வகுப்பு-58 நாள்-16-3-2020
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
--
மூன்றுவித உணவு இருக்கிறது
சாத்விக உணவு
ராஜஸ உணவு
தாமஸ உணவு
-
உயிரிலிருந்து உணவு உற்பத்தியாகிறது.உணவிலிருந்து
உயிர் உற்பத்தியாகிறது என்று வேதம் கூறுகிறது.
ஒரு உயிர் இன்னொரு உயிரின் உணவாகிறது.
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
17.8 ஆயுள்,அறிவு.பலம்,ஆரோக்கியம்,சுகம்,விருப்பம்
ஆகியவைகளை உண்டுபண்ணுபவை, ரசமுள்ளவைகள்,பசையுள்ளவைகள்,வலிவு தருபவைகள்,இன்பமானவைகள்
ஆகிய ஆகாரங்கள் சாத்விகர்களுக்கு பிரியமானவைகள்.
எளிதில் ஜீரணிக்க்ககூடிய உணவே அறிவுக்கும்
ஆரோக்கியத்திற்கும் நல்லது. நீண்ட ஆயுளைத் தரக்கூடியது.
-
17.9 கசப்பு,புளிப்பு,உவர்ப்பு,அதிக உஷ்ணம்,காரம்,
உலர்ந்தவை, எரிச்சலூட்டுபவை,துக்கத்தையும்,சோகத்தையும்,நோயையும் உண்டுபண்ணுபவையான ஆகாரங்கள்
ரஜோகுணமுடையவர்களுக்கு பிடித்தமானவை
-
அதிக காரமானவற்றை உண்டால் வயிறு கெட்டுவிடும்
என்று தெரிந்தும் சிலர் அவைகளை உண்பார்கள். காரணம் அந்த உணவின்மீதுள்ள ஆசை.
ஜஸ்கிரீம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று
தெரிந்தும் அதை உண்கிறார்கள்.
-
17.10 பொழுது கழிந்த, சுவையிழந்த, நுர்நாற்றமெடுத்த,பழைய,எச்சிலான,
தூய்மையற்ற உணவு தமோகுணத்தினருக்கு பிரியமானது
-
போதையூட்டக்கூடிய உணவுகள்,நீண்ட நாட்கள் பாதுகாக்கப்பட்டு
பின்பு பரிமாறப்படும் உணவுகள்,ஒரே தட்டில் உள்ள உணவை எச்சில் உணவை பலர் உண்பது,மாமிச
உணவுகள் போன்றவை தமோ குணத்தினருக்கு பிரியமானவை
-
மூன்றுவிதமான குணங்களுடன் கூடிய மனிதர்கள்
இருக்கிறார்கள்.
அவர்கள் எல்லா காலத்திலும் இருந்துகொண்டே இருக்கிறார்கள்.
அவர்களுக்கு பிடித்த உணவுகளை உண்கிறார்கள்.
எல்லோருக்கும் ஒரே மாதிரியான உணவை ஸ்ரீகிருஷ்ணர்
பரிந்துரைக்கவில்லை.
-
இந்தியா முழுவதும் ஒரே மாதிரி சைவ உணவு பழக்கத்தை
முற்கால மக்கள் பின்பற்றினார்கள் என்று சிலர் நினைக்கிறார்கள்.இது தவறு என்பதை கீதையே
கூறுகிறது.
சமீப காலங்களில் அனைவரும் ஒரே மாதியான காய்கறி
உணவுகளை உண்ணவேண்டும் என்று சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள்.
ஒவ்வொரும் தங்கள் இயல்புக்கு ஏற்ற உணவுகளை
உண்கிறார்கள். மனிதர்களின் இயல்பு உயர்வடையும்போது உணவு முறைகளும் உயர்வடைகிறது. வலுக்கட்டாயமாக
உணவுமுறைகளை மாற்றி அமைப்பதால் பயன் விளையாது.
