Sunday, 14 June 2020

இந்துமதம்-வகுப்பு-16

இந்துமதம்-வகுப்பு-16🕉️
நாள்-6-6-2020
..
தமிழர் மதம் தோன்றிய வரலாறு
..
தமிழர் என்றொரு தனிஇனம் உண்டு என்று சிலர் தற்காலத்தில் பேசி வருகிறார்கள்.
இது முற்றிலும் தவறு.
பல நூறு இனங்கள் ஒன்று சேர்ந்து உருவானதுதான் தென்னிந்தியா.
அதிலும் ஒவ்வொரு இனத்தினருக்குத் தனிப்பட்ட மொழிகள் இருந்திருக்கின்றன.
பிற்காலத்தில் தமிழ் என்ற அடையாளத்தின் கீழ் அவைகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.
இன்று நாம் காணும் ஒவ்வொரு ஜாதியும் முற்காலத்தில் ஒவ்வொரு இனமாக இருந்தது.
ஒவ்வொரு இனத்தினருக்கும் தனிநாடு இருந்தது.
..
மகாபாரத காலத்தில் தென்னிந்தியாவில் இருந்த நாடுகளின் பெயர்களைப்பார்ப்போம்
..
திராவிடம், கேரளம், பிரச்யம், மூஷிகம், வனவாசிகம், கர்நாடகம், மஹிஷகம், விகல்பம், மூஷகம், ஜில்லிகம், குந்தலம், சௌன்ருதம், நளகானனம், கான்குட்டகம், சோழம், பாண்டியம்,ஆந்திரம்,மாலவயகம், சமங்கம், கனகம், குகுரம், அங்கார-மாரிஷம், திவஜினி, உத்ஸவம், ஸங்கேதம், திரிகர்த்தம், சால்வசேனம், வகம், கோகரகம், பாஷ்திரியம், லாமவேகவசம், விந்தியசுலிகம், புளிந்தம், வல்கலம், மாலவம், வல்லவம், அதிவல்லவம் {அபரவல்லவம்}, குளிந்தம், காலவம், குண்டௌகம், கரடம், மிருஷகம், தனபாலம், சனீயம், அளிதம், பாசிவாடம், தநயம், சுலன்யம், ரிஷிகம், விதர்ப்பம், காகம், தங்கணம், அதிதங்கணம் {அபரதங்கணம்} ஆகிய நாடுகள் இருக்கின்றன.
..
தற்காலத்தில் தென்னிந்தியா முழுவதும் திராவிடர்கள் வாழ்ந்ததாக சிலர் கூறுகிறார்கள்.
ஆனால் மகாபாரத காலத்தில் திராவிடநாடு என்பது சிறுபகுதிதான்.
ஒரு காலத்தில் தென்னிந்தியா முழுவதும் காடுகளால் சூழ்ந்த பகுதிகளாக இருந்தது.
ஒவ்வொரு காட்டிலும் தனித்தனி இனங்கள் வாழ்ந்தது.அவர்களின் எண்ணிக்கை சிலநூறாக இருந்திருக்கலாம்.ஆனால் அவர்களுக்கென்று தனி வழிபாடு,தனி மொழி.தனி கலாச்சாரம் இருந்தது.
ஒவ்வொரு இனத்திற்கும் ஒரு பெயர் உண்டு.தற்காலத்தில் அதையே நாம் ஜாதி என்று குறிப்பிடுகிறோம்
..
இனங்களுக்கு இடையே ஏற்படும் சண்டையின் காரணமாக நாடுகள் விரிவுபடுத்தப்படுகின்றன.
சில இனங்கள் ஆளும் இனங்களாகவும் சில இனங்கள் அடிமை இனங்களாகவும் மாறுகின்றன.
மொழிகள் ஒன்று கலக்கின்றன.வழிபாடுகள் ஒன்றுகலக்கின்றன.
இதிலிருந்து புதிய மொழிகள் உருவாகின்றன.
