சுவாமி விவேகானந்தரின்
விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-35
🌸
தென் கலிபோர்னியவில்
........................
பல நேரங்களில்
அவரது பேச்சு இந்தியா பற்றியதக இருக்கும். அவரது இதயத்தின் மூலையின் ஒருநரம்பு எப்போதும்
இந்தியாவிற்காகத் துடித்துக் கொண்டே இருந்தது. வெள்ளையரின் அடிமைகளக இந்தியர்கள் படுகின்ற
வேதனை சிலவேளைகளில் அவரது முகத்தில் பிரதிபலிக்கும்.
மௌனமாக அதைத் தங்கிக்கெள்வார் அவர். ஒரு நாள் அவர் கூறினார்.
வெள்ளையர்கள் இந்தியாவிற்கு வந்தது இந்துக்களை வெல்வதற்காக
அல்ல, அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அல்ல, உண்மையில் அவர்களின் ரத்தத்தை
உறிஞ்சுவதற்காக! ஆனால் என்ன துரதிர்ஷ்டம்! வந்த படைவீரர்களும் சரி, அதிகாரிகளும் சரி
மிகவும் தாழ்ந்த ஜாதியைச் சார்ந்தவர்களாக,
நாகரீகம் தெரியாதவர்களாக இருந்தார்கள். ஒரு நாள் நான் தெருவோரமாக அமர்ந்திருந்தேன்.
அந்த வழியாக இரண்டு ஆங்கிலேய வீரர்கள் சென்றார்கள். அவர்களில் ஒருவன் என்னைக் காலால்
உதைத்தான். திகைப்புடன் நான் அவனிடம் காரணம் கேட்டேன். அதற்கு அவன், அழுக்கு மூட்டையாகிய இந்தியன் நீ. ன்னைக் கண்டாலே இப்படி
ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது” என்றான் அவன். நானும் விடவில்லை.
ஓ! நாங்கள் உங்களை அதைவிட இழிவாகக் கருதுகிறோம். உங்களை அழுக்கு மிலேச்சன் என்றல்லவா
அழைக்கிறோம்” என்றேன். இந்தக் காலி படைவீரர்கள்
எத்தனை கீழ்ஜாதிப்பெண்களின் வாழ்க்கையைச் சீரழித் திருக்கிறார்கள். தெரியும? ஆங்கிலேயனின்
வீட்டில் எதையவது ஒருவன் திருடிவிட்டல் அவனைக்கென்று
விடுவர்கள்.பாவம், இந்துக்கள், கதியற்ற நிலையில் உட்கர்ந்து அழுவார்கள், அவ்வளவு தான்.
எங்களுக்கு மட்டும் சற்று போர்க்குணம் இருக்குமானால்
இப்படி விரல்விட்டு எண்ணக் கூடிய சில ஆங்கிலேயர்கள் எங்களை ஆள முடியுமா? அதனால் தான் நான் இந்தியாவில்
நாடு முழுவதும் சென்று அனைவரும் இறைச்சி சாப்பிட்டு, போர்க்குணத்தை வளர்த்துக்கெள்ளவேண்டும்
என்று போதிக்கிறேன்.
…
சில நிகழ்ச்சிகள்
................................
காலை வேளைகளில் சொற்பொழிவு இல்லை என்றால் சுவாமிஜி
சிறிது நேரம் தோட்டத்தில் உலாவுவார்., அல்லது நூல்நிலையத்தில் சென்று படிப்பார். மதிய
உணவிற்குப் பிறகு சிறிது நேரம் படுத்திருப்பார். இல்லாவிடில் மிசஸ் வைக்காஃப் வீட்டு
வேலைகளைச் செய்யும்போது பேசிக் கொண்டிருப்பர். சில வேளைகளில் அவரையும் அழைத்தபடி தேட்டத்தில்
உலாவுவார். உலவியபடியே வங்க மொழிப் பாடல்களைப் படி அதன் பெருளை விளக்குவார். அறியாமையில்
மூழ்கிய அஞ்ஞானி கல்லையும் மண்ணையும் வணங்குகிறான். என்ற கிறிஸ்தவப் படலைப்பாடி அத்தகைய
அஞ்ஞனி நான்” என்று கூறிச் சிரிப்பார்.
