சுவாமி விவேகானந்தரின்
விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-32
🌸
பேலூர் மடத்து
நாட்கள்
..............
சுவாமிஜியின்
வாழ்க்கையில் முக்கியப் பணிகள் ஒவ்வொன்றாக நிறைவேறின. கடமைகளைச் சிறப்பாக நிறைவேற்ற
குடும்பத் தலைவன் தனது பிள்ளைகளும் சந்ததிகளும் தனது பாதையில் நடைபோடுவதைப்பெருமையுடன்
பார்ப்பதைப்போல், ஸ்ரீராமகிருஷ்ணரின் பணி தமது சந்ததியால் சிறப்பாக வளர்வது கண்டு பெருமை
கொண்டார் சுவாமிஜி.
பேலூர் மடம் நிறுவப் பட்டதிலிருந்து சுமார் ஆறு மாதங்கள்
சுவாமிஜி கல்கத்தாவில் இருந்தார். இந்த நாட்களை அவர் மடத்திலும், சில வேளைகளில் பலராம்
போஸின் வீட்டிலுமாகக் கழித்தார். அவர் எங்கிருந்தாலும் புதிய தலைமுறையினரை உருவாக்குவது, துறவுக்கு உன்னத லட்சியங்களாக த் திகழ்கின்ற சில
துறவியரை விட்டுச்செல்வது, அதன் மூலம் ஸ்ரீராமகிருஷ்ணரின் மாபெரும் பணி தொடர்ந்து நடைபெறச்
செய்வது என்பது அவரது நோக்கமாக இருந்தது. அதற்கேற்ப தமது வழிகாட்டுதல் மூலமும், அதற்குமேல்
தமது வாழ்க்கை மூலமும் இளம் துறவியருக்கு எப்போதும் உதவினார் அவர்.
சுவாமிஜி சில வேளைகளில் பலராம்போஸின் வீட்டில் சென்று
தங்குவது மற்றொரு விதத்திலும் நன்மை விளைத்தது. பேலூர் மடம் கல்கத்தாவிலிருந்து சற்று தொலைவில் இருந்ததால் பலராம்
அவரைச் சென்று காண முடியவில்லை. கல்கத்தாவில் அவர் பலராம்போஸின் வீட்டில் வரும்போது பலர் அவரைக் காண முடிந்தது.
அதன் மூலம், குறிப்பாக இளைஞர்கள், அவரிடம் நெருங்கிப் பழக முடிந்தது. சுவாமிஜியின்
கருத்துக்களால் தங்கள் வாழ்க்கையைப்பொருள் பொதிந்ததாக மாற்றிக்கொள்ள முடிந்தது.
பணிவும் பரவசமும்
இவ்வாறு ஒரு முறை சுவாமிஜி பலராம்போஸின் வீட்டில்
தங்கியிருந்தார். அப்போத அவரைக் காண விஜய்கோசுவாமி வந்திருந்தார். சுவாமிஜி அவரை வரவேற்பதற்காக
அங்கே வந்தார். விஜயர் ஸ்ரீராமகிருஷ்ணரின் நெருங்கிய சீடர். அது மட்டுமின்றி, சுவாமிஜியின்
பிரம்ம சமாஜ நாட்களில் அவருக்கு ஆச்சாரியராகத் திகழ்ந்தவர். அந்த மரியாதை நிமித்தமாக
சுவாமிஜி அவரது பாதங்களைத் தொட்டு வணங்கச்சென்றார். தம் முன் ஒரு மாணவனாக வளைய வந்த
நரேன் இன்று உலக குருவாகத் திரும்பி வந்திருப்பது கண்டு, அந்த மரியாதையில் அவரது
பாதங்களைப் பணியச் சென்றார் விஜயர். ஆனால் இருவரும் ஒருவர் பாதங்களை மற்றவர் தொட அனுமதிக்கவில்லை.
மீண்டும்ஒரு முறை இருவரும் முயற்சித்தனர்.ஆனால் நடக்கவில்லை. கடைசியில் சுவாமிஜி சிரித்தபடியே
விஜயரின் கையைப் பிடித்துக்கொண்டு , கீழே விரிக்கப் பட்ட விரிப்பில் அமர்ந்து, அவரைத்
தம் பக்கத்தில் அமர்த்திக்கொண்டார்.
விஜயரின் உணர்ச்சிகள் பெருக்கெடுத்து, அவர் ஆழ்ந்த
பரவசத்தில் இருந்தார். எவ்வளவோ முயற்சி செய்தும் அவரால்பேச முடியவில்லை.. ஸ்ரீகுருதேவர்
அருள் கூர்ந்து என்னை ஆசீர்வதித்துவிட்டார்.” என்று துண்டு துண்டாகச் சில வார்த்தைகள் மட்டுமே வெளிவந்தன.
சுவாமிஜியின் சான்னித்தியம் அவரிடம் அவ்வளவு தெய்வீக அலைகளை எழுப்பியிருந்தது. அவர்
அசைவின்றி அமர்ந்திருந்தார். அவரது கண்களில் நீர் பொங்கி கன்னங்கள் வழியாக வழிந்தோடியது.
அவர்களை அந்த நிலையில் கண்ட பக்தர்கள் இருவரையும்
சுற்றி சங்கீரத்தனம் செய்தபடியே ஆடினர். அது ஒரு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
இந்த நாட்களில் சுவாமிஜியின் ஆஸ்த்மா தீவிரமாகியது.
உடம்பைத்தேற்றிக்கொள்வதற்காக அவர் தேவ்கருக்குச்செல்வதென்று
முடிவாயிற்று. பிரம்மசாரி ஹரேந்திர நாத் சுவாமிஜியுடன் சென்றார். உடல்நிலை காரணமாக சுவாமிஜி தேவ்கருக்கு
வந்துள்ள செய்தி அங்கே பலருக்கும் தெரிய வந்தது. அங்கே மெட்ரிகுலேஷன் படித்துக்கொண்டிருந்தவர்
கே.எஸ் கோஷ். அவரும் ஒரு நண்பருமான சுவாமிஜிரயத்
தரிசிப்பதற்காகக் கிளம்பினர். ஆச்சரியம்! அவர்கள்
அறையைவிட்டு வெளியே வந்தால் சுவாமிஜி அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். ஓடிச்சென்று அவர்கள் இருவரும் சுவாமிஜியின்
பாதங்களைத்தொட்டு வணங்க முயற்சித்தனர். சுவாமிஜி விரைந்து பின் வாங்கினார். அவர்கள்
தமது பாதங்களைத் தொட அவர் ஏனோ அனுமதிக்கவில்லை. அவர்கள் ஏதோ பேச முயற்சித்தபோது அவர்களிடம், தம்முடன் தொடர்ந்து
நடக்குமாறு கூறிவிட்டு போகத் தொடங்கினார்.
வழியில் அவர்களின் உடல் நிலை, சுகாதாரம் , விடுதி,
அங்குள்ள உணவு என்று பல விஷயங்களை விசாரித்தார்.
அவர்களுக்கு அறிவுரையும் வழங்கினார் சுவாமிஜி. உணவு பற்றி பேசியபோது, தியமும் சிறிது நெய் சாப்பிடுவது நல்லது. வெண்ணெய் அதைவிட ச் சிறந்தது என்றார். தூரத்தில் தெரிந்த அழகிய பெரிய மலைத் தொடரைக்காட்டி, அவர்கள் அங்கே சுற்றுலா சென்றதுண்டா
என்று கேட்டார். இல்லை என்று கூறியதும், விரைவில்
ஒரு முறை அங்கே சுற்றுலா சென்றுவாருங்கள், சுற்றுலா உடம்பிற்கும் நல்லது, மனத்திற்கும்
புத்துணர்ச்சி அளிக்கும், என்று கூறினார்.
பேசிக்கொண்டே
சென்றபோது கோஷின் ஷீவில் நாடா அவிழ்ந்திருப்பதைக் கண்டார் சுவாமிஜி. அவரிடம்
அதனைச் சரியாகக் கட்டுமாறு கூறினார். திடீரென்று ஷீ நாடாவைப் பற்றி கூறியதும் கோஷ்
குழம்பிப்போனார். அவர் திகைத்து நிற்பதைக்கண்ட சுவாமிஜி குனிந்து, சரி, நானே கட்டுகிறேன்” என்று கூறிவிட்டு கட்டத்தொடங்கினார். திடுக்கிட்டு நின்றார்
கோஷ். அவர் சுதாரிப்பதற்குள், சுவாமிஜி மிக நேர்த்தியாகக் கட்டி முடித்திருந்தார்.
சுவாமிஜி தன் கால்களைத் தொடுடுவதற்கு அனுமதித்தால் ஏதோ பாவம் செய்து விட்டதாககருதிய
கோஷ் ஒரு பரிகாரம் போல் மீண்டும் சுவாமிஜியின் பாதங்களைத் தொட்டு வணங்கச்
சென்றார். முன்பு போலவே சுவாமிஜி அதற்கு அவரை அனுமதிக்கவில்லை.