மிகப்பழங்காலத்தில் தென்னிந்தியாவில் உருவான மொழி தமிழ்.
ஆனால் இது தனியாக சிலர் அமர்ந்து சிந்தித்து உருவாக்கிய மொழி அல்ல.
பல இனத்தினரின் மொழிகள் ஒன்று கலந்து உருவானது.
ஆதிகால தமிழ் மொழிக்கு எழுத்துக்கள் இல்லை.
...
ஒவ்வொரு இனத்தினருக்கும் தனித்தனி வழிபாடுகள் இருந்திருக்கின்றன.
இதுபற்றி ஆராய்வோம்..
.
தற்காலத்தில் சுடலைமாடன்,மாரியம்மா,பேச்சியம்மா,முனி,ஐயனார் என்ற பெயரில் ஒவ்வொரு ஊர்களிலும் கோவில்கள் இருப்பதை பார்க்கிறோம்.
இந்த பெயர்கள் அனைத்தும் பொதுப்பெயர்கள்.
ஒரு ஊரில் உள்ள சுடலைமாடன் தெய்வத்திற்கும் இன்னொரு ஊரில் உள்ள சுடலைமாடன் தெய்வத்திற்கும் தொடர்பு இருக்காது.
சுடலை என்றால் சுடுகாடு- மாடன் என்றால் தலைவன்.
முற்காலத்தில் அல்ப ஆயுளில் இறந்துபோனவர்கள் பேயாக மாறி ஊரில் உள்ளவர்களை துன்புறுத்துவார்கள்.
இதை தடுப்பதற்காக சுடுகாட்டில் அமைந்திருக்கும் தெய்வம் சுடலைமாடன்.
இந்த சுடலைமாடன் என்பது ஒரு பொதுப்பெயர். இது ஒரு பதவி.
பேயாக அலைந்துகொண்டிருப்பவர்களை ஊருக்குள் செல்லவிடாமல் தடுத்து சுடுகாட்டு பகுதிக்குள்ளே கட்டுப்படுத்தி வைப்பதுதான் சுடலைமாடனின் முக்கிய வேலை.
..
ஒவ்வொரு ஊரிலும் தலைவர் பொறுப்பில் இருந்து,மக்களால் போற்றப்படுபவர்கள் இறந்தபிறகு சுடலைமாடன் பொறுப்பிற்கு வருகிறார்கள். ஒரு சுடலைமாடன் பதவியில் இருப்பவர் வினையின் காலம் முடிந்த பிறகு அவர் மனிதனாக பிறக்கிறார்,இன்னொருவர் அந்த பொறுப்பிற்கு வருகிறார்.
ஒவ்வொரு ஊரிலும் உள்ள சுடலைமாடன் வேறுவேறு.
கோவிலில் திருவிழா காலகட்டத்தில் சாமி ஆடிகள் என்று சிலர் இருப்பார்கள்.
சுடலைமாடன் ஆவி அவர்கள் மீது ஏறி குறி சொல்வார்கள்.
ஒவ்வொரு ஊரிலும் இதேபோன்ற நிகழ்வுகள் நடக்கும்.
ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஊரில் நடந்த நிகழ்வுகளைப்பற்றி கேட்டுப்பார்த்தால் அவர்களால் சொல்ல முடியாது.ஆனால் சமீக காலங்களில் நடந்த நிகழ்வுகளைக்கூட முடியும். ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சுடலைமாடன் வேறு தற்போது பொறுப்பில் உள்ள சுடலைமாடன் வேறு.
..
சுடலைமாடனுக்கென்று சில கதைகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
இந்த கதைக்கும் ஊரில் வழிபடும் சுடலைமாடனுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
..
இது தவிர ஒவ்வொரு ஊரிலும் பேச்சியம்மா,மாரியம்மா என்ற பெயரில் பல கோவில்கள் இருக்கும்.
