Sunday, 14 June 2020

இந்துமதம்-வகுப்பு-5

இந்துமதம்-வகுப்பு-5🕉️
நாள்--24-5-2020
..
5.கோத்திரங்கள்
..
முற்காலத்தில் மக்கள் ஆடு,மாடுகளை மேய்ப்பதை முக்கிய தொழிலாக கருதினார்கள்.
கால்நடைகள் செல்வமாக கருதப்பட்டன.
அதிகம் மாடுகளை வைத்திருப்பவன் பணக்காரனாக கருதப்பட்டான்.
திருடர்கள் பசுக்களை கவர்ந்து செல்வது பற்றி பழைய இலக்கியங்களில் படிக்கிறோம்.
ஒரு நாட்டுடன் வலிய சென்று போர்புரிய விரும்புபவர்கள் அங்குள் பசுக்களை திருடிச்செல்வார்கள்.
அரசனின் பொறுப்பில் பல பசுக்கள் இருக்கும்.
ஸ்ரீகிருஷ்ணரின் வளர்ப்பு தந்தை ஒரு சிற்றரசர்.அவர்களிடம் பல பசுக்கள் இருந்தன.
கிருஷ்ணர் மற்றும் அவரது நண்பர்களின் முக்கிய வேலை பசுக்களை மேய்ப்பது
கோ என்றால் பசு,அரசன் போன்ற அர்த்தங்கள் உள்ளது.
கோவில் என்றால் அரசன்,ஆள்பவன் வசிக்கும் இடம்.
..
ஒவ்வொரு வீட்டிலும் பசுக்கள் வளர்க்கப்பட்டன.
பசுக்களை மேய்ப்பதற்கு பணியாட்கள் நியமிக்கப்ட்டார்கள்.
பசுக்களை இரவில் அடைப்பதற்கென்று பொதுவான தொழுவம் இருந்தன.அவைகளுக்கு கோத்ரா என்று பெயர்.
சில நேரங்களில் ஒருவரது பசு இன்னொருவரின் மந்தையுடன் கலந்துவிடும்,அப்படிப்பட்ட வேளைகளில் சிறுசிறு சண்டைகள் ஏற்படுவதுண்டு.
அவைகளை தீர்த்துவைப்பதற்கு நீதிமான்களை அணுகுவார்கள்.
பொதுவாக அந்த ஊரில் உள்ள சிற்றரசரே நீநிவழங்குபவராக இருப்பார்.
எனவே அவர் பசுபாதுகாவலன்,கோமகன்,கோத்ரபதி என்று அழைக்கப்பட்டான்.
..
இப்படி ஆரியர்களில் பல கோத்ரபதிகள் இருந்தார்கள்.அவர்களில் சிலர் ரிஷிகளாகவும் இருந்தார்கள் சாண்டில்யர்,பாரத்வாஜர்,காஸ்யபர் ஆகியோர் முக்கியமானவர்கள்.
ஒவ்வொரு குழுவினரும் தங்கள் கோத்திரத்தின் பெயருடனேயே அறியப்படார்கள்.
திருமண உறவுகள் மேற்கொள்ளும்போது தங்கள் கோத்ரத்தில் பெண் எடுக்காமல் வேறு கோத்ரத்தில் பெண் எடுப்பார்கள்.இதன் மூலம் பரம்பரை நோய்கள் பரவுவது தடுக்கப்படுகிறது.
ஆரியர்கள் தங்கள் கோத்ரத்தின் பெயரை நினைவில் வைத்துக்கொள்வார்கள்.
.
காலம் செல்லச்செல்ல ஆரியர்கள் மாடுமேய்க்கும் தொழிலை குறைத்துக்கொண்டு விவசாயம்,வியாபாரம்,புரோகிதம் போன்ற தொழில்களையும் மேற்கொள்ள ஆரம்பித்தார்கள்.
ஒவ்வொரு கோத்ரமும் பெரிதாக வளர ஆரம்பித்தது.
....
இவர்களில் சிலர் ஆழ்ந்த சிந்தனை சக்தி உடையவர்களாகவும்,தனக்குள்ளே சென்று ஆழ்ந்து தியானிப்பதில் வல்லவர்களாகவும் விளங்கினார்கள்.அவர்களது மனதில் பிரபஞ்ச ரகசியம் வெளிப்பட்டது.
கடவுளை தனக்குள்ளே அறிந்துகொண்டார்கள்.அவர் கூறும் வார்த்தைகள் வேதம் என்று அழைக்கப்பட்டது
அவ்வாறு உயர்ந்த நிலையை அடைந்த மனிதனை ரிஷி,பிராம்மணன் என்று அழைத்தார்கள்.
-
அந்த ரிஷி மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைக்கும் நீதிபதி பணியைவிட உயர்ந்ததான இறைவனைப்பற்றி போதிக்கும் குரு நிலையை அடைந்தார்.
..
இப்போது மூன்று நிலைகள் உருவாகிவிட்டன. 1. மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைக்கும் தலைமை பண்புள்ள சிலர். 2. அதைவிடவும் உயர்ந்ததான கடவுளைப்பற்றி போதிக்கும் குருநிலையை அடைந்துள்ள சிலர்.3. மாடுமேய்த்தல்,விவசாயம்,வியாபாரம் செய்யும் சாதாரண மக்கள்