நண்பர்கள் இருவரும் விடுதிக்குத் திரும்பினர். இதற்குள்,
உலகப் புகழ் பெற்ற விவேகானந்தர்” கோஷின் ஷு நாடாவைக் கட்டியது
பற்றி விடுதி முழுவதும் பரவிவிட்டது. நண்பர்கள் பலரும் வந்து அதைப் பார்ப்பதும் தொடுவது
மாக நேரம் கழிந்தது.ஷுவை க் கழற்றுவதற்கு யாரும் அவரை அனுமதிக்கவில்லை. கடைசியில் எல்லோரும்
தூங்கிய பிறகு நள்ளிரவில் கனத்த இதயத்துடன் நாடாவை அவிழ்த்தார் கோஷ்.
தேவ்கரில் சுவாமிஜியின் உடல்நிலை சற்று சீர்பட்டது.
சுவாமிஜியும் சற்று நம்பிக்கை கொள்ளவே செய்தார். அமெரிக்கா திரும்பஇருந்த சாராவும்
மெக்லவுடும் சுவாமிஜியை உடன் வருமாறு அழைத்தனர். சுவாமிஜி நமது நிலைமையைவிளக்கி உங்களுடன்
நான் வர இயலாது. என்பது உங்களுக்கே தெரியும். அதற்குப்போதிய வலிமை இன்னும் வரவில்லை.
சளி இன்னும் இருக்கிறது, அது என்னை பயணத்திற்குத்
தகுதியற்றவன் ஆக்குகிறது. இங்கு என் உடல்நிலை தேறும் என்று நம்புகிறேன்” என்று அவர்களுக்கு கடிதம் எழுதினார். ஆனால் எதிர் பாராத விதமாக
திடீரென்று, அவரது உடல் நிலை மோசமடைந்தது.
ஆஸ்த்மா தீவிரமாகியது. அவர் மரணத்தின் விளிம்பிற்கே சென்று மீண்டார் என்று தான் சொல்லவேண்டும்.
சாரதானந்தரையும், சதானந்தரையும் உடனடியாக தேவ்கருக்கு
அனுப்புமாறு பேலூர் மடத்திற்கு தந்தி அனுப்பப்பட்டது.
ஒரு நாள் ஜன்னிக் கண்டது போல் வெட்டி இழுக்க ஆரம்பித்தது. பார்த்து நின்ற தவிப்பைத்
தவிர யாராலும் எந்த உதவியும் செய்ய இயலவில்லை.
உயரமான தலையணையில் தலையைச் சாய்த்தபடி சுவாமிஜி யும் மரணத்தை எதிர்கொள்ள தயாரானார்.
ஒருநாள், அல்ல இரண்டு நாள், அல்ல, எட்டு நாட்கள் இவ்வாறு மரணத்தின் விளிம்பில் ஊசலாடினார் சுவாமிஜி.
அதன் பிறகு நிலைமை முன்னேறி.. ஒரு நடை பிணமாக என்னை கல்கத்தாவிற்கு கொண்டு வந்தார்கள்
என்று எழுதினார் அவர். தாம் மூச்சுவிட்ட சத்தம் ஸோஹம், ஸேஹம்.....( அஹம்- பரம் பொருளே
நான்) என்று தமக்கு கேட்டதாக பின்னர் சுவாமிஜி தெரிவித்தார். 1899- ஜனவரி
22-ஆம் நாள், சுவாமிஜி தேவ்கரிலிருந்து கல்கத்தாவிற்குத் திரும்பினார். அடுத்த நாள்
அவர் நிவேதிதையை அழைத்து இருந்தார்.அவரைக் காணச்சென்று நிவேதிதை, எழுதுகிறார் மன்னர்
நேற்றிரவு திரும்பினார். இன்று காலை எட்டு அளவில் என்னை அழைத்திருந்தார். அவரை அவரைப்
பார்த்துவிட்டு ஒரு மணிநேரத்திற்கு முன்பு தான் திரும்பினேன். அவர் தெய்வீக பொலிவுடனேயே திகழ்கிறார். அவரது தோற்றம் அற்புதமாக உள்ளது. மூன்று
இரவுகள் மூச்சிற்காகப்போராடியதாக என்னிடம் தெரிவித்தார்.ஆனால் அவரிடம் எதிர்காலத் திட்டங்களுக்குக்
குறைவே இல்லை. இத்தகைய ஒரு நிலையில் நான் அவரைக் கண்டதில்லை.
சுவாமிஜியின்
வழி காட்டுதல்-
மடத்து நிர்வாகத்தைத் சாரதானந்தர் சிறப்பாகக் கவனித்து வந்தார். அதற்காகவே
சுவாமிஜி அவரை அமெரிக்காவிலிருந்து வரவழைத்திருந்தார். அமெரிக்காவில் சாரதானந்தர் மிக
நல்ல பணியாற்ற முடியும் என்று தெரிந்திருந்தாலும் பேலூர் மடத்தில் அவரது தேவையை மிகவும்
உணர்ந்தார் சுவாமிஜி. அது மட்டுமின்றி அமெரிக்காவில் அபேதானந்தர் வெற்றிகரமாக வேலை
செய்து வந்ததால், பணிகள் தொடர்ந்து நடைபெறும்
என்பது சுவாமிஜிக்குத் தெரிந்திருந்தது. சாரதானந்தர் திரும்பி வந்ததிலிருந்து நிர்வாகப்
பணயை மிகுந்த உற்சாகத்துடன் ஏற்றுக்கொண்டார். கேள்வி- பதில், சம்ஸ்கிருதம், கீழை-மேலை
தத்துவம் ஆகிய வகுப்புகளைத் துரியானந்தர் முறையாகநடத்தினார். தினமும் தியான வகுப்புகள்
நடைபெற்றன. தனிமையில் ஒருவர் தியானம் செய்வதைப்
பார்ப்பது போல் சுவாமிஜிக்கு வேறு எதுவும் அவ்வளவு மகிழ்ச்சி தராது.
மடத்தின் தினசரி நடவடிக்கைகள் இளம் துறவியரின் பொறுப்பில்
விடப்பட்டன. பொறுப்பை அவர்களும் உணர வேண்டும் என்று விரும்பினார் சுவாமிஜி. இளம் துறவிகளும்
பிரம்ம சாரிகளும் ஒரு குழுவாக மாதந்தோறும்
கூடி பணிகள் பற்றி விவாதித்தனர். தங்களுக்குள் தலைவர் ஒருவரையும் தேர்ந்தெடுத்துச்
செயல் பட்டனர். காலம் தவறாமை, தூய்மை போன்றவை மிகவும் கடைபிடிக்கப் பட்டன. அனைவரின்
ஈடுபாடும் பொறுப்புணர்ச்சியும் சுவாமிஜிக்கு மிகுந்த மகிழ்ச்சியைத்தந்தது.
துறவு, பிரம்மசரியம், சேவை, முக்தி போன்ற லட்சியங்களை
வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சுவாமிஜி இளைஞர்களின் மனத்தில் பதிய வைத்தார். அதற்கு மேல் அவரது நிதர்சனமான வாழ்க்கை கொழுந்து விட்டெரியும் துறவிகள்
அக்னியாக இளைஞர்களின் முன்னால் நின்றது. பிரம்மசரியம் என்பது நாடி நரம்புகளில் எல்லாம் கனலாக எரியவேண்டும்”. சொந்த முக்தியும் பிறருக்குச்சேவையும் என்பது தான் நமது லட்சியம்
என்பதை ஒருபோதும் மறவாதீர்கள்” என்று மீண்டும் மீண்டும் இளைஞர்களிடம்
எடுத்துக் கூறினார்.
வழுவாத பிரம்மச்சரியத்தை அடிப்படையாகக்கொண்ட துறவு- இறையனு பூதிக்கு இது
ஒன்றே சாவி என்ற உண்மையை சுவாமிஜி மீண்டும் மீண்டும் வற்புறுத்தினார். ஒரு துறவியின்
வாழ்க்கை என்பது தொடர்ந்து அவன் தன் மனத்துடன்
நிகழ்த்தும் போரே தவிர வேறல்ல. இந்த போரில் வெல்ல வேண்டுமானால் அவன் தீவிரமான தவ வாழ்க்கை,
புலனடக்கம், மன ஒருமைப்பாடு ஆகியவற்றைக் கடைப் பிடித்தேயாக வேண்டும். ஒரு முறை ஒருவர்
தேவையற்ற கேள்வி ஒன்றைக்கேட்ட போது சுவாமிஜி
கோபத்துடன், போ, போய் தவம் செய். சிறிது காலம் தவம் செய்தாயானால் மனம் தூய்மையாகும். அப்போது இத்தகைய முறைகேடான கேள்விகளைக்கேட்க
மாட்டாய், என்றார்.
