சுவாமி விவேகானந்தரின்
விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-21
🌸
சுவாமிஜியின்
டெட்ராய்ட் நாட்கள் எதிர்ப்பு அலைகளைச் சமாளிப்பதிலேயே கழிந்தாலும் சில நல்ல உள்ளங்களை
அவருடன் இணைக்கவும் செய்தது. அவர்களில் முக்கியமானவர் மிஸ் கிறிஸ்டைன் கிரீன்ஸ்மிடல்( பின்னாளில்
சிஸ்டர் கிறிஸ்டைன்). சுவாமிஜியுடன் இவரது தொடர்பு ஒரு தந்தை –மகள் உறவாக என்றென்றும்
நீடித்தது. பின்னாளில் இவர் சகோதரி நிவேதிதையின் இந்தியப்பணியில் இணைந்து செயலாற்றவும்
செய்தார். மற்றொருவர் மிசஸ் மேரி ஃபங்கே. இவரும் பின்னாளில் சுவாமிஜியின் நெருங்கிய
சிஷ்யைகளுள் ஒருவர் ஆனார்.
சுவாமிஜி
தமது சொற்பொழிவுகளுக்காக ஒரு லெக்சர் பீரோவுடன் மூன்று வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்து
கொண்டார் அல்லவா! அவர்களது அளவுக்கு மீறிய தலையீட்டின் காரணமாக ஒப்பந்தக்காலம் முடியும்
முன்பே அவர் அதனை விட்டு விலக நேர்ந்தது. அவர்கள் ஏற்பாடு செய்கின்ற நிகழ்ச்சிகளில்
மட்டுமே சுவாமிஜி கலந்து கொள்ள முடியும் என்பது ஒரு பக்கம். வேறு யாராவது அழைத்து,
சுவாமிஜி சென்றால் அங்கே கிடைக்கின்ற பணத்திலும் லெக்சர் பீரோவினர் உரிமை கொண்டாடினர்.
ஊர் ஊராகச்சென்று சர்க்கஸ் நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் விளம்பரம் செய்வது போல் தம்மை
அவர்கள் விளம்பரப்படுத்தியதும் சுவாமிஜிக்குப் பிடிக்கவில்லை.
எளிய மனம்
படைத்த சுவாமிஜியை அவர்கள் பயங்கரமாக ஏமாற்றவும்
செய்தனர். இவை அனைத்தின் காரணமாக சுவாமிஜி அவர்களை விட்டு விலக நேர்ந்தது. அவர்கள்
ஏற்பாடு செய்கின்ற நிகழ்ச்சிகளில் மட்டுமே சுவாமிஜி கலந்துகொள்ள முடியும் என்பது ஒரு
பக்கம். வேறு யாராவது அழைத்து சுவாமிஜி சென்றால் அங்கே கிடைக்கின்ற பணத்திலும் லெக்சர் பீரோவினர் உரிமை
கொண்டாடினர். ஊர்ஊராகச்சென்று சர்க்கஸ் நிகழ்ச்சிகளை நடத்துவபர்கள் விளம்பரம்
செய்வது போல் தம்மை அவர்கள் விளம்பரப்படுத்தியதும் சுவாமிஜிக்குப் பிடிக்கவில்லை.
எளிய மனம்
படைத்த சுவாமிஜியை அவர்கள் பயங்கரமாக ஏமாற்றவும் செய்தனர். இவை அனைத்தின் காரணமாக சுவாமிஜி
அவர்களைவிட்டு விலக நேர்ந்தது. டெட்ராய்ட் சொற்பொழிவிற்காக 900 டாலர், அதாவது
2,700 ரூபாய் கிடைத்தது. வேறு சொற்பொழிவுகளில் ஒரு மணிநேரத்திற்கு, 2,500 டாலர் அதாவது
7, 500 ரூபாய் சம்பாதித்தேன். ஆனால் என் கைக்கு வந்தது 200 டாலர் தான். ஒரு மோசமான
லெக்சர் பீரோ என்னை ஏமாற்றிவிட்டது. நான் அவர்களின் சேர்க்கையை உதறிவிட்டேன். என்று
ஜுலை 11-ஆம் நாள் அளசிங்கருக்கு எழுதினார் சுவாமிஜி.
ஏற்கனவே லைக்சர் பீரோவின் ஒப்பந்தத்தில் கையெழுத்து
இட்டதால் அதிலிருந்து விடுபட முடியாது என்று தான் சுவாமிஜி எண்ணினார். இது அவருக்குச்
சற்று கலக்கத்தை அளிக்கவே செய்தது. அந்தநேரத்தில் துணைக்குவந்தார் பாமர். இவர் வழக்கறிஞர்களைச்
சந்தித்து, மிகுந்த முயற்சிகள் செய்து சுவாமிஜி அந்த பீரோவிலிருந்து விடுபடுவதற்கு
வேண்டியவற்றைச் செய்தார்.
நானே சிவன்” என்கிறேன்!
ஜுலை
26-இல் கிரீனேக்கர் சென்றார் சுவாமிஜி. கிரீனேக்கர் நாட்கள் அவருக்கு ஒரு புதிய அனுபவமாக
இருந்தது. பரந்த மனப்பான்மை உடைய சிலர்சேர்ந்து அங்கே மத அமைப்பு ஒன்றை ஏற்படுத்தியிருந்தனர்.
பல மதத்தினரின் சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்தனர். இதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர்
மிஸ் சாரா ஃபர்மர். அவர் சுவாமிஜியை நியூயார்க்கில் சந்தித்திருந்தார். சுவாமிஜியை
கிரீனேக்கருக்கு அழைத்தார் அவர்.
அடர்ந்த
காடு, அழகிய நதியின் கரை- சுவாமிஜி அங்கே தங்கினார். இமயத்தின் அடர்ந்த காடுகளிலும்
கங்கைக் கரையிலும் வாழத்துடிக்கின்ற சுவாமிஜிக்கு அத்தகையதொரு சூழ்நிலை அமெரிக்காவில்
கிடைத்தது மனத்திற்கு மிகவும் இதமாக இருந்தது.
பண்டைய குருகுலப் பாணியில் அவர் ஒரு பைன் மரத்தடியில் அமர்ந்து வகுப்பு நடத்தினார்.
இந்திய ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட ஆண்களும் பெண்களும் அவரைச்சுற்றி அமர்ந்து பாடம்
கேட்டனர். நான் தினமும் காலையில் ஒரு பைன் மரத்தடியில் இந்து முறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது வழக்கம்.........
ஒரு வருடமாக மிருகம்போல் வாழ்ந்த வாழ்க்கைக்குப் பிறகு , தரையில் உறங்குவதும், காட்டில்
மரத்தின் கீழே தியானம் செய்வதும்! முகாமில் கலந்து கொண்டவர்கள் தூயவர்கள், ஆரோக்கியமும்
வாலிபமும் உண்மை மனமும் உடையவர்கள். நான் அவர்களுக்கு ”நானே சிவன், நானே சிவன் (சிவோஹம்,
சிவோஹம்) என்பதைக் கற்பிக்கிறேன்.
எல்லோரும்
அதை ஜபிக்கின்றனர். அவர்கள் தூயவர்கள், எளியவர்களாக இருப்பதால் அளவற்றதைரியம் உடையவர்களாக
இருக்கின்றனர். எனவே நானும் மகிழ்ச்சியாகவும் பெருமையுடனும் உள்ளேன் என்று எழுதுகிறார்
சுவாமிஜி. இந்த பைன் மரம் பின்னாளில் ”சுவாமிஜியின் பைன்” என்று அழைக்கப் படலாயிற்று. அங்கே முக்கியமான அவதூத கீதை,
ராஜ யோகம் ஆகியவற்றைக் கற்பித்தார் அவர். சுமார் இரண்டு வாரங்கள் கிரீனேக்கரில் தங்கினார்
சுவாமிஜி. சொற்பொழிவு, வகுப்புகள், பிக்னிக், என்று காலம் வேகமாகப் பறக்கிறது” என்று எழுதுகிறார் அவர்.
அவருக்குக்
கட்டாயமாக ஓய்வு தேவைப்பட்டது. கிரீனேக்கரில் ஒரு நாளுக்கு 7முதல் 8மணி நேரம் வரை பேச
வேண்டியிருந்தது. ஓய்வு என்று சொல்ல வேண்டுமானால்
அதைத்தான் சொல்ல வேண்டும். ஆனால் இறைவன் அதனுடன் புத்துணர்ச்சியையும் உத்வேகத்தையும்
கொடுக்கவே செய்கிறார் என்று எழுதுகிறார் சுவாமிஜி. ஆனால் இந்த நாட்கள் அவரது மனத்திற்கு
மிகுந்த இதத்தை அளித்தன என்பது உண்மை. இந்த நாட்களை அவர் ”விண்ணுலகச் சூழ்நிலை” என்று குறிப்பிடுகிறார். மரங்களின் அடியில் உறங்கி , வசித்து,
போதித்ததையும் , ஒரு சில நாட்களாவது மீண்டும் விண்ணுலகச் சூழ்நிலையில் இருந்ததைப்பற்றியும்
என்று இந்த நாட்களை அவர் குறிப்பிடுகிறார்.
மனத்திற்கு
ஓய்வை அளித்ததுடன் கிரீனேக்கர் நாட்கள் சுவாமிஜியின் வாழ்க்கையில் முக்கியப் பங்கு
வகிக்க இருந்த ஒருவரையும் அவருக்கு அறிமுகப்படுத்தியது. அவர் மிசஸ் சாரா புல். டாக்டர்
லூயி ஜி. ஜேன்ஸ் அங்கே சுவாமிஜியைச் சந்தித்த முக்கியமான மற்றொருவர்.
கிரீனேக்கர்
நாட்கள் சுவாமிஜியின் பணித்திட்டத்திற்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
தமது சொற்பொழிவுகளால்
கவரப்பட்டு, தம்மை அணுகுபவர்களில் ஒரு சிலராவது வாழ்க்கையில் ஆன்மீக லட்சியத்தை அடைய
வேண்டும் என்பதில் சுவாமிஜி மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் ஆன்மீக முன்னேற்றம்
என்பதுசொற்பொழிவுகளாலோ, சொற்பொழிவுகளைக்கேட்பதாலோ, அறிவின் ஆற்றலாலோ அடையப்படுவது அல்ல
என்பதை நமது உபநிஷதங்கள் தெளிவான மொழியில் உறுதியாக எடுத்துரைக்கின்றன. அதற்கு தகுந்த
குருவின் உபதேசம்வேண்டும். அவர் காட்டுகின்ற
வழியில் தொடர்ந்து ஆன்மீக சாதனைகள் செய்யவேண்டும். இந்த வகையில் ஒருவருக்காவது உதவ
முடியுமானால் என் வாழ்க்கை பயனுள்ளது என்று உறுதி கொள்வேன்” என்று கருதினார் சுவாமிஜி
இந்த நோக்கத்துடன் செயல்பட எண்ணினார் சுவாமிஜி. இதற்குள்
சுமார் ஒன்றரை வருடங்கள் சுவாமிஜியின் மேலை நாட்டு வாழ்க்கை கழிந்திருந்தது. நியூயார்க்,
சிகாகோ,ப்ரூக்லின் என்று மாறிமாறி பம்பரமாகச் சுழன்ற அவர் மீண்டும் 1894 டிசம்பர்
26-ஆம் நாள் மீண்டும் நியூயார்க்கை அடைந்தார். தமது புதிய திட்டத்தின்படி வகுப்புகள்
தொடங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். சிகாகோவில் ஹேல் குடும்பம் அவருக்கு இடமளித்தது
போல் நியூயார்க்கில் கர்ன்சி தம்பதிகள் சுவாமிஜியிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டு தங்கள் வீட்டில் அவரைத் தங்கச் செய்தனர். பொதுவாக
சுவாமிஜி நியூயார்க்கில் அவர்களுடைய வீட்டைத்தமது முக்கிய இடமாகக்கொண்டனர்.
