இந்துமதம்-வகுப்பு-7
நாள்--26-5-2020
..
தீண்டாமை
..
ஆதி காலத்தில் நான்கு ஜாதிகள் இருந்தன என்பதைப்பார்த்தோம்.
ஆரம்ப காலங்களில் சிந்துசமவெளியை ஒட்டிய பகுதிகள் ஆரியர்களின் இருப்பிடாக இருந்தது.
பின்பு படிப்படியாக வடஇந்தியா முழுவதும் அவர்கள் பயணித்து தங்கள் இருப்பிடங்களை விரிவுபடுத்திக்கொண்டார்கள்.
புதிய இடங்களில் ஏற்கனவே வாழ்ந்த மக்களையும் தங்களுடன் இணைத்துக்கொண்டார்கள்.
இதன்பிறகு ஆரியம் என்பதற்கான அர்த்தங்கள் மாற ஆரம்பித்தன.
ஆரியர்களின் சாஸ்திரங்களான ஸ்ருதி(வேதம்),ஸ்மிருதி(சட்டங்கள்) இவைகளை பின்பற்றுபவர்கள் அனைவரும் ஆரியர்கள் என்ற நிலை ஏற்பட்டது.
ஆரியர்கள் எங்கெல்லாம் பயணித்தித்தார்களோ அங்குள்ள மக்கள் அனைவரையும் ஆரிய கலாச்சாரத்திற்குள் கொண்டு வந்தார்கள்..ஸ்மிருதியின் ஆளுகைக்குள் அவர்கள் கொண்டு வரப்பட்டார்கள்.
பாரததேசம் முழுவதும் ஆரியசட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டன.
..
வேதம்,ஸ்மிருதி இவைகளை பின்பற்றிய அனைவரும் ஆரியர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்
ஆரியர் என்றால் பண்டபட்டவர்,ஒளிமிக்கவர் என்று அர்த்தம்
ஆரியர்களின் லட்சியம் முக்தி.
மகாபாரத காலத்தில் பாரதத்தில் வாழ்ந்த நாகரீகமுள்ள மக்கள் அனைவரும் ஆரியர் என்றே அறியப்பட்டார்கள்
..
ஆரியர்களது சட்டங்களை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டார்கள்.
பிராமணர்களைத்தவிர பிற ஜாதியினர் தவறு செய்தால் அவர்களுக்கு சிறை தண்டனை அல்லது மரணதண்டனை விதிக்கும் அதிகாரம் அரசனுக்கு இருந்தது.
ஆனால் பிராமணன் தவறு செய்தால் அவரை தண்டிக்கும் அதிகாரம் அரசனுக்கு இல்லை.
பிராமணர்கள் ஒன்றுகூடி தவறு செய்தவர்களை சமுதாயத்தைவிட்டு விலக்கி வைப்பார்கள்.
இவ்வாறு விலக்கி வைக்கப்பட்டவர்களுடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது.
அவர்களுக்கு உணவு கொடுக்கக்கூடாது,குடிக்க தண்ணீர்கூட கொடுக்கக்கூடாது.பிராமணர்கள் வசிக்கும் பகுதிக்குள் அவர்கள் வரக்கூடாது.
தண்டிக்கப்படும் நபர் தனது எஞ்சிய நாட்களை தவவாழ்க்கையாக மாற்றி பாவபரிகாரம் தேடிக்கொண்டு படிப்படியாக உடலை உகுத்து முக்தி அடையவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்.
.
பிராமணர்களின் கருத்துப்படி.பிராமணன் என்பவன் முக்தியைத்தவிர வேறு எதையும் விரும்பக்கூடாது.
அந்த நிலையில் இருக்கும் ஒருவன் உலக ஆசையால் தூண்டப்பட்டு சிறுதவறு செய்தாலும் பெரும் தண்டனையை பெற வேண்டியிருந்தது.
உதாரணமாக பிராமணர்கள் உண்பதற்கு தடைவிதிக்கப்பட்ட உணவுகளை உண்டால்கூட சமுதாயத்தைவிட்டு,ஜாதியைவிட்டு விலக்கிவைத்துவிடுவார்கள்.
ஆரியர் அல்லாத பிறரது பார்வையில் இவைகள் மிகக்கொடுமையான தண்டனைகளாக தெரியும்.
..
இவ்வாறு சமுதாயத்திலிருந்து,ஜாதியிலிருந்து விலக்கி வைக்கப்படுபவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்று அழைக்கப்படார்கள்.
பிராமண சமுதாயத்தில் இருந்த இந்த பழக்கம் படிப்படியாக பிறஜாதியிலும் புகுந்தது. பிறஜாதியினரும் இதேபோல தவறு செய்யும்போது அவர்களை இவ்வாறு ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தார்கள்.
இவ்வாறு ஒதுக்கி வைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகத்தொடங்கியது.
..
சூத்திரர்கள் எல்லாம் தீண்டத்தகாதவர்களா?
..
ஆரிய சமுதாயத்தில் சூத்திரர்களின் பங்கு மிக முக்கியமானதாகும்.
பெரும்பாலான பணிகளை சூத்திரர்களே செய்து வந்தார்கள்.