சில வேளைகளில் மதிய நேரத்தில் கடிதங்கள் எழுதுவார்.
இந்த நாட்களில் நிவேதிதைக்காக பலப் புராணக் கதைகளையும், அன்னையின் விளையாட்டு அறிந்தவர்
யாரோ? என்ற கவிதையையும் எழுதி அனுப்பினார்.
சில வேளைகளில் சுவாமிஜி பேட்டி அளிப்பதுண்டு. பேட்டி
என்ற பெயரில் வினோதங்களும் நிகழ்வதுண்டு. வருபவர்கள் மீட் சகோதரிகளுடன் தொடர்ந்து பேசிக்கெண்டிருப்பார்கள்.
சுவாமிஜி எதுவும் கூறாமல் புகையை இழுத்தபடியே அமைதியாக அமர்ந்திருப்பர். அவராக ஏதாவது
பேச வேண்டும் என்று நினைத்த பெண்மணி ஒருவர்
ஒரு நாள் எழுந்து செல்லும்போது, இவர் என்ன இப்படி அமர்ந்திருக்கிறார்? இந்த
மனிதருக்கு ஆங்கிலம் தெரியாதா? என்று கேட்டே விட்டார்.
ஒரு பெண் அவரை
அமர வைத்து ஓவியம் வரைய விரும்பினாள்.ஆனால் சுவாமிஜி ஏனோ அதற்கு உடன்படவில்லை.
எவ்வளவோ கேட்டும் மறுத்துவிட்டார். அந்தப் பெண் ஹேன்ஸ்ப்ரோ மூலம் தனது வேண்டுகோளை வைத்த
போத சுவாமிஜி கண்டிப்பாக, அந்தப் பெண்ணை வெளியில் பேகச்சொல்கிறாயா அல்லது நான் வீட்டை
விட்டு போகட்டுமா? என்று உறுதியான குரலில் கேட்டார். அந்தப் பெண் திரும்ப வேண்டியதாயிற்று.
மாலை வேளைகளில் இரவு உணவு தயாரிப்பதற்கு உதவுவார்.
சில வேளைகளில் தாமே சமைக்கவும் செய்வார். அவர் செய்கின்ற சப்பத்தியும் கறிகளும் டோரதிக்கும்
ரால்ஃபிற்கும் மிகவும் பிடிக்கும். முதலில் மாசாலாப்பொருட்களை அரைத்துக்கொள்வார். நின்று
கொண்டு அரைப்பது அவருக்குப் பிடிக்காது. எனவே சம்மணமிட்டு அமர்ந்து கெண்டு அரைப்பார்.
பிறகு வெண்ணெயில் தாளிக்கத் தொடங்குவார். அதில் எழுகின்ற புகை என்றாலே மீட் சகோதரிகளுக்கு
அலர்ஜி- எரிச்சலால் கண்கள் குளமாகி விடும். அதனால் தாளிக்கும் முன், இதோ வருகிறது புகை!
பெண்கள் இந்த இடத்தைவிட்டு அகலுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்”என்று உரத்த குரலில் ஓர் அறிவிப்பு செய்வார்.
பொதுவாக மலை 6.30 மணிக்குஇரவு உணவு முடிந்துவிடும்.
அதில் காய்கறி, பாயசம், சப்பத்தி, குழம்பு, மீன், அல்லது இறைச்சி சூப் ஆகியவை இருக்கும்.
சாப்பாடு முடிந்த பிறகு குளிர் காய்வதற்காக
அடுப்பை மூட்டுவார்கள்.
சிலர் நாற்காலியில், சிலர் கட்டிலில் என்று வசதியாக
அமர்ந்து கொள்வார்கள். சாய்வு நாற்காலியில்
சம்மணமிட்டு அமர்வார் சுவாமிஜி. சிலவேளைகளில் சாஸ்திரங்கள் எதையாவது படித்துப்பொருள்
கூறுவார். சில வேளைகளில் வேறு ஏதாவது பேசுவார். ஆனால் அவர் எதைச் செய்தாலும் அது ஓர்
ஆன்மீக அனுபவத்தை அவர்களின் உள்ளத்தில் நிறைப்பதாக இருந்தது.
