சுவாமி விவேகானந்தரின்
விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-19
🌸
இந்து மதம்
மனிதர் யாராலும் நிறுவப்படாதது. எந்த தனிமனிதருடைய வாழ்க்கையையும் சார்ந்திராதது. அழியாத
உண்மைகளை மட்டுமே அஸ்திவாரமாகக் கொண்டது, அதனால் சனாதன தர்மம் என்றும் பெயர் பெற்றது.
எனவே எந்தத் தனிநபரோ, இயக்கமோ, அமைப்போ, தேர்ந்தெடுக்காமல்,
அழியாத உண்மைகளின் ஆற்றலே தேர்ந்தெடுத்ததுபோல்
சுவாமிஜி சென்றார்.
சுவாமிஜியை மேலை நாட்டிற்கு அனுப்பியவர்கள் அவரை
இந்து மதத்தின் ஒரு பிரதிநிதியாக முடிவு செய்து அனுப்பவில்லை. அவர் அமெரிக்காவிற்குச்
செல்வதற்கு உதவி செய்துவிட்டு, அவர் என்ன செய்ய வேண்டும் என்பதை அவரது முடிவிற்கே விட்டுவிட்டார்கள்.
ஏனெனில் அவர் ஒரு செய்தியுடன் செல்கிறார் என்பது அவரைச் சந்தித்த பலரது அனுபவமாக இருந்தது.
தாம் உலகிற்கு அளிப்பதற்கான செய்தி ஒன்று உள்ளது என்பதைத்தமது இந்தியப் பயணங்கள் மற்றும்
தீவிர தவ வாழ்க்கையாலும் சுவாமிஜி உணர்ந்திருந்தார். அது போலவே, அவரைச் சந்தித்த பலரும்
உலகிற்கு அளிப்பதற்கான ஆன்மீக ஆற்றல் அவரிடம் பொங்குவதை உணர்ந்திருந்தனர். செயற்கரிய
சில செயல்களைச் செய்து முடிக்கும் வரை நீங்கள் ஓயமாட்டீர்கள்” எள்று கட்ச் மன்னர் சுவாமிஜியிடம் கூறினார். உலகையே மாற்றியமைப்பதற்கான
ஆற்றல் என்னில் இருப்பதை உணர்கிறேன்” என்று போர்பந்தரில் சுவாமிஜி
திரிகுணாதீதரிடம் கூறினார்.
அந்த ஆற்றல்
எழுந்தது, செயல்பட்டது.
இந்தச் சர்வ
மத மகாசபை சாதித்தது என்ன என்ற கேள்வி எழுகிறது. ஒருவேளை மத வெறியர்கள் மேலும் தீவிரமான
வெறியர்கள் ஆனார்கள். தாராளமனப்பான்மை உடையவர்கள் மேலும் தாராள மனம் படைத்தவர்களாக
ஆனார்கள், என்று எழுதுகிறார் மேரி லூயி பர்க். விந்தையான கருத்து, ஆனால் முற்றிலும்
உண்மை!
சர்வமத மகாசபையின்
மூலம் கிறிஸ்தவ மதத்தின் மேன்மையை உலகிற்கு அறியச் செய்ய வேண்டும் என்று விரும்பியவர்கள்
சுவாமிஜி மற்றும் கீழை நாட்டு மதப் பிரதிநிதிகளின்
பங்களிப்பால் தங்கள் நோக்கம் நிறைவேறாதது கண்டு ஆத்திரம் அடைந்தார்கள். சுவாமிஜியை
இருகரமும் நீட்டி வரவேற்ற அமெரிக்கர்கள் கிறிஸ்தவ மிஷனரிகளை ஓரளவிற்கு ஒதுக்கினார்கள்
என்றே சொல்லவேண்டும். இந்தியாவின் மதம், சமுதாயம், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை மிஷனரிகள்
அளித்த சித்திரங்களின் மூலம் மட்டுமே இது வரை அறிந்திருந்த அமெரிக்க சமுதாயம் சுவாமிஜியின்
சொற்பொழிவுகளால் உண்மையை உணர்ந்தது. விதவைகளை உயிருடன் கொளுத்துவது, மக்கள் தேர்க்காலில்
வீழ்ந்து உயிர் துறப்பது, பெண் குழந்தைகளை முதலைகளுக்கு இரையாக்குவது என்று இந்தியாவைப்
பற்றி மிஷனரிகள் பரப்பியவை மிகைப்படுத்தப்
பட்டவை என்பது அமெரிக்கர்களுக்குப் புரிந்தது. இதனால் மிஷனரிகளுக்கு அமெரிக்கர்கள்
செலவிட்ட பணத்தைக் குறைக்கத் தொடங்கினார்கள், மிஷனரிகளின் வருமானமே குறையத் தொடங்கியது.
மத வெறியின்
மதுகெலும்பு ஒடியவில்லை, என்றாலும் தங்கள் மீது முதல் சம்மட்டி அடி வீழ்ந்து விட்டதை
அவர்கள் உணரவே செய்தார்கள். என்று எழுதுகிறார்
மேரி லூயி பர்க். சர்ச்சையும் மிஷனரிகளையும் எதிர்த்து எழுந்த ரிவைவலிஸ்ட் இயக்கத்தின்
வளர்ச்சி அதனை நிரூபித்தது. இந்த இயக்கத்தின் வளர்ச்சியை ச் சமாளிக்க சர்ச்சும் மிஷனரிகளும்
மிகவும் பாடுபட வேண்டியதாயிற்று. அவர்களில் சிலரது மதவெறி தீவிரமாயிற்று.
அதே வேளையில்
தாராள மனப்பான்மை கொண்டவர்கள் கீழை நாட்டு மத லட்சியங்களின் மேன்மையைக்கண்டார்கள்.
இத்தகைய லட்சியங்களை உடைய ஒரு நாட்டிற்கு மிஷனரிகளை அனுப்புவது வீண் என்று உணர்ந்தார்கள். இந்தியாவைப் பற்றியும் இந்து மதத்தைப்
பற்றியும் அறிவதில் ஆர்வம் காட்டினார்கள். சுவாமி விவேகானந்தரின் பணிகளால் இந்து மதம்
உத்வெகம் பெற்றுள்ளது. அதன் ஆற்றல்கள் புத்துணர்வு பெற்றுள்ளன.
