Sunday, 14 June 2020

இந்துமதம்-வகுப்பு-4

இந்துமதம்-வகுப்பு-4🕉️
நாள்--23-5-2020
..
4. ஆரியர்கள்
..
முற்காலத்தில் மக்கள் காடுகளில் வசித்தார்கள்.எங்கெல்லாம் மக்கள் வாழ்ந்தார்களோ அங்கெல்லாம் ஏதாவது ஒரு வழிபாடு நடந்துள்ளது.மதம் இல்லாத காலம் என்ற ஒன்று இல்லை.
காடுகளில் மனிதன் மிருகங்களை வேட்டையாடி வாழ்ந்த காலத்திலேயே மதம் இருந்திருக்கிறது.
முற்காலத்தில் பாரத கண்டம் முழுவதும் காடுகளால் நிறைந்திருந்தது.அந்த காடுளில் பல்வேறு மனிதர்கள் குழுக்களாக வாழ்ந்து வந்தார்கள்.
ஒவ்வொரு குழுக்களும் தங்களுக்கென்று தனியான வழிபாடுகளைக் கொண்டிருந்தது.
..
காடுகளிலிருந்து மனிதன் சமவெளியை நோக்கி பயணிக்கத் தொடங்கியபிறகு,
பல்வேறு குழுக்கள் ஒன்றிணைய ஆரம்பித்தன,வழிபாடுகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டன.
வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி சிந்து நதியை மையமாக வைத்து வாழ்ந்த மக்கள் இயற்றிய ரிக்வேதம்தான் காலத்தில் மிகவும் பழமையானது.
இவர்கள் தங்களை ஆரியர்கள்.அதாவது ஒளிபெற்றவர்கள்,பண்பட்டவர்கள் என்று அழைத்துக்கொண்டார்கள்.
..
பல்வேறு இனங்கள் ஒன்று சேர்ந்து புதிய இனம் உருவாகிறது.
இனங்கள் ஒன்று சேர்வதும்,ஒன்று சேர்ந்த இனங்கள் தனித்தனி குழுக்களாக பிரிந்து பல இடங்களுக்கு பயணிப்பதும்,தங்கள் கருத்துக்களை பிறரிடம் பரப்புவதும் தொடர்ந்து நடந்துவருகிறது.
வடஇந்தியாவில் அவ்வாறு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான இனம்தான் ஆரியஇனம்
..
நாம் எதற்கு ஆரியர்களைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்?
நமக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு? நாம் ஆரியர்களா?
..
நாம் அனைவரும் ஆரியஇனத்திலிருந்து வந்தவர்கள் என்று நம்பத்தேவையில்லை.
ஆனால் நாம் பின்பற்றி வரும் வேதவழக்கங்கள் ஆரிய இனத்திலிருந்து வந்தவை.
அதனால் அதைப்பற்றி தெரிந்துகொள்வது அவசியம்
ஆரியர்கள் உருவாவதற்கு முன்பும் சரி,அதற்கும் பிறகும் சரி இந்தியா முழுவதும் பல்வேறு இனமக்கள் இந்தியா முழுவதும் வாழ்ந்து வந்துள்ளார்கள்.
மகாபாரதத்தில் இந்தியா முழுவதும் வாழ்ந்த பல்வேறு இனமக்களைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.அதில் திராவிடநாடு இருப்பதைப்பற்றிய குறிப்புகளும் உள்ளது.தென்னிந்தியா முழுவதும் திராவிடநாடு என்று மகாபாரதம் கூறவில்லை. சோழம்,பாண்டியம்,சேரம்,கேரளம்,ஆந்திரம் போன்ற பல நாடுகளின் வரிசையில் திராவிடம் என்ற நாடு இருப்பதைப்பற்றி கூறுகிறது.(இந்துமதம்-வகுப்பு-2யை பார்க்கவும்)
