்களும் விருதுகளும் பல வாங்கியவர் அவர். ஒரு நாள் அவர்
சுவாமிஜியை மாலை விருந்திற்காகத் தமது வீட்டிற்கு அழைத்தார். சுவாமிஜி சென்றார். பலர்
வந்து போயினர். ஆனால் விருந்திற்கான எந்த அடையாளத்தையும் காணோம்.
அந்த அதிகாரி ஏதோ பலவிஷயங்களைப்பேசினார்.திடீரென்று
அவரது தோரணை மாறியது. சுவாமிஜியை ஒரு முறை வெறித்துப் பார்த்துவிட்டு இதோ பார், இனியும்
உண்மையை மறைத்துப் பயனில்லை. உன் கட்டுக்கதைகளால் என்னை ஏமாற்ற முடியாது.என்பது உனக்கே தெரியும். நீயும் உன் கூட்டாளிகளும் ஆன்மீகப் போர்வையில் அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு
வருகிறீர்கள் என்று எனக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன. உண்மையைக்கூறிவிடு, என்று
மிரட்டத் தொடங்கினார்.
சுவாமிஜி
இதனைச்சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அரசுக்கு
எதிரான செயல்கள் என்கிறீர்கள், ஆன்மீகப் போர்வை
என்கிறீர்கள். அவற்றிற்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு? என்று உறுதியான குரலில் கேட்டார்
சுவாமிஜி. அதைத்தான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்” என்று கூறினார் அதிகாரி. தொடர்ந்து,
அது ஒரு பயங்கர சதித்திட்டம். அதன் தலைவன் நீ. உண்மையைச்சொல்லி விடு. குற்றத்தை ஒப்புக்
கொண்டால் உனது தண்டனையைக் குறைக்க வகை செய்கிறேன். என்றார் அந்த அதிகாரி. வெகுண்டெழுந்தார்
சுவாமிஜி. எல்லாம் எங்களுக்குத்தெரியுமானால்
ஏன் வந்து நாங்கள் தங்கியிருக்கும் வீட்டைச்சோதனை செய்யக்கூடாது.? ஏன் அங்கேயே வந்து
எங்களைக்கைது செய்யக்கூடாது? என்று தைரியமாக கேட்டார்.
அத்துடன்
நிற்கவில்லை. மௌனமாக ச்சென்று கதவைப் பூட்டினார். அச்சுறுத்தும் தோரணையில் அதிகாரியை நோக்கித் திரும்பினார். சுவாமிஜியின் கட்டுமஸ்தான
உடம்பும் சுட்டெரிக்கும் பார்வையும் அந்த அதிகாரியை வெலவெலக்கச்செய்தது. சுவாமிஜி அவரையே
கூர்ந்து பார்த்தபடி அவரது அருகில் சென்றார். பிறகு கம்பீரமாக, திருட்டுத்தனமாக என்னை
இங்கு அழைத்து இல்லாத குற்றச்சாட்டுகளை எங்கள் மீது சுமத்துகிறீர்கள். அது உங்கள் வேலையின்
ஒரு பகுதி. ஆனால் நான் கற்றுக்கொண்டது என்ன தெரியுமா? யார் அவமதித்தாலும் கோபம் கொள்ளக்கூடாது
என்பதைத் தான். நானும் ஒரு குற்றவாளியாக, சதிகாரனாக இருந்திருந்தால் நீங்கள் ”உதவி” என்று அழைப்பதற்குக்கூட அவகாசம் தந்திருக்க மாட்டேன். கழுத்தை
நெரித்திருப்பேன். ஆனால் நான் ஒரு துறவி. எனவே உங்களை எதுவும் செய்யாமல் விடுகிறேன். என்று கூறிவிட்டு வெளியில் சென்றார். இதற்குள் அந்த அதிகாரி பயத்தில்
உறைந்துபோயிருந்தார். அதன்பிறகு அவர் மடத்தின் பக்கம் தலை வைத்து கூட படுக்கவில்லை.
வயிறு எரிகிறது
அடுத்த நிகழ்ச்சி வட இந்தியாவில் நடைபெற்றது. சுவாமிஜி அந்த நாட்களில் நாள் முழுவதும்
நடப்பது, திரும்பியே பார்க்காமல் செல்வது, உணவை யாசிக்கமல் தானாகக் கிடைப்பதை மட்டுமே
உண்பது என்ற விரதங்களைக்கொண்டிருந்தார். ஒரு முறை இரண்டு நாட்களாகத்தொடர்ந்து எந்த
உணவும் கிடைக்கவில்லை. அடுத்த நாள் பிற்பகலில்
ஒரு பணக்கார வீட்டு குதிரை லாயம் வழியாகச்செல்ல நேர்ந்தது. குதிரை களைப் பராமரிக்கின்ற
பணியாள் அங்கே நின்றிருந்தான். அவன் சுவாமிஜியைக்
கண்டதும் அவரது நிலைமையைப் புரிந்து கொண்டான். பரிவுடன் அவரது அருகில் சென்று
, பாபாஜி, இன்று நீங்கள் ஏதாவது சாப்பிட்டீர்களா?
என்று கேட்டான். இல்லை, என்றார் சுவாமிஜி. அவன் அவரை அந்த லாயத்தினுள் அழைத்துச்சென்று
அமரச்செய்து தண்ணீர் கொடுத்து உபசரித்தார். பிறக சப்பாத்தியும் சட்னியும் கொடுத்தார்.
அந்த சட்னி காரம் மிக்கதாக இருந்தது. சுவாமிஜி
காரப்பிரியர். இந்தப் பரிவிராஜக நாட்களில் பலநேரங்களில் அவருக்குக் கிடைத்த
கூட்டு , கறி, குழம்பு எல்லாம் ஒரு மிளகாய் மட்டுமே. எனவே அவர் அதற்கு நன்றாகப் பழகிவிட்டிருந்தார்.
ஆனால் ஓரிரு நாட்களாகப் பட்டினி கிடந்த வயிற்றில் காரம் மிக்க சட்னி சென்றதும் வயிறே
பற்றியெரிவது போல் வலித்தது. வலி தாங்காமல் புரள ஆரம்பித்தார் சுவாமிஜி.
பணியாளோ என்ன செய்வதென்று அறியாமல் திகைத்தான். ஒரு துறவிக்கு
நல்லது செய்யப்போய் இப்படி தவறு செய்து விட்டோமே என்று துடித்த அவன் இரு கைகளாலும்
தலையில் அடித்துக்கொண்டு, ஆ! நான் என்ன செய்து விட்டேன்! ஒரு சாதுவின் உயிர் போவது
போன்ற காரியத்தை அல்லவா செய்துவிட்டேன்! என்று
கதறினான்.
அப்போது
தலையில் கூடை ஒன்றைச் சுமந்தபடி ஒருவன் அந்தவழியாகச் சென்றான். பணியாளின் சத்தத்தைக்கேட்டு
அங்கே வந்து பார்த்தான். அவனைக் கண்ட சுவாமிஜி, அந்தக் கூடையில் என்ன உள்ளது? என்று
கேட்டார். ”புளி” என்றான் அவன். ஆ! எனக்கு அது
தான் இப்போது வேண்டும் என்றார் சுவாமிஜி. கொஞ்சம் புளியை எடுத்து,
தண்ணீரில் கரைத்துக் குடித்தார். சிறிது நேரத்தில் வயிற்றுவலி வெகுவாகக் குறைந்தது.
பிறகு பயணத்தைத்தொடர்ந்தார் சுவாமிஜி.
மாறும் லட்சியங்கள்
ஒரு சமயம்
சுவாமிஜி திபெத்தியக் குடும்பம் ஒன்றில் தங்க நேரிட்டது. திபெத்தில் சில இடங்களில்
ஒரு பெண் பல புருஷர்களை மணந்து வாழும் வழக்கம் நிலவியது. சுவாமிஜி தங்கியிருந்த குடும்பத்தைச்சேர்ந்த
ஆறு சகோதரர்கள் ஒரு பெண்ணை மணந்திருந்தார்கள்.
சுவாமிஜி அவர்களுடன் சகஜமாகப்பழக தொடங்கிய பின் இது விஷயமாகத் தமது கருத்தை அவர்களிடம்
கூறினார். கற்பு நெறி என்பதை விளக்கி, ஒரு
பெண் பல புருஷர்களைத் திருமணம் செய்து கொள்வது சரியல்ல என்பதைக்கூறினார். இதைக்கேட்ட
அவர்களில் ஒருவன் பொறுமை இழந்து, துறவியான தாங்கள் பிறரைச்சுயநலக்காரர்களாக இருக்கும்படி
போதிப்பது எப்படிப்பொருந்தும்? இவளை நானே தான் அனுபவித்து மகிழ வேண்டும், பிறருக்கு அளிக்கக்கூடாது என்று எண்ணுவது தவறு அல்லவா? ஒவ்வொருவனும்
தனக்கென்று மட்டும் ஒரு மனைவியை அனுபவிப்பது சுயநலம் இல்லையா? அதுவும் சகோதர்களாகப்
பிறந்தவர்கள் தங்கள் உடைமைகளையெல்லாம் சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும்- மனைவி உட்பட” என்றான் அவன். கற்பு
நெறியை வைத்துப்பார்த்தாலும், தர்க்கரீதியாகவே அலசிப்பார்த்தாலும் அவனுடைய கூற்று
தவறாக இருக்கலாம். எதையும் அறிவுக்கூர்மையால் ஆதரித்தோ எதிர்த்தோ பேசிவிடலாம். என்றாலும் அந்த மலைஜாதி
மக்களின் எளிய சகோதரத்துவத்தை நினைத்து சுவாமிஜி அதிசயித்தார்.