சமையல் மற்றும் சாப்பாட்டு நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் பொதுவாக சுவாமிஜி அதிகம் சிரிப்பதோவேடிக்கை
பேசுவதோ கிடையாது. ஆனால் அவருடன் இருக்கின்ற ஒவ்வொரு கணமும் நாம் வளர்வோம். பெரிதாக
எந்த உபதேசத்தையும் அவர் எங்களுக்குத் தர வில்லை. ஆனால் அவர் எங்கள் கண்களைத் திறந்தார்.
தமது வாழ்க்கை மூலம் அவர் கற்றுத்தந்த பாடத்தை ஒரு போதும் மறக்க இயலாது” என்று எழுதுகிறார் ஹேன்ஸ்ப்ரோ.
ஒரு நாள் சுவாமிஜி வைக்காஃபிடம், நான் தயாரித்த அந்த
மசாலா கறி எப்படி இருந்தது? என்று கேட்டார். ஓ, பிரமாதம்” என்றார் வைக்காஃப்.ஆனால் சுவாமிஜியை அவ்வளவு எளிதாக ஏமாற்ற
இயலாது. சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு, இந்தப் பதிலை உண்மையாகச் சொல்கிறீர்களாஅல்லது
நட்பிற்காகச் சொல்கிறீர்களா? என்று கேட்டார் சுவாமிஜி. இதற்கு பதில் சொல்ல தயக்க மாகத்தான்
இருக்கிறது.ஆனாலும் சொல்கிறேன்” நட்பிற்காகத்தான் அதைப் புகழ்ந்தேன்” என்றார் வைக்காஃப்.
மற்றொரு நாள் வைக்காஃப் சுவாமிஜிக்காகச் சமைத்துக்கொண்டிருந்தார்.
சுவாமிஜி அங்கே முன்னும் பின்னுமாக நடந்து கொண்டிருந்தார்.திடீரென்று நின்று அவரைப்
பார்த்து, உங்கள் திருமண வாழ்க்கை இனிமையாக உள்ளதா? என்று கேட்டார். ஆம், சுவாமிஜி
என்றார் வைக்காஃப். சுவாமிஜி மௌனமாக வெளியில் சென்றார். சிறிது நேரத்தில் திரும்பி வந்து வைக்காஃபிடம், மேடம், இந்த உலகில் ஒரு திருமண
வாழ்க்கையாவது மகிழ்ச்சியாக நடைபெறுகிறதே என்று எனக்கு ச் சந்தோஷமாக இருக்கிறது” என்றார்.ஒரு வேளை வைக்கா.ஃபின் துயரத்தை ஆற்றுவதற்காகத்தான்
சுவாமிஜி அந்தக் கேள்வியைக் கேட்டாரோ? என்று எழுதுகிறார் மேரி லூயி பர்க். ஏனெனில்
வைக்காஃபின் வாழ்க்கை உண்மையில் மகிழ்ச்சிகரமானதாக இல்லை என்பது பின்னாளில் தெரியவந்தது.
ஒரு வேளை அன்று அவர் உண்மையைக் கூறியிருந்தால் தொடர்பின்மை நமக்குப் புரிகிறது. அது போலவே உலகம்
என்ற இந்தக் கனவிலிருந்து விழித்து அதை உண்மையுடன்
ஒப்பிடும் போது அது தொடர்பற்றதாக. முன்னுக்குப் பின் முரணாக இருப்பது நமக்குப் புரியும்.
....
சொற்பொழிவுகள்
................................
லாஸ் ஏஞ்ஜல்ஸிலும் தெற்கு பாஸடேனாவிலும் சுவாமிஜி
குறைந்தது 38 பெதுச்சொற்பொழிவுகளும் வகுப்புச்சொற்பொழிவுகளும் நிகழ்த்தினார். அவற்றில் சில வற்றிற்குக் கட்டணம் வசூலிக்கப் பட்டன.
பல சொற்பொழிவுகள் ஷேக்ஸ்பியர் மன்றத்தில் நடைபெற்றன. மீட் சகோதரிகளின் வீட்டிலிருந்து
சில அடிகள் நடந்தால் மின்சார ரயில் கிடைக்கும். அதில் ஏறி பாஸடேனா சென்று அங்கிருந்து மன்றத்திற்குச்செல்வார் சுவாமிஜி.