சூறாவளிபோல்
சுழன்று சொற்பொழிவுகள் செய்வதும் பணம் பெறுவதும் ஏற்புடைய வாழ்க்கையாக அவருக்குத்தோன்றவில்லை.
சென்ற ஆண்டில்
நான் இந்த நாட்டில் மேடைச்சொற்பொழிவு என்ற வகையில் மிகவும் வேலை செய்தேன். எனக்குப்
பாராட்டுக்களும் அதிகமாகக் கிடைத்தன. ஆனால் அதன்மூலமாக, எனக்காக மட்டுமே நான் உழைத்தேன் என்பதைக்கண்டு கொண்டேன். நற்பண்புகளைப்
பொறுமையாக வளர்த்துக்கொள்வதும், உண்மைப்பொருளை அறிய தீவிரமாகப்போராடுவதுமே எதிர்கால
மனித இனத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்த முடியும். எனவே சிலஆண்களையும் பெண்களையும்
செயல்முறை அத்வைத அறிவு பெறுவதற்கு வேண்டிய பயிற்சியளித்து ஆயத்தப்படுத்துகின்ற முறையில்
இந்த ஆண்டு வேலை செய்ய எண்ணியுள்ளேன்” என்று தம் நோக்கத்தை எழுதுகிறார்
சுவாமிஜி.
இத்தகைய நோக்கத்திற்கு மற்றொரு காரணமும் இருந்தது.
இந்தக் காரணம் அவ்வளவு வெளிப்படையாகத்தெரியவில்லை. ஆனால் இந்தக் காரணம் இருந்தது உறுதி.தமக்குப்
பிறகு அமெரிக்காவில் தமது பணியைத் தொடர்வதற்குச்சிலரை உருவாக்குவதும் அவரது நோக்கமாக இருந்தது. இந்தச்
செய்தியை இந்தியாவில் இந்தியர்களும், அமெரிக்காவில் அமெரிக்கர்களும் போதிக்க வேண்டும்
என்று கூறினார் அவர்” என்று எழுதுகிறார் சிஸ்டர் கிறிஸ்டைன்.
ஏற்கனவே கிரீனேக்கரில் இத்தகைய முயற்சியை அவர் ஆரம்பித்திருந்தார்..
மிசஸ் சாராவின் வீட்டிலும் சென்ற அக்டோபரில்
இத்தகைய வகுப்புகளை நடத்தியிருந்தார். இதே நோக்கத்தில் தான் 1894 நவம்பரில் அவர் ”வேதாந்த சொசைட்டி என்ற அமைப்பையும் நியூயார்க்கில்
ஏற்படுத்தினார்.
1895 ஜனவரியில் இந்த வகுப்புகளுக்காக சுவாமிஜி இரண்டு
அறைகளை வாடகைக்கு அமர்த்தினார். சென்ற ஆண்டு நியூயார்க்கில் அவரைச் சந்தித்த லியான்
ரான்ட்ஸ் பர்க் இதற்கான உதவிகளைச்செய்தார். சொற்பொழிவுகளைக் கைவிட்டதால் பணத்திற்கு
சுவாமிஜி சிரமப்படவே நேர்ந்தது. இருப்பினும் இந்த வாழ்க்கையை அவர் விரும்பினார். நான்
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், லான்ட்ஸ்பர்க்கும் நானுமாகச்சிறிது அரிசியும் பருப்பும்,
அல்லது பார்லி என்றுசமையல் செய்து அமைதியாக அதை உண்டு விட்டு, ஏதாவது எழுதுவதிலோ, வாசிப்பதிலோ,
ஏதோ சிறிது விஷயம் தெரிந்து கொள்ள விரும்பி
வருகின்ற ஏழை மக்களை வரவேற்றுப்பேசுவதிலோ காலம் கழிக்கிறோம். நான் இதுவரை அமெரிக்காவில்
இருந்ததைவிட இப்போது என்னை அதிக அளவில் ஒரு துறவியாக உணர்கிறேன் என்று எழுதுகிறார்
அவர்.
சுவாமிஜியின்
வாழ்க்கையில் முக்கிய இடம் பெற்ற சிலர் இந்த வகுப்புகளின் மூலம் தான் அவருக்கு அறிமுகமாயினர்.
மெக்லவுட் சகோதரிகள், மிஸ் லாரா க்ளென்(பின்னாளில் சகோதரி தேவமாதா), மிஸ் எஸ். இ. வால்டோ
(பின்னாளில் சகோதரி ஹரிதாஸி) ஆகியோர் அவர்களில் சிலர்..-
ஆரம்ப நாட்களில்
சுவாமிஜி வாழ்ந்த சிறிய அறையில் வகுப்புகள் நடைபெற்றன. வகுப்புகளுக்கு வந்தவர்கள் வெறும்
3 பேர்தான். ஆனால் அந்த எண்ணிக்கை பிரமிப்பூட்டும் விதமாக வளர்ந்தது. இந்த வகுப்புகளின்போது
சுவாமிஜியும் பார்வையாளர்களும் தரையில் தான் அமர்ந்தனர். லட்சாதிபதிகள் அவரது பாதங்களில்
அமர்ந்து அவரது பேச்சைக்கேட்டனர். இந்த வகுப்புகளுக்குக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்
படவில்லை. விளைவு? கையில் தம்பிடிக் காசு இல்லாமல் போன நாட்களும் உண்டு. எனவே அவ்வப்போது கட்டணத்திற்காகவும் சொற்பொழிவுகள்
நிகழ்த்தினார் சுவாமிஜி.
பணத்திற்காகச் சிரமப்படுகின்ற இந்த நேரங்களில் சிலர்
சுவாமிஜிக்கு உதவ வருவதுண்டு. ஆனால் அவர்கள், இன்ன இடத்தில் வகுப்புகள் நடக்க வேண்டும், இன்னவர்களைத்தான் அழைக்கவேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகள்
விதித்தபோது சுவாமிஜி அவர்களிடமிருந்து விலகி விட்டார்.
இங்கும் சவாமிஜிக்குத்தொந்தரவுகள் தொடரவே செய்தன.
இங்கே தொல்லை கொடுத்தவர்கள் ஆவியுலக தொடர்பாளர்கள். சுவாமிஜி யால் எங்கே தங்கள் பிழைப்புக் கெட்டுப்போகுமோ என்று கருதிய
அவர்கள் சுவாமிஜி தங்கியிருந்த வீட்டிற்கு வந்து, வகுப்புகளை நிறுத்துமாறு வாசலில்
நின்று கூச்சலிட்டனர். நிறுத்தாவிட்டால் பலவந்தமாகத் தாங்களே நிறுத்தநேரும் என்றும்
பயமுறுத்தினர்.
பொருளற்ற
சில கொள்கைகளையும், அறிவுக்குப்பொருந்தாத சில கோட்பாடுகளையும் அவர்கள் போதித்து வந்தனர்.
ஆவிகளுடன் தொடர்பு கொண்டு சில சித்து வேலைகளில் ஈடுபடுவது அவர்களின் நோக்கமாக இருந்தது.
இத்தகைய சிலவற்றைக்காட்டி அவர்கள் மக்களைத்தங்கள் பால்ஈர்த்தனர்.
தங்கள் கூட்டத்தில் ஒருவரைச்சேர்க்க 25 முதல் 100 டாலர் வரை கட்டணம்
வசூலித்தனர். அவர்களின் வளர்ச்சிக்கும் ஏமாற்று வேலைகளுக்கும் இடையூறாக சுவாமிஜி வந்தபோது
அவர்கள் கொதித்தனர்.
அடுத்தக்
கட்டமாக, அவர்கள் சுவாமிஜியைத் தங்கள் கூட்டத்தில் சேருமாறு வற்பறுத்தினர். சேராவிட்டால் அடித்து உதைப்பதாக மிரட்டினர்.ஆனால் சுவாமிஜி, விலைக்கு
வாங்க முடியாத, பயப்படாத, துணிச்சல் என்பதன் மொத்த உருவமான ஒரு மனிதரை அவர்கள் முதன்
முதலாக அவரில் கண்டனர். நான் உண்மைக்காக வாழ்கிறேன்,
உண்மையைச் சார்ந்து வாழ்கிறேன், உண்மை ஒருபோதும் பொய்யுடன் கை கோர்க்காது. உலகனைத்தும்
எனக்கு எதிராகத் திரண்டாலும் நான் உண்மை வழியே தான் செல்வேன். இறுதியில் உண்மையே வெல்லும்” என்று அவர்களிடம்நேரடியாகவே கூறிவிட்டார் அவர்.
சுதந்திரச்
சிந்தனையாளர்களின் எதிர்ப்பு
சுவாமிஜியை எதிர்த்த மற்றொரு கூட்டத்தினர் சுதந்திரச்
சிந்தனையாளர்கள். நாத்திகர்கள், உலோகாயதவாதிகள், சந்தேக வாதிகள், பகுத்தறிவாளர்கள்,
மதங்களுக்கு எதிரானவர்கள், - இவர்களின் கூட்டம் அது. அவர்கள் ஒரு நாள் சுவாமிஜியை இரவு விருந்திற்கு அழைத்தனர். தங்கள் அறிவாலும்,
வாதத்திறமையாலும் சுவாமிஜியை தோற்கடித்துவிடலாம் என்று அவர்கள் மனப்பால் குடித்திருந்தனர்.
ஆனால் பாவம், அவர்களும் தோற்க நேர்ந்தது. பைபிள், குரான், பல்வேறு மதங்கள், விஞ்ஞானம்,
மன இயல் என்று சுவாமிஜியின் பரந்த அறிவிற்கு முன் அவர்களால் எதுவும் செய்ய இயலவில்லை.
அவர்கள் சுவாமிஜியுடன் அன்பாகப் பழகி நட்புடன் பிரிந்தனர்.
