Sunday, 14 June 2020

இந்துமதம்-வகுப்பு-19

இந்துமதம்-வகுப்பு-19🕉️
நாள்-10-6-2020
..
நான்கு ஆஸ்ரமம்
.
3. வானப்பிரஸ்தம்
..
ஒரு இல்லறத்தானுக்கு பேரக்குழந்தை பிறந்த பிறகு வானப்பிரஸ்தம் என்ற அடுத்தநிலையை நோக்கி செல்ல வேண்டும்.
முற்காலத்தில் கணவனும் மனைவியும் கானகம் சென்று குடில் அமைத்து வாழ்வார்கள்.
அங்கே கிடைக்கும் கிழங்கு,பழம் இவைகளை உண்டு வாழ்வார்கள்.
ஆன்மீக பயிற்சிகளை மேற்கொள்வார்கள்.முக்தி அடைவது ஒன்றே அவர்களது நோக்கமாக இருந்தது.
வானப்பிரஸ்த வாழ்க்கை என்பது முற்றிலும் பற்றற்று வாழ்வதற்கான ஒரு பயிற்சி.
காலம் மாறமாற காடுகளில் சென்று வசிப்பது இயலாமல் போயிற்று.
அதன்பின் வீட்டிற்கு அருகே இன்னொரு குடில் அமைத்து(out-house) அங்கே தவவாழ்க்கையை மேற்கொண்டு வந்தார்கள்.
தற்போது அந்த நிலையும் மாறிவிட்டது.
..
4.சந்நியாசம்
..
வானப்பிரஸ்த ஆஸ்ரம வாழ்க்கையில் மனைவி இறந்துபோனால் கணவன் சந்நியாசம் என்ற அடுத்த ஆஸ்ரமத்தை நோக்கி செல்கிறான்.ஊர்ஊராக சுற்றி அலையும் சந்நியாசம் அல்ல.
ஓரிடத்தில் நிலையாக அமர்ந்து,உணவை படிப்படியாகக் குறைத்துக்கொண்டு முக்தி அடைவது.
ஒருவேளை கணவன் முதலில் இறந்துவிட்டால்.மனைவி உடன்கட்டை ஏறி தன்னுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்வாளா? இல்லை.
அவளும் சந்நியாச நிலையை அடைகிறாள்.மீதி இருக்கும் சிறிது காலத்தை அங்கேயே கழிக்கிறாள்.
..
இவ்வாறு பண்டைய காலத்தில் மக்கள் நான்கு ஆஸ்ரமங்களை கடைபிடித்தார்கள்.
ஒருவர் முக்தி அடைய வேண்டுமானால் கண்டிப்பாக சந்நியாச ஆஸ்ரமத்தை அடைந்தே ஆகவேண்டும்.
முற்றிலும் பற்றற்ற நிலையை அடைவதற்கான பயிற்சிகளே படிகளே இந்த நான்கு ஆஸ்ரமங்களும்.
..
பிரம்மச்சர்ய ஆஸ்ரமத்தில் குருவுடன் தங்கி அறம் பயில்கிறான்.எப்படி பொருள் ஈட்ட வேண்டும். எப்படி அதை செலவிட வேண்டும். கிரகஸ்த தர்மங்கள் போன்றவற்றை பயில்கிறான்.சுருக்கமாக சொன்னால் கிருகஸ்த ஆஸ்ரதத்திற்கு தேவையான பயிற்சிகளை கொடுக்கும் இடம் பிரம்மச்சர்ய ஆஸ்ரமம்.
..
கிரகஸ்த ஆஸ்ரமத்தில் அறத்தை பின்பற்றுகிறான்.தொழில் செய்கிறான்.பொருள் ஈட்டுகிறான்.பிறருக்கு தான தர்மங்கள் செய்கிறான்.பல்வேறு கடமைகளை மேற்கொள்கிறான்.காமத்தை அனுபவிக்கிறான்.உண்மையான அன்பு என்பது இங்கேதான் உதயமாகிறது.கிருகஸ்த ஆஸ்ரமம் என்பது வனப்பிரஸ்த ஆஸ்ரமத்திற்கு தேவையான பயிற்சிகளை மேற்கொள்ளும் ஒரு இடம்.
..
இல்லறத்தில் ஈட்டிய பொருள்,குழந்தைகள்,சொந்தங்கள் அனைத்தையும் துறந்துவிட்டு கானகம் நோக்கி செல்கிறான்.இங்கே கணவன் மனைவி இருவர் மட்டுமே இருக்கிறார்கள்.
இவர்களுக்குள் காமம் இல்லை.உண்மையான அன்பு என்பது காமத்தை கடந்த பிறகே ஏற்படுகிறது.
வானப்பிரஸ்த ஆஸ்ரமத்தில்தான் உண்மையில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே சரியான அன்பு ஏற்படுகிறது.
அந்த அன்பு அடுத்த கட்டமான சந்நியாசத்திற்கு அழைத்துசெல்கிறது.
அன்பே கடவுள் என்று நாம் கூறுகிறோம்.
அந்த அன்பை அடைவதற்காகத்தான் இந்த வாழ்க்கேயே இருக்கிறது.
ஒரு மனிதனிடம் முழுமையான அன்பு வெளிப்படும்போது இந்த உடல் மிகப்பெரும் தடையாக இருக்கிறது.அந்த அன்பில் நிலைத்திருக்கவேண்டுமானால் உடலைவிடுவதைத்தவிர வேறு வழியில்லை.
சந்நியாசம் என்பது உடலைவிடுவது.அது பழம் பழுத்து தானாக மரத்திலிருந்து கீழே விழுவதுபோன்றது.
..
பிரம்மச்சர்ய ஆஸ்ரமம்-அறம் பயிலும் இடம்
கிருஹஸ்த ஆஸ்ரமம்-பொருள் ஈட்டுவது.அதை செலவிடுவது
வனப்பிரஸ்தம்-இன்பம் அடையும்நிலை
சந்நியாசம்-வீடு அடையும் நிலை
..
காலம் மாறமாற இவைகளில் பல மாறுதல்கள் ஏற்பட்டன.

No comments:

Post a Comment

பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும்

  பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும் .. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. -திருக்குறள் ...