இவர்கள் ஒரு காலத்தில் குடும்ப தெய்வங்களாக இருந்து பிறகு ஊர்தெய்வங்களாக வளர்ச்சியடைந்தவர்கள்.
அந்த காலத்தில் வாழ்ந்த மாவீரர்களுக்கு கோவில் அமைப்பதுண்டு.
எல்லை காக்கும் வீரர்களுக்கு கோவில் அமைப்பதுண்டு.
இப்படி ஆதிகாலத்திலேயே ஒரே பெயரில் பல தெய்வ வழிபாடுகள் இங்கே இருந்திருக்கின்றன.
..
இந்த சிறு தெய்வங்கள் படிப்படியாக வளர்ச்சியடைந்து பெரும் தெய்வமாக மாறுவதுண்டு.
உதாரணமாக இரண்டு இனங்களுக்கு இடையே போர் நிகழும்போது, வெற்றி பெறும் இனத்தவருடைய தெய்வம் அனைவருக்குமான தெய்வமாக மாறுகிறது.
..
சிறுசிறு இனங்கள்.அவர்களுக்கென்று வழிபாடுகள்.அவர்களை ஆட்சி செய்யும் அரசன் இது ஒரு காலத்தில் இருந்தது.
பின்பு இந்த இனங்கள் படிப்படியாக ஒன்று சேர்ந்து சிறுசிறு தேசங்களாக மாறின.
அரசர்கள் இறந்தபிறகு அவரை வழிபடுவதற்கு பெரிய கோவில்கள் கட்டப்பட்டன.
கோவிலின் கீழ் பகுதியில் அரசரது உடல் புதைக்கப்பட்டது.
...
உலகத்திலிருந்து விடுபட்டு தனிமையில் வாழ்ந்து ஞானத்தை பெற்ற சித்தர்களும்,வரை பின்பற்றிய சீடர்களும் அந்த காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள்.
..
மிகப்பழங்காலத்தில் தென்னிந்தியாவில் வாழ்ந்த மக்களின் வழிபாடுகள்
..
1.குலதெய்வம்,சிறுதெய்வம்,ஊர்தெய்வம்,காவல்தெய்வம் போன்ற வழிபாடுகள்
2.அரசன் இறந்தபிறகு அவனை தெய்வமாக கருதி வணங்கும் வழிபாடுகள்
3.சித்தர்களை குருவாக வழிபடுபவர்கள்.சித்தர்களின் ஞான உபதேசங்களை பின்பற்றியவர்கள்.
..
மகாபாரத காலத்திற்கு முன்பே தென்னிந்தியர்களுக்கும் வடஇந்தியர்களுக்கும் இடையே பல தொடர்புகள் இருந்திருக்கின்றன.
இங்குள்ள பாண்டிய மன்னன் மகாபாரதபோரில் பாண்டவர்களுக்கு ஆதரவாக கலந்துகொண்டதைப்பற்றி மகாபாரதம் விரிவாகப்பேசுகிறது.
அதேபோல பாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்டபோது தென்னிந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள்.
கன்னியாகுமரி ஒரு புனித இடமாக மகாபாரதகாலத்திலேயே கருதப்பட்டுள்ளது.
இராமேஸ்வரம் ஒரு புனித இடமாக கருதப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல தென்னிந்தியாவின் பல நதிகளை, புனித நதிகள் என்று மகாபாரதம் கூறுகிறது.
வடஇந்தியர்கள் தென்னிந்தியாவிற்கு புனித பயணம் வருவதும், தென்னிந்தியவர்கள் வட இந்தியாவிற்கு புனிதப்பயணம் மேற்கொள்வதும் மகாபாரத காலத்திற்கு முன்பே நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
அத்துடன் இரண்டு பேருக்கும் இடையே வணிகத்தொடர்பும் இருந்துள்ளது.
...
இந்த காலத்தில் ஆரிய இனத்தின் மதங்கள்
தென்னிந்தியாவில் பரவ ஆரம்பித்தன.

No comments:

Post a Comment