இதுபோல், விஞ்ஞானிகள் சிலரும் ஒரு முறை மாலை விருந்திற்கு
சுவாமிஜியை அழைத்தனர். அறிவுபூர்வமான தங்கள் கருத்துக்களைக்கூறி சுவாமிஜியைத் திணறடிப்பது அவர்களின் நோக்கம்.ஆனால் மற்ற இடங்களில் நடந்தது தான் இங்கும் நடந்தது. ஆன்மீகம்
என்ற வாளைக்கையில் சுழற்றியபடி அவர்களது வாதங்கள் அனைத்தையும் வீழ்த்தினார் சுவாமிஜி.
வாழ்க்கை, உயிர் போன்ற பல கேள்விகளுக்கு மேலை விஞ்ஞானம் பதில் கூற இயலாமல் திகைப்பதை
எடுத்துக் காட்டினார். விஞ்ஞான அறிவு என்பது ஒரு முழுமையான அறிவு அல்ல என்பதைத் தர்க்க
பூர்வமாக நிரூபித்தார். அன்று சுவாமிஜியை வாதத்தில் வெல்ல வந்தவர்கள் மறுநாளிலிருந்து
மாணவர்களாக அவரது பாதத்தில் அமர்ந்து பாடம் கேட்க வந்தனர்” என்று எழுதுகிறார் லான்ட்ஸ்பர்க்.
ஆரம்ப நாட்களில்
சுவாமிஜி வாழ்ந்த சிறிய அறையில் வகுப்புகள் நடைபெற்றன. வகுப்புகளுக்கு வந்தவர்கள் வெறும்
3 பேர்தான். ஆனால் அந்த எண்ணிக்கை பிரமிப்பூட்டும் விதமாக வளர்ந்தது. இந்த வகுப்புகளின்போது
சுவாமிஜியும் பார்வையாளர்களும் தரையில் தான் அமர்ந்தனர். லட்சாதிபதிகள் அவரது பாதங்களில்
அமர்ந்து அவரது பேச்சைக்கேட்டனர். இந்த வகுப்புகளுக்குக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்
படவில்லை. விளைவு? கையில் தம்பிடிக் காசு இல்லாமல் போன நாட்களும் உண்டு. எனவே அவ்வப்போது கட்டணத்திற்காகவும் சொற்பொழிவுகள்
நிகழ்த்தினார் சுவாமிஜி.
பணத்திற்காகச் சிரமப்படுகின்ற இந்த நேரங்களில் சிலர்
சுவாமிஜிக்கு உதவ வருவதுண்டு. ஆனால் அவர்கள், இன்ன இடத்தில் வகுப்புகள் நடக்க வேண்டும், இன்னவர்களைத்தான் அழைக்கவேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகள்
விதித்தபோது சுவாமிஜி அவர்களிடமிருந்து விலகி விட்டார்.
இங்கும் சவாமிஜிக்குத்தொந்தரவுகள் தொடரவே செய்தன.
இங்கே தொல்லை கொடுத்தவர்கள் ஆவியுலக தொடர்பாளர்கள். சுவாமிஜி யால் எங்கே தங்கள் பிழைப்புக் கெட்டுப்போகுமோ என்று கருதிய
அவர்கள் சுவாமிஜி தங்கியிருந்த வீட்டிற்கு வந்து, வகுப்புகளை நிறுத்துமாறு வாசலில்
நின்று கூச்சலிட்டனர். நிறுத்தாவிட்டால் பலவந்தமாகத் தாங்களே நிறுத்தநேரும் என்றும்
பயமுறுத்தினர்.
பொருளற்ற
சில கொள்கைகளையும், அறிவுக்குப்பொருந்தாத சில கோட்பாடுகளையும் அவர்கள் போதித்து வந்தனர்.
ஆவிகளுடன் தொடர்பு கொண்டு சில சித்து வேலைகளில் ஈடுபடுவது அவர்களின் நோக்கமாக இருந்தது.
இத்தகைய சிலவற்றைக்காட்டி அவர்கள் மக்களைத்தங்கள் பால்ஈர்த்தனர்.
தங்கள் கூட்டத்தில் ஒருவரைச்சேர்க்க 25 முதல் 100 டாலர் வரை கட்டணம்
வசூலித்தனர். அவர்களின் வளர்ச்சிக்கும் ஏமாற்று வேலைகளுக்கும் இடையூறாக சுவாமிஜி வந்தபோது
அவர்கள் கொதித்தனர்.
அடுத்தக்
கட்டமாக, அவர்கள் சுவாமிஜியைத் தங்கள் கூட்டத்தில் சேருமாறு வற்பறுத்தினர். சேராவிட்டால் அடித்து உதைப்பதாக மிரட்டினர்.ஆனால் சுவாமிஜி, விலைக்கு
வாங்க முடியாத, பயப்படாத, துணிச்சல் என்பதன் மொத்த உருவமான ஒரு மனிதரை அவர்கள் முதன்
முதலாக அவரில் கண்டனர். நான் உண்மைக்காக வாழ்கிறேன்,
உண்மையைச் சார்ந்து வாழ்கிறேன், உண்மை ஒருபோதும் பொய்யுடன் கை கோர்க்காது. உலகனைத்தும்
எனக்கு எதிராகத் திரண்டாலும் நான் உண்மை வழியே தான் செல்வேன். இறுதியில் உண்மையே வெல்லும்” என்று அவர்களிடம்நேரடியாகவே கூறிவிட்டார் அவர்.
தெய்வப்
பேருணர்வுச் சிறகுகள்
-
அலை ஓய்ந்து கடலில் நீராடுவது சாத்தியம் அல்ல. இந்த
உண்மையைமிகத்தெளிவாக அறிந்திருந்தார் சுவாமிஜி. தேர்ந்தெடுத்த சிலருக்குப் பயிற்சி
அளித்து அவர்களை உண்மையான ஆன்மீக வாழ்வில் ஈடுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் கிரீனேக்கர்
நாட்களிலிருந்தே சுவாமிஜியிடம் வலுப்பட்டிருந்தது. அதற்காகக் காத்திருந்து பயன் இல்லை
என்பதை உணர்ந்த அவர் எதிர்ப்பு அலைகளும், அவற்றை ச் சமாளிப்பதும் ஒரு பக்கம் நடந்து
கொண்டிருக்க, பேறு பெற்ற சிலரின் வாழ்வில் ஆன்மீகத் தீபத்தை ஏற்றி வைக்கலானார்.
தேர்ந்தெடுத்த சிலருக்கு தியானப் பயிற்சி அளித்தார்
சுவாமிஜி. ஆனால் தியானம் செய்வது எப்படி என்பதைக் கற்பிக்கும்போதே சிலவேளைகளில் ஆழ்ந்த
தியானத்தில் மூழ்கிவிடுவார். புறஉலக நினைவுகள் அனைத்தும் அவரிடமிருந்து மறைந்துவிடும்.
உடலுணர்வு சிறிதும் இன்றி ஒரு சிலைபோல் அமர்ந்திருப்பார். ஒருவேளை அவர் இறந்து விடுவாரோ
என்று அஞ்சிய சிலர் எழுந்து ஓடிவிட்ட நிகழ்ச்சிகளும் உண்டு. இப்படி வகுப்பு வேளையில்
தியானத்தில் ஆழ்ந்து விடுவதை அவர் விரும்பவில்லை. கற்பிக்கும்போது ஆசிரியராக இருக்க
வேண்டுமே தவிர யோகியாக ஆகக்கூடாது என்று அவர் நினைத்தார். ஆனால் அது அவரால் இயலாமல்
போயிற்று. ஒரு சிறு தூண்டுதல் கூட அவரை தியான ஆழங்களில் செலுத்திற்று.
இத்தகையநேரங்களில்
தம்மைப் புற உலக நினைவுகளுக்கு எப்படி மீட்டு வருவது என்பதை மிக நெருங்கிய சில சீடர்களிடம்
சுவாமிஜி கூறியும் இருந்தார்..-
கடவுள் வேடிக்கையானவர்-
தியான அனுபவங்கள் மட்டும் அல்ல, கடவுளுடன் அவர்பேசிக்
கலந்துறவாடிய சம்பவங்கள் கூட நடைபெற்றன. இந்த நாட்களில் சில காலம் அவர் ரிஜ்லிமேனர் என்ற வீட்டில் தங்கியிருந்தார். நகர்புறத்திலுள்ள
இந்த வீடு லெக்கட் என்பவருக்குச் சொந்தமானது. அங்கே அவருடன் மிஸ் மெக்லவுட், அவரது
சகோதரியான பெற்றி ஸ்டர்ஜஸ், பெற்றியின் பதினாறு வயது மகன் ஹாலிஸ்டர், பதினெட்டு வயது
மகள் ஆல்பெர்ட்டா, ஆகியோர் தங்கியிருந்தனர். சுவாமிஜி ஹாலிஸ்டரை மிகவும் நேசித்தார்.
இவனைவிட ஒரு பிரியமான இளைஞனை நான் கண்டதில்லை. என்பார் சுவாமிஜி. அது போலவே ஹாலிஸ்டரும்
பின்னாளில், விவேகானந்தரை விடச் சிறந்த ஒரு மனிதரை நான் என் வாழ்நாளில் கண்டதில்லை என்பார். அவர்கள் இருவருக்கும்
இடையே ஓர் அலாதியான அன்புப் பிணைப்பு நிலவியது.
ஒரு நாள்
சுவாமிஜி தமது அறைக்குள் இருந்தார். அந்த வழியாகச்
சென்று கொண்டிருந்தான் ஹாலிஸ்டர். திடீரென்று சுவாமிஜியின் அறைக்குள் இருந்து அலையலையாகச் சிரிப்புச் சத்தம் எழுந்தது. சுவாமிஜி
ஆனந்தமாகச் சிரித்துக் கொண்டிருந்தார். இடையிடையே அவர் யாருடனோ பேசுவது கேட்டது. சிறிது நேரத்திற்குப்
பிறகு அவர் வெளியே வந்தபோது ஹாலிஸ்டர் அவரிடம், சுவாமி, அறையில் நீங்கள் யாருடன் பேசிக்கொண்டிருந்தீர்கள்?
என்று கேட்டான். அதற்கு சுவாமிஜி, யாருடனும்
இல்லை. நான் அறையில் தனியாக தியானத்தில் அமர்ந்திருந்தேன்” என்றார். அப்படியானால்
சிரிப்புச் சத்தம் கேட்டதே! என்று சந்தேகத்துடன் கேட்டான் ஹாலிஸ்டர். ஒரு சிறிய
இடைவெளிக்குப் பிறகு சுவாமிஜி கூறினார். ஓ! அதுவா! கடவுள் இருக்கிறாரே, அவர் மிகவும்
வேடிக்கையானவர் என்றார். கடவுள் என்னும் மாபெரும்
சக்தியுடன் வேடிக்கை பேசி சிரிக்கும் அளவிற்குப்
பிரத்தியட்சமாக அவரைக் கண்டிருந்தார் சுவாமிஜி.