ஆரம்ப நாட்களில் எல்லா விஷயங்களிலும் தீவிரமான கட்டுப்
பாடும் கண்காணிப்பும் அவசியம் என்பார் சுவாமிஜி.
உணவு கட்டுப்பாடு மிக முக்கியமாகக் கருத்தில் கொள்ளத் தக்கது. உணவில் கட்டுப்பாடு இல்லாமல்
மனத்தைக் கட்டுப்படுத்துவது இயலாத காரியம். தேவைக்கு அதிகமாக உண்பது பல தீமைகளை உண்டாக்குகிறது.
அளவுக்கு மீறிச் சாப்பிடுவதால் உடம்பும் மனமும் கெட்டுப்போகின்றன என்பார் அவர்.
துறவியர் இல்லறத்தாரிடமிருந்துஅகன்றிருப்பதன் அவசியத்தையும்
அவர் எடுத்துரைப்பார். உலக வாழ்க்கையில் மூழ்கி கிடக்கின்ற மக்களின் உடம்பிலிருந்தும்
துணியிலிருந்தும் ஒரு விதமான காம வாடை வீசுவதை நான் உணர்கிறேன். என்னால் அதைச் சகிக்க முடிவதில்லை.
இது பற்றி நான் சாஸ்திரங்களில் படித்திருக்கிறேன். துறவும் தூய்மையும் நிறைந்தபுனிதர்களால் ஏன் உலகியல் மனிதர்களின் ஸ்பரிசத்தைப்பொறுத்துக்
கொள்ள இயல்வதில்லை என்பதை நான் இப்போது புரிந்து கொள்கிறேன்” என்பார் அவர்.
அது போலவே இளம் துறவியரும் பிரம்மசாரிகளும் பெண்களிடம்
நெருங்கிப் பழகுவதையும் சுவாமிஜி ஏற்றுக் கொள்ளவில்லை. அன்னை ஸ்ரீசாரதாதேவி கல்கத்தாவிற்கு வரும்போது, அவரது சேவைக்கென்று கூட இளம் துறவியர்
அங்கே செல்வதை சுவாமிஜி விரும்பவில்லை. ஏனெனில் அங்கே பெண்கள் ஏராளமாகக் கூடுவார்கள்.
இதன் பொருள் சுவாமிஜி இல்லறத்தாரையும் பெண்களையும் வெறுத்தார் என்பது அல்ல. ஆண்களும் பெண்களுமான
சில இல்லறத்தார் அவரது மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். அவர்களின் வாழ்க்கையைத்
தமது சீடர்களுக்குக் கூட உதார வாழ்க்கையாக அவர் காட்டியதுண்டு. இல்லற லட்சியம் பற்றி
பின்வருமாறு சுவாமிஜி கூறுவார்.
இல்லற லட்சியத்தின்
பெருமை எனக்குப் புரிகிறது. நல்ல வழியில் சம்பாதிப்பது, நல்ல காரியங்களில் அதனைச்செலவு
செய்வது, குடும்பத்தைப் பாதுகாப்பது, பெரியவர்களுக்குத் தொண்டு செய்வது, ஓர் ஆன்மீக
லட்சியத்தை ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை நிறைவு செய்வது என்று இல்லற வாழ்க்கை ஓர் உன்னதமான
லட்சியம் என்பதில் சந்தேகம் இல்லை. திருமணமும் ஒரு பாதை தான். ஏன், சிலருக்கு அதுதான்
பாதை. ஆனால் துறவு வாழ்க்கையை ஏற்றுக்கொண்டவன், உலகின் அனைத்தும் பயத்துடன் பின்னிப்
பிணைந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
துறவு மட்டுமே ஒருவனைப்பயமின்றி வாழச்செய்கிறது. இல்லற லட்சியத்தின் பெருமையை நீங்கள்
உணர்ந்து வாழவேண்டும்.
நாக மகாசயர்
-
இல்லறத்தாரை அவர் எவ்வளவு போற்றினார் என்பதை ஒரு
முறை நாக மகாசயர் மடத்திற்கு வந்தபோது அவர் நடந்து கொண்ட விதத்திலிருந்து காண முடிந்தது.சுவாமிஜியை
சாட்சாத் சிவபெருமானாகவே கண்டார் நாகமகா சயர். சுவாமிஜி இருக்கும் இடத்தில் அவர்
அமரமாட்டார். கைகூப்பியபடியே நிற்பார். நாக
மகாசயர் சரத் சந்திரருடன் மடத்திற்கு வந்திருந்தார்.
சுவாமிஜி( நாகமகாசயரை வணங்கி)- நலம் தானே?
நாக மகாசயர்- உங்களைத் தரிசிப்பதற்காக வந்தேன். ஜெய்
சங்கரா! ஜெய் சங்கரா! இன்று சிவ தரிசனம் பெற்று விட்டேன்.
இவ்வாறு சொல்லியபடி நாக மகா சயர் சுவாமிஜியின் முன்
இரண்டு கைகளையும் கூப்பி வணங்கியபடி பணிவுடன் நின்று கொண்டிருந்தார்.
சுவாமிஜி-
உங்கள் உடல்நிலை எப்படி இருக்கிறது?
நாகமகாசயர்-
தசையும் எலும்புகளும் சேர்ந்த கூடாகிய , எதற்கும் உதவாத இந்த உடம்பைப்பற்றி ஏன் கட்கிறீர்கள்!
உங்களைக் கண்டதால் நான் பேறு பெற்றேன், பேறு பெற்றேன்.
இவ்வாறு கூறி அவர் நெடுஞ்சாண் கிடையாகத் தரையில்
விழுந்து சுவாமிஜியை வணங்கினார்.
சுவாமிஜி( அவரைத் தூக்கியபடி)-
என்னகாரியம் செய்கிறீர்கள்?
நாக மகாசயர்-
இன்று நான் சிவ தரிசனம் பெற்றேன். என் அகக் கண்களால்
நான் அதை க் காண்கிறேன். ஜெய் ஸ்ரீராமகிருஷ்ணா!
சுவாமிஜி( சரத்தைப் பார்த்து)-
உண்மையான பக்தி மனிதனை எப்படி மாற்றுகிறது பார்த்தாயா?நாக
மகாசயர் தெய்வீகத்தில் மூழ்கி தம்மையே விட்டிருக்கிறார். உடம்பைப் பற்றிய நினைவு அவரிடம்
அறவே இல்லை.
இப்படி இன்னொருவரைக் காண முடியாது. ( பிரேமானந்தரிடம்)-
நாக மகாசயருக்குக் கொஞ்சம் பிரசாதம் கொண்டு வா.
நாகமகாசயர்-
பிரசாதமா! பிரசாதமா! (கைகளைக் குவித்து சுவாமிஜியை
வணங்கிய படி) உங்களைக் கண்டதும் இன்று என் பிறவிப் பசியே தீர்ந்து விட்டது.
அப்போது துறவிகள் மற்றும் பிரம்மச் சாரிகளுக்கு உபநிஷத
வகுப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தது. சுவாமிஜி அவர்களிடம், இன்று குருதேவரின் மகத்தான
பக்தர் ஒருவர் வந்திருக்கிறார். எனவே இன்று உங்களுக்கு வகுப்பு தேவையில்லை” என்றார். உடனே எல்லோரும் புத்தகங்களை மூடி வைத்துவிட்டு,
நாகமகாசயரைச் சுற்றி அமர்ந்தார்கள். சுவாமிஜியும் அவருக்கு முன்னால் உட்கார்ந்தார்.
சுவாமிஜி-
( எல்லோரையும் பார்த்து)-
பாருங்கள்! நாக மகாசயரைப் பாருங்கள். இவர் இல்லறத்தில்
இருப்பவர். ஆனால் உலகம் என்ற ஒன்று இருப்பதைப் பற்றிய உணர்வே இவருக்கு இல்லை. எப்போதும்
இறையுணர்விலேயே ஆழ்ந்திருக்கிறார். (நாகமகாசயரிடம்)
எங்களுக்கும் பிரம்மசாரிகளுக்கும் குருதேவரைப் பற்றி சிறிது சொல்லுங்கள்.
நாகமகாசயர்- என்ன சொல்கிறீர்கள்! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்! அவரைப் பற்றி நான் என்ன சொல்வேன்? அவரது அவதார ப்
பணியில் உதவியாக இருக்கும் மகாவீரரான தங்களைத் தரிசிக்க வந்தேன். இப்போது அவரது உபதேசங்களை
மக்கள் புரிந்து கொள்வார்கள். ஜெய் ராமகிருஷ்ண! ஜெய் ராமகிருஷ்ண!