இது பற்றி
தமது மகாபாரதச்சொற்பொழிவில் கூறினார் சுவாமிஜி. பாண்டவர்கள் ஐவரை மணந்த திரௌபதியைப்
பற்றி குறிப்பிடும்போது , திரௌபதி ஐந்து சகோதரர்களுக்கு பொது மனைவி ஆனாள். ஒவ்வொரு
சமூகத்திலும் வளர்ச்சி படிப்படியாகத்தான் உருவாகிறது. பழைய கால சரித்திர நிலைமை இந்த இதிகாசத்திலிருந்து
தெரிகிறது. ஐந்து சகோதரர்கள் ஒரே பெண்ணை மணந்தார்கள் என்று காவிய ஆசிரியர் கூறுகிறார்.
ஆனால் அதே வேளையில் தாயின் ஆணை, தாயின் கட்டளை
என்றெல்லாம் கூறி, ஏதோ காரணம் காட்டுகிறார். பூசி மெழுகப் பார்க்கிறார். ஒரு பெண்பல கணவர்களை மணக்கும்
வழக்கம் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு கட்டத்தில் இருந்திருக்கிறது. ஒரு குடும்பத்தில் உள்ள
எல்லா சகோதரர்களும் ஒரே பெண்ணை மணப்பார்கள். அந்தப்பழைய வழக்கம் தான் இது என்றே நான்
நினைக்கிறேன், என்றார் அவர்.
இது போல
இமயம் முதல் குமரி வரையிலுள்ள பல தரப்பட்ட மக்களின் பழக்க வழக்கங்களைசுவாமிஜி அறிந்திருந்ததால்
சமூக சீர்திருத்தம் என்பதை ஒரு பரந்த கண்ணோட்டத்தில் அவரால் பார்க்க முடிந்தது. சொந்த அளவு கோலால் மற்றவர்களின் பழக்க வழக்கங்களைப்
பார்ப்பதைவிட அவர்களின் கண்ணோட்டத்தில் அனுதாபத்தோடு நோக்கினார் அவர். அதே சமயத்தில்
பாரதப்பண்பாடு என்ற ஆன்மீக நாகரீகத்தை அளவு கோலாகக்கொண்டு அவர் களை முன்னேற்றவும் முயற்சி
செய்தார்
குமரியில்
செய்த புதுமைத் தியானம்.
-
வராக நகரத்தில்
மடத்தை உருவாக்கியதுடன் சுவாமிஜியின் வாழ்க்கையில் முதல் கட்டம் நிறைவுற்றது. மடத்தில் அவர் இரண்டு வருடங்கள் தங்கி சகோதரத்துறவிகளுக்கு ஊக்கம் அளித்தார். மடத்து
வாழ்க்கைக்கு ஒரு வடிவம் கொடுத்தார்.
1888-இல் பரிவிராஜகராக அவரது வாழ்க்கையின்
இரண்டாம் கட்டம் ஆரம்பித்தது. முதல் முறை காசி, அயோத்தி, லக்னௌ, ஆக்ரா, பிருந்தாவனம்
வழியாக இமயமலைக்கு ச் சென்றார். இயற்கை அழகையும் ஆன்மீக உயர்வையும் அங்கே அனுபவித்த
அவர் பல காரணங்களால் வராக நகருக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. 1890-இல் மீண்டும் ஒரு
முறை இமயமலைக்குச்சென்றார். விரைவிலேயே திரும்பினார். 1891-இல் தமது திட்டத்தைச்சற்று
மாற்றிக்கொண்டார்.
நீ நாட வேண்டியது
உன்னுடைய முக்தியை அல்ல. உலகிற்கே நிழல் தருகின்ற ஆலமரமாக விளங்க வேண்டியவன் நீ, என்று
குருதேவர் ஒரு முறை கூறியதை சுவாமிஜி நினைவு கூர்ந்திருக்க வேண்டும் ஒவ்வொரு முறை செல்லும்
போதும் , திரும்பி வர மாட்டேன். என்று கூறிவிட்டு த்தான் சென்றார். ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் திரும்ப
வேண்டியதாயிற்று. இமயத்தின் ஒரு குகையில் அவர் வாழ்ந்திருக்கலாம். புறவுலகத்தொடர்பேயின்றி
இறைவனில் ஆழ்ந்து தம்மையே கரைத்திருக்கலாம். ஆனால் அதன்மூலம் இதுவரை வந்த நமது மாமுனிவர்களின்
எண்ணிக்கை ஒன்று கூடியிருக்கும், அவ்வளவு தான். உலகின் போக்கிற்கு ஒரு திருப்பம் நேர்ந்திருக்காது,
உலகின் சிந்தனையில் ஒரு புரட்சி தோன்றியிருக்காது.
மனித குலத்தின்
அதிஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். சுவாமிஜி இமயமலைமீது தமக்குள்ள கவர்ச்சியை விட்டு,
பார்வையை மக்கள் மீது செலுத்தினார். அதற்கு ஸ்ரீராமகிருஷ்ணரின் திருவுளமும் ஒரு காரணம்.
பலமுறை சுவாமிஜி குகைகளில் தங்கவும் செய்தார். ஆனால் நீண்ட காலம் அவரால் அங்கே இருக்க
இயலவில்லை.
குகைகளிலிருந்து என்னைப் பலவந்தமாக யாரோ ஒருவர் பிடித்து வெளியில்
தள்ளி, போ, போய் சுற்றிப்பார். என்று அலைய விடுவது போல் இருந்தது என்று பின்னாளில்
சுவாமிஜி கூறினார். அவரும் சுற்றினார். சகோதரத்துறவியோ வேறு யாருமோ தம்முடன் வரக்கூடாது
என்பதில் உறுதி யாக இருந்தார். கைத்தடி ஒன்றும், கமண்டலம் ஒன்றும், ஓரிரு நூல்களும் தவிர வேறு எதுவும் இன்றி, இறையருள் ஒன்றையே சார்ந்து புறப்பட்டார்
அவர்.ராஜபுதனம், குஜராத், பம்பாய், மைசூர் , கேரளா என்று அவரது பயணம் சுமார் இரண்டு வருடங்கள் நீடித்தது. இந்தியாவின்
தென்கோடியான குமரி முனையில் நிறைவுள்ளது.
--
வாழ்க்கை முறை
...............
இந்த நாலரை வருட பரிவிராஜக வாழ்க்கையில் சுவாமிஜி
மன்னர்களின் அரண்மனையில் வாழ்ந்தார். ஏழை களின் குடிசையில் வாழ்ந்தார். தீண்டத்தகாதவர்கள்
என்று சமுதாயம் ஒதுக்கியவர்களுடன் பழகினார். மன்னர்களுடனும்
மந்திரிகளுடனும் கலந்து ஆலோசித்தார். பண்டிதர்களுடன்
விவாதங்கள் நடத்தினார். முத்துக்குளிப்பவன் கடலில் மூழ்கித்துழாவுவது போல் அவர் இந்தியா
என்னும் கடலில் மூழ்கி அதன் உண்மையைத்தேடினார். மக்களின் இன்பதுன்பங்கள், எதிர்பார்ப்புகள்,
ஏமாற்றங்கள், லட்சியங்கள், நம்பிக்கைகள், அனைத்தையும் நேரடியாகக்கண்டார். சாஸ்திரங்களில்
அவருக்கு இருந்தது போன்ற அறிவு பொருளாதாரத்திலும் இருந்தது. மக்களின் வாழ்க்கை முறையைச் செலுத்துவதான
பொருளாதாரத்தில் அவருக்கு இருந்த ஆழ்ந்த அறிவு காரணமாக நாட்டின் நிலைமையை அவரால் தெளிவாகப் புரிந்து
கொள்ள முடிந்தது.
சுவாமிஜி
இந்த வேளையில் தொடர்ந்து புதிய அகுபவங்களைத்தேடி க்கொண்டிருந்தார். புதிய சிந்தனைகள்
ஏதாவது கிடைக்குமா என்று ஏங்கினார் தொடர்ந்து
மத சமுதாயக் கருத்துக்களைச்சேகரித்தார், முரண்பாடுகளை அறிந்துகொண்டார். ஒப்பிட்டு
நோக்கினார். பல்வேறு பகுதிகளில் நிலவும் தத்துவச் சிந்தனைகளையும் வட்டார வழக்கங்களையும்
அறிந்து கொண்டார்.
மக்களின்
வாழ்க்கையைக் கூர்ந்து நோக்கினார் என்று சுவாமிஜியின் பரிவிராஜக வாழ்க்கையைப் பற்றி
அவரது சகோதரத்துறவி ஒருவர் வாழ்க்கையைப் பற்றி அவரது சகோதரத்முறவி ஒருவர் கூறினார்.
கற்றவை
அது மட்டுமல்ல, இந்தப் பரிவிராஜக வாழ்க்கையில் சுவாமிஜி
தாமும் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டார். பல
விஷயங்களைப் பலருக்குப் பல வழிகளில் கற்றும் கொடுத்தார். கற்றலும் கற்பித்தலும் தவம்” என்று உபநிஷதங்கள் கூறுகின்ற அந்தத் தவத்தைச்செய்தபடியே நாடெங்கும்
சுற்றினார். இமய மலை யாத்திரைகளின் போது உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம் முதலான சாஸ்திரங்களைக்
கற்றார். ஜெய்பூரில் சம்ஸ்கிருத இலக்கணம் கற்றார். அகமதாபாத்தில் சமண, இஸ்லாமிய இலக்கியங்களைக்
கற்றார். கோவாவில் கிறிஸ்தவ மதத் தத்துவம்
பயின்றார் . போர்பந்தரில் பல மாதங்கள் தங்கி, அந்த நாட்டு திவானிடம்வேத மதத்தையும் வேத தத்துவங்களையும்
கற்றார்.