ஹாலிஸ்டரின் வாழ்வில் சுவாமிஜி ஏற்படுத்திய தாக்கம்
நிரந்தரமானதாக இருந்தது. பின்னாளில் ஹாலிஸ்டரின் மகன் ஒரு முறை தத்துவ விஷயங்களில் சந்தேகம் கேட்டபோது, இது பற்றியெல்லாம்
நான் அவ்வளவாகச் சிந்தித்தது கிடையாது. ஆனால் கடவுள் என்று ஒருவர் இருக்கிறார், அது
உண்மை. ஏனெனில் சுவாமிஜி அவ்வாறு கூறியுள்ளார்
என்றார் ஹாலிஸ்டர்.சுவாமிஜி மீது அவ்வளவு நம்பிக்கை
இருந்தது அவருக்கு!
சுவாமிஜியின்
மன ஆற்றலும் செயல்முறை அறிவும் ஹாலிஸ்டரை வெகுவாகக் கவர்ந்தன. சுவாமிஜியின் மன ஆற்றலை
விளக்குகின்ற அற்புதமான சம்பவமும், ரிஜ்லிமேனரில் ஒரு முறை நடந்தது. சுவாமிஜியும் ஹாலிஸ்டரும் புல்வெளி வழியாக நடந்து சென்றனர். அங்கே
லெக்கட்டிற்குச் சொந்தமான கோல்ஃப் மைதானம் இருந்தது.
-
கோல்ஃபும்
மன ஒருமைப்பாடும்-
-
சுவாமிஜி
கோல்ஃப் பற்றி அறியாதவர். எனவே மைதானத்தில் ஒரு கொடி பறந்ததைக் கண்டதும் ஹாலிஸ்டரிடம் அது பற்றி கேட்டார்.கோல்ஃப் விளையாட்டைப்
பற்றி விரிவாக விளக்கினான் ஹாலிஸ்டர். பிறகு,ஆரம்பத்தில் விளையாடுபவர்கள் அந்தக் கொடிக்குக்
கீழே உள்ள குழியில் பந்தைப்போடுவதற்கு 4, 7 அல்லது ஒன்பது அவகாசங்கள் தரப் படுகின்றன.
என்று கூறினான். உடனே சுவாமிஜி, நான் ஒரே தடவையில் குழியில் பந்தைப்போடுகிறேன்,வேண்டுமானால்
பந்தயம் கட்டலாம்” என்றார்.
சுவாமிஜி இது வரை கோல்ஃப் விளையாடாதவர். எனவே அவரால்
அது சாத்தியம் இல்லை என்று கருதினான் ஹாலிஸ்டர். எனவே, பந்தயத்திற்கு நான் தயார், நீங்கள்
ஒரே அடியில் பந்தைக் குழிக்குள் போட்டால் நான் உங்களுக்கு 50 சென்ட் தருகிறேன். போடா
விட்டால் நான் ஒரு டாலர் தருகிறேன், என்றார்
சுவாமிஜி. அப்போது அங்கே வந்த லெக்கட்டும் பந்தயத்தில் கலந்து கொண்டார். சுவாமிஜி பந்தைப்போட்டு
விட்டால் நான் 10 டாலர் தருகிறேன்” என்றார் அவர். சுவாமிஜி மட்டையைக்
கையில் எடுத்தார். சிறிது நேரம் கூர்மையாகக் கொடியைப் பார்த்தார். பிறகு வேகமாகப் பந்தைத்
தட்டினார். பந்து சரியாகச்சென்று குழியில் விழுந்தது.
எல்லோரும் திகைத்து நின்றனர். ஆமாம், சுவாமிஜி, நீங்கள்
இப்படி ஒரே அடியில் பந்தைக் குழிக்குள் போட்டது உங்கள் யோக சக்தியாலா? என்றுகேட்டார்
லெக்கட், அதற்கு சுவாமிஜி, இது போன்ற அற்ப விஷயங்களுக்கெல்லாம் நான் யோக ஆற்றலைப் பயன்படுத்துவதில்லை
என்றார். பிறகு விளக்கினார், நான் என்ன செய்தேன் என்பதை உங்களுக்கு இரண்டு வாக்கியங்களில்
சொல்கிறேன். முதலில் தூரத்தை என் கண்களால் அளந்து கொண்டேன். அத்துடன் என் கை வலிமை
எனக்குத்தெரியும். இரண்டாவதாக, இந்தப் பந்தயத்தில் ஜெயித்தால் எனக்குப் பத்தரை டாலர்
பணம் கிடைக்கும் என்பதை மனத்திற்குக் கூறினேன்.
பிறகு பந்தை அடித்தேன்.
சுவாமிஜியின்
மனஆற்றலும் செயல்முறை அறிவும் இந்த நிகழ்ச்சியில்
தெளிவாகப் புலப்படுகின்றன.அதே வேளையில் அவர் யோக ஆற்றல் வாய்ந்தவர் என்பதை அவருடன்
இருந்தவர்கள் அறிந்திருந்ததையும் நாம் காண
முடிகிறது.
-
நான்கு யோகங்கள்-
-
இந்த நாட்களில் பொதுவாக சுவாமிஜியின் சொற்பொழிவுகள் யோகம், வேதாந்தம் போன்றவை பற்றியவையாகத்
தான் இருந்தன. இந்த நாட்களில் தான் அவர் தமது மாபெரும் கொடையான, நான்கு யோகங்கள்” பற்றிய வகுப்புகளைத் தொடங்கினார். இன்று உலகெங்கும் பிரபலமாக
இருக்கின்ற ”நான்கு யோகங்கள்” கருத்து சுவாமிஜி முதன் முதலாக உலகிற்கு அளித்ததாகும்.
வெவ்வேறு பாதைகள் மூலம் நாம் ஒரே குறிக்கோளை
அடைய முடியும் என்பது வேதாந்த மதத்தின் மகத்தான
கருத்தாகும். இந்தப் பாதைகளை நான் பொதுவாக கர்மம், பக்தி, யோகம், ஞானம் என்று நான்காகப்
பிரித்திருக்கிறேன்.ஆனால் இந்தப் பிரிவுகள் துல்லியமாகக்கோடிட்டுப் பிரிக்கப் படாதவை.
ஒவ்வொன்றும் முற்றிலும் தனியானவை அல்ல, ஒன்றோடொன்று கலந்தவை என்பதை நினைவில் கொள்ள
வேண்டும். இந்தக் கலப்பில் எந்த அடையாளம் முக்கியமாகத் தென்படுகிறதோ, அதை வைத்து அந்தப்
பிரிவை அழைக்கிறோம். கர்மத்தைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாதவர்கள், பக்தியுடன் வழிபடுவதைத்
தவிர வேறெதையும் செய்ய முடியாதவர்கள், வெறும்
ஞானத்தைத் தவிர வேறெதுவும் அற்றவர்கள் என்று தனித்தனியாக யாரையும் நீங்கள் காண முடியாது.
எத்தகைய மனப்போக்கு, எந்த அடையாளம்ஒருவரிடம் சிறந்து விளங்குகிறதோ, அதற்கு ஏற்ப இந்தப் பிரிவுகள் வகுக்கப் பட்டுள்ளன. என்று
இது பற்றி எழுதுகிறார் சுவாமிஜி.
எங்களில் சிலர் சுவாமிஜியின் ஒரு வகுப்பைத் தவறவிடுவதில்லை. பக்தி யோகம், ஞானயோகம் ஆகிய வகுப்புகளைத் தொடர்ந்தோம். கூடவே ராஜயோகம்,
கர்ம யோகப் பாதைகளிலும் சஞ்சரித்தோம்.ஆகா, ஏன் நான்கு யோகங்கள் மட்டுமே உள்ளன! ஆறு
யோகங்கள், எட்டு யோகங்கள் என்று இருந்திருந்தால் இன்னும் அதிகமாக சுவாமிஜியின் சொற்பொழிவுகளைக்கேட்டிருக்கலாமே!என்று
எழுதுகிறார் லாரா‘!
ஓய்வை நாடி
-
1895 சுவாமிஜி மிகக் கடுமையாக உழைத்த ஆண்டாக இருந்தது.
எதிர்ப்புஅலைகளைச் சமாளிப்பது, மேடைச்சொற்பொழிவுகள், வகுப்புச் சொற்பொழிவுகள் பேட்டிகள், கேள்வி- பதில் நிகழ்ச்சிகள்
என்று இடையீடின்றித்தொடர்ந்தது அவரது வாழ்க்கை. சொற்பொழிவுகள் மூலம் பொதுமக்கள் கவனத்தைக் கவர்ந்தாகி விட்டது. இனி பத்துபேர் வந்தாலும்
போதும், அவர்களிடம் உண்மையாக ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தினால் போதும் என்ற ரீதியில்
அவர் செயல்படத் தொடங்கினார். என் சொற்பொழிவுகளுக்கு இன்னும் ஆயிரக் கணக்கானோரைத் திரளச்செய்ய
என்னால் முடியும். ஆனால் கூட்டத்தைக் கூட்டுவது என் நோக்கம் அல்ல. கூட்டங்கள் அல்ல,
உண்மையாக ஆன்மீக லட்சியத்தை அடையத் துடிக்கின்ற
ஒரு சிலரே எனது பணிக்கு வெற்றியைத் தர முடியும் என் வாழ்நாள் முழுவதும் முயற்சி செய்ததில்,
ஒரே ஒருவர் முக்திப் பாதையில் செல்வதற்கு நான் உதவ முடியுமானால் கூட எனது முயற்சி வீணாக
வில்லை, வெற்றி பெற்றேன் என்றே நான் கருதுவேன்” என்றார் அவர்.
சுவாமிஜியின்
உடல் ஓய்வை நாடித் துடித்தது. இந்த வருடம் வேலைப் பளு மிகவும் அதிகம் என்றே நினைக்கிறேன்.
ஏனெனில் மிகுந்த களைப்பை உணர்கிறேன். நல்ல ஓய்வு வேண்டுமென்று தோன்றுகிறது. உயிரைக்
கொடுத்து உழைத்தாயிற்று. எனது பணியில் உண்மையின் விதை ஏதாவது இருக்குமானால் காலப்போக்கில் அது முளைவிட்டே தீரும். எனவே எல்லா விஷயங்களிலும் நான் கவலையின்றியே இருக்கிறேன். சொற்பொழிவுகளிலும்,
வகுப்புகளிலும் எனக்கு வெறுப்பு உண்டாகிறது. இங்கிலாந்தில் ஒரு சில மாதங்கள் வேலைசெய்து
விட்டு, இந்தியா சென்று சில வருடங்களுக்கோ,
அல்லது நிரந்தரமாகவோ கட்டையைச் சாய்க்க வேண்டியது தான். வேலை செய்யாத சாது” வாக நான் இருந்ததில்லை, இதில் எனக்கு ச் சிறிதும் சந்தேகம்
கிடையாது. எழுதுவதற்கு ஒரு நோட்டு என்னிடம் உள்ளது. இது என்னுடன் உலகம் முழுவதையும்
சுற்றி வந்துள்ளது. ஏழு வருடங்களுக்கு முன்னால் அதில், எங்கேயாவது ஏகாந்தமான ஓர் இடத்தைத்தேர்ந்தெடுத்து
, மரணத்தை எதிர்நோக்கி கிடக்க வேண்டியது தான்” என்று நான் எழுதியிருப்பதைக் காண்கிறேன். ஆனால் இவ்வளவு கர்பத்தையும்
அனுபவிக்க வேண்டியிருக்கிறதே! இப்போது எனது கர்மம் தீர்ந்து விட்டது என்று நினைக்கிறேன்.
