Sunday, 14 June 2020

இந்துமதம்-வகுப்பு-22

இந்துமதம்-வகுப்பு-22🕉️
நாள்-13-6-2020
-
இந்துத் திருமணங்கள்
---
இந்து திருமண உறவுகள் மிகவும் அர்த்தம் வாய்ந்தவை.காமத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் திருமணங்கள் கீழ்தரமானவையாக கருதப்படுகின்றன.
வீட்டிற்கு வரும் மணமகளை மகாலெட்சுமியாகவே பார்க்கிறார்கள்.
மனைவி இல்லாத வீட்டை வீடாக கருதுவதில்லை.
குடும்பத்தை வழிடத்துவது பெண்ணின் முக்கிய கடமையாகும்.அவளே குடும்பத்தின் ஆணிவேராக இருக்கிறாள்.குடும்பத்தின் கௌரவம் என்பது பெண்ணின் நடத்தையை சார்ந்து இருக்கிறது.
சில இடங்களில்ஆணின் நடத்தை சரியாக இருக்காது.அப்படி இருந்தால்கூட குடும்பம் அழிவதில்லை.ஆனால் பெண்ணில் நடத்தை சரியில்லாவிட்டால் மொத்த குடும்பமும் அழிந்துபோகிறது.
திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான புதிய உறவு மட்டுமல்ல,குடும்பத்திலுள்ள அனைவருக்கும் புதிய உறவுகள் இதனால் உண்டாகின்றன.எனவே மணப்பெண் நல்ல குடும்பத்தை சார்ந்தவாளாக இருக்கவேண்டியது அவசியமாகிறது.
-
திருமணத்திற்கு பெற்றோரின் சம்மதம் மிகவும் அவசியம்.பெற்றோர்கள் குடும்பத்திலுள்ள மற்றவர்களின் ஆலோசனைகளைப்பெற்று திருமணத்தை முடிவுசெய்வார்கள்.ஒரு ஆணும்பெண்ணும் காதலிக்கிறார்கள் என்பதற்காக உடனே திருமணம் செய்துவைப்பதில்லை.மாப்பிள்ளையின் வீட்டினர் எப்படிப்பட்டவர்.அவரது குலம் என்ன?வசசி உள்ளவரா ?கடைசிவரை பெண்ணை காப்பாற்றும் திறமை உள்ளவா?ராசி பொருத்தம் இருக்கிறதா? போன்ற பல பொருத்தங்களை ஆராய்ந்து பார்த்தே பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிப்பார்கள்.
அப்படி இல்லாமல் தங்கள் சுயநலத்திற்காக திருமணம் செய்துகொள்பவர்களின் வாழ்க்கை பெரும்பாலும் துன்பமாகவே அமைகிறது.
..
இந்தியா முழுவதும் மிகப்பழங்காலத்திலேயே பல்வேறு வகையான திருமணங்கள் நடந்துள்ளன.
அவைகளை தரத்திற்கு ஏற்றவாறு முன்னோா்கள் பட்டியலிட்டிருக்கிறார்கள்.
பிரம்மநிலை முதல் பேய் நிலைவரை எட்டு நிலைகள் உள்ளன.இவைகள் குணத்தை அடிப்படையாகக்கொண்டது.
..
1.பிரம்மம்-
பிரம்மத்தை நோக்கி செல்லும் ரிஷி செய்துகொள்ளும் திருமணம்.பிரம்மச்சர்ய ஆஸ்ரம வாழ்க்கையை முடித்துக்கொண்ட பிரம்மச்சாரி அடுத்து கிரஹஸ்த ஆஸ்ரமத்திற்கு செல்லாமல் நேராக சந்நியாச ஆஸ்ரமத்திற்கு சென்று தவ வாழ்க்கையில் ஈடுபடுகிறான்.அவ்வாறு பல ஆண்டுகள் தவவாழ்க்கை மேற்கொண்டு ஞானம் பெற்ற பிறகு திருமணம் செய்து வனப்பிரஸ்த ஆஸ்ரமத்தை ஏற்றுக்கொண்டு வாழ்வது பிரம்மவகை திருமணம்.
.
இந்த திருமணத்தில் மணப்பையன் எல்லோராலும் போற்றி வழிபடப்படக்கூடிய,ஞானியாக இருப்பான்.அவனது வயது நாற்பதிற்கு மேல்கூட இருக்கலாம்.சில ரிஷிக்கு ஐம்பது வயதுகூட இருக்கலாம்.மணப்பெண் மிகவும் சிறியவளாக இருப்பாள் பொதுவாக பதினைட்டு வயதுக்கும் குறைந்த பெண்ணாக இருக்கலாம்.