சுவாமிஜி- ஸ்ரீராமகிருஷ்ணரை உள்ளபடி புரிந்து கொண்டவர்
நீங்கள் தாம். நாங்கள் இங்குமங்கும் சுற்றிக் கொண்டிருக்கிறோம். அவ்வளவு தான்.
நாகமகாசயர்- ஓ! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நீங்கள்
குருதேவரின் நிழல், நீங்கள் இருவரும் ஒரே நாணயத்தின்
இரண்டு பக்கங்கள், கண்ணுள்ளவர்கள் இதைக் காணட்டும்!
சுவாமிஜி- இந்த மடங்களையெல்லாம் ஆரம்பித்தது சரியான
வழிதானா?
நாகமகாசயர்-
நான் அற்பன். எனக்கு என்ன தெரியும்? நீங்கள் என்ன
செய்தாலும் அது உலகிற்கு நன்மையே செய்யும். ஆமாம், நன்மையே செய்யும்.
பல பிரம்மசாரிகளும் சாதுக்களும் நாக மகாசயருடைய திருப்
பாதங்களைத் தொட்டு வணங்க முயன்றார்கள். இது நாக மகாசயரிடம் பதற்றத்தை ஏற்படுத்தியது.
உடனே சுவாமிஜி, அவரைத் தொந்தரவு செய்யாதீர்கள். அவர் மிகவும் சங்கடப்படுகிறார்” என்றார். இதைக்கேட்டதும் எல்லோரும் தங்கள் இடங்களில் சென்று
அமர்ந்தார்கள்.
சுவாமிஜி-
நீங்கள் ஏன் மடத்தில் வந்து தங்கக் கூடாது? உங்கள்
வாழ்க்கை , இங்குள்ள பிரம்மசாரிகளுக்கு நல்ல பாடமாக அமையும்.
நாமகாசயர்-
ஸ்ரீராமகிருஷ்ணரிடம் நான் இதைப் பற்றி ஒரு முறை கேட்டேன்.
அதற்கு அவர், இல்லறத்திலேயே இரு” என்றார். எனவே குடும்பத்திலேயே
இருக்கிறேன்” உங்களையெல்லாம் இடையிடையே தரிசிக்கும்
பேறு பெறுகிறேன்.
சுவாமிஜி-
தங்கள் ஊருக்கு நான் ஒரு முறை வரலாம். என்று எண்ணியுள்ளேன்.
இதைக்கேட்டதும் நாகமகாசயர் ஆனந்தத்தால் பைத்தியம் போலவே ஆகி விட்டார். அந்த நாள் என்று
வரும்? அந்தத் தலமே காசியாகி விடும். அந்தப்பேறு எனக்குக் கிடைக்குமா? என்று உணர்ச்சி பொங்கக்கேட்டார்.
சுவாமிஜி-
அங்கு வர வேண்டுமென்று ஆசை இருக்கிறது. தேவி அழைத்து
வந்தால் வருவேன்.
நாகமகாசயர்-
உங்களை யார் புரிந்து கொள்ள முடியும்? யார் புரிந்து
கொள்ள முடியும்? அகக்கண் திறக்காமல் உங்களை
யாராலும் புரிந்து கொள்ள முடியாது. ஸ்ரீராமகிருஷ்ணர் மட்டும் தான் உங்களைப் புரிந்து
கொண்டார்.
பிறர் அவர் சொன்னதை நம்பினார்கள். அவ்வளவு தான்,
அல்லாமல் உங்களை யார் புரிந்து கொண்டார்கள்!
சுவாமிஜி-
இப்போது என் ஒரே ஆசை இந்த நாட்டை எழுச்சிபெறச்செய்ய
வேண்டும் என்பது தான். தன் சக்தியில் நம்பிக்கை இழந்து, எந்த விதமான உணர்ச்சியும் இல்லாமல்
மக்கள் உறங்கிக் கொண்டிருப்பது போல் உள்ளது. அவர்களை எப்படியாவது எழுப்பி, அவர்களிடம் சனாதன தர்மத்தின் உணர்வை ஊட்டி
விட்டேனானால், ஸ்ரீராமகிருஷ்ணரும் நாமும் பிறந்தது பயன் உடையதாகி விட்டது என்பதைப புரிந்து
கொள்ளலாம். இந்த ஆசை மட்டுமே உள்ளது. முக்தி முதலியவை எல்லாம் எனக்குத் துச்சமாகத்
தெரிகிறது. என் ஆசை நிறைவேற நீங்கள் ஆசீர்வதியுங்கள்.
நாகமகாசயர்-
ஸ்ரீராமகிருஷ்ணர் ஆசீர்வதிப்பார் . உங்கள் விருப்பத்தை
யாரால் தடுக்க முடியும்? நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அது நடந்தே தீரும்.
சுவாமிஜி- அவரது விருப்பம் இல்லையென்றால் எதுவுமே
நடக்காது.
நாகமகாசயர்-
அவர் விருப்பமும் உங்கள் விருப்பமும் ஒன்றாகி விட்டது. உங்கள் விருப்பமே அவருடைய விருப்பமும். ஜெய் ராமகிருஷ்ண! ஜெய ராமகிருஷ்ண!
சுவாமிஜி-
வேலை செய்ய வேண்டு மென்றால் வலிமையான உடல் வேண்டும்.
இந்த நாட்டிற்கு வந்ததிலிருந்தே என் உடல் நலம்
சரியில்லை. மேலை நாடுகளில் இருந்தபோது நல்ல உடல் நலத்தோடு இருந்தேன்.
நாகமகாசயர்-
உடலெடுத்தால் வாடகை கொடுத்தேயாக வேண்டும் என்று குருதேவர்
சொல்வது வழக்கம். நோய்களும் துன்பமும் தான் வாடகை. உங்கள் திருமேனியோ தங்கப் பெட்டி.
அதை மிகவும் கவனமாகக் காக்க வேண்டும். யார்
அதைச் செய்வார்கள்? யார் இதைப் புரிந்து கொள்வார்கள்? ஸ்ரீராமகிருஷ்ணர் மட்டும் தான்
புரிந்து கொண்டார். ஜெய் ஸ்ரீராமகிருஷ்ண! ஜெய்
ஸ்ரீராமகிருஷ்ண!
சுவாமிஜி-
மடத்தில் உள்ளோர் என்னை நன்றாகக் கவனித்துக்கொள்கிறார்கள்.
நாகமகாசயர்- யார் கவனித்துக்கொள்கிறார்களோ, அவர்களுக்குத்
தான் நன்மை. அவர்களுக்குத் தெரிந்தாலும் சரி, தெரியாவிட்டாலும் சரி, இது உண்மை. சரியான அக்கறை எடுத்துக் கொள்ளாவிட்டால்
அது நிலைக்காமல் போய் விடுகின்ற அபாயம் உள்ளது.
சுவாமிஜி-
நாகமகாசயரே! நான் என்ன செய்கிறேன். என்ன செய்யவில்லை
என்பது புரியவில்லை. ஒரு குறிப்பிட்ட வேளையில் ஒரு குறிப்பிட்ட திசையில் வேலை செய்வதற்கு
ஆர்வம் கொள்கிறேன். அதன் படியே காரியங்களைச் செய்கிறேன். அது நல்லதற்கா, கெட்டதா என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
நாகமகாசயர்- பெட்டி இப்போது பூட்டப் பட்டது என்று
ஸ்ரீராமகிருஷ்ணர் கூறினார். எனவே முழுவதுமாக றெிந்து கொள்ள உங்களை விட மாட்டார். நீங்கள்
அதை அறிந்து கொண்டால் உங்கள் இகவுலக வாழ்க்கை முடிந்துவிடும்.
இதைக்கேட்டதும் சுவாமிஜி வெட்ட வெளியைப் பார்த்த
படி சிறிது நேரம் ஆழ்ந்த சிந்தனையில் நின்றார்.
அப்போது பிரேமானந்தர் பிரசாதம் கொண்டு வந்து
நாக மகாசயருக்கும் பிறருக்கும் கொடுத்தார். நாகமகாசயர் அதை இரு கைகளாலும் வாங்கி, ஆனந்தக் கூத்தாடியபடி உட்கொண்டார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு சுவாமிஜி குளத்தின் அருகே
மண் வெட்டியால் எதையோ தோண்டிக் கொண்டிருப்பதை நாக மகாசயர் கண்டார். அதைக் கண்டதும்
நேராக அவரிடம் சென்று அவரது கைகளைப்
பிடித்து, நாங்கள் இங்கே இருக்கும்போது நீங்கள் ஏன் இதை யெல்லாம் செய்கிறீர்கள்?
என்று கூறி மண்வெட்டியை வாங்கிக்கொண்டார். சுவாமிஜி மண்வெட்டியைப் போட்டு விட்டு தோட்டத்தில்
நடந்தவாறு நாக மகாசயரைப் பற்றி சில நிகழ்ச்சிகளைக் கூறினார்.
..............
புதிய உலகைப்
படைப்போம்-
..................................