பிரச்சாரம் மற்றும் உலக நன்மை போன்ற பணிகளிலிருந்து இறைவன் எனக்கு ஓய்வு தந்து விடுவான்” என்று நம்புகிறேன். என்று எழுதுகிறார் சுவாமிஜி.
ஆனால் இறைவனின்
திட்டத்தை யார் புரிந்து கொள்வது! சுவாமிஜியின் உடலும் உள்ளமும் ஓய்வை நாடியது. ஆனால்
அவரை நாடி வந்ததோ மேலும் சுமைகள்! சுவாமிஜியின்
நியூயார்க் பணியில் மிகவும் உதவிய லான்ட்ஸ்பர்க் ஜுன் மாத இறுதியில் சென்றுவிட்டார்.
எனவே உதவிக்கு யாருமின்றி சுவாமிஜி தமது தேவைகளையும் சேர்த்து கவனித்து கொள்ள வேண்டியதாயிற்று.
வேறு எங்கோ வசிக்கின்ற எண்ணத்துடன் லான்ட்ஸ்பர்க்
போய்விட்டார். நான் தனியாக விடப் பட்டுள்ளேன்.
பெரும்பாலும் பழங்கள், கொட்டைகள், பால் இவற்றை உண்டு வாழ்கிறேன். இந்த உணவு மிக நல்லதாகவும் ஆரோக்கியமானதாகவும் படுகிறது. இந்தக்கோடையில்
30 முதல் 40 பவுண்டு வரை எடை குறைந்து விடுவேன்” என்று எழுதுகிறார் அவர்.
வகுப்பின் பொறுப்புகளும் சுவாமிஜியின் மீதே விழுந்தன. வருபவர்களின்
பெயர்களைக்குறித்து வைத்துக்கொள்வது, அவர்களுக்கு
விவரங்கள் தெரிவிப்பது போன்றவற்றையும் அவரே
செய்ய வேண்டியதாயிற்று. சில காலம் இதனை
மிஸ் ஹேம்லின் என்பவர் செய்து வந்தார். இப்போது சுவாமிஜி செய்தார், பெயர்களையெல்லாம் குறித்து வைத்துக் கொள்வதும், அறிவிப்புகள் அனுப்புவதும் பெரிய வேலை, சந்தேகமில்லை. எனக்காக இந்த வேலையைச்
செய்வதற்காக அந்த இருவருக்கும் மிகவும் நன்றி. ஆனால் இவ்வாறு பிறரைச் சார்ந்திருப்பது
எனது சோம்பலையே காட்டுகிறது. அது நல்வழிக்குப் புறம்பானது என்பது என் உள்ளத்தில் மிக நன்றாகப் படுகிறது. சோம்பலின் விளைவாக எப்போதுமே
வருவது தீமை தான். இனி இவற்றை யெல்லாம் நானே செய்து கொள்ள எண்ணியுள்ளேன். எனவே எதிர்காலத்தில்
யாரும் என் கவலைக்கான காரணம் ஆக மாட்டார்கள் என்று எழுதுகிறார் சுவாமிஜி.
மொத்தத்தில் நியூயார்க் பணி, நோக்கத்தைப் பொறுத்த வரை சுவாமிஜிக்கு
மிகுந்த வெற்றிகரமாக அமைந்தது.ஆனால் பணம் எதிர்பார்த்த
அளவு வரவில்லை. வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே
இருந்தாலும், கிடைக்கின்ற பணம் வாடகைச் செலவிற்கே போதியதாக இல்லை என்பதை வருத்தத்துடன்
கூற வேண்டியுள்ளது. இந்த வாரம் முயன்று பார்க்கிறேன்.பிறகு விட்டு விடுவேன் என்று எழுதுகிறார்
சுவாமிஜி. ஆனால் மாணவர்களின் ஆர்வம் காரணமாக சுவாமிஜியால் அந்த வகுப்புகளை விட்டுவிட
இயலவில்லை. அவர்கள் ஏழைகளாக இருந்தார்கள்.தேவையான பணத்தை அவர்களால் கொடுக்க இயலவில்லை.
இருப்பினும் அவர்களது ஆர்வத்தைக் கண்ட சுவாமிஜி வகுப்புகளைத் தொடர்ந்தார்.
-
பெர்சிமுகாம்
-
சுவாமிஜி
விரும்பியது போன்ற ஓய்வு கிடைக்கா விட்டாலும் சிறிது ஓய்வுஅவருக்குக் கிடைக்கவே செய்தது.
மிஸ் மெக்லவுடின் மூலம் சுவாமிஜிக்கு அறிமுகமானவர் பிரான்சிஸ் லெக்கட். அவர் ஆன்மீக
நாட்டம் உடையவர். சுவாமிஜியைக் கண்ட பிறகு அவரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டார். பெர்சி
என்ற இடத்தில் தமக்கு இருந்த முகாம் ஒன்றிற்கு அவர் சுவாமிஜியை அழைத்தார்.
1895 ஜுன் 7-ஆம் நாள் சுவாமிஜி பெர்சி முகாமை அடைந்தார். மிஸ் மெக்லவுட், அவரது சகோதரியான
பெற்றி ஸ்டர்ஜஸ் ஆகியோரும் அங்கே இருந்தனர். சுவாமிஜி மிகுந்த மகிழ்ச்சியுடன் அங்கே
நாட்களைச் செலவிட்டார். உளம் நிறைந்த பூரிப்பில் எழுதுகிறார் அவர்.
நான் இதுவரை பார்த்த மிக அழகான இடங்களுள் இது ஒன்று.
சற்று கற்பனை செய்யுங்கள். ஓர் ஏரி, அதைச் சூழ்ந்து குன்றுகள், அந்தக் குன்றுகளில்
அடர்ந்த பெரும் காடு. எங்களைத் தவிர வேறு யாருமே இல்லை.என்ன அழகு! என்ன அமைதி! என்ன
ஓய்வான சூழ்நிலை! நகரங்களில் பரபரப்பில் சிக்கிக் கிடந்துவிட்டு இப்போது இங்கே இருப்பது
எவ்வளவு மகிழ்ச்சி தருகிறது தெரியுமா? இங்கு இருப்பது எனக்குப் புதியதொரு வாழ்க்கை
கிடைத்ததுபோல் உள்ளது. நான் காட்டுப் பகுதிக்குள்
தன்னந்தனியனாகப் போகிறேன். கீதை படிக்கிறேன், மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
ஒரு நாள்
காலை உணவிற்கு முன்பாக தமது அறையிலிருந்து வெளியே வந்தார். அவரது கையில் கீதை ஒன்று
இருந்தது. அவர் மெக்லவுடிடம்,ஜோ, அதோ அந்தப் பைன் மரத்தடியில் உட்கார்ந்து கீதை படிக்கப்போகிறேன்.காலை உணவு தயாரானதும்
வருகிறேன்.காலை உணவு பிரமாதமாக இருக்க வேண்டும். என்று கூறினார். அரை மணிநேரம் கழித்து
மெக்லவுட் சுவாமிஜியை அழைப்பதற்காக அங்கே சென்றார். அங்கே அவர் கண்ட காட்சி விவரணைக்கு
அப்பாற்பட்டதாக இருந்தது.
அசைவற்றதொரு சிலைபோல் சுவாமிஜி அமர்ந்திருந்தார்.
கீதை அவரது கையிலிருந்து நழுவி கீழே கிடந்தது. பாதி மூடிய கண்களிலிருந்து வழிந்த கண்ணீரால் அவரது ஆடை நனைந்திருந்தது. மெக்லவுட்
அருகில் சென்று பார்த்தார். மூச்சு முற்றிலுமாக நின்றிருந்தது. சுவாமிஜி இறந்து விட்டார் என்று பயந்து போய், விரைந்து லெக்கட்டிடம் சென்று, ஓடி வாருங்கள். சுவாமி விவேகானந்தர் நம்மை
விட்டு பிரிந்து விட்டார். என்று கூறினார். பெற்றி, லெக்கட் எல்லோரும் அங்கே ஓடினார்கள்.
சுவாமிஜியின் நிலைமையைக் கண்டு அனைவரும் அழத் தொடங்கினர்.
ஏழெட்டு
நிமிடங்கள் கழிந்தன. சுவாமிஜியின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. திடீரென்று லெக்கட்,
இல்லை, அவர் சமாதியில் இருக்கிறார். அவரை உலுக்கி, உணர்வை மீட்போம், என்று கூறியபடி
சுவாமிஜியை நெருங்கினார். ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் போது தம்மை யாரும் தொடக்கூடாது
என்று சுவாமிஜி கூறியிருந்தது மெக்லவுடின் நினைவிற்கு வந்தது. உடனே, வேண்டாம். அப்படிச்செய்யாதீர்கள்” என்று கத்தினார் மெக்லவுட்.
மேலும்ஐந்தாறு
நிமிடங்கள் கழிந்தன. அப்போது சுவாமிஜி மூச்சுவிடுவதற்கான அறிகுறிகள் தென்படலாயின. அவரது கண்கள் மெதுவாகத் திறந்தன. ஏதோ
தமக்குள் பேசுவது போல், நான் யார்? நான் எங்கிருக்கிறேன்?
என்று இரண்டு மூன்று முறை கூறினார். அதன் பிறகு அவருக்குப் புறவுணர்வு முற்றிலுமாக
வந்தது. எங்களைப் பார்த்தார். சற்றே வெட்கத்துடன்
எழுந்தார். உங்களையெல்லாம் பயமுறுத்தி விட்டேனா! பொறுத்துக்கொள்ளுங்கள். இத்தகைய நிலை
எனக்கு அடிக்கடி வருவதுண்டு. பயப் படாதீர்கள். இறந்து விட மாட்டேன். உங்கள் நாட்டில்
நான் என் உடம்பை விட மாட்டேன். பெற்றி பசியாக
இருக்கிறது. சாப்பிடபோவோம்” என்று கூறிவிட்டு கிளம்பினார்.
சுவாமிஜி
மிக உயர்ந்த நிலையாகிய நிர்விகல்ப சமாதி நிலையில்
ஆழ்ந்திருந்த சம்பவங்களுள் இது ஒன்றாகக் கூறப் படுகிறது.
.-
ஆயிரம் தீவுப்
பூங்கா
பெர்சி காடுகளில் அதிகமாக வளர்ந்திருந்த பூர்ஜ
மரத்தின் பட்டையில் அவர் இரண்டு சிறிய புத்தகங்கள் தயார் செய்தார். அதில் ஆங்கிலத்திலும்
சம்ஸ்கிருதத்திலும் எழுதி மிஸ் மெக்லவுட்டிற்கும் அவரது சகோதரிக்கும் கொடுத்தார். அந்த மரத்தின் பட்டையில் மேரி ஹேலுக்கு
ஒரு கடிதமும் எழுதினார். இந்தியாவில் புனித இலக்கியங்களெல்லாம் எழுதப் படுகின்ற மரப்
பட்டை இது. எனவே நான் சம்ஸ்கிருதம் எழுதுகிறேன். உமாபதி சிவன் எப்போதும் உன்னைக் காக்கட்டும்.