நூல்களிலிருந்து
கற்றது மட்டுமல்ல, வாழ்க்கை தமக்கு முன்பாகக்கொண்டு வந்த நிகழ்ச்சிகளிலிருந்தும் அவர் கணம்தோறும் கற்றார்.
உதாரணமாக கேத்ரியில் நடைபெற்ற நடன நிகழ்ச்சி. சூர்தாசரின் பாடலைக்கேட்டதுமே சுவாமிஜி
தமது தவறைப்புரிந்து கொண்டார். அடுத்த நிகழ்ச்சி பிருந்தாவனத்திற்குச்செல்லும் வழியில்
அவரிடம் ஏற்பட்ட ஜாதி உணர்வு. ஒரு கணம் தான், மறுகணமே அந்த உணர்ச்சியிலிருந்து விடுபட்டு
விட்டார். காசியில் குரங்குகளிடமிருந்து அவர் பாடம் கற்றுக்கொண்டதையும் இங்கு நாம்
குறிப்பிடலாம். இவ்வாறு இயற்கை, சூழ்நிலை, சம்பவங்கள் அனைத்திலிருந்தும் கற்றுக் கொண்ட படி அவர் பயணித்தார்.
பணக்காரனோ ஏழையோ, நகரவாசியோ கிராம வாசியோ அனைவருக்கும்
துன்பங்கள் உள்ளன.ஆசைகள் உள்ளன. எதிர்பார்ப்புகள் உள்ளன. ஏமாற்றங்கள் உள்ளன. இடையே
சிறுசிறு சுகங்களும் உள்ளன. இந்த உண்மை சுவாமிஜியின் முன்பு ஒவ்வொரு கணமும் கொண்டு
வரப்பட்டது. உரகின் நல்கள் அனைத்தும் தராத அறிவை இந்த அனுபவங்கள் அவருக்குத்தெளிவாகக்
காட்டின.
சுவாமிஜி
பிறருக்குக் கற்றுக்கொடுத்தவை என்று பார்த்தால் அவை ஏராளம். ஆல்வார் மன்னருக்கு உருவ
வழிபாடு கேத்ரி மன்னருக்கு ஆன்மீகம். மதம், இவற்றுடன் நிற்காமல் இயற்பியல், வேதியியல்,
வானவியல் என்று தொடங்கி இந்தப் பயணத்தில் அவரைச்
சந்தித்த ஒவ்வொருவரும் சுவாமிஜியிடமிருந்து ஏதாவது கற்றுக்கொண்டார்கள். சுய முயற்சி,
உலகில் நேர்மையாக வாழ்தல் என்று மட்டுமல்ல, உடம்பில் எண்ணெய் தேய்ப்பதால் என்ன பலன்
என்பது பற்றி கூட அவர் கற்றுக்கொடுத்தார். மைசூர் மன்னரின் அவையில் பொய் சொல்ல மறுத்த
நிகழ்ச்சி ஒன்றே அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் எத்தனையோ கற்றுக் கொடுத்திருக்கும்.இவை
அனைத்திற்கும் முத்தாய்ப்பாக அமைந்தது ஜெய்பூர்
நிகழ்ச்சி! நரேந்திரரிடம் எந்த வாதங்களும் எடுபடாத போது ஸ்ரீராமகிருஷ்ணர் அவருக்கு
அனுபவ ஞானத்தையே வழங்கியது போல் ஜெய்பூரில் படைத் தளபதி கடவுளைப்பற்றிய எந்த விளக்கங்களையும்
ஏற்றுக் கொள்ள மறுத்தபோது, அவருக்கு உயிருணர்வுடன் கண்ணனையே காட்டுகின்ற அளவிற்கு ஆற்றல் பெற்ற மகான்
சுவாமிஜி.
அவருடன்
தொடர்பு கொண்ட ஒவ்வொருவரும் ஆன்மீகப் பாதையில் முன்னேறியிருப்பார்கள். கடவுளை நோக்கி
மேலும் ஓரடி வைத்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
பரிவிராஜக
வாழ்க்கையின் நிறைவுக்குப்போகுமுன் ஒரு கேள்விக்குப் பதில் காண முயற்சிப்போம். சுவாமிஜி
ஏழைகளைச் சந்தித்தார். ஏழைகளுடன் வாழ்ந்தார் என்பதெல்லாம் உண்மையாக இருந்தாலும் மன்னர்கள்,
திவான்கள், மற்ற உயர் அதிகாரிகள் போன்றோரை அதிகமாகச் சந்திப்பதை நாம் காண்கிறோம். அது
ஏன்? இதற்கு விடை காண அன்றைய அரசியல் நிலைமையைப்புரிந்து கொள்வது அவசியம்.
மன்னர்கள்
என்றால், சமுத்திர குப்தர், சந்திர குப்தர், ஹர்ஷா்ஈ ராஜராஜ சோழன் போன்ற மாபெரும் மனிதர்கள்
நம் நினைவில் எழுவார்கள். தங்கள் ஆற்றலாலும், வல்லமையாலும் பகைவர்களை நடுங்கச் செய்து,
குடி மக்களைக் கண்ணெனக் காத்தவர்கள் அவர்கள். குடிமக்களைக் கண்ணெனக் காத்தவர்கள் அவர்கள்.
ஆனால் பிரிட்டிஷ் காலத்தில் இருந்த மன்னர்கள் வெறும் பொம்மைகள், அவ்வளவு தான். ஆண்டவர்கள்
வெள்ளையர்கள்.
1858 ஆகஸ்ட்
2-ஆம் நாள் பிரிட்டிஷ் அரசு இந்தியாவை முற்றிலுமாகத் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது.
1876- இல் விக்டோரியா மகாராணி தன்னை இந்தியாவின் பேரரசி, என்று அறிவித்தார். இந்தியாவில்
ஆங்கிலேயர்கள் மூன்று விதமான நிர்வாகத்தை மேற்கொண்டனர்.
சில இடங்களில்
மன்னர் ஆட்சியை அப்படியே விட்டு வைத்தனர்.
மன்னர், பிரதம மந்திரி போன்றோர் இந்தியர்களாகவேஇருந்தனர். ஆனால் பிரிட்டிஷ் அரச பிரதிநிதி
ஒருவர் அங்கே தங்கியிருப்பார். அவர் ஆட்டுவித்தபடி மன்னர் ஆட வேண்டும். ஜம்மு- காஷ்மீர்,
லடாக் போன்ற மாநிலங்கள் இந்த வகையைச் சேர்ந்தவை.
சில இடங்களில் கவர்னர், உதவி கவர்னர், கமிஷ்னர் என்று
ஆங்கிலேயர்களே முற்றிலுமாக ஆட்சியை நடத்தினர். அஜ்மீர், அந்தமான்-நிகோபர் , அசாம்,
வங்காளம், பம்பாய், சென்னை போன்ற மாகாணங்கள் இந்தப் பிரிவில் அடங்கும்.
இவை தவிர 5000க்கும் மேற்பட்ட மாநிலங்கள் இருந்தன.
ஜதராபாத், மைசூர், பரோடா, வாராணசி, ஆல்வார், கொச்சி, ஜெய்பூர், போர்பந்தர், திருவாங்கூர்
போன்றவை இத்தகையவை. இங்கு மன்னர்கள் இருந்தார்கள். இவர்களைச் சிற்றரசர்கள்” என்றும் , இந்த மாநிலங்களை“ சிற்றரசு மாநிலங்கள்” என்றும் ஆங்கிலேயர்கள் அழைத்தார்கள். ஏனெனில் அரசு” என்றால் அது பிரிட்டிஷ் அரசு ஒன்றே.
இந்த மன்னர்களுக்கு
முழு அதிகாரங்கள் கிடையாது. இவர்கள் பக்கத்து
மாநிலங்களுடனோ அண்டை நாடுகளுடனோ எந்தத்தொடர்பும்
வைத்துக்கொள்ளக் கூடாது. நாட்டின் பாதுகாப்பு போன்றவை ஆங்கிலேய அதிகாரிகளே கவனித்துக்கொண்டனர்.
சுருக்கமாகச்
சொன்னால் இந்த அரசர்களுக்குப்பெரிதாக எந்த வேலையும் கிடையாது. எனவே இவர்கள் வேட்டை,
கேளிக்கை, விளையாட்டு, மேலை நாட்டு மோகம் என்று காலம் தள்ளினர். எப்படியாவது ஆங்கிலேயனைத் தாஜா செய்து
தங்கள் அரச பதவியைத் தக்கவைத்துக்கொள்வது இவர்களில் பலரது நோக்கமாக இருந்தது. அதையே
ஆங்கிலேயனும் விரும்பினான்.
ஆனால் இந்தப்
போக்கிலிருந்து விலகி, மக்களுக்கு நல்லது செய்ய நினைத்த மன்னர்களும் பலர் இருக்கவே
செய்தனர். ஆனால் இதனால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு, தங்கள் ஆட்சிக்குப் பாதகம் நேருமோ என்று பயந்த ஆங்கிலேயன் மன்னர்களின் நன்முயற்சிகளைத் தடுக்க முயன்றான். அதற்கு, பொதுவாக
அந்த நாட்டின் திவான் உதவினார். அவர் பொதுவாக பிரிட்டிஷாரின் கையாளாக இருப்பார். இதனால் மன்னர்களின் எந்த முயற்சியும் பிரிட்டிஷாருக்குத்தெரியாமல்
நடைபெற இயலாது.