ஆங்கிலமயமாக்கப்பட்ட,
சாரமற்ற ஒன்றையே இந்து மதம் என்று இதுவரை அமெரிக்கர்கள் பெற்று வந்தார்கள். சுவாமி
விவேகானந்தரின் வாயிலாக உண்மையான இந்து மதம் அவர்களுக்குக் கிடைத்தது. அவரை அனுப்பியதற்காக
அமெரிக்கா இந்தியாவிற்குத் தனது நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறது” என்று உலகக் கண்காட்சியின் விஞ்ஞானப் பிரிவின் தலைவரான ஸ்நெல்
எழுதினார்.
சர்வ மத
மகாசபையின் தலைவரான டாக்டர் பரோஸும் சுவாமிஜிக்கு மிக உயர்ந்த இடத்தை அளித்தார். இந்தப்பேச்சாளர்
ஓர் உயர் ஜாதி இந்து, வைதீக இந்து மதத்தின் ஒரு பிரதிநிதி. சர்வமத மகாசபையில் கூட்டம்
கூட்டமாக மக்களைக் கவர்வதில் மிக முக்கியமான ஒருவராக அவர் திகழ்ந்தார்” என்று அவர் எழுதினார்.
அமெரிக்காவிற்கு உண்மையான இந்து மதத்தை அளித்ததும்
சவாமிஜியை அடையாளம் காட்டியதும் சர்வமத மகாசபை சாதித்ததன் ஒரு பக்கம் மட்டுமே. மறுபக்கம்,
அந்த மகாசபை, இந்தியாவிற்கே சுவாமி விவேகானந்தரை அடையாளம் காட்டியது. சுவாமி விவேகானந்தரின்
அமெரிக்கப் பணியின் விளைவு எதுவாக இருந்தாலும் ஒன்று மட்டும் மறக்க முடியாத உண்மை. நாகரீகம் வளர்ச்சியுற்ற அந்த நாட்டு
மக்களின் கண்களில் உண்மையான இந்து மதம் என்ன என்பதை அவர் எடுத்துக்காட்டிவிட்டார்.
அதன் பதிப்பை
அவர்களின் நெஞ்சங்களில் உயர்த்தி விட்டார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்த
ஒரு பணிக்காகவே இந்து சமுதாயம் சுவாமி விவேகானந்தரிடம் நன்றிக்கடன் பட்டுள்ளது” என்று ” இன்டியன் மிரர்” (1894 பிப்ரவரி 21) எழுதியது.
சர்வமத மகாசபை நிறைவுற்ற பிறகும் அமெரிக்காவில் சில
காலம் தங்கி இந்திய ஆன்மீகத்தின் பெருமையை
உலக அரங்கில் பரப்ப எண்ணினார் சுவாமிஜி. அவரைப்பொறுத்த வரை, சிகாகோ சர்வமத மகாசபை இந்தியாவிற்கும்
இந்தியச் சிந்தனைக்கும் கிடைத்த ஒரு மாபெரும் வெற்றி. வேதாந்தத்தின் அலை உலகையே வலம்
வருவதற்கு இந்த வெற்றி உதவி செய்துள்ளது. அதனுடன், அமெரிக்காவில் எழுப்பும் ஓர் அலை
இந்தியாவில் ஆயிரம் அலைகளை எழுப்பும், அதன் மூலம் தமது தாய் நாட்டின் உயர்விற்கான வாய்ப்பு
அதிகரிக்கும் என்று உணர்ந்திருந்தார் அவர். எனவே அமெரிக்காவில் தங்கி தமது பணியை தொடர்ந்தார்.
தெய்வ தூதர்
சர்வமத மகாசபைக்குப்
பிறகு சுமார் இரண்டரை வருடங்கள் சுவாமிஜி அமெரிக்காவில் இருந்தார். இடையில் 1895 செப்டம்பர்
முதல் நவம்பர் வரை ஒரு முறை இங்கிலாந்திற்குச் சென்றிருந்தார். இந்த ஓர் இடைவெளியைத்
தவிர 1896 ஏப்ரல் 15 வரை சுவாமிஜியின் அமெரிக்க வாழ்க்கை மிகவும் பரபரப்பானதாக இருந்தது.
ஒரு நாள் ஒரு மூலையில், மறுநாள் எதிர் மூலையில்
என்று அவரதுசொற்பொழிவுகள் நடைபெற்றன, ஓய்வு, சொந்த சுக சௌகரியங்கள் எதையும் கவனிக்காமல் அவர் செயல்பட்டுக்கொண்டே இருந்தார். அபேதானந்தர்
எழுதுகிறார்.,
சுவாமிஜி
அமெரிக்காவில் எதிர்கொள்ள நேர்ந்த சிரமங்களும் அசௌகரியங்களும் ஒன்றிரண்டு அல்ல.
உணவு, உடை, கால நிலை போன்ற விஷயங்கள் அவரது உடம்பை
வெகுவாகப் பாதித்தன. சிலவேளைகளில் குளிர்காலத்தில் அவரிடம் கோடைக்காலத்திற்கான துணிகளே இருக்கும்,
அதை வைத்தே சமாளிப்பார். அமெரிக்காவில் காலநிலை திடீர்திடீரென்று மாறக் கூடியது. அந்த
மாற்றமும் கடுமையாக இருக்கும். சில நேரங்களில்
பிறருக்கு உதவுவதற்காக தனது சௌகரியங்களை அவர் மறுப்பதும் உண்டு, தமது தேவைகளை
அவர் பொதுவாக வெளிப்படுத்துவதில்லை. அழைத்துச் செல்பவர்கள் என்ன கொடுக்கிறார்களோ அதை
வைத்துச் சமாளித்தபடியே வாழ்ந்தார் அவர், கையில் ஒரே ஒரு பையுடன் சிலவேளைகளில் ஒருநாள் மூன்று சொற்பொழிவுகள் வரை
செய்தபடி பயணித்தார் சுவாமிஜி.
