வகுப்பு-57 நாள்-14-3-2020
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
இந்துக்கள் மறுபிறவி கொள்கையை நம்புகிறார்கள்.
ஒருவன் பிறக்கும்போது முற்பிறவிகளில் செய்த
பாவபுண்ணியங்களுடன் பிறக்கிறான்.
அதிகம் புண்ணியம் செய்தவன் புண்ணியவான்களின்
வீடுகளில்,பணக்காரர்களின் வீடுகளில் பிறக்கிறான்.
அதிகம் பாவம் செய்தவன் பாவிகளின் வீட்டில்
பிறக்கிறான்.
நமது சமுதாய அமைப்புகள் அனைத்தும் முற்பிறவிகளுடன்
தொடர்புடையது.
புண்ணியம் செய்தவன் பிராமணனாக பிறக்கிறான்
என்றும்,பாவம் செய்தவன் சூத்திரனாக பிறக்கிறான் என்றும் முற்காலத்தில் மக்கள் நம்பினார்கள்.
தற்காலத்தில் அப்படி இல்லை. பிராமணனாக பிறந்தவன்
நாட்டை கொள்ளையடிப்பதையும், நமது நாட்டு ரகசியங்களை பிற நாடுகளுக்கு விற்பதையும்,எல்லா
தீய செயல்களை செய்வதையும் பார்க்கிறோம்.
சூத்திரனாக பிறந்தவன் மகானாக போற்றப்படுவதையும்
பார்க்கிறோம்.
-
முற்பிறவியில் செய்த பாவபுண்ணியங்களுக்கு ஏற்ப
சிலர்
பிறக்கும்போதே தெய்வ குணங்களுடன் பிறக்கிறார்கள்.சிலர்
அசுர குணங்களுடன் பிறக்கிறார்கள்.
-
அசுர குணத்துடன் பிறக்கும் ஒருவனது இயல்பு
எப்படி இருக்கும்?
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
16.6 பார்த்தா, இந்த உலகத்தில் தெய்வீகம் என்றும்
அசுரம் என்றும் இருவகை உயிர்ப்பிறப்புகள் உள்ளன. தெய்வஇயல்பு குறித்து விரிவாக சொல்லப்பட்டது.
அசுர இயல்பை சொல்கிறேன் கேள்
-
16---.7,8 அசுர ஜனங்கள், செய்யக்கூடிய செயல்கள்
குறித்தும், செய்யக்கூடாத செயல்கள் குறித்தும் அறியமாட்டார்கள். அவர்களிடத்தில் தூய்மையில்லை.
நல்லொழுக்கம் இல்லை. சத்தியமும் இல்லை
உலகம் சத்தியமில்லாதது.தர்மம் இல்லாதது.இறைவன்
இல்லை,ஆண்,பெண் இணக்கத்தால் காமத்தால் உண்டானது. அதுதவிர வேறு எதுவும் இல்லை என்கிறார்கள்
-
16---.9,10 அற்பு புத்தியுடையவர்கள் இந்த கொள்கையை
பிடித்துக்கொண்டு தன்னை நஷ்டப்படுத்திக்கொண்டவர்களாய் கொடூர செயல்புரிபவர்களாய் உலகத்தின்
எதிரிகளாய் அழிவதற்கென்று தோன்றியிருக்கின்றனர்
நிறைவேறாத ஆசையுடையவர்களாய், ஆடம்பரமும் ,தற்பெருமையும்,இறுமாப்பும்
உடையவர்களாய்,மதிமயக்கத்தால் கெட்டஎண்ணங்களை கிரகித்துக்கொண்டு தீயதீர்மானங்களுடன்
செயல்பரிகிறார்கள்
-
16--11,12 சாகும்வரையில் அளவுகடந்த கவலை அடைந்தவர்களாய்,
காம நுகர்ச்சியையே அனைத்திலும் மேலானதாக கருதி.
மற்றொன்று இல்லை என்று தீர்மானம் செய்தவர்களாய்
நூற்றுக்கணக்கான ஆசைக்கயிறுகளால் தளைக்கப்பட்டவர்களாய்
காமக்குரோதங்களில் வசப்பட்டவர்களாய் காமபோகத்தின் பொருட்டு நியாயமற்ற வழியில் பொருள்
தேடமுயல்கின்றனர்
-
16--13,14,15,16 இன்று என்னால் இது அடையப்பட்டது.
இந்த விருப்பத்தை நிறைவேற்றுவேன்.இது இருக்கிறது மேலும் எனக்கு இந்த செல்வம் வந்துசேரும்
அந்த பகைவன் என்னால் கொல்லப்பட்டான், மற்றவர்களையும்
கொல்லுவேன், நான் ஆளுபவன், போகத்தை அனுபவிப்பவன், நான் வெற்றிபெறுவேன்,இன்புறுவேன்
செல்வமுடையவன். உயர்குலத்தவனாக இருக்கிறேன்.
எனக்கு சமமானவன் வேறு யார் இருக்கிறார். யாகம் செய்வேன், தானம் செய்வேன், மகிழ்ச்சியடைவேன்.