விளைவு?
பாமர மக்கள் கதியற்றுப்போனார்கள். ஒரு பக்கம் இந்த மன்னர்கள்”, மறுபக்கம் ஆங்கிலேயர்கள்- மத்தளம் போல் இருந்தது அவர்களின்
நிலைமை. அவர்களுக்கு கல்வி கிடையாது.
உரிமைகள்
கிடையாது. உரிமைகள் கிடையாது. நெறிறி வியர்வை நிலத்தில் சிந்த உழைக்கவேண்டும். அதில்
வரும் பலனை வரியாகக்கொடுத்துவிட வேண்டும். அவ்வளவு தான் அவர்கள் செய்ய வேண்டியது. அத்தனை
துன்பங்களையும் பொறுத்துக்கொண்டு, இருவருக்கும் சேவகம் செய்ய வேண்டிய நிலைமையில் அவர்கள்
இருந்தார்கள். பஞ்ச காலங்களில் பெருத்தஉயிர்சேதம் ஏற்பட்டது. அப்போதும் அவர்களுக்கு யாரும் உதவ வரவில்லை.
இந்த நிலைமையைக்
கண்டு உருகினார் சுவாமமிஜி.மன்னர்களைக் கண்டு அவர்களின் கடமையை உணர்த்த விரும்பினார் அவர். கு்டிமக்களைக்
காப்பது சஷத்திரியரினின் கடமைஎன்பதை அவர்களுக்கு எடுத்துக்கூற விரும்பினார். ஓரிருவராவது
மனம் மாறி ஏழைகளுக்கு நல்லது செய்ய மாட்டார்களா என்று ஏங்கினார். இதற்காகவே மன்னர்களைச்
சந்தித்தார். அவர்களுடன் நீண்ட நேரம் பேசினார். சில மன்னர்கள் அவரது கருத்துக்களை ஏற்று
உடனடியாக சில நற்பணிகளில் ஈடுபடவும் செய்தனர்.
மன்னர்களுக்கு
மந்திரிபோல் அமைந்து மகான்கள் அவர்களை வழிநடத்துவதைப்
புராணங்களிலும்் வரலாற்றிலும் காணவே செய்கிறோம். தசரதருக்கு . வசிஷ்டர்.சிவாஜிக்கு
ராமதாசர். ஹரிஹர புக்கருக்கு வித்யாரண்யர்
என்று இந்த முனிவர்களின் வழிகாட்டுதலால் தான் மன்னர்கள் வரலாறு படைத்தனர். சுவாமிஜியும்
மன்னர்கள் தங்கள் கடமைகளை மறந்த போது அதை எடுத்துரைத்தார.
அதற்காகவே அவர்களைச் சந்தித்தார். இவ்வாறு
தமது கடமையைச் செய்தவாறு, அதே வேளையில் இந்தியாவையும் அதன் பல்வேறு பரிமாணங்களையும்
கற்றவாறு பரிவிராஜகராகச் சஞ்சரித்தார் சுவாமிஜி.
சுவாமிஜி
கற்றார், கற்றுக்கொடுத்தார், கணடார், அறிந்தார், ஆராய்ந்தார்-
இவை அனைத்தும்
நிகழ்ந்தன. ஆனால் விவேகானந்தர் என்ற மாபெரும் உள்ளம் ஓயவில்லை. குருதேவர் இட்ட பணி,
மனித குலத்திற்கு ஒரு மாபெரும் செய்தி என்ற
ஒரு தீப்பொறியை நெஞ்சில் தாங்கியபடி அதனை எப்படி உலகிற்கு அளிப்பது என்ற கேள்வியுடன்
அவர் அலைந்தார். அது ஒன்றே அவரது உள்ளத்தில்
முக்கிய இடம் பெற்றிருந்தது. அந்த வழியும்
ஆண்டவனிடமிருந்தே வரும் என்பதை அவர் உறுதியாக நம்பினார். திட்டங்கள் இல்லை, வீடு இல்லை,
உற்றார் இல்லை, யாரும் இல்லை. அவருடன் இருந்தவர் இறைவன் மட்டுமே! அரண்மனையில் வாழ்ந்தாலும்,
குடிசையில் இருந்தாலும் அந்த ஆண்டவனின் வழிகாட்டுதல்
ஒன்றையே துணையாகக்கொண்டு வாழ்ந்தார் அவர்.
இந்த நாலரை
ஆண்டுகளில் சுவாமிஜி பெற்ற அனுபவங்கள் பல, கற்ற பாடங்கள்பல, இனி? குருதேவரிடமிருந்து
கற்றவை, வாழ்விலிருந்து பெற்றவை இரண்டையும் தொகுத்து ஒரு வழி கண்டாக வேண்டும். இந்தியா
மீண்டும் உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்க, சத்திய யுகம் மீண்டும் தழைக்க இன்றைய
மனிதர்களுக்கு ஒரு வழி காட்டப்பட வேண்டும்.
அதற்கு என்ன
செய்வது?
முதலில்
அனுபவங்களைப்பெறு, பிறகு சிந்தனை செய், பிறகு செய்ல்படு, என்கின்றன சாஸ்திரங்கள் . அனுபவங்களைப்பெற்றாகி விட்டது. இனி சிந்திக்க
வேண்டும் அதற்கு ஓர் அமைதியான இடம் வேண்டும். அது எது?
நீலத்திரை
கடல் எழுந்து ஆர்பரித்தாலும் , நிலவிடும் அமைதி குலையாமல் நின்றபடியே தவம் செய்யும் கன்னித்தேவி
எழுந்தருளும் பாரதக் கண்டத்தின் தென்கோடியைத் தேர்ந்தெடுத்தார் சுவாமிஜி.
கன்னியாகுமரியில்
-
திருவனந்தபுரத்திலிருந்து
சுமார் 55 மைல் தொலைவில் உள்ளது கன்னியாகுமரி. மூன்று கடல்களின் சங்கமத்தலம் அது. குமரி
அம்மனாக, கையில் ஜபமாலையுடன்
நின்றபடி இங்கே காட்சியளிக்கிறாள் தேவி. 1892 டிசம்பர் இறுதியில் திருவனந்த புரத்திலிருந்து இங்கே வந்தார் சுவாமிஜி. தேவியை வழிபட்டார். பிறகு
கடற்கரைக்குச்சென்றார். அவரது மனம் அசாதாரணமானதோர் அமைதியில் ஆழ்ந்திருந்தது.
அனுபவம், அனுபவம் எதையும் அனுபவித்தால் மட்டுமே நம்புவேன்.
அனுபவத்திற்குக்குறைந்த எந்த நிரூபணத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று துடித்த அவருக்குத்தேவையான
அனுபவங்கள் கிடைத்துவிட்டன. அக வாழ்க்கையைப்பொறுத்தவரை, ஆன்மீக நிலையின் அறுதி அனுபவமாக
சாஸ்திரங்கள் கூறுகின்ற நிர்விகல்ப சமாதி நிலையை அவர் பெற்றுவிட்டார். அதற்கு மேல் அனுபவிக்கவோ, ஆசை கொள்ளவோ,
தேவைப்படவோ எதுவும் இல்லை. ஒரு சாதாரண மகானின் வாழ்க்கை இத்துடன் நிறைவுற்றுவிடுகிறது.
அதன் பிறகு அவருக்குத்தேடல் இல்லை. தமது வினைப்பயன் செயல்படும் காலம் வரை வாழ்ந்து
உடலை உகுக்கிறார் அவர்.
ஆனால் சுவாமிஜி
இந்த அனுபவத்தைப் பெற்றும் நிம்மதியின்றித் தவித்தார் .ஏனெனில் அவர் உலகிற்கு ஒரு செய்தியுடன்
வந்தவர். ஸ்ரீராமகிருஷ்ணர் அளித்திருந்த பணியைச்செய்து முடிக்கும் வரை அவர் அந்தத்
தவிப்பிலிருந்து விடுபட அவரால் இயலாது. அந்தத் தவிப்புதான் அவரை இந்த நாலரை வருடங்களாக
இந்தியா முழுவதும் பயணம் செய்ய வைத்தது.
சூழ்நிலையிலிருந்து
பெற்ற அறிவு, குருதேவரிடமிருந்து கற்ற பாடம் பரிவிராஜக வாழ்க்கையிலிருந்து பெற்ற அனுபவம்,
தமது அனுபூதி-இந்த நான்கிலிருந்தும் நாட்டின் நன்மைக்கு வழி கண்டாக வேண்டும். நாட்டின் நன்மை என்பது தனிமனித நன்மையைப் பொறுத்தே அமையும். எனவே
தாம் காணும் வழி தனிமனித முன்னேற்றத்தையும் நாட்டின் முன்னேற்றத்தையும் ஒருங்கே அளிக்கின்ற
ஒன்றாக இருக்கவேண்டும்.
அந்த வழி
எது?
ஆழ்ந்து சிந்திக்க விரும்பினார் சுவாமிஜி.
கன்னியாகுமரி
தேவியை வழிபட்டார், அகம் குழைய பிரார்த்தனை செய்தார். உடன் வந்திருந்த மன்மத நாத்தின் பெண் குழந்தையைத்தேவியாகப்
பாவித்து பூஜை செய்தார். வழிகாட்டுமாறு மனமார தேவியை வேண்டினார்.