நரேன் உலகிற்குப்
போதிப்பான் என்று குருதேவர் கூறியதை இந்த அமெரிக்க நாட்கள் மெய்ப்பித்தன. அமெரிக்கா
புண்ணியம் செய்தது என்று தான் கருத வேண்டியுள்ளது- குருதேவரின் அருள், அன்னையின் ஆசிகள்,
தீவிரமான சாதனைகள், பரிவிராஜக வாழ்க்கை, தீவிர தவங்கள் ஆகியவற்றின் பலனாக அவரில் கிளர்ந்தெழுந்த ஆன்மீக ஆற்றலை முதன்முதலாகப்பெற
அமெரிக்கா அல்லவா கொடுத்து வைத்திருந்தது! அமெரிக்காவிற்கு ஒரு தெய்வதூதராக வந்தார்
சுவாமிஜி. அங்கே தமது ஆன்மீகப்பணியைச்செய்து கொண்டே போனார். சென்ற இடங்களில் எல்லாம்
ஆன்மீகத்தின் விதைகளை விதைத்தார். எண்ணற்ற மக்களுக்குத் தமது ஆசிகளை வழங்கினார்” என்று எழுதுகிறார் மேரி லூயி பர்க்.
கீழை நாடுகளுக்கு
புத்தர் ஒரு செய்தியை அளித்தது போல் மேலை நாடுகளுக்கு நான் அளிப்பதற்கு செய்தி ஒன்றுஉள்ளது” என்று சுவாமிஜி கூறினார். அந்தச்செய்தியை வழங்க ஆயத்தமானார்.
சுவாமிஜியின் இந்தப் பணியை மூன்று கட்டங்களாக பிரிக்கலாம். சர்வமத மகாசபை நிறைவுற்றதிலிருந்து (27 செப்டம்பர்
1893) சுவாமிஜியின் வாழ்க்கை தொடர்பயணங்களும் சொற்பொழிவுகளும் நிறைந்ததாக இருந்தது.
ஓய்வு ஒழிச்சலற்ற இந்தப் பணியால் களைப்புற்று, தமது பணிமுறையையே மாற்றி அமைக்க வேண்டுமா
என்ற கேள்வியுடன் 1894 மார்ச் முதல் வாரத்தில் சிகாகோவிற்குத் திரும்பினார் சுவாமிஜி.
இந்தச்சுமார் 6 மாதங்கள் அவரது பணியின் முதற்கட்டம்.
1895 ஜனவரி
வரையுள்ள சுமார் 10 மாதங்களை இரண்டாம் கட்டம் எனலாம். இந்தக் கட்டத்தில் பொதுச்சொற்பொழிவுகளைவிட
வகுப்புச்சொற்பொழிவுகளில் அவர் அதிக கவனம்
செலுத்தினார். தேர்ந்தெடுத்த சீடர்களுடன் ஆயிரம் தீவுப் பூங்காவில் அந்தர்யோகவாழ்க்கை
நடத்தினார். தமது பணியைத்தொடர்வதற்கான சீடர்களை
உருவாக்குவதில் கவனம் செலுத்தினார்.
சுவாமிஜி தாயகம் திரும்பும்வரையுள்ள (1896 டிசம்பர்16)
காலம் அவரது மேலை நாட்டுப்பணியின் மூன்றாம் கட்டம் ஆகிறது. அவர் இரண்டாம் முறை மேலை
நாடுகளுக்குச்சென்றதையும் (1899 ஆகஸ்ட் முதல் 1900 ஜுலை 20) இந்த மூன்றாம் கட்டத்துடன்
சேர்த்துக்கொள்ளலாம்.
சர்வமத மகாசபையில்
கலந்து கொண்டவர்களில் ஜான் பி. லியான் ஒருவர்.
இவர் சிகாகோவில் பிரபல மனிதர்களுள் ஒருவர். மகாசபையில் கலந்து கொள்கின்ற பிரதிநிதிகளில்
சிலரைத்தமது வீட்டில் தங்க வைக்கலாம் என்று
அமைப்பாளர்களிடம் கூறியிருந்தார். மதவெறியை விரும்பாதவர் அவர். குறுகிய நோக்கங்கள்
இன்றி, பரந்த மனம் படைத்தவர்களை மட்டுமே தமது வீட்டிற்கு அனுப்பவேண்டும் என்று அவர்
கேட்டுக்கொண்டார். எனவே சுவாமிஜி அவரது வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.
முதற் சொற்பொழிவு
நிகழ்ந்த அன்றிரவு சுவாமிஜி லியானின் வீட்டை அடைந்தார். தமக்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்குச்
சென்றுவிட்டார். அந்த வீட்டில் வேறு சில விருந்தினர்களும் இருந்தனர். வெள்ளை இனத்தினரைத்
தவிர வேறு யாரையும் விரும்பாதவர்கள் அவர்கள். எனவே லியானின் மனைவியான எமிலி, லியானிடம்
வந்து, விடிந்ததும் சுவாமிஜியைப் பக்கத்து ஹோட்டலில் தங்க வைக்கலாம் என்று ஆலோசனை தெரிவித்தார். லியான தர்மசங்கடத்திற்கு
உள்ளானார்.
என்ன செய்வதென்று
தெரியாமல் நேராக சுவாமிஜியிடம் சென்றார். அவருடன் சிறிது நேரம் தான் பேசியிருப்பார்.
அவரது குழப்பம் அகன்றது, தெளிந்த மனத்துடன் நேராக தன் மனைவியிடம் சென்று, இதோபார்,
இந்த இந்தியர் தாம் விரும்பும் வரை இங்கே தான் தங்குவார். இத்தகைய ஒருமேதை இதுவரை நம்
வீட்டில் தங்கியதில்லை. மற்ற விருந்தினர்கள் அனைவரும் வீட்டைவிட்டுப் போனாலும் கவலையில்லை” என்று கூறிவிட்டார்.
சிறிது நேரப்பேச்சில் லியானிடம் அத்தகையதொரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார் சுவாமிஜி.
பின்னாளில்
எமிலியும் தமது கருத்தை மாற்றிக்கொண்டார். சுவாமிஜியிடம் மிகுந்த அன்பு பாராட்டினார்.அவரது
வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டார். சுவாமிஜி அம்மா” என்று அழைத்த சிலரில் எமிலியும் ஒருவர். சொற்பொழிவுகளுக்குச்
செல்வார் சுவாமிஜி. அங்கே கிடைக்கின்ற பணத்தை ஒரு கைக்குட்டையில் கட்டி எடுத்து வருவார்-
ஆரம்பத்தில் அவரிடம் பர்ஸ் இருக்கவில்லை. அதை அப்படியே எமிலியிடம் கொடுப்பார். எமிலி
அதை எண்ணி, கணக்கு வைத்துக்கொண்டு வங்கியில் சேமிப்பார்.