பொதுவாக ஹேன்ஸ்ப்ரோ அவருடன் செல்வார். நடக்க வேண்டும் என்பதற்காகவே சில வேளைகளில் சவாமிஜி
அந்த இடம் வரை நடந்து செல்வதுண்டு.
சவாமிஜியின் சொற்பொழிவில் எல்லோரையும் திகைப்பில்
ஆழ்த்திய ஒரு விஷயம் உண்டு. அது- அவர் தமது சொற்பொழிவுகளுக்குக் குறிப்புகள் எதுவும்
எடுத்து வராதது தான். அவர் கூட்டத்திற்கு வந்த பிறகு தன் பெதுவாகத் தலைப்பையே முடிவு
செய்வர்கள். ஒரு கண நேரத்தில் அந்தத் தலைப்பில் பேசத் தயாராகிவிடுவார். சுவாமிஜி. எந்தத்
தயக்கமும் இல்லமல், மடை திறந்த வெள்ளம் போல் கருத்துக்கள் வெளிவரும். யாரையும் திகைப்பில்
ஆழ்த்திவிடக் கூடியது இது.
முதல் நாள் சொற்பொழிவுக்கு (தலைப்பு- அன்புமதம்)
முன்பு ஒரு பெண்மணி அங்கிருந்த பேராசிரியர் பாம்கரிடம், சொற்பொழிவாளர் கிறிஸ்தவராகிய ஓர் இந்து என்று நினைக்கிறேன்,
அப்படித்தானே? என்று கேட்டார். அதற்கு பேராசிரியர் பெருமையுடன், இல்லை, அவர் மதம் மாற்றப்படாத இந்து.
உண்மையன ஓர் இந்துவிடமிருந்து நீங்கள் இந்து
மதத்தைப் பற்றி தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்” என்றார்.
….
குழப்பவாதிகள்
....................
லாஸ் ஏஞ்ஜல்ஸில் ஒரு முறை ”பாரசீகக் கலை” என்ற தலைப்பிலும் சுவாமிஜி சொற்பொழிவாற்றினார்.
வழக்கம்போல் எல்லா சொற்பொழிவுகளும் சுமுகமாக நடைபெறவில்லை.
சில வேளைகளில் சிலர் எப்படியவது சுவாமிஜியை வளைத்து, அவரது வாயிலிருந்து முன்னுக்குப்
பின் முரணான ஏதாவது வரவழைத்து அவரை மாட்டி விடவேண்டும் என்றே சொற்பொழிவுக்கு வந்தார்கள்.
ஜனவரி 18 ஆம் நாள் ”இந்தியப் பெண்கள்” என்ற தலைப்பில் சுவாமிஜி பேசினார்.
இந்தியாவிற்கு மிஷனரிகளை அனுப்புகின்ற ஒரு சர்ச்சுடன் தொடர்புடைய பெண்களும் ஆண்களுமாக
அத்தகைய சிலர் அன்று வந்திருந்தார்கள். அன்றைய
சொற்பொழிவின்போது, கேட்பவர்களே ஒரு தலைப்பைக் கூறுமாறு சுவாமிஜி கேட்டுக்கொண்டார்.
உடனே சர்ச்சிலிருந்து வந்தவர்கள் தங்களுக்குள் கூடி ஏதோ பேசிக் கொண்டார்கள். பிறகு
அவர்களில் ஒரு பெண் எழுந்து, நாங்கள் உங்கள் தத்துவத்தின் விளைவைப் பற்றி அறிந்து கொள்ள
விரும்புகிறேம்.. உங்கள் தத்துவமும் மதமும்
உங்கள் பெண்களை எங்கள் பெண்களை விட மேலான நிலைக்கு உயர்த்தி இருக்கிறதா? என்று
கேட்டார். இந்திப் பெண்களைப் பற்றி சொல்லுங்கள்” என்று நேரடியாகக்கூறாமல் இப்படி சுற்றி வளைத்துப் பேசியது
சுவாமிஜிக்குப் பிடிக்கவில்லை. எனவே அவர் இதோ பாருங்கள், உங்கள் கேள்வியே சரியில்லை. யார் மேலே, யார் கீழே?