சுவாமிஜியின்
கண்களில் பட்டன கடலுக்குள் 2 கி.மீ தொலைவில்
அமைந்திருந்த பாறைகள். அங்கே சென்று தனிமையில்
அமர்ந்து ஆழ்ந்து தியானித்து தேவியின் அருளால் வழி காண விரும்பியது அவரது உள்ளம்.
அங்கே இரண்டு
பாறைகள் இருந்தன. ஒன்று பெரியது. மற்றொன்று சிறியது. பெரிய பாறையின் ஒரு பகுதியில்
தேவி நின்று தவம் செய்ததாக ஐதீகம் . அங்கே பதிந்துள்ள பாதங்கள் தேவியினுடையவை என்று
கூறப்படுகின்றன. தேவியின் திருப்பாதங்கள் பதிந்த அந்தப் பாறை ”ஸ்ரீபாத பாறை” என்றே அழைக்கப்படுகிறது. ஆனால் அங்கே செல்வது எப்படி கட்டுமரத்தில்
தம்மை அழைத்துச்செல்லுமாறு அங்கிருந்த மீனவர்களிடம் கேட்டுக்கொண்டார். அவர்கள் பணம்
கேட்டனர். அவரிடம் பணமில்லை. மீனவர்கள் மறுத்துவிட்டனர். நீந்திச் செல்வதைத்தவிர அவருக்கு வேறு வழி இருக்கவில்லை. வேற எதையும் பொருட்படுத்தவில்லை.
துணிந்து கடலில் குதித்து, அந்த ப் பாறையை நோக்கி நீந்தினார் சுவாமிஜி.
சுவாமிஜி கன்னியாகுமரிக்கு வந்தபோது அவரைக் கண்டார்
சதாசிவம் பிள்ளை என்பவர் . அவரது தோற்றத்தால் கவரப்பட்ட சதாசிவம் அவரைப் பின்தொடர்ந்தார்.
அவர் பாறைக்கு நீந்திச்செல்வதை அவரும் வேறு சிலரும் காணவும் செய்தனர். ஆர்வமும் குழப்பமும்
மேலிட அவர்கள் அவரைத்தொடர்ந்தனர். அவர்களிடம் திரும்பிப் போகுமாறும் தம்மைப்பற்றி கவலைப்
பட வேண்டாம் என்றும் சுவாமிஜி கேட்டுக்கொண்டார். உணவு பற்றி கேட்டபோது சுவாமிஜி கட்டாயம்
எனக்கு ஏதாவது தரவேண்டும் என்று நீங்கள் விரும்பினால்
அதோ அங்கே தெரிகிறதே ஒரு சிறிய துளை, அதில்
பழம், பால், இளநீர் ஏதாவது கொண்டு வந்து வையுங்கள். தேவைப்படாது என்று நினைக்கிறேன்.
தேவைப்பட்டால் எடுத்து சாப்பிட்டுக்கொள்கிறேன்” என்றுகூறினார். சதாசிவமும் அவ்வாறே
செய்தார்.
சுவாமிஜி
அமர்ந்தார். சுற்றிலும் பரந்த கடல், அரபிக்கடல் வங்காள விரிகுடா,, இந்து மகா சமுத்திரம்
–மூன்றும் இங்கே சங்கமிக்கின்றன. அவருக்கு முன்னால் அவரது பார்வை படும் இடத்தில் தேவியின்
திருப்பாதங்கள், இன்னும் முன்னால் தேவியின் திருக்கோயில். அங்கிருந்து விரிந்தது பாரதத்
திருநாடு.
சுவாமிஜி
ஆழ்ந்து தியானம் செய்தார்.
அங்கே மூன்று
நாட்கள் தொடர்ந்து தியானத்தில் மூழ்கினார் சுவாமிஜி.
எந்த தெய்வத்தை
அவர் தியானித்தார்? எந்தத் தெய்வத்தையும் அல்ல, அவர் தியானித்தது பாரதத் திருநாட்டை.
வரலாற்றை ஆழ்ந்து கற்றவர் அவர். இந்திய வரலாறு மட்டுமல்ல, உலக நாடுகளின் வரலாற்றையும்
மிக நுணுக்கமாக ஆராய்ந்து அறிந்தவர். அவரது சிந்தனை சுழன்றது. உலகில் வேறெந்த நாட்டையும்
அறிவு என்பது தன் இருப்பிடமாகக் கொள்ளுமுன் குடிபுகுந்த தாயகம் நமது புராதன பாரதம்
கடல் போல் பொங்கிப் புரண்டோடுகின்ற பேராறுகளும், அடுக்கடுக்காய உயர்ந்தெருந்த சிகரங்கள்
மீது பனிமுடி தரித்து, ஏதோ வானுலக ரகசியங்களை
எட்டிப்பார்க்க விழைவது போல் விண்முட்ட நிற்கின்ற நிலையான இமயமலைத்தொடர்களும் அதன் ஆன்மீக மாட்சிமையைப்புறத்தில் காட்டுவது போல்
உள்ளது.இது வரை வாழ்ந்தவர்களுள் மகத்தான ரிஷிகளின் திருப்பாதங்கள் இதோ இந்தப் பாரத மண்ணில் தான் நடைபோட்டன.
அந்தப் பாரதம்
எங்கே?
தத்துவச்
சந்தனையின் உன்னதங்களைக் கண்டவர்கள் என்று இன்றும் அறிஞர்கள் போற்றும் முனிவர்களைத் தந்த அந்த பாரதம் எங்கே?
அசோகர், சமுத்திர குப்தர், ராஜராஜசோழன் என்று மாமன்னர்கள் பலரின் கீழ் பொற்காலம், கண்ட
பாரதம் எங்கே? கிரீஸ், ரோம், மேற்கு ஆசியா, கிழக்கு ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசிய
நாடுகள் , சீனா என்று அன்னிய நாடுகள் பலவற்றுடன் வாணிப உறவு கொண்டு அவர்களைக்
கடல் கடந்து தன்னை நாடி வரச் செய்த பாரதம் எங்கே? கிரீஸ், மத்திய ஆசியா, இலங்கை, பர்மா,
ஜாவா, சுமத்ரா, கம்போடியா, சீனா, திபெத் என்று எத்தனையோ நாடுகளிலிருந்து மாணவர்கள்
வந்து தட்சசீலம், நாளந்தா, விக்ரமசீலம், விஜயபுரி, காஞ்சிபுரம் என்று பல்வேறு இடங்களில்
தங்கி கல்வி பயின்ற பல்கலைக் கழகங்களைக்கொண்ட
பாரதம் எங்கே? அஜந்தா, எல்லோரா, கனேரி, மகாபலிபுரம் என்று பல்வேறு இடங்களில் காலத்தால் அழியாத ஓவியங்களையும்
சிற்பங்களையும் குடைவரைக்கோயில்களையும் தந்த சிற்பிகளும் ஓவியர்களும் கலைஞர்களும் வாழ்ந்த
பாரதம் எங்கே? வானவியலில் ஆரியபட்டரும், ஜோதிடத்தில் வராகமிஹிரரும், கணிதத்தில் பாஸ்கரராயரும்
அவரது மகளான லீலாவதியும், மருத்துவத்தில் சுச்ருதரும் சரகரும், அரசியலில் சாணக்கியரும்
சாதனைகள் படைத்த பாரதம் எங்கே?
சுவாமிஜியின்
சிந்தனை சுழன்றது?
சுழற்சியின்
மறுபுறத்தில் தோன்றியது நிகழ்கால இந்தியா.எல்லா இடங்களிலும் கூட்டம்கூட்டமாக நெருங்கி
அமைந்துள்ள குடிசைகள், இடிபாடுடன் கூடிய மண் சுவர்கள், சரிந்து விழும் கூரைகள், துருத்திக்கொண்டு
நிற்கும் எலும்புக்கூடுபோல் நீட்டிக்கொண்டு நிற்கும் முங்கில்கள். கிழிந்துபோன கந்தல்
துணிகளை ஆடையென்று சுற்றிக்கொண்டு நலிந்த உருவத்துடன் நடமாடும் இளையவர்களும் முதியவர்களும், காலங்காலமாக
அனுபவித்து வந்த வறுமையும் ஏமாற்றமும் தோற்றவித்த சுருக்கங்களைக்கொண்ட அவர்களின் முகங்கள்,
எங்கும் பசுக்களும் காளைகளும் கன்றுகளும் அந்தோ, அவற்றின் கண்களிலும் அதே துன்பச்சுமை
நிறைந்த பார்வை, அதே ஒட்டியுலர்ந்த உடல், நாலாபக்கங்களிலும் குப்பைக்கூளங்கள் –இது
தான் இன்றைய நமது இந்தியா!
மாடமாளிகைகளின்
அருகிலேயே கூரைக் குடிசைகள், கோயில்களுக்கு அருகிலேயே மலைபோல் மலமூத்திரச் சகதிகள்,
பட்டாடையணிந்து செல்பவனின் பக்கத்திலேயே கிழிந்தகோவணம் உடுத்த ஏழைகள், உண்டு கொழுத்த
பணக்காரர்களின் அருகே பட்டினி கிடந்த வயிறும் பஞ்சடைந்த கண்களுமாகத் தள்ளாடிச்செல்கின்ற
ஏழைகள். இது தான் நாம் பிறந்த பொன்னாடு.!
ஏன்? ஏன்
இந்த நிலைமாற்றம்.?