எமிலியும்
அவரது மருமகளும் சர்வமத மகாசபையில் சுவாமிஜியின் சொற்பொழிவுகளைக்கேட்கச் செல்வதுண்டு.
அந்த மருமகள் ளம்வயதிலேயே கணவனை ழந்தவள். சுவாமிஜி அவளுக்கு மிகுந்த ஆறுதல் கூறவும்
அவளைத்தேற்றவும் செய்வார்.
லியானின்
பேத்தியான கார்னீலியா காங்கர் அப்போது ஆறுவயது சிறுமி. அவளை மிகவும் நேசித்தார் சுவாமிஜி.
அவளுக்கு ந்தியாவைப் பற்றிய பல கதைகளைக்கூறுவார். குரங்குகள், மயில்கள், ஆலமரங்கள்
என்று அவர் கூறுகின்ற கதைகளை அவரது மடியில் அமர்ந்து கொண்டு ஆர்வத்துடன் கேட்பாள் அவள்.
அவளது பாடப்புத்தகங்களைக்கொண்டு வரச்செய்து அவளிடம் கேள்விகள் கேட்பார். புத்தகத்திலுள்ள
தேச வரைபடங்களில் ந்தியாவைச்சுட்டிக்காட்டுவார். அப்போதும் அவரது மனம் இந்தியாவையே
எண்ணி , அமெரிக்கக் குழந்தைகளுக்கு இருப்பதுபோன்ற கல்வி வசதிகள் இந்தியக் குழந்தைகளுக்கு
இல்லையே, என்று ஏக்கம் கொள்ளும்.
சுவாமிஜியின்
தலைப்பாகை கார்னீலியாவிற்கு மிகவும் வினோதமாகப் பட்டது. ஒவ்வொரு முறை அணியும் போதும்
அதை அவர் தலை முழுவதும் சுற்றிக்கொள்வது அவளுக்கு வேடிக்கையாக இருந்தது. அதனைச்சுற்றுகின்ற விதத்தைக் காட்டுமாறு
மீண்டும் மீண்டும் அவரைத் தொந்தரவு செய்வாள். சுவாமிஜியும் சளைக்காமல் அவளுக்கு அந்தத்
தலைப்பாகை-வித்தையை” ச் செய்து காட்டுவார்.
ஆனால் ஒன்று . அவர் தியானத்தில் ஆழ்ந்திருக்கும்
போது அவள் அவரைத் தொந்தரவு செய்வதில்லை. அந்தநேரத்தில்
அவர் சாதாரணமாகத் தாம் அறிகின்ற சுவாமிஜி அல்ல, அந்தநேரத்தில் அவருக்குத் தொல்லை தரக்கூடாது
என்பதை இயல்பாக உணர்ந்திருந்தாள் அந்தச் சிறுமி.
சிறுவர் சிறுமியரிடம் சுவாமிஜிக்கு எப்போதுமே தனிபிரியம்
இருந்தது. அவர்களும் அவரிடம் எளிதாக ஒட்டிக்கொண்டார்கள். சுவாமிஜி ஒரு குறிப்பிட்ட
வேளையில் ஒரு பார்க்கில் சிறிது நேரம் அமர்ந்திருப்பார். அந்தநேரத்தில் ஒரு தாய் தன்
சிறுவயது மகளுடன் அந்த வழியாகத்தினமும் கடைக்குப்போவார். சுவாமிஜி அமர்ந்திருப்பதைக்
கண்ட அவர் ஒருநாள் அவரிடம் வந்து, இவளை இங்கே உங்களிடம் விட்டுச்செல்லட்டுமா? கடையிலிருந்து
திரும்பி வரும்போது கூட்டிச் செல்கிறேன்” என்று கேட்டுக் கொண்டார். சுவாமிஜியும்
மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக் கொண்டார். தாய் வரும்வரை அந்தச் சிறுமியுடன் கதைகள் சொல்வதும்
விளையாடுவதுமாக நேரம் கழிப்பார் அவர் இப்படி பல நாட்கள் நடைபெற்றது.
ஒரு நாள்
சுவாமிஜி அமைதியாக அமர்ந்திருந்தார். எமிலி அருகில் அமர்ந்திருந்தார். சுவாமிஜி ஆழ்ந்த
மௌனத்தைக் கலைத்து விட்டு, அம்மா” உங்கள் நாட்டில் இந்த ஒருவரைப்போல்
என்னை வேறு யாரும் இந்த அளவிற்குக் கவர வில்லை என்றார். அப்படி உங்களைக் கவர்ந்தவள்
யார் சுவாமிஜி? என்று வேடிக்கையாகக்கேட்டார் எமிலி. சுவாமிஜி குபீரென்று சிரித்துவிட்டு,
அது ஒரு பெண் அல்ல, இயக்கரீதியாகச் செயல்படுகின்ற
அமெரிக்கர்களின் திறமை. நான்கு பேர் சேர்ந்து இங்கே காரியங்களைச்செய்கின்ற விதம் என்னை
மிகவும் கவர்ந்து விட்டது ” என்றார்.
வேடிக்கைக்காக
மட்டும் அல்ல, சிறிது விஷயமாகவும் தான் உங்களைக் கவர்ந்தவள் யார்? என்று எமிலி கேட்டார்.
ஏனெனில் சுவாமிஜியின் வெற்றி அவரை நாடறிந்த மனிதராக ஆக்கியிருந்தது. அவரது அளுமையாலும்
தோற்றத்தாலும் கவரப்பட்ட பல பெண்கள் அவரை மொய்த்தனர்.
ஒரு வேளை அந்தப் பெண்களில் யாராவது அவரிடம் தவறான எண்ணத்துடன் அனுகினால், அவர்களிடமிருந்து
அவரைப் பாதுகாக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டிருந்தார் எமிலி. ஒரு நாள் அது பற்றி
சுவாமிஜியிடம் அவர் கூறவும் செய்தார்.
எமிலியின்
நல்லெண்ணம் சுவாமிஜியின் உள்ளத்தைத்தொட்டது.
ஆதரவுடன் அவரது கைகளைப் பற்றியவாறு, என் அன்பான அமெரிக்க அம்மா, என்னைப் பற்றி கவலைப்
படாதீர்கள். எதுவும் அற்றவனாக நான் சாலையோர ஆலமரத்தடியில் படுத்துத் தூங்கியிருக்கிறேன்.