நான் எங்கள் பெண்களை மதிக்கிறேன்” உங்கள் பெண்களையும் மதிக்கிறேன்” என்றார்.
இப்படி சற்று மாறுபட்ட சூழ்நிலையில் அன்றைய சொற்பொழிவு
தொடங்கியது. செற்பெழிவு முடிந்ததும் கேள்வி- பதில் தொடங்கியது. 1894-இல் ஒரு முறை அவர் கேம்ப்ரிட்ஜில் இதே தலைப்பில் பேசியபோது கேட்ட
கேள்விகளையே இப்போதும்கேட்டார்கள். இந்துப்
பெண்களைக் கொடுமைப்படுத்துவது, பால்ய விவாகம், சிறு வயதிலேயே தாயாக்கப் படுவது,
குழந்தைகளை முதலைக்குத் தீனியாக நதிகளில் எறிவது போன்ற கேள்விகளே இருந்தன. சுவாமிஜியும்
அனைத்திற்கும் பொறுமையாகப் பதில் கூறினார்.
கடைசியாக திருமணம்பற்றிய கேள்விகள் எழுந்தன. அவற்றிற்கும்
பதில் அளித்துவிட்டு கடைசியாக, இந்தியாவிலுள்ள திருமண உறவையும், கணவன்- மனைவி தொடர்பையும்
நீங்கள் புரிந்து கொள்ள முடியும் என்று தோன்றவில்லை. ஏனெனில் இந்தியாவில் திருமணத்தின்
நோக்கம் உடலின்பம் அல்ல” என்றார். ஆரம்பத்தில் கேள்விகேட்ட
அந்தப் பெண் மீண்டும் மீண்டும் இது பற்றிய கேள்விகளையே கேட்டு சுவாமிஜியை வற்புறுத்தினார்.
இந்த ஒரு நிகழ்ச்சியைத் தவிர சுவாமிஜி மேடையில் கோபப்பட்டதோ ஆத்திரப்பட்டதோ நான் கண்டதில்லை.
ஒரு கட்டத்தில் அவர் தமது கைகளை ஓங்கி மேஜையில் அடித்ததில் காயம் ஏற்பட்டிருக்குமோ என்று கூட தோன்றியது” என்று எழுதுகிறார் ஹேன்ஸ்ப்ரோ. இல்லை, உங்களால் புரிந்து
கொள்ள முடியாது. இருளின் தனிமையில், காமத்தின் எழுச்சி காரணமாக ஓர் உயிரை உற்பத்தி செய்யும் உறவு முறை இந்தியாவில் கிடையாது” என்று அடித்துச் சொன்னார் சுவாமிஜி.
இதைக்கேட்டதும் அந்தப் பெண்ணும் எழுந்து, இவர் பொய்
சொல்கிறார் இவர் பொய்யர்” என்று கத்தினாள். உடனே சுவாமிஜி,
இந்தியாவைப் பற்றி என்னைவிட நீங்கள் நன்றாக அறிந்திருப்பது புால் உள்ளது. நீங்களோ பேசுங்கள்.
நான் வருகிறேன்” என்று கூறிவிட்டு மேடையிலிருந்து
இறங்கி விட்டார். அவர் அரங்கில் பாதிவரை சென்ற பிறகும் விடாமல் அந்தப் பெண்ணும் அவளது
கூட்டதினரும் தொடர்ந்து சென்று ஏதேதோ கேள்விகள் கேட்டனர். இதற்குள் கூட்டத்திலும் சலசலப்பு
எழுந்தது. கடைசியில் ஒரு வழியாக எல்லாம் அமைதியாயிற்று. அந்தப் பெண் வெளியேறும்போது ஹேன்ஸ்ப் ரோவிடம் ஆத்திரமாக,
முட்டாள் பெண்ணே! அந்த மனிதர் உன்னையே வெறுக்கிறார்” என்பதைக் கூட உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லையா? என்று
கேட்டாள். அதற்கு ஹேன்ஸ்ப்ரோ இல்லை, இன்னும் நான் அதைப் புரிந்து கொள்ளவில்லை” என்றார்
இது ஒன்றும்
புதிதல்ல
...................................