சுவாமிஜியின்
சிந்தனை சுழன்றது......
பல சிந்தனையாளர்களும்
சீர்திருத்தவாதிகளும் கூறுவதுபோல், இந்தியாவின் இழிநிலைக்கு மதம் தான் காரணமா? இருக்க முடியாது?ஏனெனில் என்னென்ன
தீமைகளுக்கு மதம் காரணம் என்று சொல்கிறார்களோ
அவை எதற்கும் மதம் காரணம் அல்ல. எந்த மதமும் மனிதர்களைக்கொடுமைப்படுத்த வில்லை.
எந்த மதமும் சூனியக்காரிகளைக் கொளுத்தவில்லை. எந்த மதமும் இத்தகைய செயல்களைச்செய்யவில்லை.
அப்படியானால் இவற்றைச்செய்யும்படி மக்களைத் தூண்டியது எது? அரசியல், ஒருபோதும் மதம்
அல்ல, மதத்தின் பெயரில் அரசியல் நிலவுமானால் அது யாருடைய தவறு?
இரண்டாவதாக இதனுடன் கல்வியையும் தரவேண்டும். இதைச்சொல்வது எளிது, ஆனால் செயல் முறையில் கொண்டு வருவது எப்படி?
நம் நாட்டில் எல்லாவற்றையும் துறந்த, தன்னலமற்ற கருணை நிரம்பிய மக்கள் ஆயிரக்கணக்கில்
உள்ளார்கள். அவர்கள் பல்வேறு இடங்களுக்கு யாத்திரை செல்லும்போது, எவ்விதப் பிரதிபலனையும்
எதிர்பார்க்காமலே மதத்தை ப்போதிக்கிறார்கள். அவர்களுள் பாதிபேராவது ஆசிரியர்களாகப்
பயிற்சி பெறலாம். எத்தகைய கல்வி நமக்கு மிகவும் தேவையாக உள்ளதோ அத்தகைய கல்வியை அவர்கள்
கொண்டு செல்லலாம்.
ஆனால் எதற்கும் பணம்வேண்டும். எந்தப் பணியும் எந்தக் காரியமும்
நடக்க வேண்டுமானால் பணம் தேவை. அதற்கு என்னவழி? பணம் எங்கே இருக்கிறதோ அங்கிருந்து
பெறவேண்டும். மேலை நாடுகளில் உள்ள பணம் இந்தியாவிற்கு வரவேணடம். அதற்காக இந்தியா மேலை
நாடுகளிடம் கைகாட்டி, வாய் புதைத்து, கூனிக்குறுகி நிற்க வேண்டுமா? வேண்டாம். இங்கிருப்பதை
அங்கே கொடப்போம். பதிலுக்கு அங்கிருக்கின்ற பணத்தைப்பெற்று கொள்வோம்.
இங்கே இந்தியாவில்
இருப்பது என்ன? ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த முனிவர்கள் நமக்கு விட்டுச்சென்ற
ஆன்மீகம், ஆன்மீகம் மட்டுமே நம்மிடம் உள்ளது. காலத்தால் அழிக்க முடியாத அதனை மேலை நாடுகளுக்குக்
கொடுப்போம்.
மேலை நாடுகளுக்கு
எப்படிப்போவது?
இது வரை
எந்த இறைவன் தன்னைக் காத்துவந்துள்ளாரோ அவர் இதற்கும் வழிகாட்டுவார் என்று தெளிந்தார்
சுவாமிஜி.
சுவாமிஜியின்
தியானம் நிறைவுற்றது.
இதற்குள்
மூன்று நாட்கள் கழிந்திருந்தன. இது 1892 டிசம்பர் 24 முதல் 26 ஆகஇருக்கலாம்.
நான்காம்
நாள் ஒரு கட்டுமரத்தில் சுவாமிஜியைக் கரைக்கு அழைத்து வந்தார்கள். இதற்குள் அவரைப்
பற்றி கேள்விப்பட்ட பலர் அவரைக்காண அங்கே வந்திருந்தார்கள்.தம்மைப் பற்றி கேட்ட கேள்விகளுக்கெல்லாம்
சுவாமிஜி கூறிய ஒரே பதில், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடன் நான். அவரைப்பற்றி உலகம் விரைவில் அறிய உள்ளது.
சுவாமிஜி பாறையில் நீங்கள் என்ன செய்தீர்கள்? என்ன அனுபவம் கிடைத்தது? என்று கேட்டார்கள்.
அதற்கு சுவாமிஜி கூறினார்.
அகத்தளவிலும்
புறத்தளவிலும் நான் எதைத்தேடி இத்தனைகாலம் அலைந்தேனோ அது இந்த இடத்தில் எனக்குக் கிடைத்தது.
மதுரையில்
--
கன்னியாகுமரியிலிருந்து மதுரை சென்ற சுவாமிஜி அங்கே ராமநாதபுர மன்னராகிய
பாஸ்கர சேதுபதியைச் சந்தித்தார். ஏழைகளுக்குக் கல்வி, விவசாய மேம்பாடு, இந்தியாவின்
பிரச்சனைகள், அவற்றிற்கான தீர்வு போன்றவற்றைப் பற்றி மன்னரிடம் விரிவாக எடுத்துரைத்தார் சுவாமிஜி. சுவாமிஜியின்
தோற்றத்திலும் ஆழ்ந்த அறிவிலும் கட்டுண்ட மன்னர் அவரது சீடரானார். அமெரிக்காவில் நடைபெறப்போகும்
சர்வமத மகாசபையில் கலந்து கொள்ளுமாறும் சுவாமிஜியை வற்புறுத்தினார். வழக்கம்போலவே முடிவை
இறைவனுக்கே விட்டுவிட்ட சுவாமிஜி மன்னரிடம் விடைபெற்று ராமேசுவரத்தை நோக்கிச்சென்றார்.
ராமேசுவரத்தில்
இலங்கையிலிருந்து
சீதையை மீட்டுத் திரும்பிய ராமன் தன்கையாலேயே பிரதிஷ்டை செய்தகோயில் ராமேசுவரம் என்பது
ஐதீகம்.ராமேசுவரத்திற்குச் செல்வதில் சுவாமிஜி
மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் என்பதை ஏற்கனவே கண்டோம். அங்கு சென்று ராமேசுவர சிவபெருமானை
வழிபட்டார் அவர். அங்கிருந்து சென்னை நோக்கி
ப்புறப்பட்டார் சுவாமிஜி.
ராமேசுவரத்திலிருந்து
சென்னைக்குப் புறப்பட்ட அவர் வழியில் பாண்டிச்சேரிக்குச்சென்றார். அங்கே மன்மத நாத்
பட்டாச்சார்யரின் வி ருந்தினராக சில நாட்கள்
தங்கினார். இங்கே அவர் ஒரு பழமைவாதப் பண்டிதருடன் தீவிரமாக வாதம் செய்ய நேர்ந்தது.
இந்து மதம் காலத்திற்கு அப்பாற்பட்டது. எனவே எந்தச் சீர்திருத்தமும் அதற்குத்தேவையில்லை
என்ற கருத்து உடையவராக இருந்தார் பண்டிதர். சுவாமிஜி கூறினார், இந்து மதக் கருத்துக்களை
ஆராய்ந்து பார்க்கவேண்டும். படித்த இந்து ஒவ்வொருவனுடையவும் கடமை அது. இதற்கு, முதலில்
நமது குறுகிய கருத்துக்களிலிருந்து நாம் வெளிவர வேண்டும. நிகழ்காலம் அசுர வேகத்தில்
முன்னேற்றப் பாதையில் செல்வதைக்காண வேண்டும். நமது ஆசாரங்களோ, பழக்கவழக்கங்களோ எதுவாயினும்
நமது சமுதாய வாழ்க்கைக்கோ, தத்துவ நோக்கிற்கோ ஒரு தடையாக நிற்குமானால் அவற்றைத் தகர்த்தெறிந்து முன்னேறிச்செல்ல வேண்டும்.
ஓர் இந்து
கடல் கடந்து சென்றாலே அது பாவச்செயல் என்ற
அளவிற்குக்குறுகிய நோக்குக்கொண்டிருந்த அந்தப் பண்டிதரால் சுவாமிஜியின் பரந்த
கருத்துக்கள் எதையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
சுவாமிஜி
சென்னைக்குப் புறப்பட்டார்.
--
சென்னையில்
-
இறைவனின்
திட்டங்கள் அதிசயமானவை, செயல் முறைகள் அதைவிட அதிசயமானவை. உலகின் வெவ்வேறு மூலைகளில்
யார் யாரோ பிறப்பார்கள். அங்கங்கே துண்டுத்துண்டாகச் சில சம்பவங்கள் நடைபெறும். ஒரு
குறிப்பிட்ட வேளையில் அவர்கள் ஒன்று கூடுவார்கள். ஒரு வரலாறு உருவாகும். அத்தகைய அதிசய
வரலாறுகளில் ஒன்றுதான் சுவாமிஜி சென்னைக்கு வந்ததும் ! வங்காளத்தில் பிறந்தவர் அவர். யாரும் தமமை அறிந்து
கொள்ளக்கூடாது என்பதற்காகப் பெயரைக்கூட மாற்றி வைத்தபடியே சஞ்சரித்த அந்தத்துறவிக்காக
சென்னை காத்திருந்தது என்றால் அதை எளிதாக நம்ப முடிகிறதா? ஆனால் அது உண்மை. சுவாமிஜிக்காகச்சென்னை
காத்திருந்தது.