அன்புடன் விவசாயி கொடுத்த கஞ்சியை மட்டும் குடித்து வாழ்ந்திருக்கிறேன். அதே, நான் மன்னர்களின் அரண்மனையில்
விருந்தினராக இருந்திருக்கிறேன், இரவு முழுவதும் பணிப்பெண்கள் மயில்தோகை விசிறியால் வீச தூங்கவும் செய்திருக்கிறேன். கவர்ச்சி, வசீகரம்,
என்றால் என்ன என்பது எனக்கு நன்றாகத்தெரியும். என்னைப் பற்றி கவலைப்படாதீர்கள் என்று
பனிவுடன் கூறினார்.
பின்னாளில்
அவர் தனியாக அங்கங்கே பல வீடுகளில் தங்கவேண்டியிருந்தது. அப்போது வீட்டிற்கு வெளியில்
தபால் பெட்டி ஒன்றை வைத்திருப்பார். தபால்காரன்
அதில் தபால்களை இட்டுச்செல்வான். சுவாமிஜி வந்தபிறகு அவற்றை எடுத்துப் படிப்பார். அதில்
பல பணக்கார, படித்த, இளம் பெண்களின் கடிதங்களும் இருக்கும். தங்களை மணந்து கொள்வதற்காக
அவரிடம் கேட்டு அவர்கள் எழுதியிருப்பார்கள். சுவாமிஜி இத்தகைய கடிதங்களுக்குப் பதில்
எழுதுவதில்லை.
சிலர் நேராகவே வந்து இது பற்றி பேச ஆரம்பிப்பார்கள்.
அவர்களிடம் சுவாமிஜி, பாருங்கள், நான் ஒரு துறவி. இந்தியாவில் துறவிகள் திருமணம் செய்து
கொள்வதில்லை. அவர்களுக்கு எல்லாப் பெண்களும் தாய் அல்லது சகோதரிக்குச் சமம். எனவே திருமணம்
என்ற பேச்சிற்கே இடமில்லை என்பார். அவர்களுக்கு இந்தப் பதில் ஆச்சரியமாக இருக்கும்.
ஆனாலும் சுவாமிஜியின் உணர்வைப்புரிந்து கொண்டு மௌனமாகத் திரும்புவார்கள்.
திருமணம்
செய்து கொள்வதற்காக சுவாமிஜியை நேரடியாக அணுகிய பெண்களும் உண்டு. ஒரு முறை பெரும் பணக்காரி
ஒருத்தி, சுவாமி, என்னையும் எனது திரண்ட செல்வத்தையும் உங்கள் காலடியில் வைக்கிறேன்
என்று கூறினாள். அதற்கு சுவாமிஜி, இதோ பாருங்கள், நான் ஒரு துறவி. எனக்கு என்ன திருமணம்
! என்னைப் பொறுத்தவரை எல்லாப் பெண்களும் என் தாய் என்றார்.
அமெரிக்கப்பெண்கள்
எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்கள். காதல் களியாட்டங்களில் ஒரு வெறியாகவே உள்ளனர். நானோ
காதல் போன்ற உணர்ச்சிகள் எதுவும் இல்லாத ஒருவகை
வினோத மிருகம். என்னிடம் அவர்களுக்குக் காதல் என்பதற்கெல்லாம் வழியில்லை., அதனால் என்னிடம்
மிகவும் மரியாதை வைத்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் என்னை, அப்பா” என்றோ, அண்ணா” என்றோ அழைக்குமாறு செய்து விட்டேன். வேறு எந்த உணர்ச்சியுடனும்
அவர்கள் என் அருகில் வர நான் விடுவதில்லை. படிப்படியாக அவர்கள் எல்லோரையும் வழிக்குக்கொண்டு
வந்து விட்டேன் என்று எழுதுகிறார் சுவாமிஜி
கற்றுக்கொள்கிறார்
-
தொடர்பு கொண்ட அனைவரிடமும் ஒரு குழந்தை போல் பழகினார்
சுவாமிஜி. அவர்களும் அவரை அன்புடன் போற்றினர். அமெரிக்காவின் பழக்க வழக்கங்களை அவர்கள் அவருக்குக் கற்றுக்கொடுத்தனர். சுவாமிஜி ஓர் ஆர்வம்
மிக்க மாணவன் போல் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டார். படிகளில் ஏறும்போதும் இறங்கும்போதும் ஆண் முதலில் செல்லவேண்டுமா அல்லது
பெண் முதலில் செல்ல வேண்டுமா என்பது போன்ற விஷயங்களைக்கூட கேட்டுத்தெரிந்து கொண்டார்.
எமிலி ஒரு
பெண்கள் மருத்துவமனையின் தலைவியாக இருந்தார். சுவாமிஜி அந்த மருத்துவமனையை மிகுந்த
ஆர்வத்துடன் சென்று பார்த்தார். அங்கே குழந்தைகள் றப்புவிகிதம் பற்றிய புள்ளி விவரங்களையும்
கேட்டுத்தெரிந்து கொண்டார்.
சிகாகோவிலுள்ள
கண்காட்சி சாலைகள், பள்ளிகள், பல்கலைக் கழகங்கள், கலைக்கூடங்கள், என்று பல இடங்களையும் சுற்றிப்பார்த்தார். இதன்
மூலம் மேலை நாட்டு வாழ்க்கை முறையையும் அதன் அடிப்பைடை நீரோட்டத்தையும் புரிந்து கொள்ள
முயற்சி செய்தார். ஒரு சிறந்த கலை ப் படைப்பு, கலைநயம் மிக்க கட்டிடம், ஆற்றலின் அற்புத
வெளிப்பாடு என்று எதையாவது அவர் செல்லும் வழியில் காண நேர்ந்தால் அப்படியே நின்று பார்த்து,
ரசித்து அதில் ஆழ்ந்து விடுவார். இந்திய வாழ்க்கையுடன் ஒன்று கலந்து அதன் ஆழங்களை உணர்ந்தது
போலவே இங்கும் மேலை நாட்டு வாழ்க்கையின் ஆழங்களை உணர முயன்றார் அவர்.