தமோ குணம் கொண்ட ஒருவன் மிகப்பெரிய பாரத்தை
தூக்கி செல்லும் வலிமை பெற்றவனாக இருப்பான்.எதிரிகளை போர்க்களத்தில் கொல்லும் திறமை
உள்ளவனாக இருப்பான்.
மதுவும்,மாமிசமும் அவனுக்கு தேவை.
அப்படிப்பட்ட ஒருவனுக்கு காய்கறி உணவைக்கொடுப்பதால்
அவன் பலவீனமாகி, தன் இயல்புக்கு ஏற்ற வேலையை செய்ய முடியாதவனாகிவிடுவான்.
ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் காய்கறி உணவு
கட்டாயமாக்கப்பட்டது. விளைவு என்ன?
வெளிநாட்டினர் இந்தியாவிற்குள் புகுந்து கட்டாய
மதமாற்றம் செய்தார்கள்,கோவில்களை இடித்தார்கள்,பெண்களை கற்பழித்தார்கள்
அவரவர் இயல்புக்கு ஏற்ற உணவுகளை உண்ண அனுமதியுங்கள்.
அவரவர் கடமைகளை செய்யவிடுங்கள் என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
ஒரு சமுதாயத்தில் ஒரு சிலர்தான் சாத்விக குணம்
கொண்டவர்களாக இருப்பார்கள்.
அதிகமாக ராஜச,தாமஸ குணமும் கொண்ட மனிதர்கள்
வாழ்வார்கள்.
அவர்களை கட்டாயப்படுத்தி சாத்விக உணவுகளை உட்கொள்ளும்படி
செய்ய முடியாது.
அப்படி செய்தால் அந்த சமுதாயம் வீழ்ச்சியடையும்.
-
மகாபாரதத்தில் வியாதன் பற்றிய கதை வருகிறது.
மக்கள்கூடும் சந்தையில் மாமிச கடை வைத்திருந்ததையும்,அவனிடம்
மக்கள் மாமிசம்
வாங்கிச்செல்வதையும்,அது
அவனது பரம்பதைத் தொழில் என்று கூறுவதையும் படிக்கலாம்
இப்போது இருப்பதுபோலவே பழைய காலத்திலும் மாமிசம்
விற்பதற்கென்று இடங்கள் இருந்திருக்கின்றன.
மக்கள் வாங்கி சாப்பிட்டிருக்கிறார்கள்.
-
பிராமணர்கள் சாத்விக குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்
ஷத்திரியர்களும்,வைசியர்களும் ரஜோகுணம் கொண்டவர்களாக
இருப்பார்கள்
சூத்திரர்கள் தமோகுணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த குணங்கள் சிலருக்கு பிறவி குணங்களாக அமைந்திருக்கும்.
சிலர் வயது ஏறஏற உயர்ந்த குணத்தைப்பெறுவார்கள்.
பெரும்பாலான ரிஷிகள் பிறவியில் தாழ்ந்த குலத்தில்
பிறந்து,பிறகு கடும் தவம்செய்து பிராமணநிலையை அடைந்திருப்பதை படிக்கிறோம்.
எல்லோரும் முன்னேற வேண்டும். சூத்திரன் வாழ்க்கை
முழுவதும் சூத்திரனாக இருக்க வேண்டியதில்லை.படிப்படியாக முன்னேறி பிராமணநிலையை அடைய
வேண்டும்.
-
காய்கறி உணவுகளை உண்பதால் அது சாத்விக உணவு,அது
குற்றமற்ற உணவு என்று யாராவது நினைத்தால் அது தவறு.
-
ஒரு ரிஷி எப்படிப்பட்ட உணவை உட்கொள்கிறார்?
-
1.சாத்விக மனிதர்கள் உணவை சமைத்து,அதை பரிமாற
வேண்டும். அதாவது உணவை சமைப்பவர்கள் பிராமணர்களாக இருக்க வேண்டும்.அதை பரிமாறுபவர்களும்
பிராமணர்களாக இருக்க வேண்டும்.