உங்கள் அனைவருக்கும் என்றென்றும் என் ஆசிகள்.
என்று அந்தக் கடிதத்தை நிறைவு செய்திருந்தார். பெர்சி முகாமில் தங்கியது சுவாமிஜிக்கு
ஒரு புத்துணர்ச்சியை அளித்தது.
பெர்சி முகாமில்
சுமார் பத்து நாட்கள் தங்கிய அவர் அங்கிருந்து
ஆயிரம் தீவுப் பூங்காவிற்குப் புறப்பட்டார்.
நியூயார்க்கில்
இருந்தபோதே அதற்கான அழைப்பு வந்திருந்தது. இன்னும் சுமார் பத்து நாட்களில் ஆயிரம் தீவுப்
பூங்காவிற்குப்போவேன். அங்கு மணிக்கணக்காக தியானம் செய்வேன். எனக்குள் நானே ஏகாந்தமாக
இருப்பேன்.ஆகா, இந்த எண்ணமே எத்தனை மேலானதாக இருக்கிறது.
என்று மகிழ்ச்சியுடன் எழுதுகிறார் சுவாமிஜி.
நியூயார்க்கிலிருந்து
300 மைல் தொலைவில் ஓடுகிறது செயின்ட் லாரன்ஸ் நதி. அந்த நதியில் அமைந்த தீவுகளில் பெரியது
ஆயிரம் தீவுப் பூங்கா. நதிக்கரையிலிருந்து சற்றுத் தொலைவில் பாறைகள் சூழ்ந்த பகுதியில்
ஒரு பெரிய பாறையின்மேல் அமைந்திருந்தது ஓர்
அழகிய மாடி வீடு. அது சுவாமிஜியின் சிஷ்யையான மிஸ் மேரி எலிசபெத் டட்சருக்குச் சொந்தமானது.
அங்கே சென்று தங்கி வகுப்புகள் நடத்த வேண்டும் என்று டட்சர் சுவாமிஜியை அழைத்தார்.
இந்த அழைப்பை ஒரு தெய்வ அழைப்பாக ஏற்றுக்கொண்டு 1895-ஜுன் 18-ஆம் நாள் அங்கே சென்றார்
சுவாமிஜி. அவருக்காக வீட்டைப் புதுப் பித்து, விவேகானந்தரே வருக! என்று வீட்டிற்கு
முன்னால் தோரணம் கட்டி வரவேற்றார் டட்சர்.
அது ஒரு
வனப்பகுதி. ஓங்கி வளர்ந்த மரங்களும் அடர்ந்த செடிகளும் பாறைகளும் அருகில் ஓடிய நதியும் அந்த இடத்தை ஒரு
தவ பூமியாக சுவாமிஜிக்கு அடையாளம் காட்டின. ஒருவேளை தட்சிணேசுவர நாட்கள் அவரது நினைவில்
எழுந்திருக்கக்கூடும். கங்கை நதியும் கரையில் உள்ள பஞ்சவடி காட்டுப் பகுதியும் அவரது
மனத்தில் என்றும் மாறாமல் பதிந்து விட்டவை அல்லவா!
சுவாமிஜி
சென்று சேருமுன்னர் மூன்று நான்கு மாணவர்கள் வந்து விட்டிருந்தனர். மொத்த மாணவ மாணவியர்
பன்னிருவர். அவர்கள் மிஸ் டட்சர், டாக்டர் வைட், மிசஸ் ஃபங்கே, மேரி லூயி, லியான் லான்ட்ஸ்பர்க்,
ஸ்டெல்லா கேம்ப்பெல், வால்டர் குட் இயர் தம்பதிகள்., மிஸ் ரூத் எல்லிஸ், மிஸ் வால்டோ,
மிஸ் கிறிஸ்டைன், ஒருவர் யாரென்று தெரியவில்லை. ஆனால் பொதுவாக பத்து பேருக்குமேல் அங்கே
ஒரே நேரத்தில் இருக்கவில்லை.
இறுதியாக
வந்து சேர்ந்தவர்கள் டெட்ராய்ட்டில் சுவாமிஜியின் சொற்பொழிவைக்கேட்டு, அவரால் ஈர்க்கப்
பட்ட மிஸ் கிறிஸ்டைன் க்ரீன் ஸ்டிடல், மற்றும்
மிசஸ் மேரி சி.ஃபங்கே ஆவர். சவாமிஜியைத் தனியாகச் சந்திக்க விரும்பினாலும்,
நியூயார்க்கில் அவர்களுக்கு அதற்கான வாய்ப்பு
கிடைக்கவில்லை. தொடர்ந்து சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டிருந்த சுவாமிஜியைப் பற்றி
அவர்களால் எந்தத் தகவலும் பெற முடியவில்லை. ஒருவேளை அவர் இந்தியாவிற்குத் திரும்பியிருப்பாரோ
என்று கூட அவர்கள் நினைத்தனர். சுமார் ஒன்றரை
வருடங்களுக்குப் பிறகு, அப்போது தான், ஆயிரம் தீவுப் பூங்காவில் சுவாமிஜி தங்குவது
பற்றிய செய்தி கிடைத்தது. அவர்கள் வேறு எதுவும் யோசிக்க வில்லை. நேரடியாக அவரிடம் செல்வது,
உபதேசம் பெறுவது என்று முடிவுடன் புறப் பட்டு விட்டனர். கிறிஸ்டைன் எழுதுகிறார்.
நாங்கள் சென்றபோது நன்றாக இருட்டிவிட்டது. மழை வேறு
விடாமல் பெய்து கொண்டிருந்தது. எங்களுக்கு வழியும் தெரியாது. ஓரிடத்தில் விசாரித்த
போது, வினோதமான உடை உடுத்திய வேற்று நாட்டார்” ஒருவர் தங்கியிருக்கின்ற இடம்
பற்றிய தகவல் கிடைத்தது. நாங்கள் செல்ல வேண்டிய இடம் அது தான் என்பதைப் புரிந்து கொண்டோம். அதிர்ஷ்டவசமாக, கைவிளக்குடன்
ஒருவர் எங்களுக்கு முன்னால் சென்றார். அந்த அவளிச்சத்தின் துணையுடன் குன்றுகளின் மீது ஏறத் தொடங்கினோம். சாண் ஏறினால் முழம் சறுக்கியது.
ஒரு வழியாக அந்த வீட்டை அடைந்தோம். வீட்டின் முற்றத்தை அடைந்த போது சுவாமிஜியின் மணிக்குரல்
உள்ளே ஒலித்துக் கொண்டிருந்தது.
சுவாமிஜியைச்
சந்திக்கும்போது அவரிடம் என்னென்ன பேசவேண்டும் என்று தயார் செய்து கொண்டு போயிருந்தோம்.
ஆனால் அவரைக் கண்டபோது எல்லாம் மறந்து விட்டன.”நாங்கள்
டெட்ராய்ட்டிலிருந்து வருகிறோம்.மிஸ்ஃபிலிப்ஸ் எங்களை அனுப்பினார் ” என்று ஒருவர் கூற,
மற்றவரோ, ஏசு நாதர் இந்த உலகில் வாழ்ந்திருந்தால் எப்படி அவரை அணுகியிருப்போமோ அப்படி
உங்களை நாடி வந்திருக்கிறோம்” என்றார்.
சுவாமிஜி கனிவுடன் எங்களைப் பார்த்தார்.ஆகா! எனக்கு மட்டும்
ஏசுவைப்போல் ஆற்றல் இருந்திருந்தால் உங்களுக்கு இந்தக் கணமே முக்தி தந்திருப்பேனே!
என்று மென்மையான குரலில் கூறினார். பிறகு எங்களை மற்றவர்களுடன் சேர்த்துக் கொண்டார்.
இவ்வாறு பேறு பெற்ற பன்னிருவருக்கு அந்த ஆயிரம் தீவுப்
பூங்காவில் ஆன்மீகத்தின் உயர் வாசல்களைத் திறந்து
வைத்தார் சுவாமிஜி.
தவ வாழ்க்கை
-
வகுப்புகள், அன்றாட வேலைகள், தியானம், ஆன்மீக சாதனைகள்
என்று இந்த நாட்கள் அனைவருக்கும் ஒரு தவ வாழ்க்கையாகக் கழிந்தன. கீதை, உப நிஷதங்கள்,
பிரம்ம சூத்திரங்கள், நாரத பக்தி சூத்திரங்கள், பைபிள், என்று பல விஷயங்களில் சுவாமிஜி வகுப்புகள் நடத்தினார். இந்த
நாட்களில் அவர் மகோன்னதமான மன நிலையில் திளைத்தார். சூறாவளியெனச் சுழன்றடித்து சொற்பொழிவுகள்
செய்த துறவிப்பெருமகன் அங்கில்லை. தம்முள்
நிறைந்து நிலவிய அமைதியையும் பேரானந்தத்தையும் , பக்குவம் வாய்ந்த சீடர்களின் இதயத்தில்
நிறைக்கின்ற ரிஷியே அங்கிருந்தனர். இருளை விலக்கி சிவந்த வானில் மடியில் தவழ்ந்து,
தென்றலுடன் கலந்து வரும் புத்தம் புது காலையைப்போல்
அவரது திருவாயிலிருந்து கிளம்பும் தேனிசைச்
சொற்கள் தான் எத்தனை இனிமையானவை! என்று பின்னாளில் எழுதினார் ராமகிருஷ்ணானந்தர். அங்கே
தங்கியிருந்தவர்களில் ஒருவரான மிஸ் வால்டோவின் குறிப்புகளை ப்பார்ப்போம்.
உண்மையில் அந்த இடம்எங்களுக்கு ஒரு புனித ஆலயம் ஆயிற்று.
மரத்தின் உச்சியில் இருக்கும் இலைகள் பச்சைக்
கடல் போல் எங்கள் காலடியில் அசைந்தன. பெரிய
வீடு எதையும் அங்கே காண முடியாது. பல மைல்கள்
வரை மனித நடமாட்டமே இல்லாத அடர்ந்த காட்டிற்கு நடுவே நாங்கள் இருந்தோம். செயின்ட் லாரன்ஸ்
நதியின் பல தீவுகள் அங்குமிங்கும் இருந்தன.
அவற்றில் இருக்கும் உணவு விடுதிகளிலிருந்தும்
ஹோட்டல்களிலிருந்தும் விளக்கு வெளிச்சம் மினுக் மினுக் கெனத் தெரிந்தது. தொலைவில் இருந்த
காரணத்தால் இந்தக் காட்சிகள் படக்காட்சிபோல் தோற்றம் அளித்தன. எங்கள் தனிமைக்கு தெ்
தொந்தரவு செய்யும் மனிதக்குரல் எதுவும் அங்கே கிடையாது. வண்டுகளின் ரீங்காரமும், பறவைகளின்
இன்னிசையும், காற்று வீசுவதால் இலைகளில் எழும்
சலசலப்பும் மட்டுமே எங்கள் காதில் விழுந்தன.