இறைவனிடம்
மனப்பூர்வமான நம்பிக்கையுள்ள, உலக விஷயங்களைச் சிறிதும் பொருட்படுத்தாத ஒரு புதிய மனித
இனத்தை இங்கு நான் படைக்க வேண்டியுள்ளது என்று சுவாமிஜி ஒரு முறை எழுதினார்.
அதற்கான முயற்சிகளையும் அவர் தளராமல் செய்தார். ஒரு நாள் மாலை வேளையில் சுவாமிஜி
சற்று பரபரப்பாக நடந்து கொண்டிருந்தார். அவரது சிந்தனை எங்கோ சஞ்சரித்துக் கொண்டிருப்பது
புரிந்தது, திடீரென்று நடப்பதை நிறுத்தி விட்டு அருகிலிருந்த துறவிச் சீடரைப் பார்த்து
கூறினார், இதோ பாரப்பா!ஸ்ரீராமகிருஷ்ணர் உலகின் நன்மைக்காக வந்தார். உலகின் நன்மைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தார்.
நானும் என் வாழ்க்கையை அப்படியே தியாகம் செய்வேன். நீங்களும், நீங்கள் ஒவ்வொருவரும்,
அப்படியே செய்ய வேண்டும். இந்த வேலைகள் எல்லாம் ஆரம்பம் மட்டுமே. நாம் வாழ்க்கை ரத்தத்தைச்
சிந்தி வேலை செய்திருக்கிறோமே, அதிலிருந்து மாபெரும் வீரர்கள், இறைவனின் போர் வீரர்கள்
தோன்றுவார்கள். அவர்கள் இந்த உலகையே புதிதாகப் படைப்பார்கள்.
இது மெதுவாக ,மிக மிக அமதுவாக ஆக வேண்டிய வேலை, என்பதும்
அவருக்குத் தெரிந்திருந்தது. ஆனாலும் என்னால்
இயன்ற அளவு நான் செய்வேன், பிறகு எனது ஆர்வத்தையும் வேகத்தையும் பிறரிடம் செலுத்தி
என் பணியைத் தொடர்வேன். எனக்கு ஓய்வு கிடையாது. போர்க்களத்தில் தான் எனக்கு மரணம்!
நான் வேலையை நேசிக்கிறேன்! ராணுவ மொழியில் சொல்வதானால், வாழ்க்கை ஒரு போர், ஒருவன்
எப்போதும் தயாராக இருக்க வேண்டும். நான்வேலை செய்தபடியே வாழ வேண்டும், வேலை செய்தபடியே
சாக வேண்டும்” என்பார் அவர்.
இந்த உத்வேகத்துடனும் உணர்ச்சிப் பெருக்குடனும் அவர்
தமது துறவிச் சீடர்களை நாடெங்கும் அனுப்ப எண்ணினார். மனித குல சேவை, இறையனுபூதி- இவையே
ஒரு துறவியின் லட்சியம் என்பதை ஒரு போதும் மறவாதீர்கள். எப்போதும் அதனைப் பற்றிக் கொள்ளுங்கள்.
துறவுப் பாதை தான் நேரடியான பாதை.துறவிக்கும் கடவுளுக்கும் இடையில் எந்தச் சின்னங்களும்
கிடையாது.வேதங்களின் தலை மீது நிற்கிறான் துறவி” என்று வேதங்களே கூறுகின்றன.ஏனெனில்
கோயில், மதப்பிரிவு, மகான் சாஸ்திரம்என்று
அனைத்திலிருந்தும் விடுபட்டிருக்கிறான் அவன். பூமியில் நடமாடும் தெய்வம் அவன். இதை எப்போதும் நினைவில் வையுங்கள்.துறவின்
கொடியை ஏந்தி, அமைதி, சுதந்திரம், புனிதம், ஆகியவற்றின்கொடியை ஏந்தி,வீரத் துறவிகளே,
உங்கள் வழியே விரைந்து செல்லுங்கள்” என்று அவர் இளம் துறவியரை ஊக்குவிப்பார். அவர்களை நாட்டின் பல பகுதிகளுக்கு
அனுப்பி அங்கெல்லாம் மடங்களை நிறுவ ஏற்பாடுகள் செய்தார். இதற்காக மடத்துத் துறவிகளை
அழைத்து ஒரு கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்தார். அதில் தமது கருத்தை எடுத்துக் கூறினார்.
சக்தியைப் பாய்ச்சுகிறேன்!-
..........
முதல் கட்டமாக விரஜானந்தரையும் பிரகாஷானந்தரையும்
டாக்காவிற்கு அனுப்பினார்.
சுவாமிஜி, எனக்கு என்னதெரியும்? எதுவுமே தெரியாது.
நான் சென்று எதைப்போதிப்பேன்.? என்று மறுத்தார் விரஜானந்தர். அதற்கு சுவாமிஜி, அதையே
போதனை செய். உனக்கு எதுவுமே தெரியாது என்பதை மக்களுக்குத் தெரிவி. அதுவே பெரிய செய்தியாக
இருக்கும்” என்று ஒரு கணமும் தாமதிக்காமல் கூறினார். சீடர் மேலும் தயங்கியதைக்கண்ட
சுவாமிஜி இடிபோல் முழங்கினார்.
உனது முக்தியை மட்டும் தேடுவாயானால் நீ நரகத்திற்குத்தான் போவாய். உனக்கு கடவுள் வேண்டுமானால்,
பிறரது முக்திக்காகப் பாடுபடு! சொந்த முக்தியில்
நாட்டத்தை விட்டு விடு. பின்னர் கனிவுடன் கூறினார், என் குழந்தைகளே! வேலை செய்யுங்கள்.!
உங்கள் முழு உள்ளத்தையும் ஈடுபடுத்தி வேலை செய்யுங்கள்! விளைவு என்ன என்பதைப் பற்றி
கவைலைப் படாதீர்கள். பிறருக்காக வேலை செய்யுங்கள். அதனால் நீங்கள் நரகத்திற்கே போக
நேர்ந்தாலும் பிறருக்காகப் பாடுபடுவதிலிருந்து
விலகாதீர்கள்.
பின்னர் விரஜானந்தரையும் பிரகாஷானந்தரையும் பூஜையறைக்கு
அழைத்துச்சென்று, அமர்ந்து தியானம் செய்யுமாறு கூறினார் சுவாமிஜி. அவர்கள் அமர்ந்ததும்,
என் குழந்தைகளே, இதோ. நான் என் சக்தியை உங்களுக்குள் பாய்ச்சுகிறேன்” என்றார்.
சாரதானந்தரையும், துரியானந்தரையும் குஜராத்திற்கு
அனுப்பினார் . அனுப்பிய ஒரு மாதத்தில் பிரகாஷனந்தரை பேலூர் மடத்திற்கு அழைத்துக் கொண்டார்
சுவாமிஜி.பின்னர் ஒரு மாதம் கழித்து தமது அமெரிக்க சிஷ்யையான அபயானந்தரை டாக்காவிற்கு
அனுப்பினார். அங்கே சில மாதங்கள் பணியாற்றிவிட்டு அபயானந்தர் கல்கத்தா திரும்பினார்.
தமிழில் முதல் முயற்சி
...................
அடுத்தது மற்றொரு பணிக்குத் தயாரானார் சுவாமிஜி.
ஸ்ரீராமகிருஷ்ணரின் செய்தியும் தமது கருத்துக்களும் சாதாரண மக்களையும் சென்றடைய வேண்டும்
என்று சுவாமிஜி விரும்பினார். அவரது இந்த நோக்கத்தை முதலில் செயல்படுத்தியது தமிழ்நாடு
என்பது பெருமைக்குரிய விஷயம்ஆகும்.
அந்த நாட்களில் ”லோகோபகாரி” என்ற தமிழ் வாரப் பத்திரிகை சென்னையிலிருந்து வெளி வந்தது.
இதன் ஆசிரியரான வி. நடராஜ ஐயர் மத வாழ்க்கையிலும் சமூக முன்னேற்றத்திலும் மிகுந்த ஈடுபடு
உடையவர். இவர் சுவமிஜியின் கர்மயேகம், ஞான யோகம், பக்தியோகம், சிகாகோ செற்பொழிவுகள்,
அன்பு மதம் . செயல்முறை வேதந்தம் ஆகியவற்றிலிருந்து சில பகுதிகளை மெழி பெயர்த்து இந்தப்
பத்திரிகையில் வெளியிட்டு வந்தர்.
பின்னர் இவற்றைத் தெகுத்து ”ஞனத் திரட்டு” என்ற பெயரில்
1898 ஏப்ரல் முதல் நாள் வெளியிட்டர். இதன் 2 மற்றும் 3-ஆம் பகுதிகள் தெடர்ந்து வெளிவரும்
என்றும் அதில் குறிப்பிட்டார். இந்த நூலுடன் சுவமிஜியின் படம் ஒன்றும் இலவசமாக அளிக்கப்
பட்டது.