சுவாமிஜியின் இரண்டாவது மேலைநாட்டு பயணத்தில் இது
ஒன்று தான் இத்தகைய ஒரு நேரடித் தாக்குதல் நடை பெற்ற நிகழ்ச்சி. இது சிறிய ஒன்று தான்.
அவரது பெரிய போராட்டங்கள் எல்லாம் முதல் பயணத்திலேயே நிறைவுற்று விட்டன. கிடைத்த ஆயுதங்கள்
ஒவ்வொன்றாலும் அவர்கள் சுவாமிஜியை எதிர்த்தனர். ஆனால் சுய கம்பீரத்தாலும், சுய மகிமையாலும்
அப்பழுக்கற்ற தூய வாழ்க்கையாலும் அவர்களின் தாக்குதல்களை எல்லாம் முறியடித்தார் சுவாமிஜி.
இதனை ஏற்கனவே விரிவாகக் கண்டோம். இந்தத் தாக்குதல்
சுவாமிஜியைப் பொறுத்தவரை ஒரு மிகச் சாதாரண விஷயம். அவர் மேலும் குறைந்தது 12 முறையாவது
அந்த மன்றத்தில் உரையாற்றினார்.
மற்றொரு நாள், எனது வாழ்வும் பணியும்” என்ற தலைப்பில் பேசிய போது, தமது தாய் நாட்டை இழிவாகப்பேசிய
மிஷனரிகளை மிகவும் தாக்கினார். அவர் வட்டார வழக்கிலுள்ள வசை மொழிகளைச் சொற்பொழிவின்
பயன் படுத்தியதை இந்த ஓர் இடத்தில் தான் கேட்டேன்” என்கிறார் ஹேன்ஸ்ப்ரோ, அவ்வளவு தூரம் அவர்களைத் தாக்கிப்பேசி
விட்டு, திரும்பி வரும் வழியில் அவர் ஹேன்ஸ்ப்ரோவிடம், சொற்பொழிவு எப்படி இருந்தது? பிடித்திருந்ததா? என்று கேட்டார். நன்றாக
இருந்தது. ஆனால் கேட்பவர்களின் அதிருப்தியைச் சம்பாதித்து விட்டீர்களோ என்று அஞ்சுகிறேன்” என்றார் ஹேன்ஸ்ப்ரோ.
அவரது அச்சத்தை தமது உதாசீனச் சிரிப்பு ஒன்றாலேயே
உதறிய சுவாமிஜி, மேடம் எனது பேச்சால் அதிருப்தியுற்று, கேட்பவர்கள் மொத்தமாக எழுந்து
வெளியே சென்ற நினழ்ச்சிகள் கூட நியூயார்க்கில் நடைபெற்றதுண்டு. எனவேஇது ஒன்றும் எனக்குப் புதிதல்ல” என்றார்.
சுவாமிஜியைப் பற்றி அவதூறுகளைப் பரப்புவது மிஷனரிகளின்
தாக்குதல் முறையாக இருந்தது தெரிந்ததே. இதையும் சுவாமிஜி தமக்கே உரிய நிதானத்துடன்
பெருந்தன்மையுடனும் தான் எதிர் கொண்டார். இந்த முறையும் அத்தகைய பேச்சு எழுந்தது.பேராசிரியர்
பாம்கர் தம்பதிகள் அவரைக் காண வந்திருந்தபோது இதுபற்றிய பேச்சு எழுந்தது. சுவாமிஜி
அமைதியாக மௌனமாக அனைத்தையும் கேட்ட படி நடந்து
கொண்டிருந்தார். கடைசியாகக்கூறினார், இதோபாருங்கள், நான் யார், நான் என்ன என்பது என்
முகத்தில் எழுதப் பட்டுள்ளது. உங்களால் அதைப்
படித்துப் புரிந்து கொள்ள முடியுமானால் நீங்கள் பேறு பெற்றவர்கள். முடியாவிட்டால்
நஷ்டம் எனக்கல்ல, உங்களுக்குத் தான்.
No comments:
Post a Comment