இப்படி அக்ஞானத்தில் மயங்கியவர்கள்
பல எண்ணங்களில் குழப்பமடைந்தவர்கள் மோஹவலையில்
மூடப்பட்டவர்கள் காமபோகங்களில் பற்றுடையவர்கள் பாழ்நரகில் வீழ்கின்றனர்
-
16---17,18 தற்புகழ்ச்சியுடையவராய், வணக்கமில்லாதவர்,
செல்வசெருக்கும் மதமுடையவர், பெயரளவில் யாகத்தை விதிவழுவி ஆடம்பரத்திற்காக செய்கின்றனர்
அகங்காரம். பலம்.இறுமாப்பு,காமம், குரோதம்
இவைகளையுடையவர்கள் தங்கள் தேகத்திலும்,பிறர் தேகத்திலுமுள்ள இறைவனை வெறுத்து அவமதிக்கின்றனர்
-
16---19,20 துவேஷமுடையவர்களை,கொடியவர்களை,கடையவரை,இழிந்தோரை,பிறந்து
இறந்து உழலும் உலகில் அசுரப்பிறிவிலேயே திரும்பத்திரும்ப நான்(இறைவன்) அவர்களை தள்ளுகிறேன்
குந்தியின் மகனே, மூடர்கள் பல பிறவிகளில் அசுரயோனிகளில் பிறந்து
என்னை(இறைவனை) அடையாமல் இன்னும் கீழான கதியை அடைகிறார்கள்.
-
இந்த உலகத்தில் நல்லவர்களும் இருக்கிறார்கள்
தீயவர்களும் இருக்கிறார்கள்.
தீயவர்களை இறைவன் ஏன் படைக்கவேண்டும்? அனைவரும்
நல்லவர்களாக ஏன் படைக்கப்படவில்லை?
ஒருவேளை இந்த உலகத்தில் அனைவரும் நல்லவர்களாக
இருந்தால் என்னவாகும்?
இந்த உலகம் சொர்க்கம்போன்று இருக்கும்.
முக்தி அடைய யாரும் விரும்பமாட்டார்கள்.மீண்டும்
மீண்டும் பிறந்து இந்த உலகின் இன்பங்களை அனுபவிக்கவே விரும்புவார்கள்
இந்த உலகம் ஒரு பயிற்சிக்கூடம்.இது தற்காலிக
இடம்.
இங்கே அனைவரும் தங்களை வலிமையாக்கிக்கொள்ள
பிறந்திருக்கிறோம்.
-
சிலர் இதற்கு முந்தையபிறவியில் மிருகங்களாக
இருந்திருப்பார்கள்.தற்போது முதன் முதலாக மனித பிறவி கிடைத்திருக்கும்.இந்த மனித பிறவி
கிடைத்ததில் அவர்கள் மிகவும் ஆனந்தம் அடைகிறார்கள்.
இன்னொருவர் இதற்கு முன்பு தேவனாக இருந்திருப்பார்.
அந்த நிலையிலிருந்து கீழ் இறங்கி தற்போது மனிதனாக பிறந்திருப்பார். மனிதனாக பிறந்ததற்கு
அவர் மிகவும் வருத்தம் அடைவார்.
-
இப்போதுதான் முதன்முதலாக மனித பிறவியை அடைந்தவர்களிடம்
அதிகமாக மிருக குணங்களே வெளிப்படுகின்றன. பிறரது பொருளை அபகரித்தல், எளியரை துற்புறுத்துதல்,பிறரை
அடிமையாக்குதல் போன்றவை அவர்கள் விரும்பிச்செய்வது.அவர்களது மனதில் நல்ல சிந்தனை எழுவதற்கு
வாய்ப்பில்லை.நல்ல சிந்தனைகள் அவர்களை வேதனைப்படுத்தும்.இப்படிப்பட்டவன் நல்லவர்களை
தேடிப்பிடித்து அவர்களது சொத்துக்களை அபகரிக்கிறான்.அவர்களை துன்புறுத்துகிறான்.அதில்
மகிழ்ச்சி காண்கிறான்.
-
யாருக்கு இது கடைசி பிறவியோ அவர்கள் ராட்சத
இயல்புடையவர்களின் கையில் சிக்கிக்கொள்கிறார்கள்.
கணவன் தெய்வப்பிறவியாக இருந்தால் மனைவி ராட்சத
பிறவியாக இருப்பாள்.அல்லது மனைவி தெய்வப்பிறவியாக இருந்தால் கணவன் ராட்சத பிறவியாக
இருப்பான்.
கணவனும் மனைவியும் தெய்வப்பிறவியாக இருந்தால்
சுற்றியுள்ள சொந்தக்காரர்களில் சிலர் ராட்சத பிறவியுடையவர்களாக இருப்பார்கள்.
ஒரு சமுதாயத்தை சேர்ந்த எல்லோரும் நல்லவர்களாக
இருந்தால்,இன்னொரு சமுதாயத்தை சேர்ந்த எல்லோரும் ராட்சத இயல்புடையவர்களாக இருப்பார்கள்
நல்லவர்களை துன்புறுத்தி.அதில் மகிழ்ச்சியடைவதே
ராட்சத இயல்புடையவர்களின் வேலையாக இருக்கும்.