இந்த நூலின் ஒரு பிரதியை சுவாமிஜிக்கும் ஒரு பிரதியைச்
சென்னையிலிருந்த ராமகிருஷ்ணானந்தருக்கும் அனுப்பினார் நடராஜ ஐயர். அப்போது சுவாமிஜி
டார்ஜிலிங்கில் இருந்தர். இந்த நூலை பெற்றுக்கெண்ட சுவாமிஜி மிகவும் மகிழ்ந்தர். நடராஜஐயருக்கு
ப்பதிலும் எழுதினார்.
டார்ஜிலிங்
15 எப்ரல்
1898
அன்புடையீர்-
உங்கள் 7-ஆம் தேதி கடிதமும், எனது செற்பெழிவுகளில்
சிலவற்றின் தமிழ் மொழிப்பெயர்ப்பு நூலும் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி, பொதுவாக தமிழ்
மக்களுக்கும், குறிப்பாக உங்கள் பத்திரிகையின் சந்தாதரர்களுக்கும் உண்மையிலேயே நீங்கள்
பெரிய சேவை செய்திருக்கிறீர்கள். நான் கூறிய கருத்துக்களை எல்லா இடங்களிலும் பரவுமாறு
செய்ய வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அதற்கு ஏற்றவழி அவற்றை மாநில மொழிகளில் மொழி
பெயர்ப்பதே. இதில் நீங்கள் முன்னோடியாக அமைந்ததற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
உங்கள் முயற்சியில் எல்லா வெற்றிகளும் கிடைக்குமாறு வாழ்த்துகிறேன்.
ஆசிகள் ஏற்றுக் கொள்ளுங்கள்.
தங்கள்
உண்மையுள்ள
விவேகானந்த
..............
சுவாமிஜியின்
இலக்கியம் இந்திய மொழிகளில் முதன் முதலாகத் தமிழில் தான் கட்டுரைகளாகவும் நூல் வடிவிலும்
வெளி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாமிஜியின்
இலக்கியம் இந்திய மொழிகளில் முதன் முதலாகத் தமிழில் தான் கட்டுரைகளாகவும் நூல் வடிவிலும்
வெளி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வங்க மொழிப் பத்திரிகை
................
இது சுவாமிஜியை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
எனவே வங்கமெழியிலும் அவை வெளியிடப்பட வேண்டும் என்று எண்ணினார். அதற்காக வங்க மொழியில் ஒரு மாதப்
பத்திரிகை ஆரம்பிப்பதில் முனைந்து ஈடுபட்டார்.
இந்தியாவுக்கு வந்திருந்த சாராவும் மெக்லவுடும் அமெரிக்கா திரும்பு முன்பு சுவாமிஜியைச்
சந்தித்தனர். புதிய மடம் கட்டுவதற்காக சாரா பெரிய அளவில் ஏற்கனவே நிதியுதவி அளித்திருந்தார்.
மிஸ் மெக்லவுடும் தாம் பல வருடங்களாகச்சேமித்து
வைத்திருந்த 800 டாலர்களை சுவாமிஜியிடம் அளித்தார். அப்போது சுவாமிஜி அருகில் நின்றிருந்த திரிகுணாதீதரைப் பார்த்து, இதோ அச்சகம்
ஆரம்பிப்பதற்கான பணம் வந்துவிட்டது. உடனடியாக வங்க மொழிப் பத்திரிகையை ஆரம்பி” என்றார். இவ்வாறு உத்போதன் பத்திரிகை ஆரம்பிக்கப் பட்டது.
திரிகுணா தீதர் அதன் ஆசிரியரானார்.
பரிணாம வாதம்
...........
ஒரு நாள் நிவேதிதை, யோகானந்தர் மற்றும் சரத் சந்திரருடன்
சுவாமிஜி கல்கத்தாவில் அலிபூரில் உள்ள மிருககாட்சிச்
சாலையைக் காணச் சென்றார். அதன் கண்காணிப்பாளர் அவர்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்று,
சுற்றிக் காண்பித்தார். அங்குள்ள பல வகையான விலங்குகளைப் பார்த்தபடியே, டார்வினின் பரிணாமக் கொள்கையைப் பற்றி மேலோட்டமாகப்பேசிக்கொண்டு
வந்தார் சுவாமிஜி. பாம்புகள் இருந்த இடத்திற்கு
வந்தனர். அங்கே உடம்பெல்லாம் வட்டவட்டமான வளையங்கள் கொண்ட மலைப் பாம்பைச் சுட்டிக்காட்டி,
இந்த மலைப்பாம்பிலிருந்து தான் படிப்படியாக ஆமை தோன்றியது. இது போன்ற பாம்பு நெடுநாட்கள்
ஒரே இடத்தில் இருந்ததால் அதன் முதுகு மிகவும் கடினமான ஓடாக மாறியது” என்றார்.
பின்னர் சரத்திடம்வேடிக்கையாக, கிழக்கு வங்காளத்தினராகிய
நீங்கள் ஆமைகளைச் சாப்பிடுவீர்கள் இல்லையா? பாம்பு தான் படிப்படியாக ஆமையாக மாறியது” என்கிறார் டார்வின். எனவே, ஒரு வழியில் பார்த்தால் நீங்கள்
பாம்பை உண்பவர்கள்்” என்றார். இதைக்கேட்ட சரத், பரிணாம
முறைப்படி ஒரு விலங்கு இன்னொன்றாக மாறும்போது அதற்கு முந்தைய வடிவமம் குணங்களும் இருப்பதில்லை. எனவே ஆமையைச்
சாப்பிடுவது பாம்பைச் சாப்பிடுவது ஆகாது” என்று மறுத்தார். எல்லோரும் சிரித்தார்கள்.
மேலும் சில விலங்குகளைப் பார்த்து விட்டு சுவாமிஜி
அங்கிருந்த ராம் பிரம்மபாபுவின் வீட்டிற்குச் சென்றார். அங்க தேனீர் அருந்தினார்கள்.
நிவேதிதையின் அருகில் அமரவும் அவர் தெட்ட இனிப்பு, தேனீர் முதலியவற்றைத் தொடவும் சரத்
தயங்கியதைக் கண்ட சுவாமிஜி, சரத்தை நிவேதிதையின் அருகே நாற்காலியில் அமரும் படியும்
இனிப்பையும் தேனீரையும் சாப்பிடும் படியும் கூறினார். சரத் அந்தக் கட்டளைக்குப் பணிந்தார்.
சுவாமிஜி தண்ணீரைக் குடித்துவிட்டு மீதியைச்
சரத்திடம் கொடுத்தார். சரத் அதை அருந்தினார். அதன் பிறகு டார்வினின்
பரிணாம வாதத்தைப் பற்றிய கீழ்காணும் பேச்சு நடந்தது.
ராம்பாபு-
டார்வினின் பரிணாமக் கொள்ளையைப் பற்றியும், அந்தக்
கொள்கையை நிலைநாட்ட அவர் கூறும் காரணங்களைப் பற்றியும் உங்கள் கருத்து என்ன?
சுவாமிஜி- ஒரு பேச்சுக்காக அவரது கருத்து சரியென்று
கொண்டாலும், உயிர்களின் பரிணாமத்திற்கு அது தான் முடிவான காரணம் என்பதை என்னால் ஏற்றுக்
கொள்ள இயலவில்லை.
ராம் பாபு-
நமது பண்டையஅறிஞர்கள் இதைப் பற்றி கூறுகிறார்களா?
சுவாமிஜி-
சாங்கியத் தத்துவத்தில் சிறந்த முறையில் கூறப் பட்டிருக்கிறது.
பரிணாமம் பற்றியகருத்தில் பழங்கால இந்திய ஞானியரின்
கருத்தே அறுதி முடிவு என்று நான் நினைக்கிறேன்!
ராம்பாபு-
அது பற்றி சுருக்கமாக நீங்கள் சொல்ல முடியுமா?
சுவாமிஜி-
வாழ்க்கைப்போராட்டம், மிகத் தகுதியுள்ளவை வாழ்தல்,
இயற்கையான தேர்வு, முதலிய விதிகளைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். மிகச் சிறிய உயிர் மிகப்பெரிய
உயிராகப் பரிணமித்ததற்கான காரணங்களாக இவற்றை மேலைநாட்டு அறிஞர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் பதஞ்சலியின் நூலில் இவை காரணம் என்று கூறப்படவில்லை.