ஒரு நாள்
பிற்பகலில் எமிலி, சுவாமிஜியை ஒரு பாடல் நிகழ்ச்சிக்கு அழைத்துச்சென்றார். சுவாமிஜி
மிகுந்த கவனத்துடன் பாடல்களைக்கேட்டார். ஆனால் ஏனோ தலையைச்சற்று ஒரு புறமாகச் சாய்த்தபடி. முகத்தில் ஒரு புரியாத
பாவனையுடன் அமர்ந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் எமிலி அவரிடம், நிகழ்ச்சியை ரசித்தீர்களா?
என்று கேட்டார்.ம்........ ரசித்தேன்” என்று இழுத்தார் சுவாமிஜி. ஏன்
என்ன விஷயம்? என்று கேட்டார் எமிலி. சுவாமிஜி கூறினார், இரண்டு விஷயங்கள் எனக்குப்புரியவில்லை. முதலில், அவர்கள் செய்த அறிவிப்பு.
இதோ நிகழ்ச்சி நாளை மாலையிலும் நடைபெறும்” என்றார்கள். பிற்பகல் பாடலை எப்படி
மாலையில் கேட்க முடியும்? இந்தியாவில் காலை, பிற்பகல், மாலை, இரவு என்று ஒவ்வொரு நேரத்திற்கும்
குறிப்பிட்ட ராகங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றிற்கும் தனித்தனி பண்புகள் உள்ளன. ஒவ்வொன்றும் வித்தியாசமானவை.
பிற்பகல் ராகத்தை மாலையில் ரசிக்க முடியாது. மற்றொன்று, இந்த இசையில் இடைவெளி ஏராளம்
இருப்பது போல் தோன்றுகிறது. அதனால் இனிமை குறைவதாகவே தெரிகிறது. துளைகளுடன் கூடிய பதார்த்தம் ஒன்றைக் காலையில் எனக்குச் சாப்பிடத் தந்தீர்களே,
அது போலவே உள்ளது இந்த இசை.
அதே வேளையில் மேற்கத்திய இசையின் பெருமையையும் சுவாமிஜி உணர்ந்தே இருந்தார்.தமது
நண்பரான பிரியநாத் சிங்கரிடம் பேசும்போது, நம்மிடம் இல்லாத ஓர் இயைபின் நிறைவு அதில்
இருக்கும்.ஆனால் அதில் பழக்கப் படாத நம் காதுகளுக்கு அது இனிமையாக இருக்காது. அவர்கள்
வெறுமனே நரிபோல் ஊளையிடுவதாகவே நானும் எண்ணியிருந்தேன். அதை நுட்பமாகக் கவனித்துக்கேட்டுப்
புரிந்து கொள்ள ஆரம்பித்த போது திகைத்துப்போனேன். மெள்ளமெள்ள அதனால் மிகவும் கவரப்பட்டு
விட்டேன். எல்லா கலைகளின் விஷயமும் இப்படியே. மே லோட்டமாக ஒரு முறை பார்ப்பதால், உன்னதமான
ஓவியங்களில் எதுவும் புரிந்து கொள்ள முடியாது. கண்கள் அந்த வழியில் சிறிதேனும் பழக்கப்
படாமல் அதன் நெளிவுசுளிவுகள் எதனையும் அறிய இயலாது என்று கூறினார்.
விஞ்ஞானிகளுடன்
இந்த நாட்களில்
உலகின் மகாமேதைகள் பலர் உலகக் கண்காட்சிக்கு வந்திருந்தனர். அவர்களில் பல சிந்தனையாளர்களுடனும் விஞ்ஞானிகளுடனும் சுவாமிஜிக்குத்தொடர்பு ஏற்பட்டது.
சர்வ மத மகாசபைக்கு முன்பு சிகாகோவில் ஆகஸ்ட் 21 முதல் 25 வரை நடைபெற்ற மின்சாரம் பற்றிய
மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்த விஞ்ஞானிகளுக்கு சுவாமிஜி அறிமுகப் படுத்தப்பட்டார்.
மின் சாதனத்தைக் கண்டுபிடித்தவரான பேராசிரியர் எலிஷா க்ரேயும் அவரது மனைவியும் தங்கள்
விட்டில் தற்கான விருந்திற்கு ஏற்பாடு செய்தனர். சிகாகோவிலிருந்து சுமார் 90 மைல் தொலைவில்
வெர்மிலன் நதியின் கரையில் ஸ்ட்ரீடர் என்ற
ஊரில் அவர்களது வீடு அமைந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் மிகச்சிறந்த யற்பியல் விஞ்ஞானிகளான
கெல்வின் பிரபு, பேராசிரியர் ஹெர்மன் வோன் ஹெம் ஹோல்ட்ஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மின்சாரம் பற்றி சுவாமிஜி கொண்டிருந்த அறிவு அந்த விஞ்ஞானிகளுக்கு மிகுந்த ஆச்சரியத்தைத்
தந்தது.
இங்கர்சாலுடன்
-
பிலபல பகுத்தறிவுவாதியும்
சொற்பொழிவாளருமான இங்கர் சாலை சுவாமிஜி சிகாகோவில் சந்தித்தார். அவரும் சுவாமிஜியால் கவரப்பட்டார்.
சுவாமிஜியுடன் அவர் பலமுறை கருத்துப் பரிமாற்றங்களும் செய்தார். சுவாமிஜியின் துணிச்சலும்
ஒளிவுமறைவற்ற பேச்சும் அவரைத் திகைக்க வைத்தன. ஒரு முறை அவர் சுவாமிஜியிடம், நேரடியாகவே,
சுவாமிஜி , புதிய கருத்துக்களைக் கூறும்போதும், அமெரிக்க சமுதாயத்தின் பழக்க வழக்கங்களையும்
மக்களையும் விமர்சிக்கும்போதும் சற்று கவனமாக இருங்கள் என்று எச்சரித்தார். ஏன்? என்று
கேட்டார் சுவாமிஜி. அதற்கு இங்கர்சால், நீங்கள் ஒரு மத போதகராக ஐம்பது வருடங்களுக்கு
முன்பு இங்கே வந்திருந்தால் உங்களைத் தூக்கில்
இட்டிருப்பார்கள் அல்லது உயிரோடு கொளுத்தியிருப்பார்கள். இன்னும் சிலகாலம் முன்பாக இருந்தால் கல்லெறிந்தே உங்களை
வெளியேற்றியிருப்பார்கள் என்றார் . சுவாமிஜி அதிர்ந்து போனார். அமெரிக்காவில் இத்தகைய மதவெறியும் குறுகிய மனப்போக்கும் இருந்திருக்கும் என்பதை அவரால்
நம்ப முடியவில்லை.