-
இந்த உலகம் ஒரு தற்காலிக தங்கும் இடம்.
இங்கே எப்படி நம்மை வலிமைப்படுத்திக்கொள்வது?
ஒரு மான் வலிமை குறைந்துபோனால் புலியிடம் சிக்கி
இறந்துபோகும்.
புலி வலிமை குறைந்துபோனால் சிங்கத்திடம் அடிபட்டு
இறந்துபோகும்
மிருக உலகத்தில் உடல் வலிமை அதிகம் இருப்பதே
வெற்றிபெறும்.
ஆனால் மனித உலகில் மனவலிமை யாரிடம் அதிகம்
இருக்கிறதோ அவனே வெற்றிபெறுகிறான்.
எனவே மனவலிமையை பெருக்கி்க்கொள்வதே தேவையானது.
பல்வேறு இன்னங்களையும் சோதனைகளையும் அவமானங்களையும்
சந்தித்தும்கூட யார் மனவலிமை மிக்கவர்களாக இருக்கிறார்களோ அவர்களே இந்த உலகில் வெற்றி
பெறுகிறார்கள்.நீண்ட நாட்கள் வாழ்கிறார்கள்.
-
இந்த உலகத்தில் நீண்ட நாட்கள் வாழ்வது மட்டும்போதாது.
மறுபடி மறுபடி பிறக்கின்ற இந்த பிறவி சுழற்சிக்கு
ஒரு முடிவு கட்டவேண்டும்.
இந்த பிறவிகளிலிருந்து முக்திபெற வேண்டும்.
மனவலிமை மிக்கவர்களே முக்திபெற முடியும். மற்றவர்கள்
மறுபடிமறுபடி பிறக்க வேண்டியிருக்கும்.
-
தீயவர்கள் எதற்காக இந்த உலகத்தில் இருக்கிறார்கள்?
நல்லவர்களை முக்திபெற செய்வதற்காக
நல்லவர்கள் இந்த உலகத்தில் பற்றுகொண்டு.நல்ல
செயல்களை செய்துகொண்டு,இறைசிந்தனை இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.
அவர்களை துன்புறுத்தி பல்வேறு சோதனைகளுக்கு
உட்படுத்தி,இந்த உலக பற்றிலிருந்து விடுபட வைப்பதற்கே தீயவர்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள்.
தீயவர்கள் கொடுக்கும் சோதனைகள் மூலம், நல்லவர்களின்
மனம் வலிமைபெறுகிறது. உலகப்பற்று குறைகிறது. இறைசிந்தனை அதிகரிக்கிறது.முக்தி அடைவதற்கான
வேகம் அதிகரிக்கிறது.
யார் அதிகம் துன்பத்தை அடைகிறார்களோ, அவர்கள்
மிகவேகமாக முக்தியை நோக்கி செல்கிறார்கள்.
இவ்வாறு இந்த உலகத்தில் மகிழ்ச்சியாக வாழலாம்,
நீண்ட நாள் வாழலாம் என்ற கனவு தகர்க்கப்படுகிறது.
-
இவ்வாறு செய்வதால் தீயவர்களுக்கு என்னவாகும்?
அவர்கள் மறுபடிமறுபடி பிறந்து படிப்படியாக
நல்லவர்களாக மாறுவார்கள்.
முற்பிறவிகளில் நல்லவர்களை எப்படி துன்புறுத்தினார்களோ
அதேபோல இந்த பிறவியில் வேறு பலர் இவர்களை துன்புறுத்தவுவார்கள்.இது ஒரு தொடர்கதை போல
தொடர்ந்துகொண்டே இருக்கும்.
எனவே இந்த பிறவியில் யாரெல்லாம் அதிக துன்பத்தை
அனுபவிக்கிறார்களோ அவர்கள் இதற்கு முந்தைய பிறவியில் இதேபோன்ற துன்பங்களை பிறருக்கு
செய்திருக்கிறார்கள் என்பதை மறக்கக்கூடாது.
இதற்கு முன்பு நாம் பிறருக்கு என்ன செய்தோமோ
அதன் பலனை இன்று அனுபவிக்கிறோம்.
இன்று ஒருவர் ஒரு கன்னத்தில் அறைந்தால், இதற்கு
முந்தைய பிறவியில் யாரோ ஒருவரின் கன்னத்தில் நாம் அறைந்திருப்போம்.
எல்லா செயலுக்கும் ஒரு காரணம் இருக்கும்.
நாம் இன்று அனுபவிக்கும் ஒவ்வொரு துன்பத்திற்கும்
ஒரு காரணம் இருக்கும்.
எனவே நடந்தனை நினைத்து பிறர்மீது பழிபோட்டுக்கொள்வதைவிட்டுவிட்டு,
நல்ல கர்மங்களை செய்து நற்கதி அடைவதே மேலானது.
No comments:
Post a Comment