2.பக்தர்களை பிராமணர்களாகவே கருதவேண்டும்.அவர்கள்
சமைத்து பரிமாறும் உணவு சாத்விகமானது.
எந்த பக்தர்கள்? பிரபஞ்சத்தை படைத்து காத்து
அழிக்கும் இறைவனையே எப்போதும் நினைத்துக்கொண்டிருக்கும் பக்தர்கள்.சிறுதெய்வங்களை வழிபடுபவர்கள்
அல்ல
3.உணவு சபிக்கப்படாத உணவாக இருக்க வேண்டும்.
எல்லா உணவுமே உயிரிலிருந்துதான் கிடைக்கிறது.
ஒரு உயிரைக்கொன்று அதிலிருந்து பெறப்படும் உணவு,ஒரு உயிரிடமிருந்து களவாடப்படும் உணவுபோன்றவை
சபிக்கப்பட்ட உணவு.
உதாரணமாக கேரட்டை எடுத்துக்கொள்வோம். கேரட்டை
அப்படியே வேரோடு பிடுங்கி எடுக்கிறார்கள்.இதனால் அந்த உயிர் இறந்துபோகிறது.இது சபிக்கப்பட்ட
உணவு.இதேபோல கிழங்கு வகைகள்,நிலக்கடலை,
வேரோடு பிடுங்கப்படும் கீரை வகைகள்.
தேனீக்களிடமிருந்து களவாடப்படும் தேன். போன்றவை
அந்த உயிர்களால் சபிக்கப்பட்ட உணவுகள்.
4.செடியிலிருந்து கிடைக்கும் காய்கள்,மரத்தில்
பழுத்த பழங்கள்,பசு தனது கன்றுக்கு கொடுத்ததுபோக மீதமுள்ள பால் போன்றவை சாத்விகமமானது.
5. உணவு எங்கே விளைவிக்கப்படுகிறது? இதுவும்
முக்கியம்.
முற்காலத்தில் ரிஷிகள் தாங்கள் வசிக்கும் பகுதியில்
தாங்களே உணவை பயிரிட்டு,அதிலிருந்து விளையும் பயிர்களை தாங்கள் எடுத்துக்கொண்டார்கள்.
முக்கியமாக பழங்கள் மற்றும் பால் அவர்களது முக்கிய உணவாக இருந்தது. சந்தையில் விற்கும்
பொருட்களை ரிஷிகள் வாங்கி உண்பதில்லை
-
முற்காலத்தில் பிராமணர்கள் உணவு விசயத்தில்
மிகவும் கண்டிப்புடன் இருந்தார்கள்.
வேறு ஜாதியினர் யாராவது தாங்கள் சமைக்கும்
உணவையோ,அல்லது தாங்கள் உண்ணும் உணவையோ காணக்கூடாது.அப்படி கண்டால் அந்த உணவு குற்றமுள்ளதாக
மாறிவிடும்.
எனவே வேறு ஜாதியினரை அவர்கள் வசிக்கும் தெருவில்
வரவே அனுமதிக்க மாட்டார்கள்.
பிராமணர் அல்லாதவர்களுக்கு உணவை எக்காரணத்தைக் கொண்டும் கொடுக்கமாட்டார்கள்.
பிச்சையாகக்கூட கொடுக்க கூடாது.பிராமணர் பிச்சையெடுக்க
வந்தால் கொடுக்கலாம்.
பட்டினியில் பிற ஜாதியினர் மடிந்தால்கூடி அவர்களுக்கு
கொடுக்கக்கூடாது. அப்படி கொடுத்தால் இவர்களது புண்ணியம் அவர்களிடம் சென்றுவிடும்.
இதைப்பற்றி அதிகம் பேசினால் இன்னும் பலவற்றை
பேச வேண்டியிருக்கும்.....
No comments:
Post a Comment