சுவாமிஜியும்
இங்கர்சாலும் பலமுறை கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டாலும் கொள்கையளவில் இருவரும் வேறுபட்டிருந்தார்கள்.
இங்கர்சால் மதங்ளை நம்பாதவர், கடவுளைச்சந்தேகிப்பவர், . சுவாமிஜி மிகவும் புராதனமான
இந்து மதத்தைச்சேர்ந்தவர், பிற மதங்களும் உண்மை என்று ஏற்றுக் கொள்பவர், வாழ்க்கையையே கடவுளிடம் ஒப்படைத்து வாழ்பவர்.
ஒரு நாள் இங்கர்சால் சுவாமிஜியிடம், உலகை அனுபவிக்க
வேண்டும், உலகத்திலிருந்து எவ்வளவு பெற முடியுமோ அவ்வளவையும் பெற்றுவிட வேண்டும். ஆரஞ்சுப்
பழத்தை ஒட்டப் பிழிவது போல், கடைசிச்சொட்டுவரை உலகை அனுபவிக்க வேண்டும்.ஏனெனில் ந்த
வாழ்க்கை ஒன்று தான் நமக்கு உறுதியாகத் தெரியும். இனி ஒரு வாழ்க்கை உண்டோ இல்லையோ,
யார் கண்டது! என்று கூறினார். அதற்கு சுவாமிஜி
பதிலளித்தார்.
நீங்கள்
சொல்வதை நான் முற்றிலுமாக ஒப்புக் கொள்கிறேன். என்னிடமும் பழம் இருக்கிறது. நானும் சாறு முழுவதையும் பிழிந்தெடுக்கவே விரும்புகிறேன்.
பழங்களைத்தேர்ந்தெடுப்பதில் தான் நம்முடைய வேறுபாடு இருக்கிறது. நீங்கள் ஆரஞ்சை விரும்புகிறீர்களா?நான்
மாம்பழத்தை விரும்புகிறேன். இந்த உலகத்தில், சாப்பிட்டு , குடித்துச் சிறிதளவு விஞ்ஞான
அறிவோடு வாழ்ந்தால் போதுமானது என்று நீங்கள்
நினைக்கிறீர்கள்? ஆனால் எல்லோர்க்கும் இந்தக் கருத்து பிடிக்க வேண்டும் என்று சொல்ல
உங்களுக்கு உரிமை இல்லை. அத்தகைய கருத்து எனக்கு ஒன்றுமே இல்லை. ஓர் ஆப்பிள் எப்படித்தரையில்
விழுகிறது, அல்லது ஒரு மின்னோட்டம் எப்படி என்
நரம்புகளைப் பாதிக்கிறது என்பதைப் பற்றி மட்டுமே அறிய வேண்டுமென்றால், அதைவிட
நான் தற்கொலை செய்து கொள்வேன். பொருட்களின்
மையத்திற்குச் செல்லவே நான் விரும்புகிறேன். அவற்றின் உட்கருத்தைத்தெரிந்து கொள்ளவே
விரும்புகிறேன். வாழ்க்கையின் வெளிப்பாட்டை நீங்கள் ஆராய்ச்சி செய்கிறீர்கள். ஆனால்
நானோ வாழ்க்கையையே ஆராய்கிறேன், அதைத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.
சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு சுவாமிஜி தொடர்ந்தார்.
உலகமாகிய ஆரஞ்சுப் பழத்தை ஒட்டச்சாறு பிழிய வேண்டும் என்று கூறினீர்கள். அதுவும் எனக்கு
உடன்பாடு தான். அதற்கும் உங்கள் வழியைவிடச்சிறந்த வழி எனக்குத்தெரியும். அந்த வழியில்
நான் மிக அதிகச்சாறு பெறுகிறேன். எனக்கு மரணம் இல்லை என்பது எனக்குத்தெரியும். அதனால்
நான் அவசரப்படுவதில்லை. இறந்துவிடுவேனோ என்ற பயம் இல்லாததால் நான் நிதானமாகச் சாறு
பிழிகிறேன். எனக்குக் கடமைகள் இல்லை. மனைவி, மக்கள், சொத்து,, சுகம் என்ற பந்தங்கள்
எதுவும் இல்லை. அதனால் ஆண்கள், பெண்கள், அனைவரையும் என்னால் நேசிக்கமுடியும்.ஆகா! மனிதனைக் கடவுளாக எண்ணி நேசிக்கின்ற
அந்த ஆனந்தத்தை நினைத்துப்பாருங்கள்! இந்த வழியில் ஆரஞ்சைப் பிழிந்து பாருங்கள். லட்சம்
மடங்கு அதிகச்சாறு பெறுவீர்கள். இந்த முறையில்
கடைசிச்சொட்டு வரை உங்களுக்குக் கிடைக்கும்.
சுவாமிஜியைச்
சந்தித்து, தங்கள் வாழ்க்கையைப்பொருள் நிறைந்ததாக உணர்ந்தவர்களில் ஒருவர் எம்மா கால்வே.
அவர் அப்போது புகழின் உச்சியில் இருந்த ஓர் ஓபரா பாடகி. பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த அவர் அங்கும்
இங்கிலாந்தின் மிகப்பெரிய பாடகியாக விளங்கினார்.
புகழின் உச்சியில் இருப்பவர்களின் வாழ்க்கை சோகம்
நிறைந்ததாக இருப்பது பொதுவான உண்மை. கால்வேயும்
இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. அனைத்து சோகங்களையும் அடக்கிக்கொண்டு நான் பிறருக்காகப்பாடுகிறேன்” என்று ஒருமுறை அவர் கூறியதும் உண்டு. அத்தனைத் துன்பங்களிலும்
துயரங்களிலும் அவருக்கு இருந்த ஒரே ஆறுதல்
அவரது ஒரே மகள். ஆனால் விதியின் கோரக்கைகள்
விளையாட, ஒரு நாள் திடீரென்று தீக்கிரையானாள் அந்தச்சிறுமி. ஒரு மேடையில் கால்வே
பாடிக்கொண்டிருந்தபோது இந்தச்செய்தி அவருக்குத்தெரிவிக்கப் பட்டது. அங்கேயே மூர்ச்சை
ஆனார்அவர். அதன்பிறகு அவருக்கு வாழ்க்கையில் பிடிப்பு எதுவும் இல்லாமல் போயிற்று. பலமுறை
தற்கொலைக்கு முயன்றார்.