ஓர் இன உயிர் மற்றோர் இனமாக மாறுவதன் காரணம்,
”இயற்கையின் உள் நிறைவு” என்கிறார் பதஞ்சலி. தடைகளுக்கு
எதிராக இரவு பகலாகப்போரடுவது கரணம் அல்ல. என்னைப் பொறுத்தவரையில், போராட்டங்களும் பேட்டிகளும்,
பல வேளைகளில், உயிர் முழுமை அடைவதற்குத் தடைகளாகவே இருக்கின்றன. மேலை நட்டுக் கருத்துபோல்,
ஆயிரக்கணக்கன உயிர்களின் அழிவால் தன் ஓர் உயிர் பரிணமிக்கிறது என்றால், அத்தகைய பரிணாமத்தல் உலகிற்கு நன்மை எதுவுமில்லை.
போராட்டங்களால் ஒரு வேளை பௌதீக வளர்ச்சி இருக்கிறது என்று கொண்டாலும் ஆன்மீக வளர்ச்சிக்கு இது ஒரு பெருந்தடை
என்பதை ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.
நம் நாட்டு தத்துவ அறிஞர்களின் கருத்துப்படி, உயிர்
என்பது பூரண ஆன்மா.மாறுபாடுகள் எல்லாம் ஆன்மாவின் வெளிப்பாட்டிலுள்ள வேற்றுமையே ஆகும்.
பரிணாம வளர்ச்சிக்கும் இயற்கையின் வெளிப்பாட்டிற்கும் தடைகளாக இருப்பவை நீக்கப் பட்டதும்
ஆன்மா முழுமையாக வெளிப் படுகிறது. இயற்கையின் வெளிப்பாடு சிறு உயிர்களில் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் உயர்ந்த இனங்களில், எப்போதும்
தடைகளை எதிர்த்து நடத்தும் போராட்டங்களால்
தான் அவை பரிணமிக்க முடியும் என்பது சரியல்ல. போராட்டத்தை விட கல்வி, பண்பாடு, மன ஒருமைப்பாடு, தியானம், முக்கியமாக
தியாகம் ஆகியவற்றால் தான் தடைகள் நீக்கப் படுகின்றன.
அதற்கேற்ப ஆன்மாவும் வெளிப்படுகிறது... தீமை செய்கின்ற ஆயிரம் பேரைக் கொல்வதன் மூலம்
தீமையை உலகத்திலிருந்து நீக்க முயல்வதால் உலகில் தீமைதான் அதிகமாகும்.ஆனால் அறிவுரைகளின்
மூலம் மக்கள் தீமைசெய்யாமல் தடுக்கப் பட்டால் உலகில் தீமையே இருக்காது. மேலை நாட்டினரின்
இந்தப்போராட்டக்கொள்கை எவ்வளவு பயங்கரமானது என்பதைப் பாருங்கள்!
ராம்பாபு சுவாமிஜியின் இந்தப்பேச்சைக்கேட்டு ஆச்சரியத்துடன்,
இந்தியாவிற்குத் தற்போது உங்களைக் போல் கீழை நட்டு, மேலை நாட்டுத் தத்துவங்களில் நல்லதேர்ச்சி பெற்றவர்களே உடனடியாகத்தேவை. எதிலும்
ஒரு பக்கத்தை மட்டுமே ஏற்றுக் கொள்பவர்களான, இன்றைய படித்தவர்களின் தவறுகளை அத்தகையோரால்
தான் திருத்த முடியும். பரிணாமக்கொள்கை பற்றிய உங்கள் விளக்கத்தைக்கேட்டு நான் அளவற்ற
மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.
சிறிது நேரத்தில் சுவாமிஜியும் மற்றவர்களும் அங்கிருந்து
புறப்பட்டு பாக்பஜாரில் உள்ள பலராம் போஸின் வீட்டை அடைந்தார்கள். அப்போது இரவு மணி எட்டு, சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு சுவாமிஜி
வரவேற்பறைக்கு வந்தார். அவர் மிருகக் காட்சி
சாலையில் சுருக்கமாகப் பரிணாமக்கொள்கைப் பற்றி க் கூறிய கருத்தை விரிவாகக்கேட்க ச்
சிறு கூட்டம் ஆர்வத்தோடு காத்திருந்தது. சுவாமிஜி அறைக்குள் வந்ததும், சரத் அந்தப்
பேச்சை ஆரம்பித்தார்.
சரத்-
சுவாமிஜி, நீங்கள் மிருகக் காட்சி சாலையில் கூறிய
பரிணாம வளர்ச்சி பற்றிய கருத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதை எளிய முறையில்
கூறுங்கள்.
சுவாமிஜி-
புரியவில்லையா! எந்தப்பகுதி புரியவில்லை?
சரத்-
நீங்கள் அடிக்கடி எங்களிடம், புறச் சக்திகளை எதிர்த்துப்போராடும் ஆற்றல்தான் உயிர் இருப்பதன் அடையாளமாகவும் முன்னேற்றத்தின்
முதற்படியாகவும் உள்ளத என்று கூறியிருக்கிறீர்கள்.
இப்போது அதற்கு மாறாகக் கூறுகிறீர்களே!
சுவாமிஜி-
நான் ஏன் மாறாகக் கூற வேண்டும்? நீதான் சரியாகப்
புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் கூறும் வாழ்க்கை
ப்போராட்டம், மிகத் தகுதி உள்ளவை வாழ்தல் முதலிய விதிகள் விலங்குகளின் உலகத்தில் இருப்பதைத் தெளிவாகக் காண்கிறோம். அதனால் தான் டார்வினின் கொள்கை
ஏறக்குறைய சரி என்று தோன்றுகிறது. ஆனால் பகுத்தறிவுள்ள மனிதர்களிடம் இந்த விதிகள் முற்றிலும்
மாறாக இருக்கின்றன. உதாரணமாக, நாம் யாரை மாமனிதர்களாக,
லட்சிய மனிதர்களாகக் கொண்டிருக்கிறோமோ, அவர்களிடம் இந்தப் புறப்போராட்டம் எதையும் காணவே
முடியாது. விலங்குகளிடம் இயல்புணர்ச்சி மிகுந்து காணப்படுகிறது.ஆனால் மனிதனிடமோ, அவன்
உயரும் அளவிற்கு அவனிடம் பகுத்தறிவு மிகுந்து காணப்படுகிறது. எனவே விலங்குகளின் உலகில்
ஒன்று மற்றவற்றை அழிப்பதால் முன்னேற்றம் ஏற்படுவது
போல் பகுத்தறிவு நிறைந்த மனித உலகில் ஏற்பட முடியாது.
மனிதனின்
மிக உயர்ந்த பரிணாமம் தியாகத்தின் மூலம் மட்டுமே ஏற்படுகிறது. ஒருவன் மற்றவர்களுக்காக எவ்வளவு தூரம் தியாகம் செய்வானோ அந்த அளவிற்கு அவன்
உயர்ந்தவன். விலங்கினத்திலோ, எந்த விலங்கு மற்ற விலங்குகளை அதிகமாகக் கொல்கிறதோ, அது
தான் மிருகங்களில் மிகுந்த வலிமை படைத்ததாகக்
கருதப் படுகிறது. எனவே இந்தப்போராட்டக்கொள்கை இரண்டு பக்கத்திற்கும் ஒருங்கே பொருந்த
முடியாது. மனிதனின் போராட்டம் மனத்தில் நடக்கிறது. மனத்தை அடக்கும் அளவிற்கு ஒருவன்
உயர்கிறான், மனத்தின் செயல்பாடுகள் முழுமையாகக் கட்டுப் படுத்தப்படும் போது தான் ஆன்மா
வெளிப்படுகிறது. உடம்பைக் காப்பாற்றுவதற்காக மிருகங்களிடையே நடக்கின்ற போராட்டம், மனிதர்களிடம்
மனத்தைக் கட்டுப்படுத்துவது அல்லது மனத்தை சத்வநிலையில் நிறுத்துவதாகிய போராட்டமக அமைகிறது.
உண்மையான மரமும் தண்ணீரில் தெரிகின்ற அதன் நிழலும் போல் மிருகங்களின் வாழ்க்கையிலும்
மனித வாழ்க்கையிலும் போராட்டங்கள் வெவ்வேறாக அமைந்துள்ளன.
சரத்- அப்படியென்றால் நீங்கள் ஏன் உடல் வலிமையை அவ்வளவு
வலியுறுத்துகிறீர்கள்!
சுவாமிஜி-
உங்களை நீங்கள் மனிதர்கள் என்றா நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?
