Sunday, 14 June 2020

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்-61

வகுப்பு-61  நாள்-19-3-2020

-

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்

-

மூன்றுவிதமான தவங்கள்

-

3.மனத்தால் செய்யும் தவம்

-

17.16 மனத்தெளிவு, அன்புடைமை, மௌனம், சுயக்கட்டுப்பாடு, தூயநோக்கம் இவை மானஸ தபசு என்று சொல்லப்படுகிறது.

-

நாம் ஒவ்வொருவருக்கும் மூளை இருக்கிறது. இதற்கு சித்தம் என்று பெயர்.

இந்த சித்தத்தில் எண்ணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவைகள் அவ்வப்போது தானாகவே கிளர்ந்து எழுந்துகொண்டே இருக்கும்.

 

எல்லோருடைய மனமும் மஹத் என்ற பிரபஞ்ச மனத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

உலகத்தில் ஒரு பகுதியில் உள்ளவர்கள் துன்பத்தை அனுபவித்தால்கூட அது உலகத்தில் உள்ள எல்லோரது மனத்தையும் ஒரு சிறிதாவது பாதிக்கும்.

 

இந்தோனேசியாவின் கடல் மட்டத்தில் சுனாமி ஏற்பட்டால் உலகிலுள்ள எல்லா கடல்களிலும் அதன் பாதிப்பு இருக்கும். அருகில் உள்ள கடலில் அதிக பாதிப்பும்,தூரத்தில் மிக சிறிய அளவிலும் பாதிக்கிறது.

சில நேரங்களில் நாம் அதை உணரமுடியாத அளவு மிகக்குறைவாகக்கூட இருக்கலாம்

 

அதேபோல உலகத்திலுள்ள எல்லோரது மனமும் இணைக்கப்பட்டுள்ளது. நமக்கு அருகில் உள்ளவர்கள் துன்பப்படும்போது நம்மை அதிகமாக பாதிக்கிறது. தூரத்து நாடுகளில் உள்ளவர்கள் துன்பப்படும்போது  பெயரளவிற்கு பாதிக்கிறது.ஒருவேளை அந்தபாதிப்புகளை நாம் அறியாமல்கூட இருக்கலாம்.

-

நமது சித்தத்தில் எண்ணங்கள் இல்லாமல் செய்ய வேண்டும். அதற்கு சித்தசுத்தி என்று பெயர்.

அப்படி சித்தத்தை சுத்தம் செய்ய துவங்கும்போது மேலும் மேலும் எண்ணங்கள் சித்தத்தில் எழுவதை கவனிக்கலாம்.

மஹத் என்ற பிரபஞ்ச மனத்திலுள்ள எண்ணங்கள் நமது சித்தத்திற்குள் வந்துகொண்டிருக்கும்.

பிரபஞ்சத்தைப்பற்றிய முழு அறிவைப்பெறும்போது மட்டுமே சித்தத்தை முழுவதும் தூய்மைப்படுத்த முடியும்.

-

உலகிலுள்ள எல்லோரையும் நேசிக்க வேண்டும்.இதயத்தை பிரபஞ்ச அளவு விரிவுபடுத்த வேண்டும்.

அப்போது அறிவும் விரிவடையும்.

 

வெளியில் பேசுதை நிறுத்திவிட முடியும். ஆனால் மனத்திற்குள்ளே பேசுவதை நிறுத்துவது சுலபம் அல்ல.

மனதிற்குள்ளேயே அவ்வப்போது தெரிந்த நபர்களிடம் பேசிக்கொண்டிருப்போம்.

அதையும் நிறுத்தவேண்டும்.அதற்கு மௌனம் என்று பெயர்.

 

நமது இயல்பு என்ன? ஆன்மா

எனக்கு உடல் இல்லை.மனம் இல்லை. நான் எல்லையற்றவன் போன்ற உணர்வுகளை எப்போதும் வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு சுயக்கட்டுப்பாடு என்று பெயர்.

 

நமது நோக்கம் தூயதாக இருக்கவேண்டும். உலகத்தை அடிமைப்படுத்துவதற்காக தவம் மேற்கொள்ளக்கூடாது. பிறருக்கு நன்மை செய்வதற்காக தவம் மேற்கொள்ளலாம்.


No comments:

Post a Comment