..
ஆரியர்களைத்தவிர மற்றவர்கள் பண்படாத காட்டுவாசிகளாக வாழ்ந்து வந்தார்களா?
இல்லை.
எல்லா பகுதிகளிலும் மதங்கள் இருந்தன.வழிபாடுகள் இருந்தன
சிறுதெய்வ வழிபாடுகள்,குலதெய்வ வழிபாடுகள்,முன்னோர் வழிபாடுகள்,இயற்கை வழிபாடுகள் என்று பல வழிபாடுகள் இருந்துள்ளன.
ஆனால் மிக உயர்ந்த தத்துவங்கள் ஆரியர்களிடமிருந்தே மற்றவர்களுக்கு சென்று சேர்ந்தது.
ஆரியர்களுக்கு இந்த தத்துவங்கள் எங்கிருந்து கிடைத்தன?
தவத்தின் மூலம் இதனைப்பெற்றார்கள்.
..
ஆரியர்கள் இந்தியாவிற்கு வெளியே இருந்து வந்தார்களா?
..
வேத காலத்தில் ஒரு பிரம்மாண்டமான நதி ஓடியது; அதன் பெயர் சரஸ்வதி; உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதம் இதன் புகழ் பாடுகிறது.
ஆனால் மஹாபாரத காலத்திலேயே இது வற்றிச்சுருங்கி விட்டது.
..
சரஸ்வதி நதி பற்றி பாபா அணுசக்தி ஆராய்ச்சி (B A R C) நிலையம் கொடுத்த தகவல்கள் இந்திய வரலாற்றையே மாற்றிவிட்டது.
நாம் இது வரை சிந்துவெளி நாகரீகம் என்று அழைத்தது எல்லாம் தவறு அது,
வேத கால சரஸ்வதி நதி நாகரீகம் என்று விஞ்ஞான ஆராய்ச்சி நிரூபித்துவிட்டது!
-
ரிக் வேதம் 50 க்கும் மேலான இடங்களில் சரஸ்வதி நதியைக் குறிப்பிடுகிறது.
ரிக்வேதத்தில் நதி ஸ்துதி என்று ஆறுகளை போற்றித் துதிக்கும் அற்புதமான பாடல் ஒன்று உண்டு! இதில் கங்கா, யமுனா, சரஸ்வதி, சுதோத்ரி (சட்லெஜ்) ஆகியன போற்றப்படுகின்றன.
..
அந்த காலத்தில் சிந்து,கங்கை,யமுனை,சட்லெஜ் நதிகள் பாய்ந்த இடங்களில் எல்லாம் மக்கள் வசித்துள்ளார்கள்.
ஆகவே ஆரியர்கள் சரஸ்வதி நதி பாயும் இடம் மட்டும் அல்லாமல் கங்கை நதி ஓடிக்கொண்டிருந்த இடங்களிலும் வாழ்ந்துள்ளார்கள்.
..
இப்பேற்பட்ட சரஸ்வதி பாலைவனத்தில் மறைவது பற்றி மஹாபாரதமும் பேசுகிறது(வனபர்வம்)
..
(இந்தியாவின் முதல் அணுகுண்டு 1974லும் இரண்டாவது அணுகுண்டு 1998லும் வெடிக்கப்பட்டன)
1998 மே 11ல் பொக்ரானில் நாம் அணுகுண்டு வெடித்துச் சோதித்து உலகையே வியப்பில் ஆழ்த்திய போது,
அந்த அணுகுண்டு வெடிப்பினால் நிலத்தடி நீருக்கு என்ன நேர்ந்தது என்பதை ஆராய்வதில் பாபா அணுசக்தி ஆராய்ச்சி நிலையம் ஈடுபட்டது.
அப்போது 8000 முதல் 14000 ஆண்டுப் பழமையான குடிநீர் பூமியின் கீழ் மட்டத்தில் இருப்பதைக் கண்டறிந்தார்கள்.
இது தவிர மத்திய நிலத்தடி நீர் கமிஷன் 24 கிணறுகளை வெவ்வேறு இடத்தில் தோண்டி ஆராய்ந்ததில் 23 கிணறுகளின் நீர் தூய குடிநீர் என்றும் கண்டது.
இதிலிருந்து வரலாற்று நிபுணர்கள் கண்ட முடிவு:
கி.மு.6500 முதல் கி.மு3100க்கு இடைப்பட்ட காலம் ஹரப்பா நாகரீகம் .
அதற்கும் முந்தைய நாகரீகம் அதாவது 10,000ஆண்டுகளுக்கு முந்தைய நாகரீகம் சரஸ்வதி நதிதீர நாகரீகம் . அப்போதுதான் ரிக்வேதப் பாடல்கள் எழுந்தன.
பின்னர் அந்த நாகரீகம் படிப்படியாக அழிந்து பின்னர் சிந்துவெளி/ஹரப்பன் நாகரீகம் தோன்றியது.
-
ராஜஸ்தானிலுள்ள ஜைசால்மர் மாவட்ட விண்கல புகைப்படங்களை ஆராய்ந்தபோது சரஸ்வதி நதியின் மறைந்த தடயங்களில் சில பகுதிகள் தென்பட்டன.
இது பற்றி பாபா அணுசக்தி விஞ்ஞானிகள் CURRENT SCIENCE கரண்ட் சயன்ஸ் என்ற சஞ்சிகையில் எழுதினர். 1995ல் டாக்டர் எஸ்.எம் ராவ், டாக்டர் கே.எம்.குல்கர்னி ஆகியோர் ஐசடோப் பிரிவைச் (ISOTOPE DIVISION) சேர்ந்தவர்கள் . அவர்கள் நிலத்தடி நீரின் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன் ஐசடோப்புகளை ஆராய்ந்தனர்.
ரிக்வேதத்தில் சரஸ்வதி நதி பற்றிச் சொல்லப்பட்ட விஷயங்கள் உண்மை என்று அவர்கள் ஆய்வு முடிவுகள் காட்டின. இப்போது கங்கா நகர் மாவட்டத்திலுள்ள கக்கர் நதியின் வறண்ட நிலப்படுகைகள், பாகிஸ்தானிலுள்ள ஹக்ரா, நரா நதிகள் ஆகியன சரஸ்வதியின் ஒரு சில பகுதிகள். இன்னும் நிலத்தடியில் சரஸ்வதியின் நீர் உள்ளது கோடைகாலத்திலும் இந்த நீர், பயிர்கள் வளர உதவுகின்றன.
ஜைசாலமர் பகுதியில் மிகக்குறைந்த அளவு மழை பெய்தாலும் நிலத்துக்கு 50-60 மீட்டர் ஆழத்தில் தண்ணீர் கிடைக்கிறது. இவை எல்லாம் சரஸ்வதி நதியின் மிச்ச சொச்சங்களே என்றும் கண்டனர்.
..
நிலத்தடி நீர் சில ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதை ரேடியோ கார்பன் தேதிகள் நிர்ணயிக்கின்றன.
.
இந்தியாவிலிருந்து பாரசீக நாட்டுக்கு (ஈரான்) குடியேறிய ஜொராஸ்டரும் சரஸ்வதியைப் போற்றுகிறார்.
மனு தர்ம சாஸ்திரமும் இந்த நதியைப் புகழ்கிறது
சரஸ்வதிக்கும் த்ருஷத்வதிக்கும் இடைப்பட்ட பூமியே கடவுளால் உண்டாக்கப்பட்டது. இதுவே பிராமணர்கள் வாழுமிடம் (மனு 2-17-8)
.
ஆனால் வேத காலம் முடிவதற்கு முன்னரே சரஸ்வதி மறையத் துவங்கியதை பஞ்சவம்ச பிராமணம் தெளிவாகக் குறிப்பிடுகிறது
ராஜஸ்தானிலும் பாகிஸ்தானிலும் ஓடிய சரஸ்வதி பூகம்பத்தின் காரணமாக அழிந்துபோனது.பெரும் பகுதி பாலைவனங்களாக மாறிவிட்டன.
.
ஆரியர்கள் இந்தியாவிற்கு வெளியே இருந்து வரவில்லை என்பது தெளிவாகிறது.

No comments:

Post a Comment

பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும்

  பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும் .. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. -திருக்குறள் ...