அரச சபையில் மன்னனுக்கு சாமரம் வீசும் பெண்கள்,அரசிக்கு பணிவிடை செய்யும் பெண்கள்,அரண்மனைக்காவலர்கள் உட்பட அனைவரும் சூத்திரர்களே.
போர்வீர்ரகளில்,சேனாதிபதி போன்ற உயர்பதவியில் உள்ளவர்கள் தவிர பிறர் அனைவரும் சூத்திர்களே
அத்துடன் வைசியர்களின் வீடுகளில் வீட்டு வேலை செய்தவர்கள் சூத்திரர்களே.
.
தீண்டத்தகாதவர்களுடன் யாரும் பேசவோ,பழவோ,அவர்களை ஊருக்குள் அனுமதிக்கவோ தடைவிதிக்கப்பட்டிருந்தது என்பதைப் பார்த்தோம்
சூத்திரர்கள் தீண்டத்தகாதவர்களாக இருந்தால் அவர்களை எப்படி இந்த வேலைகளில் அனுமதிக்க முடியும்?
எனவே சூத்திரர்கள் தீண்டத்தகாதவர்கள் என்ற கருத்து தவறாகும்.
...
ஆரியர்கள் உணவு விஷயங்களுக்கும்,திருமண உறவுகளுக்கும் மிக முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
ஜாதிவிட்டு,ஜாதி திருமணம் செய்தவர்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தார்கள்.
விலக்கப்பட்ட உணவுகளை உண்பவர்களையும் ஜாதியைவிட்டு விலக்கி வைத்தார்கள்.
இவ்வாறு விலக்கி வைக்கப்பட்டவர்களுக்கு ஜாதி கிடையாது.
...
பல்வேறு படையெடுப்புகள்
..
இவ்வாறு இயங்கிக்கொண்டிருந்த ஆரிய சமூகத்தில் மிகப்பெரும் சோதனைகாக வந்தது,அன்னியர் படையெடுப்புகள்.சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் இந்தியாவின்மீது படையெடுத்து வந்தார்கள்.அதன்பிறகு படிப்படியாக ஹுணர்கள்,மங்கோலியர்,பாரசீகர் என்று பலர் படையெடுத்து வந்தார்கள்.
இந்த படையெடுப்புகளில் ஆரியர்கள் பலர் கொல்லப்பட்டார்கள்.அத்துடன் பிற நாட்டினர் ஏராளமாக இநத்தியாவிற்குள் நுளைந்தார்கள்.
பல இடங்களில் ஆரியர்கள் அல்லாதவர்கள் நாட்டை ஆட்சிசெய்தார்கள்.
ஆக்கியமாக ஆரியர்களின் பூர்வீக இருப்பிடங்களான காந்தார சேதம் அதாவது தற்போதைய Afghanistan, Iran, Kazakhstan, Uzbekistan,Pakistan போன்ற பகுதிகள் ஆரியர்களின் கைவிட்டு அகன்றது.
வெளிநாட்டினரின் படையெடுப்பிற்குப்பிறகு ஆரியர்களின் சட்டங்கள் கேள்விக்குறியானது.
...
ஆரியர்கள் அல்லாதவர்களை தங்களுக்குள் சேர்த்துக்கொள்ள ஆரியர்கள் விரும்பவில்லை.
1.ஆரியர் அல்லாதவர்கள் வேதத்தையும்,ஸ்மிருதிகளையும் பின்பற்ற விரும்புவதில்லை
2.உணவு விஷயத்தில் ஆரியர் அல்லாதவர்கள் எந்தவித கட்டுப்பாடும் இல்லாதவர்களாக இருந்தார்கள்.முக்கியமாக விலக்கி வைக்கப்பட்ட உணவுகளான பன்றி,கோழி,வளர்ப்பு பிராணிகள் போன்றவைகளை உண்டார்கள்.
..
எனவே ஆரியர் அல்லாதவர்களை தீண்டத்தகாதவர்கள் என்றே கருதினார்கள்.
...
தீண்டத்தகாதவர்கள்
..
1.ஆரியர் அல்லாத பிற நாட்டைச்சேர்ந்தவர்கள்.
2.பிறநாட்டிலிருந்து பிழைப்புக்காக இந்தியாவிற்குள் வந்தவர்கள்.
3.இடம்விட்டு இடம்சென்று நாடோடி வாழ்க்கை வாழ்பவர்கள்
4.இந்தியாவை பூர்வீகமாக்கொண்ட நாகரீகமற்ற மக்கள்
5.ஜாதியிருந்து விலக்கிவைக்கப்படுபவர்கள்
...
பல நூற்றாண்டுகள் கடந்தபிறகு தீண்டத்தகாதவர்களின் எண்ணிக்கை பெருமளவிற்கு உயர்ந்திருந்தது.
அவர்களுக்கு ஆரிய சமூகத்தில் உரிய இடம் வழங்கப்படாததால் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்குள் வந்த முஸ்லீம்,கிறிஸ்தவ மதங்களை பின்பற்ற ஆரம்பித்தார்கள்.
No comments:
Post a Comment