சுற்றிலும் தெரிகின்ற காட்சி சில சமயம் நிலவின் மெல்லொளியால் விளக்கமுறும். அந்த வெண்
மதியின் உருவம் கீழேயுள்ள தண்ணீரிலும் தெரியும். மனத்தை மயக்கும் இத்தகைய காட்சிகளுக்கு
நடுவே, உலகத்தை நாங்கள் மறந்தும் உலகம் எங்களை மறந்தும் அன்பு மயமான ஏழு வாரங்களை நாங்கள்
கழித்தோம். எங்கள் அன்புக்கு உரிய ஆசிரியரின்
ஆர்வம் ததும்பும் வார்த்தைகளைச் செவிமடுத்தோம்.
அந்தப் புனித
நேரங்களில் நாங்கள் பெற்ற ஆழ்ந்த ஆன்மீக உணர்வையும், அதனால் நாங்கள் அடைந்த மேன்மையையும் எங்களில் யாரும் மறக்க முடியாது. இந்த நேரங்களில் தமது இதயம் முழுவதையும்
சுவாமிஜி திறந்து காட்டினார். தமக்கு ஏற்பட்ட போராட்டங்கள் அனைத்தையும் மீண்டும் எங்கள்
முன் அப்படியே கொண்டு வந்தார். நாங்கள் இருப்பதை
உணராதவராகவே சுவாமிஜி பல முறை அமர்ந்திருப்பார். அவரது சிந்தனைப் பெருக்கிற்குத் தடையேற்பட்டு,
அவருக்குத் தொந்தரவு உண்டாகக் கூடும் என்று அஞ்சி, நாங்கள் பேச்சு மூச்சற்று அமர்ந்திருப்போம்.
தாம் அமர்ந்திருக்கும் ஆசனத்தைவிட்டு எழுந்து,
தாழ் வாரத்தின் குறுகிய இடத்தில் நடந்தவாறு, வெள்ளம் பாய்வதைப்போன்றும், முழுமை உணர்வோடும் சுவாமிஜி பேசுவார். இந்த வேளைகளில்
அவரிடம் அன்பும் அமைதியும் பொங்கித் ததும்பும்.
சுவாமி விவேகானந்தரைப்போன்ற மகான்களுடன் ஏற்படும் ஆன்மீகத்தொடர்பு ஆயுள் முழுவதும் நீடிப்பதாகும்.
இடைவிடாததோர் ஆழ்ந்த ஆன்மீகச் சூழ்நிலையில் நாங்கள் வாழ்ந்தோம். அடிக்கடி அவர் விளையாட்டாகவும் வேடிக்கையாகவும்
கேலியாகவும் பேசுவார். பிறரிடமிருந்து வரும் பதில்களை ஏற்றுக் கொள்வார். ஆயினும் தமது
வாழ்க்கைப் பணியிலிருந்து நழுவி, ஒரு போதும் வெகுதூரம் அவர் சென்றதில்லை. புராணக் கதைகளின் களஞ்சிய மாகவே
சுவாமிஜி விளங்கினார். அந்தக் கதைகளுக்குப்
பின்னணியிலுள்ள ஆன்மீகப்பேருண்மைகளைத் தவறாமல்
எடுத்துக் காட்டுவார். ஆற்றல் பெற்ற இத்தகைய ஆசிரியரிடம் பாடம் கேட்கும் அதிர்ஷ்டசாலி
மாணவர்கள் இவர்கள். அதற்காக அவர்கள் தங்களைத் தாங்களே பாராட்டிக்கொள்ளலாம்.
-
மூன்று தத்துவங்கள்
கொடை
-
வகுப்புகள்
நடத்தியதுடன் வேதாந்த நூல்களையும் படித்து வந்தார் சுவாமிஜி. இதற்காக சங்கரர், ராமானுஜர்,
மத்வர் ஆகிய மூவரின் விளக்கவுரை நூல்களை இந்தியாவிலிருந்து வரவழைத்திருந்தார். ஆயிரம் தீவுகளில் இருக்கும்போது
மூன்று நிலைகளிலுள்ள வேதாந்தத்தைப் பற்றி ஆங்கிலத்தில் ஒரு நூல் எழுத நினைக்கிறேன்
என்று முன்பே அவர் ஆலோசித்து வைத்திருந்தார். அதற்காக மூன்று விளக்கவுரைகளையும் ஆழ்ந்து
கற்றுவந்தார். ஒவ்வோர் ஆச்சாரியரும் தத்தம் கொள்ளைகளை நிலைநாட்டுசதற்காக சாஸ்திரங்களைத்
திரித்துப்பொருள் கூறுவதைக்கண்ட அவர் தாமே
தியானத்தில் ஆழ்ந்து புதிய விளக்கங்களைக் கண்டு பிடித்தார்
அத்வைதம்
, விசிஷ்டாத்வைதம், துவைதம் ஆகிய இந்த மூன்று தத்துவ நெறிகளையும் இணைத்து சுவாமிஜியின் கொடைகளுள் ஒன்று ஆகும். பொதுவாக மூன்றும் ஒன்றுக்
கொன்று எதிரானவையாக, முரண்பட்டலையாகவே கருதப் பட்டு வந்தன. சுவாமிஜி இவைமூன்றும் வேதாந்தத்தின்
மூன்று படிகள், மனிதனின் ஆன்மீக வளர்ச்சியில் இந்த மூன்று படிகளுமே தேவை என்பதை முதன்
முதலாக உலகிற்குக் கூறினார். தமது கொடையைப் பற்றி சுவாமிஜியே கூறுவதைக் கேட்போம்.
நான் கண்டு பிடித்ததை இப்போது உங்களுக்குச்சொல்லப்போகிறேன். மதம் என்பது முழுவதும்வேதாந்தத்தில்
அடங்கியுள்ளது. அதாவது, வேதாந்தத்தின் மூன்று நிலைகளான துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம்
ஆகியவற்றில் அடங்கியுள்ளது. இவை மூன்றும் ஒன்றன் பின் ஒன்றாக வருபவை. மனிதனின் ஆன்மீக
வளர்ச்சியில் மூன்று நிலைகள் இவை. இவை ஒவ்வொன்றும் தேவை. மதத்தின் சாரம் இது தான்.
இந்தியாவின் பல்வேறு இனங்களுக்குரிய பழக்கவழக்கங்கள், கொள்கைகள் இவற்றில் வேதாந்தம்
செயல்பட்டபோது விளைந்ததே இந்து மதம்.முதல் நிலையான துவைதம் ஐரோப்பிய இனங்களின் கருத்துக்களில் செயல்பட்டபோது கிறிஸ்தவ மதம் விளைநதது.
மத்திய கிழக்குப் பகுதியில் வாழும் செமிட்டிக் இனப் பகுதிகளில் செயல்பட்டபோது வந்தது முகமதிய மதம்.
அத்வைதம், அதன் யோக உணர்வு அம்சத்தில் செயல்பட்டுபுத்த
மதம் ஆகியது. இது போலவே பிறவும், இதைப் பற்றி நான் ஒரு நூல் எழுத விரும்புகிறேன். ஆகவே தான் விளக்கவுரைகள் மூன்றும்
தேவையென்று தெரிவித்தேன்.
பின்னாளில்ஒரு முறை சுவாமிஜியிடம் சீடர் ஒருவர்,
இப்படி மூன்று தத்துவங்களும் மூன்று படிகள் என்பது உண்மையானால் இதற்கு முன்பு எந்த
ஆச்சாரியரும் இது பற்றி கூறவில்லையே, ஏன்? என்று கேட்டார். ஏனெனில் அதற்காகப்பிறந்தவன்
நான். அந்த வேலை எனக்காக ஒதுக்கி வைக்கப் பட்டிருந்தது என்று கூறினார் சுவாமிஜி.
பிற்பகலில்
பிற்பகல் வேளைகளைப் பற்றி எழுதுகிறார் மிசஸ்ஃபங்கே, பிற்பகல் வேளைகளில் பொதுவாக நாங்கள்
நடக்கச் செல்வோம். வீட்டிலிருந்து கரடுமுரடான பாதை வழியாக மலையடிவாரத்தில் பாய்ந்த
ஆறுவரை செல்வது தான் எங்களுக்குப் பிடித்த பாதை. வழியில் பல இடங்களில் புல்வெளிகளில்
சுவாமிஜியைச் சுற்றி அமர்ந்து கொள்வோம். அவரும் அற்புதமான பல விஷயங்களை எங்களிடம் பேசுவார்.
ஒரு பறவை, ஒரு மலர், ஒரு வண்ணத்துப் பூச்சி என்று இயற்கையின் ஒரு சிறு தூண்டுதல் போதும்,
சுவாமிஜி பேச ஆரம்பிப்பார். வேதங்களிலிருந்து கதைகளைக் கூறுவார். இந்தியக் கவிதைகளைப்
பாடுவார்.
மாலைநேரத்தில்
சுவாமிஜி மாணவர்களிடம் சொற்பொழிவு செய்யுமாறு கூறுவார். யாரும் தப்பிக்க இயலாது. இதிலிருந்து
தப்புவதற்காகச் சிலர் வகுப்பிற்கு வராமலேயே இருந்து விடுவதும் உண்டு. மாலை நேரம் செல்லச்செல்ல
சுவாமிஜி மேன்மேலும் அகமுகமாவார். அவரது வார்த்தைகள் தெய்வீகத்திலிருந்து நேரடியாகக்கேட்பன போல் கேட்கும்.
சில வேளைகளில் இரவு முழுவதும் பேசுவார். வால்டோ
எழுதுகிறார், அவர் எங்களிடம் பேசுவது போல் தோன்றாது. ஏதோ தொலைதூர உலகங்களில்
சஞ்சரித்தபடி தமக்குத்தாமே பேசிக்கொள்வது போல் இருக்கும். ஆனால் ஒவ்வொரு வார்த்தையும்
நெருப்புப்பொறிபோல் வெளிவரும்- அவ்வளவு ஆழ்ந்தவையாக, பொருள் நிறைந்தவையாக, அசைக்க முடியாத
உறுதியில் நிலை பெற்றவையாக எங்கள் இதயங்களை நேரடியாகத்தொடுபவையாக, கேட்டவர்கள் ஒரு
நாளும் மறக்க முடியாதவையாக இருந்தன. நாங்கள் அமைதியில் உறைந்தவர்களாக அமர்ந்திருப்போம்.
எங்கே நாங்கள் விடுகின்ற மூச்சின் ஓசை அவரது சிந்தனை நீரோட்டத்தைக் கலைத்து விடுமோ
அல்லது எங்கே அந்த அற்புத வார்த்தைகளில் ஒன்றை இழந்து விடுவோமோ என்ற பயம் காரணமாக மூச்சைக்கூட
பிடித்துக் கொண்டு அமர்ந்திருப்போம்.