சிகாகோவில்
1893 ஜீலைகளில் உலக க் கண்காட்சியின் ஓர் அம்சமாக சர்வமத மகாசபை ஒன்று நடைபெறப்போகிறது
என்ற செய்தி 1892 ஆரம்பத்திலேயே சென்னையில் தெரிந்திருந்தது. 1892 நடுவில் இந்து” நாளிதழில் இது பற்றி விளம்பரம் ஒன்று வெளியாகியது. சபை பற்றிய
விவரங்களைத் தெரிவித்து, இந்து மதத்தின் பிரதிநிதியாக
ஒருவர் செல்ல வேண்டும் என்பதும் தெரிவிக்கப் பட்டிருந்தது.ஆனால் வெளிநாடு செல்வதற்கு
யாரும் முன்வரவில்லை. இது விஷயமாக அந்த இதழில் ஆசிரியர் எழுதிய தலையங்கக் கட்டுரையில்,
இந்து மதம் இன்றைய சமுதாயத்தின் நடைமுறைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு தருவதாக இல்லை.என்று
எழுதினார். இது பெரிய விவாதத்திற்குக் காரணமாயிற்று. இதனை ஆதரித்தும் எதிர்த்தும் கட்டுரைகள்
இந்து நாளிதழில் வெளியாயின.
இந்து மதத்தைப்
புனரமைப்பது சாத்தியமே இல்லை. அது உயிரிழந்து கிடக்கிறது. அதன் காலம் முடிந்து விட்டது.
அதன் கடைசி அத்தியாயம் எழுதப்பட்டு விட்டது. இந்த இந்து தேசத்தால் ஒரு மாமனிதரை உருவாக்க
இயலாது. சுய சிந்தனையுள்ள, நல்லொழுக்க ஆற்றல் படைத்த, தளராத முயற்சியுடைய, ஐரோப்பாவை
உலகின் தலைசிறந்த நாடாக்கிய சாதனை படைத்த வீரர்களின் வரிசையில் நிற்கக்கூடிய ஒரு மாமனிதரை இந்தியாவால்
உருவாக்க இயலாது- இவை போன்ற கருத்துக்கள் வெளியாயின.
மகாசபையில்
யார் கலந்து கொள்வார் என்பது பற்றிய விஷயம் ஒரு முடிவிற்கு வராமலே இருந்தது. வைதீகர்கள்,
பண்டிதர்கள் என்று யாரும் கடல் கடந்து வெளிநாடு சென்று அந்தச்சபையில் கலந்து கொள்ள
முன்வரவில்லை. ஏனெனில் கடல் கடந்து சென்றால் ஒருவர் ஜாதியை இழந்து விடுவார். ஜாதியிலிருந்து
விலக்கப் படுவார்,! 1892 ஆகஸ்டில் இது ஒரு சவாலாகவே எழுதப் பட்டது. சொந்த ஜாதி மக்களின் எதிர்ப்புக் குலரைச் சமாளித்துக்கொண்டு
கடலைக் கடந்து, தைரியமாக அந்தச் சர்வமத மகாசபையில் கலந்து கொண்டு இந்து மதத்தை விளக்கத்
தயாராகின்ற ஒரு வைதீக பண்டிதர் இருப்பாரா என்று நான் சவால்விடுகிறேன். அப்படியே யாராவது
போனாலும் அங்கே சொல்வதற்கு இந்து மதத்தில் பெரிதாக என்ன இருக்கிறது? உலகிற்கு அளிக்க
எங்களிடம் எதுவும் இல்லை” என்று மட்டும் தான் சொல்ல முடியும்” என்று எழுதினார் ஒருவர். இந்து மதத்தின் பிரதிநிதியாக யாரும்
கிகாகோவிற்குப்போக மாட்டார்களோ என்ற நிலைமை இருந்தது.
சிகாகோ சர்வமத
மகாசபை பற்றி அந்த மகாசபை அமைப்பாளர்களில் ஒருவரான டாக்டர் பரோஸ் சென்னை கிறிஸ்தவக்
கல்லூரியில் பேராசிரியராக இருந்த டாக்டர் வில்லியம் மில்லர் என்பவருக்குத் தெரிவித்திருந்தார்.
அதே வேளையில், அமெரிக்காவிலுள்ள இந்து சபையுடன்
நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த யோகி பார்த்த சாரதி ஐயங்கார் என்பவருக்கும் இந்தச்செய்தி
தெரிந்திருந்தது. இந்து மதத்தின் பிரதிநிதியாக யாரை அனுப்புவது, யார் போவது என்ற கேள்வி
இவர்களின் மனங்களில் எல்லாம் எழுந்தது. பார்த்தசாரதி சாஸ்திரங்களைக் கற்றவர், அறிஞர்.
ஆனாலும் அவரும் ஜாதிக்கட்டுப்பாடு காரணமாகப்போகத் தயங்கினார்.
அளசிங்கர்
பார்த்த சாரதியின் மருமகன் அளசிங்க பெருமாள் சுவாமிஜியின் வாழ்க்கையில் அழியாத
இடம் பெற்ற இவர் மேலே கண்ட மில்லரின் மாணவன்.
தம் முடைய அறிவாலும் திறமையாலும் 26 வயதிலேயே சென்னை பச்சையப்பன் கல்லுஸரியுடன் இணைக்கப்
பட்ட உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக ஆனார். மாதம் 100 ரூபாய் சம்பளத்தில் தந்தை,
தாய், மனைவி , நான்கு குழந்தைகள் ஆகியோரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருந்தார்.
ஏழ்மை இவரது உயர் நோக்கங்களுக்கு இடையூறாக இருக்கவில்லை. சமுதாய நலத்திலும் மக்கள்
பணியிலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் தம்மை ஒத்த இளைஞர்களைச் சேர்த்துக்கொண்டு சாஸ்திரங்கள்
படிப்பதும் சமுதாயப் பணிகளில் ஈடுபடுவதுமாக வாழ்ந்து வந்தார். இவர்களில் முக்கியமானவர்கள்
ஆர். ஏ, கிருஷ்ணமாச்சார், ஜி.ஜி, நரசிம்மாச்சார் பேராசிரியர் எம். ரங்காச்சாரியர்,
எம். சி. நஞ்சுண்ட ராவ், பிலிகிரி ஐயங்கார், டி.ஆர். பாலாஜி ராவ், ராஜம் ஐயர், நீதிபதி
எஸ். சுப்பிரமணிய ஐயர், பேராசிரியர் சிங்கார வேலு முதலியார் போன்றோர்.
அளசிங்கரிடம்
சர்வ மத மகாசபை பற்றி தெரிவித்தார் பார்த்தசாரதி. தகுதியுடைய யாராவது இருந்தால் கூறுமாறும் கேட்டுக்கொண்டார். சென்னையில் மட்டுமல்ல, இந்தியாவின்
பல பகுதிகளிலும் இந்த மகாசபை பற்றிய செய்தி தெரிந்திருந்தது. பலர் அதுபற்றி பேசினார்கள்.
ஆனால் யாரும் அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அளசிங்கர் மகாசபையின் முக்கியத்துவத்தைப்புரிந்து
கொண்டிருந்தார். யாரை அனுப்புவது, அதற்குத் தகுதியுடையவர் யார் என்ற கேள்வி அவரது மனத்திலும்
தீவிரமாக இடம் பெற்றிருந்தது. தமது மைத்துளரான பேராசிரியர் ரங்காச்சாரியரிடம் இதனைக்கூறி
அவரைக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அவரும் மறுத்துவிட்டார். இந்த நிலைமையில்
தான் சென்னைக்கு வந்து சேர்ந்தார் சுவாமிஜி.
அது
1893 ஆரம்பம். சுவாமிஜிக்கு வயது 31 ஆரம்பித்திருந்தது. சென்னை வந்த சுவாமிஜி சாந்தோமிலுள்ள
மன்மத நாத்தின் வீட்டில் தங்கியிருந்தார். ஆங்கிலம் பேசுகின்ற துறவி ஒருவர் வந்திருக்கிறார்
என்ற செய்தி சென்னையில் பரவியது. இந்துக்களில்
பெரும்பாலானோருக்கு ம் அன்றைய இந்து மதத்தின் ஒருவிதமான நம்பிக்கையின்மை நிலவிய வேளை
அது. எனவே ஆங்கிலம் பேசுகின்ற துறவி என்ற செய்தியே பலர் சுவாமிஜியிடம் வருவதற்குக்
காரணமாயிற்று. சாந்தோமிலுள்ள மன்மதரின் வீட்டில் பல இளைஞர்கள் அவரைச் சந்தித்தனர். அவர்களில் பெரும்பாலானோர் மேலை
க் கல்வி கற்று, அந்தக் கண்ணோட்டத்துடன் வாழ்பவர்கள். அவர்களின் கேள்விகளுக்கெல்லாம்
சுவாமிஜி இனிமையாக ஆனால் உறுதியாகப் பதிலளித்தார். இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தார்
சுவாமிஜி. எனவே ஒருநாள் அவரைச் சந்தித்த பிறகு தினமும் அவரிடம் போகத் தொடங்கினர். இப்படி கேள்விப்பட்டு தான் அளசிங்கரும் நண்பர்களும்
சுவாமிஜியைச் சந்தித்தனர். அப்போதிலிருந்து ஆரம்பமாயிற்று சுவாமிஜியின் வாழ்க்கையில்
ஒரு புதிய அத்தியாயம்.