-
தலைமைப் பண்புள்ளவர் சத்திரியர் என்றும் குருநிலையை வகிப்பவர் பிராம்மணர் என்றும் அழைக்கப்பட்டார் மற்றவர்கள் குடி மக்கள் .
இவ்வாறு ஆதி காலத்தில் பல கோத்திரங்கள் இருந்தன.
ஒவ்வொரு கோத்திரத்திரமும் ஒரு ரிஷியை தலைவராக ஏற்றுக்கொண்டது.
ஒவ்வொரு கோத்திரமும் தங்களுக்னென்று தனியாக வேதத்தை வைத்திருந்தது.
பிற்காலத்தில் இந்த வேதங்கள் அனைத்தும் ஒன்றாக கோர்க்கப்பட்டு இருக்வேதம்(ரிக்) என்று அழைக்கப்பட்டது.
இருக் என்றால் இருக்கிறது,நிலையாக இருக்கிறது என்று பொருள்.
வேதம் ஒன்றாக இணைந்ததுபோல பல கோத்திரங்களை உடைய சமூகம் ஆரியர் என்ற பெயரில் ஒன்றாக அறியப்பட்டது.
-
இடம் பெயர்தல்
-
ரிக் வேத காலத்தில் சரஸ்வதி நதியை சுற்றி வாழ்ந்து வந்தவர்கள் ஆரியர்கள் என்று பார்த்தோம்.அதன்பிறகு அவர்கள் படிப்படியாக விரிவடைந்து பல இடங்களுக்கு பயணப்பட்டார்கள்.
பூமியின் நிலப்பரப்புகள் எப்போதும் ஒரேபோல இருப்பதில்லை.பருவநிலை மாற்றத்தால் பசுமையாக இருக்கும் இடங்கள் பாலைவனமாக மாறுகின்றன. பாலைவனங்கள் பசுமையாகின்றன.
மனிதர்கள் தொடர்ந்து இடம்பெயர்ந்துகொண்டே இருக்கிறார்கள்.
ஆரியர்கள் பல்வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தார்கள்.
அவ்வாறு அவர்கள் செல்லும்போது வேதத்தையும் தங்களுடன் எடுத்துச் சென்றார்கள்.
வேதத்தை கற்ற இனம் புதிய இடங்களுக்கு பயணித்தது.
புதிய இடங்களில் ஏற்கனவே அங்கே வாழும் பூர்வீக குடிமக்கள் இருப்பார்கள்.அவர்களிடம் வேதம் இல்லை.
ஆனால் நிலம் அவர்களுடையது. ஆட்சி அவர்களுடையது.
அவர்களை அனுசரித்து சென்றால்தான் அங்கே வாழமுடியும்.
அவர்களது வழிபாடுகள் வேறுவிதமாக இருக்கும்.
பூர்வ குடிமக்கள் வேதம் அறிந்தவர்களைப்போல உலகஞானம்,இறைஞானம் பெற்றவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.
எனவே அவர்களது வழிபாடுகளை,பழக்க வழக்கங்களை மாற்றிவிடக்கூடாது.அதே நேரத்தில் வேதத்தை அவர்களுக்கு கற்றுக்கொடுக்கவும் கூடாது.அவர்களை தங்களுக்கு இணையாக கருதவும் கூடாது என்ற எண்ணம் ஆரியர்களிடம் இயல்பாகவே இருந்திருக்கும்.
-
இப்போது இரண்டு பெரும் இனங்கள் ஒன்றாக கலந்தன.
ஆரியர்கள் தங்களுக்குள்ள அதிகாரத்தையும்,அறிவையும் மற்ற இனத்தினருடன் பகிர்ந்துகொள்ள தயாராக இல்லை.
ஆட்சி,அதிகாரம்,வேதம்,கல்வி,வியாபாரம் அனைத்தையும் தங்கள் வசம் வைத்துக்கொள்ள விரும்பினார்கள்.
...
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்து வந்தார்கள்,ஆனால் சில ஆயிரம் ஆங்கிலேயர்கள் இந்தியாவை அவர்களிடமிருந்து பிடுங்கி தங்கள் வசம் வைத்து நாட்டை ஆண்டார்கள். இது எப்படி சாத்தியமானது?
ஆங்கிலேயர்களிடம் நவீன கருவிகள் இருந்தன,தொழிற்சாலைகள் இருந்தன,நவீன கல்வி இருந்தது,அதிக உலக ஞானம் இருந்தது. அறிவு அதிகம் உள்ள இனத்தினர் எண்ணிக்கையில் குறைவாக இருந்தால்கூட அவர்களே வெற்றிபெறுவார்கள் என்பதை வரலாறுகள் மூலம் அறிகிறோம்.

No comments:

Post a Comment