சிலவேளைகளில்
சுவாமிஜி சாய்வு நாற்காலியில் அமர்ந்து தியானத்தில் ஆழ்வார். மாணவர்கள் அவர் முன்பு
கீழே தியானத்தில் அமர்வார்கள். மணிக்கணக்காக இந்த தியானத் நடைபெறும்.
படிப்பு,
ஆன்மீக சாதனைகள் என்று சென்றாலும் வேடிக்கை வினோதங்களுக்கும் அங்கே குறைவே இருக்கவில்லை. நகைச்சுவைக் கதைகளுக்கு சுவாமிஜியிடம்
பஞ்சமே கிடையாது. ஆயிரம் தீவில் அவர் கூறிய ஓரிரு கதைகளைப் பார்ப்போம்.
1- மனிதர்களைத் தின்னும் காட்டு மிராண்டிகள் வசிக்கின்ற
ஒரு தீவிற்கு மிஷினரி ஒருவர் போயிருந்தார். போய்ச்சேர்ந்ததும் அவர் அங்குள்ள மக்களைப்
பார்த்து, என் சகோதரர்களே! எனக்கு முன்பு இங்கு
ஒரு மிஷினரி வந்திருந்தாரே! அவரை உங்களுக்குப் பிடித்திருந்ததா? என்று கேட்டார். அதற்கு
அந்த மக்கள் கூறினர்.
ஆம் நன்றாகப்
பிடித்திருந்தது. ஆகா! அவர் மிகவும் சுவையாக” இருந்தார்!
2- கடவுள் உலகைப் படைத்தது பற்றி ஒரு மிஷினரி விலாவாரியாக
விளக்கிக்கொண்டிருந்தார்.
3- முதலில் ஒன்றுமே இல்லை, பிறகு கடவுள் களி மண்ணிலிருந்து ஆதாமைச் சிருஷ்டித்தார். பச்சை
மண்ணாக இருந்த அவளைக் காயவைக்க வேண்டியிருந்தது. சுற்றிலும் பார்த்தார் கடவுள். அருகில் தென்பட்ட வேலி ஒன்றில் அவனைக் காயப்போட்டார்.
ஃபாதர்!
என்றொரு குரல் பார்வையாளர்களிடமிருந்து எழுந்தது. ஃபாதர், அந்தவேலி எங்கிருந்து வந்தது?அதைப்
படைத்தது யார்? என்று கேட்டார். அந்தப் படித்த பார்வையாளர்.
மிஷினரிக்கு வந்ததே ஆத்திரம்! வாயை மூடு. இப்படியா
கேள்வி கேட்பது? விட்டால் எங்கள் பிழைப்பையே கெடுத்து விடுவாய் போலிருக்கிறதே! என்று
கேட்டு விட்டு, அவசர அசவரமாக வெளியேறி விட்டார்.
மிசஸ் ஃ பங்கே எழுதுகிறார், சிரித்துச் சிரித்து
எங்கள் வயிறெல்லாம் புண்ணாகிவிடும். சிலவேளை சுவாமிஜி சமையல்காரனைப்போல் உடையணிந்து,
வந்து நின்று கொண்டு, ”சாப்பாடு தயார்” என்று சரியாக ஒரு சமையல் காரனின் உச்சரிப்பில் கூறுவதைக்கேட்டால்
வாய்விட்டுச் சிரிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. சாப்பாட்டு மேஜைக்குச்சென்று
விட்டாலோ, எங்கள் நடவடிக்கைகளையும் செய்கைகளையும் அவர் நடித்துக் காட்டுவதைக் கண்டு
விழுந்து விழுந்து சிரிப்போம். இதிலும் யாருடைய மனமும் புண்ணாகும் படி அவர் வேடிக்கை
செய்ய மாட்டார். எல்லாம் வெறும் வேடிக்கை, வெறும் வினோதம்.
இந்த முகாம்
வாழ்க்கை அந்த மேலை நாட்டினரின் கண்களைத் திறப்பனவாகவும் அமைந்தன.குறிப்பாக அந்தப் பெண்கள் ஒருவிதமான செயற்கைத் தனத்திலேயே வாழ்ந்து பழகியிருந்தார்கள்.சுவாமிஜி அதனை உடைத்து
அவர்களை உண்மையின் வெளிச்சத்தில் வாழத்துணை செய்தார். ஒரு நிகழ்ச்சியைக் காண்போம். பெண்கள்
சாதாரணப் படிகளில் ஏறினால் கூட ஆண்கள் கை கொடுத்து உதவ வேண்டும். இது அங்குள்ள வழக்கம்.
இது பற்றி கிறிஸ்டைன் எழுதுகிறார்.
இங்கோ பாறைகளில் கூட நாங்கள் தனியாக ஏற வேண்டியிருந்தது.
எந்த ஆணும் எங்களுக்கு கைகொடுக்கவில்லை.சுவாமிஜி எங்கள் உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு
கூறினார், நீங்கள் முதியவர்களாகவோ, பலவீனமாகவோ, கதியற்ற நிலையிலோ இருந்தால் நான் உங்களுக்கு
உதவ வேண்டும்.ஆனால் நீங்கள் நன்றாகத்தானே இருக்கிறீர்கள். உங்களால் இந்த ஓடையைத் தாண்டிக்
குதிக்க முடியும். இந்தப் பாறையின் மீது துணையின்றி ஏறமுடியும். எனக்கு எப்படி முடியுமோ
அப்படி உங்களுக்கும் முடியும். எனவே நான் ஏன் உங்களுக்கு உதவ வேண்டும்? நீங்கள் பெண்கள்
என்பதற்காகவா? அல்லது இது பெண்ணுக்கு ஆண் காட்டும்
பெருந்தன்மையா? இந்தப் பெருந்தன்மைக்குப் பின்னால் காமம் இருப்பது உங்களுக்குத் தெரியாதா?
என்ன அற்புத வார்த்தைகள்! பெண்களை பெண்களை
உண்மையாக மதிப்பது என்றால் என்ன என்பதை அன்று
சுவாமிஜியின் வார்த்தைகளில் கண்டு கொண்டோம்.
ஆயிரம் தீவில்
வாழ்ந்தவர்களில் ஒரு பெண் மற்றவர்களைச் சற்று அடக்கியாளும் இயல்பு படைத்தவர். இதனை
உணர்ந்து கொண்ட சுவாமிஜி அவரது இந்த மனநிலையை மாற்றினார். அந்தப் பெண் பல்வேறு திட்டங்களைவகுப்பார்.
எல்லாவற்றையும் அமைதியாகக்கேட்டுக் கொண்டு சும்மா இருப்பார் சுவாமிஜி. ஆனால் கடைசி
நிமிடத்தில் எல்லாவற்றையும் மாற்றிவிடுவார். முதலில் அந்தப் பெண்ணிற்கு எரிச்சல் ஏற்பட்டாலும் பிறகு சிரித்தபடியே, அவருக்காக த் தான் நான்திட்ட
மிட்டேன். கடைசி நேரத்தில் தலை கீழாக்கிவிடுவார். அவர் அவரது வழியிலேயே போவார். வெண்கலக் கடையில் யானை புகுந்தது போல் இருக்கும்
அவரது செயல்பாடுகள்” என்று கூறுவார்.
இவ்வாறு
செயற்கைத்தனம் கலவாத எளிமையுடன் வாழ்க்கையை நடத்தி அங்கிருந்தவர்களுக்கு க் கற்பித்தார்
சுவாமிஜி.
சமையல்
சமையல் உட்பட அனைத்து வேலைகளையும் எல்லோரும் பகிர்ந்து
கொள்வது என்று தான் ஆரம்பத்தில் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஏறக்குறைய மாணவர்கள்
யாருமே இத்தகைய வேலைகளில் பழக்கப் பட்டவர்கள் அல்ல. எனவே வீட்டு வேலைகளைப்பொறுத்த வரை
சற்று சிரமம் ஏற்பட்டது. சுவாமிஜி அதனைப் பொருட்படுத்தவில்லை. ”நான் சமைக்கிறேன்” என்று அவ்வப்போது களத்தில் இறங்கிவிடுவார். ”ஐயோ” என்று அலறுவார் லான்ட்ஸ்பர்க்.சுவாமிஜியின் சமையல் ”கலையை” நியூயார்க் நாட்களிலிலேயே நன்றாக அறிந்தவர் அவர். சுவாமிஜியின்
சமையல் என்றால், கண்களில் நீர் வடியும். காரம் ஒரு பக்கம், சமையலறையிலுள்ள பாத்திரங்கள் அத்தனையையும் மீண்டும்துலக்க வேண்டியிருக்கும்.
அது மற்றொரு காரணம். அங்கிருந்த பலரிலும் இளையவரான சுவாமிஜி, ஒரு தந்தையைப்போல, தாய்போல,
குடும்பத் தலைவர் போல் வரிந்து கட்டிக்கொண்டு வீட்டுவேலைகளில் ஈடுபட்டது அவர்கள் அனைவருக்கும்
சுவாமிஜியிடம் ஓர் இயல்பான ஈடுபாட்டை ஏற்படுத்தியது.
அவர் சமைத்த உணவு சுவையாகத்தான் இருந்தது. ஆனால் ” உண்மையைச் சொல்வதானால்” காரம் என்றால் அப்படியொரு காரம். மசாலா வேறு தூக்கலாக இருக்கும்.
அதைச் சாப்பிடுவதால் உயிரேப் போகுமானாலும் சரி- காரம் எங்களைக் கிட்டத்தட்ட அந்த நிலைக்குத்தான் கொண்டு போயிருந்தது. –நான் சாப்பிடுவதென்று முடிவு செய்துவிட்டேன். ஆனானப்பட்ட
விவேகானந்தரே எனக்காகச் சமைப்பதென்றால் அதைச் சாப்பிடுவது தான் என்னால் செய்ய இயன்றது” என்றார் மிசஸ் ஃபங்கே.
ஒரு முறை தாம் சமைத்த உணவைப்பற்றி சுவாமிஜியே பின்னாளில்வேடிக்கையாகக்
கூறியதைப் பார்ப்பது இங்கே பொருத்தமாக இருக்கும்.மேரி ஹேலுக்கு அவர் எழுதுகிறார், நேற்று
இரவு குங்குமப்பூ, லாவெண்டர், ஜாதிக்காய், வால்மிளகு, இலங்கப்பட்டை, கிராம்பு, ஏலம்,
பாலேடு, எலுமிச்சைஞ்சாறு, வெங்காயம், உலர்ந்த திராட்சை, வாதுமைப்பருப்பு, மிளகு, அரிசி-
இவை யாவும் கலந்து, நான் உணவொன்று தயாரித்தேன், ஆனால் அதை நானே உண்ண முடியாத வகையில்
இருந்தது. பெருங்காயம் சேர்க்கப் படவில்லை, அதைச் சேர்த்திருந்தால் விழுங்குவதாவது எளிதாக இருந்திருக்கும்
No comments:
Post a Comment