.
இப்படிப்பட்ட திருமணங்களைப்பற்றி புராணஇதிகாசங்களில் படிக்கிறோம்.இராமகிருஷ்ணர்-சாரதாதேவிக்கு நடந்த திருமணம் இப்படிப்பட்டது.
இதில் காமத்திற்கு முக்கியத்துவம் இல்லை.பெண் மனைவியாக இல்லாமல் சிஷ்யையாக இருக்கிறாள்.முற்றும் அறிந்த ஞானி தனக்கு தெரிந்த ஞானத்தை பெண்ணிற்கு கற்றுக்கொடுக்கிறார்.
.
உண்மையில் இவர்தான் குரு.இவரிடம் கற்வி கற்பதற்கே மாணவர்கள் அந்த நாட்களில் வருவார்கள்.இவரிடம் அசாதாரணமான புலன் அடக்கமும்,ஞானமும் காணப்படும்.இவர் வெறும் பாடங்களை பயிற்றுவிப்பவர் அல்ல.தன்னுடைய சக்தியை மாணவர்களுக்கு கொடுத்து அவர்களது வாழ்க்கையை உயர்ந்த லட்சியத்தை நோக்கி திருப்பிவிடுகிறார்.
இப்படிப்பட்ட திருமணங்கள் மிகவும் அரிதாகவே நிகழ்கின்றன.
..
2.தெய்வம்
முற்காலத்தில் தன்னிடம் பாடம் பயிலும் மாணவர்களில் நல்ல திறமையுள்ள,வேதம் கற்ற பிரம்மச்சாரிக்கு,தன்னுடைய மகளை, குரு திருமணம் செய்து வைக்கிறார்.
இதில் பையனுக்கும்,பெண்ணிற்கும் சமவயது இருக்கும்.
இருவருமே வேதம் கற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் வாழ்க்கை தெய்வத்தன்மையுடன் இருக்கிறது.
முற்காலத்தில் பிராமணர்களிடையே இந்தவகை திருமணங்கள் நடைபெற்றன.
பணம் வாங்குவது,கொடுப்பது போன்ற எந்த நடைமுறையும் இருக்காது.மிகவும் எளிமையாக இந்த திருமணம் நடைபெறும்.திருமணத்திற்கு பிறகு மணப்பையன் பிராமணர்களுக்குரிய கடமைகளை செய்வான்.
..
3.அரசர்(அர்சம்)
அரசர்கள்,நிலக்கிழார்கள் செய்துகொள்ளும் திருமணம்.
அரசர்களும்,நிலக்கிழார்களும் பல திருமணங்கள் செய்துகொள்கிறார்கள்.
அழகான பெண் எங்கே இருந்தாலும் அவரது தந்தைக்கு அதிக பணத்தை,பொன்னை,நிலத்தை,அதிகாரத்தை கொடுத்து பெண்ணை திருமணம் செய்து கொள்ளுதல்.
அரசனுக்கு பயந்து தந்தை தன்னுடைய பெண்ணை திருமணம்செய்துகொடுப்பதும் உண்டு.
இதில் பெண்ணின் சம்மதத்தை யாரும் கேட்பதில்லை.
இந்த திருமணங்கள் மிக எளிமையாக நடந்தது.இதில் மணப்பெண்ணிற்கு வயது குறைவாக இருக்கும்.
பையனுக்கு வயது அதிகமாக இருக்கும்.
அவனுக்கு ஏற்கனவே பல திருமணங்கள் இதேபோல நடந்திருக்கும். திருமணமான பெண் அந்தப்புறத்தில் பிற பெண்களோடு வாழ்வாள்.
பெண்ணிற்கு எந்த சுதந்திரமும் இருக்காது.அனைத்து வசதிகளையும் அனுபவித்துக்கொண்டு கடைசிவரை அங்கேயே வாழவேண்டும்.
..
4.பிரஜை(பிரஜாவத்யம்)
-
பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு திருமணம்செய்து வைக்கும் முறை.
இதில் பெண்ணின் தந்தை தரகர் மூலமாக வரன் தேடுகிறார். அதேபோல ஆணின் தந்தையும் பெண் தேடுகிறார்.
சரியான பொருத்தம்,அந்தஸ்து போன்ற அனைத்தும் பொருந்தி வந்தால் இருவீட்டாரின் சம்மத்துடன் இந்த திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெறுகிறது.
அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரை பொதுமக்களிடையே இந்த திருமணம்தான் நடைமுறையில் உள்ளது.
-
5.கந்தர்வன்(காந்தர்வம்)
முற்காலத்தில் கந்தர்வர்கள் என்ற ஒரு பிரிவினர் இருந்தார்கள்.மனிதனைவிட சற்று உயர்ந்த நிலையில் வசிப்பர்கள்.
பல்வேறு கலைகளில் ஈடுபாடு உடையவர்கள்.பல அற்பு ஆற்றல்கள் பெற்றவர்கள்.கந்தர்வர்களில் ஆணும் உண்டு. பெண்ணும் உண்டு(தேவகன்னி).
அழகான மனிதர்களிடம் பழகி,அவர்களது மனதை மயக்கி காதல் புரிந்து ,யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துகொள்கிறார்கள். சில வருடங்கள் இப்படியே மறைவாக வாழ்ந்தபிறகு அவர்களைவிட்டு பிரிந்துசென்றுவிடுகிறார்கள்.
இப்படிப்பட்ட திருமணங்களைப்பற்றி புராணங்களிலும் இதிகாசங்களிலும் பார்க்கலாம்.
அரசர்கள் சிலர் காந்தர்வ முறையில் திருமணம்செய்துகொண்டதைப்பற்றிய வரலாறும் உள்ளது.
--
6.சூரன்-அசூரன்(அசுரம்)
சூரன் என்றால் வீரர்.அசூரன் என்றால் வீரர்களில் நல்லொழுக்கம் இல்லாதவன்.
முற்காலத்தில் பெண்ணை திருமணம் செய்துகொள்வதற்கு போட்டிகள் நடத்தப்படுவதுண்டு.
இந்த போட்டியில் வீரமுள்ள ஆண்கள் கலந்துகொள்வார்கள்.அவர்களில் சூரரும் இருப்பார்,அசூரரும் இருப்பார்.
மணப்பெண்ணிற்கு மாலையிடும் மணமகன் யார் என்பது கடைசிவரை யாருக்கும் தெரியாது.
யார் வெற்றி பெறுகிறாரோ அவர் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார்.
பழைய காலத்தில் இப்படிப்பட்ட திருமணங்கள் அதிகம் நடைபெற்றுள்ளது.
.--
7.ராட்சஸம்
முற்றிலும் தீயவன் ராட்சஸன்.
பெண்ணின் தந்தையை அடித்துக்கொன்று திருமணம் செய்துகொள்வது.இவ்வாறு திருமணம் செய்யப்படும் பெண்கள் அடிமைகளாக இருப்பார்கள்.இவனிடம் இரக்கமே இருக்காது.
ஏற்கனவே திருமணமான பெண்ணைக்கூட கவர்ந்துசென்றுவிடுவான்.
முஸ்லீம் மன்னர்களும் அவர்களது படையில் உள்ளவர்களும் பெரும்பாலம் இந்தவகை திருமணங்களை செய்திருக்கிறார்கள்.
எதிரி நாட்டிற்குள் செல்வார்கள்.அங்குள்ள ஆண்களையெல்லாம் கொன்றுவிட்டு.பெண்களையெல்லாம் திருமணம் செய்துகொள்வார்கள்.முகமதுநபி கூட அப்படிப்பட்ட திருமணங்களை செய்திருப்பதாக வரலாறு கூறுகிறது.
இவர்கள் ராட்சஸ கூட்டத்தை சேர்ந்தவர்கள்
--
8.பிசாசு
குடிபோதையிலும் சிலர் பெண்களை கடத்திசென்று பாலியல் பலாத்காரம் செய்துவிடுவதுண்டு.
பெண்ணை மயக்கி தூங்கிக்கொண்டிருக்கும்போது பலாத்காரம் செய்வதுண்டு
.இப்படிப்பட்ட செயல்களை செய்பவர்களுக்கு தற்காலத்தில் மரணதண்டனை உறுதி.
ஆனால் முற்காலத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை வேறு யாரும் திருமணம்செய்துகொள்ள மாட்டார்கள் என்பதால் ,குற்றவாளிக்கே திருமணம் செய்துவைத்துவிடுவார்கள்.
இப்படிப்பட்ட திருமணங்கள் காட்டுவாசிகளிடமும்,பண்பாடற்ற மக்களிடையே அதிகம் நடைபெற்றுள்ளன.

No comments:

Post a Comment