உங்களிடம் ஏதோ கொஞ்சம் பகுத்தறிவு இருக்கிறது. அவ்வளவு தான். வலிமையான உடல் இல்லையானால்
மனத்துடன் எப்படிப் போராடுவீர்கள்? பரிணாமத்தின் மிக உயர்ந்த படியான, ” மனிதன்” என்ற நிலையிலா நீங்கள் இருக்கிறீர்கள்? உண்பது, உறங்குவது,
இனப்பெருக்கம் என்பதைத் தவிர உங்களிடம் வேறு
ஏதாவது இருக்கிறதா என்ன? நீங்கள் இன்னும் நான்கு கால்கள் படைத்த மிருகங்களாக ஆகாமல், இருப்பது உங்கள் அதிர்ஷ்டம்
தான். தன்னுணர்வும், சுய மதிப்பும், இருப்பவனே மனிதன் என்று ஸ்ரீராமகிருஷ்ணர் சொல்வது
வழக்கம். நீங்களோ வெறுமனே பிறந்து இறக்கின்ற பிராணிகள்! சொந்த நாட்டினரின் பொறாமைக்கும் அயல் நாட்டினரின் வெறுப்புக்கும் ஆளாகித் திரிகின்ற
அவலங்கள்! நீங்கள் வெறும் மிருகங்கள். அதனால் தான் உங்களைப்போராடச் சொல்கிறேன். தத்துவங்களையும் அதையும் இதையும் ஒதுக்கி வையுங்கள். அன்றாட வாழ்க்கையையும் செயல்பாடுகளையும் சற்று அமைதியாகக் கவனியுங்கள்.
மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடைப்பட்ட
நிலையில் நீங்கள் இருப்பதை அப்போது அறிவீர்கள்.
முதலில் உடல் வலிமையை வளர்த்துக்கொள்ளுங்கள். அதன் பிறகே மனத்தைக் கட்டுப்படுத்த முடியும்.
நாயமாத்மா பல ஹீனேன லப்ய- இந்த ஆன்மா பலவீனர்களால் அடையப்படுவதில்லை. புரிகிறதா?
சரத்- சுவாமிஜி, இந்தப் பலவீனம் என்ற செல்லுக்கு பிரம்மச்சரியத்திலிருந்து வழுவுதல் என்று அல்லவா உரையாசிரியர் (சங்கரர்) பொருள்
கெள்கிறார்?
சுவாமிஜி-
கொள்ளட்டுமே! உடல் பலவீனமானவன் ஆன்மாவை அடையத் தகுதியற்றவன்
என்று நான் சொல்கிறேன்.
சரத்- ஆனால் மூடர்கள் பலர் வலிமையான உடலைப் பெற்றிருக்கிறார்களே!
சுவாமிஜி-
சற்று சிரமப்பட்டு ஒரு முறை அவர் களுக்கு நல்ல கருத்துக்களைக்கொடுக்க
முடியுமானால்,நோஞ்சானைவிட அவர்கள் வெகு சீக்கிரத்தில் அதை நடைமுறையில் பின்பற்றுவார்கள்.
பலவீனமான உடம்பு உடையவர்களால் காமத்தையோ கோபத்தையோ
கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருப்பதை நீ பார்க்கவில்லையா?
மெலிந்த உடலுடன் இருப்பவர்கள், மிக எளிதாகக் கேப வசப்படுவார்கள், காம வசப்படுவார்கள்.
சரத்-
ஆனால் இந்த விதிக்கு விலக்கானவர்களும் இருக்கிறார்கள்.
சுவாமிஜி-
இல்லை, என்று யார் சொன்னார்கள்? ஒரு முறை மனம் கட்டுப்
பட்டு விட்டது என்றால் பிறகு அவனது உடம்பு
வலிமையாக இருக்கிறதா அல்லது மெலிந்திருக்கிறதா என்பதுபற்றிக் கவலையே இல்லை. உண்மை என்னவென்றால்
, வலிமையான உடல் இல்லாதவன் ஆன்ம ஞானத்திற்குத் தகுதி உடையவன் ஆக மாட்டான்.
சுவாமிஜி உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதைக் கண்ட சீடர்
அதற்கு மேலும் அந்தப்பேச்சை வளர்க்க விரும்பவில்லை. அமைதியாக இருந்தார். சிறிது நேரம்
கழிந்தது. சுவாமிஜி அங்கு கூடியிருப்பவர்களைப் பார்த்து , இந்தப் புரோகிதன் இன்று நிவேதிதை
தொட்ட உணவைச் சாப்பிட்டான் தெரியுமா? அவள் தொட்ட இனிப்பைச் சாப்பிட்டான். அதாவது பரவாயில்லை(
சீடரைப் பார்த்து) ஆனால் அவள் தொட்ட தண்ணீரை நீ எப்படிக் குடித்தாய்? என்றார்.
சரத்-
அப்படிச் செய்யும்படி கட்டளையிட்டது நீங்கள். குரு
கட்டளையிட்டால் நான் எதையும் செய்வேன். தண்ணீரைக் குடிக்க எனக்குப் பிடிக்கவில்லை தான்.
ஆனால் நீங்கள் குடித்துவிட்டு என்னிடம் தந்தீர்கள்.அதை நான் பிரசாதமாக ஏற்றுக் கொண்டேன்.
சுவாமிஜி- அப்படியா! இப்போது உன் ஜாதி போய் விட்டது.
இனிமேல் உன்னை யாரும் பிராமணன் என்று மதிக்க மாட்டார்கள்.
சரத்- மதிக்காவிட்டால் போகட்டும், நீங்கள் கட்டளையிட்டால்
சண்டாளனின் வீட்டிலும் உண்பேன்.
சரத்தின் இந்த வார்த்தைகள் சுவாமிஜியையும் அங்கிருந்தவர்களையும் பலத்த சரிப்பில் ஆழ்த்தின.
இந்த நாட்களில் சுவாமிஜி மற்றொரு முக்கியமான காரியத்தையும்
செய்தார். ஸ்ரீராமகிருஷ்ணர் மறைந்த பிறகு அவரது புனிதச் சாம்பலை எங்கே நிறுவுவது என்பது சம்பந்தமாக அவரது இல்லறச் சீடர்களுக்கும்
துறவிச் சீடர்களுக்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டது பற்றி ஏற்கனவே கண்டோம். நாட்கள் செல்லச்செல்ல
மேலும் சில கருத்து வேற்றுமைகள் எழுந்தன.சுவாமிஜி
ஸ்ரீராமகிருஷ்ணரிடம் வருவதற்கு ஒரு வகையில் காரணமாக இருந்த ராம்சந்திர
தத்தரும் வேறு சிலரும் துறவிச் சீடர்களிடமிருந்து
சற்று விலகத் தொடங்கினர். இந்தத் தற்காலிகப் பிரிவுணர்ச்சிக்கு நிரந்தரத் தீர்வு காண விழைந்தார் சுவாமிஜி. நோயுற்றுப்
படுக்கையில் கிடந்த ராம்சந்திரரைச் சென்று நேரில் கண்டார் அவர்.
அற்புதமானதொரு சந்திப்பாக இருந்தது அது. சிறிது நேரம்
பேசியபிறகு ராம் சந்திரர் கழிப்பறைக்குச் செல்வதற்காகப் படுக்கையிலிருந்து எழுந்தார். சுவாமிஜி, உடனே எழுந்து, சற்று தள்ளிக்
கிடந்த அவரது செருப்புகளை அருகில் எடுத்து
வைத்து, அவர் அதை அணிந்து கொள்வதற்கு உதவினார்.
நெகிழ்ந்து போனார் ராம்சந்திரர். அமெரிக்காவிற்குப் போன பிறகு நீ பெரிய ஆளாகி விட்டாய்,
எங்களையெல்லாம் மறந்து விட்டாய் என்று நினைத்தேன். பலரும் என்னிடம் அப்படித்தான் கூறினார்கள்.
ஆனால் நீ அதே பழைய ”பிலே”யாகத் தான் இருக்கிறாய். உன்னில் எந்த மாற்றமும்
இல்லை. நான் தான் தவறாகப் புரிந்து கொண்டேன். ஸ்ரீராமகிருஷ்ணர் உன்னை ஏன் ” சூடாமணி” என்று குறிப்பிட்டார் என்பதை இப்போது தான் புரிந்து கொள்கிறேன்.
என்னை மன்னித்துவிடு. நீ மன்னித்தால் தான் குருதேவரிடம் எனக்கு ஏதோ சிறிது இடம் கிடைக்கும்” என்று உணர்ச்சி பொங்கக் கூறினார். தேவையற்ற கருத்து வேற்றுமைகளை
விட்டு விடுமாறு சுவாமிஜியும் கனிவான குரலில் கூறினார். ராம்சந்திரர் கண்ணீர் விட்டு
அழுதபடியே, மன்னித்தேன் என்று நீ ஒரு வார்த்தை சொல்லாமல் ஸ்ரீராமகிருஷ்ணர் என்னை ஏற்றுக்
கொள்ள மாட்டார்.என்று கூறினர். அதற்கு சுவாமிஜி, அத்தகைய பயமே உங்களுக்குவேண்டாம்.
குருதேவரின் அருகில் எனக்கு ஓர் இடம் கிடைக்குமனல் உங்களுக்கும் கிடைத்தே தீரும்” என்று அழுத்தமான குரலில் கூறினார். இது ராம்சந்திரரைச் சமாதானப்
படுத்தியது.
No comments:
Post a Comment