சுவாமிஜி
ஒரு விந்தை மனிதர். அவர் பேசியதைக்கேட்கும் போது அவருக்குத் தெரியாத எதுவுமே இல்லை
என்று தோன்றும்! இன்று வேதவேதாந்தங்களைப் பற்றி பேசுவார். நாளை விஞ்ஞானம், அடுத்த நாள்
வால்மீகி, காளிதாசர், பவபூதி என்று இந்திய இலக்கிய மேதைகள், ஹோமர், விர்ஜில், ஷேக்ஸ்பியர்,
பைரன், என்று மேலை இலக்கிய மேதைகள் . இன்று டிராஜன் போர்கள், நாளை பாண்டவர்கள், அடுத்து
திரௌபதி, பின்னர் ஹெலன், இந்தியர் கலை, கிரேக்கர் கலை என்று அவர் தொடாத தலைப்பே இருக்காது.
துறவி ஒருவர் இத்தனை விஷயங்களைத் தெரிந்திருப்பது மற்றவர்களுக்கு வியப்பை அளிக்காமல் என்ன செய்யும்.
கேள்வி கேட்பவரின்
மனநிலையைப்புரிந்து கொண்டு அதற்கேற்ப பதில் அளிப்பது சுவாமிஜியின் தனித் திறமையாக இருந்தது.
ஒருவரின் மனத்தைப் புரிந்து கொண்டு எப்படி
அவரால் விளக்கம் அளிக்க முடிகிறது என்று கேட்டபோது சுவாமிஜி, உடம்பிற்கு டாக்டர்கள்
இருப்பது போல் மனத்தின் டாக்டர்கள் துறவிகள்.
சிகிச்சைக்கு முன்பே நோயின் காரணத்தையும் அடையாளங்களையும் டாக்டர்கள் புரிந்து கொள்வது
போல் துறவிகளும் கேள்விக்குப் பதில் கூறுமுன்பே
அவரது மனநிலையைப் புரிந்து கொள்கிறார்கள்” என்றார்.
கூட்டத்தில் இருப்பவர்களில் யாரிடமாவது ஒரு தீய எண்ணமோ
தவறான சிந்தனையோ எழுந்தால் அதனை உடனடியாக அறிந்து கொள்வார் சுவாமிஜி. அப்படி ஏதாவது
நிகழ்ந்தால் உடனே உதட்டில் புன்னகையுடன் சுவாமிஜி அந்த நபரை ஒரு முறை பார்ப்பார். ஆனால்
அவர் அருள் வடிவாகத் திகழ்பவர். ஆதலால் அவற்றைப்பெரிது படுத்தாமல் மென்மையாக ஏற்றுக்கொண்டு மன்னித்துவிடுவார். அவர் திருமுன்பு இருப்பது என்பது
பயங்கர வெடிமருந்திற்கு முன்னால் இருப்பது போன்றது. ஆனால் கருணை வடிவான அவர் நமது தீமைகளை
எல்லாம் மன்னித்துவிடுவார் என்ற உண்மைதான் தயக்கமின்றி எங்களை அவரிடம் அணுகச்செய்தது” என்று எழுதுகிறார் அவரது சீடர்களில் ஒருவர்.
இந்து மதத்தை
ஒரு புதிய கோணத்தில் அளிக்க யாரும் கிடையாதா என்று சென்னை இளைஞர்கள் ஏங்கித் தவித்த
போது ஒரு புதிய ஒளியாகத் தோன்றினார் சுவாமிஜி. அவரைச் சந்தித்த கணங்கள் ஒவ்வொன்றும் அந்த இளைஞர்களுக்குப் புதிய விடியலாகத்தோன்றின.
கேள்விகளுக்குக் கணநேரம் தாமதமின்றி அவர் அளித்த பதில்கள் அவர்களின் மனங்களில் அப்படியே
கொள்ளை கொண்டன.
ஒரு நாள்
மாலை, கடற்கரை வீட்டில் சுவாமிஜி அமர்ந்திருந்தார். வழக்கம்போல் பல இளைஞர்கள் அவரைச்
சந்திக்க வந்திருந்தனர். கீழே அலை பொங்கும் நீலக் கடல், மேலே பரந்து கிடக்கும் நீல
வானம். ஒருவர் கேட்டார்.
கேள்வி-
சுவாமிஜி கண்ணன் ஏன் நீலமாகச் சித்தரிக்கப் படுகிறார்?
சுவாமிஜி-
ஏனெனில் எல்லையற்றதன் நிறம் நீலம். உங்கள் அருகிலுள்ள வெளியைப் பாருங்கள். அதற்கு நிறம்
இல்லை. ஆனால் மேலே பரந்து கிடக்கும் எல்லையற்ற வானத்தைப் பாருங்கள், அது நீல நிறம்.
கடல் நீரைக்கையில் எடுத்துப் பாருங்கள். அதற்கு நிறமில்லை.ஆனால் பரந்து கிடக்கும் கடலைப்பாருங்கள்.
அது நீல நிறம். உங்கள் அருகிலுள்ள நிலத்தைப்
பாருங்கள். அது வெவ்வேறு நிறங்களில் உள்ளது.
ஆனால் தொலைவில் தெரியும் மலையைப்பாருங்கள், அது நீல நிறம். கண்ணனும் எங்கும் நிறைந்தவர்,
இயற்கை முழுவதும் ஊடுருவிப் பரந்தவர். அவர் எல்லையற்றவர் என்பதைக் காட்டவே நீல நிறமாகச்
சித்தரிக்கப் படுகிறார்.
கீழை மற்றும்
மேலை நாட்டு த் தத்துவங்கள் பற்றி பேச்சு வந்தது. மாணவர் ஒருவர் ஸ்பென்சரை மிகவும்
புகழ்ந்தார். சுவாமிஜி கூறினார், ஸ்பென்சர் அறிய முடியாதது” என்று கூறுவது என்ன? நாம் கூறுகின்ற மாயை தானே! இந்த மேலைத்
தத்துவ அறிஞர்கள், அறிய முடியாதது. என்ற கருத்தை
நினைத்தாலே பயந்து சாகின்றனர். நமது தத்துவஞானிகளோ அதற்குள் துணிச்சலுடன் குதித்து
அதை வென்றே விட்டனர். மேலை நாட்டின் வாய் ஜம்ப தத்துவத்திற்கும், கீழை நாட்டின் அனுபூதிக்கும்
இது தான் வித்தியாசம்.
எது சமுதாய
சீர்திருத்தம்?
சமுதாயம் சிர்குலைந்து விட்டது, அதனைச் சீர்திருத்த
வேண்டம் என்ற ஆர்வமும் துடிப்பும் அன்றைய இளைஞர்களிடம் அதிகமாகக் காணப்பட்டது. ஆனால்
அதற்காக அவர்கள் கண்ட பாதை ஆக்கபூர்வமானதாக இல்லை என்பதைக்கண்டார் சுவாமிஜி. சீர்குலைவிற்கும்
பின்னடைவிற்கும் நமது மதமும் கலாச்சாரமுமே காரணம் என்று நம்பிய அந்த இளைஞர்கள் நமது
பாரம்பரியத்தையே மறுக்கவும் இழிவாகப்பேசவும் தலைப்பட்டனர். சுவாமிஜி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
நமது இழிநிலைக்குக் காரணம் நமது மதமோ கலாச்சாரமோ பண்பாடோ அல்ல, அவற்றைச் சரியாகப் புரிந்து கொள்ளாததும்,
சிறிதும் சிந்திக்காமலும் சிறிதும் ஆராயாமலும் மேலை நாட்டு உலகியல் கலாச்சாரத்தை ஏற்றுக்
கொள்வதும் பின்பற்றுவதும் தான் காரணம் என்பதை
அவர் எடுத்துக்கூறினார். சமுதாய சீர்திருத்தம் வேண்டாம் என்பது ஒரு போதும் அவரது நோக்கம் அல்ல. ஆனால் அந்தச்
சீர்திருத்தம் உள்ளிருந்தே வரவேண்டும். புறத்திலிருந்து அல்ல என்பதைச்சுட்டிக்காட்டினார்.
அதாவது நமது பாரம்பரியத்தைப் புரிந்து கொள்வதன் மூலம் சமுதாயத்தை ச் சீர்திருத்த வேண்டுமே
தவிர மேலை நாட்டிலிருந்து கடன் வாங்கிய கருத்துக்களை திணிப்பதன் மூலம் அல்ல. என்பது
அவரது கருத்தாக இருந்தது.
சுவாமிஜி
இந்து மதத்தின் முக்கிய அம்சங்கள் எவை? என்று கல்லூரிப்பேராசிரியர் ஒருவர் கேட்டார்.
கடவுள் நம்பிக்கை, வேதங்களில் நம்பிக்கை, கர்ம நியதி, மறுபிறவிக்கொள்கை. இந்து மதத்திற்கும்
மற்ற மதங்களுக்கும் உள்ள முக்கிய மான வித்தியாசம்
என்னதெரியுமா? மனிதன் தவறிலிருந்து உண்மைக்குப் பயணம் செய்கிறான்என்று மற்ற மதங்கள் கூறுகின்றன. அவன் உண்மையிலிருந்து உண்மைக்கு, தாழ்ந்த உண்மையிலிருந்து உயர்ந்த உண்மைக்குப்போகிறான் என்கிறது
இந்துமதம். வேதங்களை ஆழ்ந்து படித்தால் அங்கே சமரசக்கருத்துதான் காணப்படுகிறது. பரிணாமக் கருத்தின் கோணத்தில்வேதங்களைப்
படிக்கவேண்டும்.
No comments:
Post a Comment