கடைசியாக ஒருநாள் அங்கிருந்த ஏரி ஒன்றில் மூழ்கி உயிரை விடுவதென்றுமுடிவு செய்து வீட்டை விட்டுக்கிளம்பினார்.
ஏதோ ஒரு வசியத்திற்கு ஆட்பட்டவர்போல் அவரது கால்கள் தோழி ஒருவரின் வீட்டிற்கு அவரை
இழுத்துச்சென்றன. இவ்வாறு ஒரு முறை அல்ல, பலமுறை நிகழ்ந்தது- ஏரியை நோக்கிப்புறப்படுவார்.
ஆனால் தோழியின் வீட்டை அடைவார்.
ஆச்சரியம்
அதுவல்ல- அந்தத்தோழியின் வீட்டில் தான் சுவாமிஜி தங்கியிருந்தார்- அது தான் ஆச்சரியத்திற்கு
உரியது! வ்வாறு சுவாமிஜியின் திருசன்னதியில் வந்து சேர்ந்தார் எம்மா கால்வே.
சுவாமிஜிபேசுமுன்,
நீ பேசக் கூடாது. என்று அவரிடம் கூறியிருந்தார்கள். அவர் அறைக்குள் நுழைந்தபோது சுவாமிஜி
தியானத்தில் ஆழ்ந்திருந்தார். ஆரஞ்சு வண்ண உடை. பார்வை தரையை நோக்கி இருந்தது. ஒரு
சில வினாடிகள் கழிந்தன. திடீரென்று அவர் தலையைத்தூக்காமலே பேச ஆரம்பித்தார்.
சுவாமிஜி-
என் மகளே! என்ன குழப்பமான சூழ்நிலையில் உள்ளாய்? அமைதியாக இரு. அது மிகவும் இன்றியமையாதது.
கால்வேயின்
பெயைரைக்கூட அறியாத சுவாமிஜி இதனைச்சொல்லிவிட்டு, அவரைப்பற்றியும் அவரது பிரச்சனைகளைப்
பற்றியும் கவலைகளைப் பற்றியும் சொல்ல ஆரம்பித்தார். கால்வேயின் நெருங்கிய நண்பர்களுக்குக்கூட தெரியாதவை அவை.
கால்வே-
இவை எல்லாம் உங்களுக்கு எப்படித்தெரியும்? என்னைப் பற்றி யாராவது உங்களிடம் முன்பே
சொன்னார்களா?
அமைதியான
புன்னகை முகத்தில் தவழ சுவாமிஜி நிமிர்ந்து பார்த்தார். முட்டாள் தனமான கேள்வி கேட்கின்ற
ஒரு குழந்தையைப் பார்ப்பது போலிருந்தது அந்தப் பார்வை.
சுவாமிஜி-யாரும்
சொல்லவில்லை. அது அவசியம் என்று நினைக்கிறாயா? மகளே, ஒரு திறந்த புத்தகத்தைப் படிப்பது
போல் உன்னை நான் படிக்கிறேன். அனைத்தையும் மறந்துவிடு. உற்சாகமாக இரு, மகிழ்ச்சியாக
இரு. தேக ஆரோக்கியத்தை நன்றாக வைத்திரு. தனிமையில் அமர்ந்து உன் கவலைகளையே எண்ணயெண்ணிக்
குமையாதே. உனதுஉணர்ச்சிகளை ஏதாவது புற வெளிப்பாடுகளாக மாற்று. உனது ஆன்மீக நலத்திற்கு அது மிகவும் தேவை. உனது கலைக்கும்
இது தேவை.
இந்தச் சந்திப்பு கால்வேயின் வாழ்க்கையில் புதியதோர்
அத்தியாயத்தைத்தோற்றுவித்தது. அவரது மனத்தைக் குடைந்து கொண்டிருந்த குழப்பங்கள், சந்தேகங்கள்
பிரச்சனைகள் அனைத்தும் விடைபெற்றன. அவரது வாழ்க்கை மீண்டும் புத்துணர்ச்சியுடன் ஆரம்பித்தது.
அவர் தமது கலை வாழ்க்கையைத்தொடர்ந்தார். அவர் ஒரு மகோன்னதமான பெண்மணி. வானளாவ உயர்ந்த
பைன் மரம் ஒன்று சூறாவளியை எதிர்த்துப்போராடுவது
மகத்தாக காட்சி அல்லவா? என்று அவரைப் பற்றி பின்னாளில் எழுதினார் சுவாமிஜி.
சுவாமிஜி எந்த ஹிப்னாடிச ஆற்றலையோ, மெஸ்மரிச ஆற்றலையோ பயன்படுத்தவில்லை. அப்படியானால்
எனது வாழ்க்கையில் இவ்வளவு மாற்றத்தைத் தந்த ஆற்றல் எது? அது அவரது நல்லொழுக்கத்தின்
ஆற்றல், அவரது மனத்தூய்மை.. அவரது திட சித்தம் என்று எழுதுகிறார் கால்வே.
மரணமிலா
நிலை என்பது என்ன?
ஒரு நாள் சுவாமிஜி கால்வேயுடன் பேசிக் கொண்டிருந்த
போது மரணமிலா நிலையைப்பற்றி கூறினார். ஒருவர் தனது தனித்துவத்தை இழந்து பிரபஞ்ச உணர்வுடன் ஒன்றுபடுகின்ற நிலையே
அது என்று விளக்கினார். ஐயோ! என்று அதிர்ந்து போய்க் கூவினார் கால்வே, சுவாமிஜி, அந்த
நிலை எனக்கு வேண்டும். எனக்கு என் தனித்துவம் வேண்டும். நான் ஒரு தனிநபர் என்ற நிலையிலேயே
நான் எப்போதும் இருக்க வேண்டும் . எவ்வளவு சாதாரணமான நிலை என்றாலும் எனக்கு இது போதும்.
எனக்குப் பிரபஞ்ச உணர்வும் வேண்டாம். எல்லையற்ற ஒருமை நிலையும் வேண்டாம். இது பற்றியெல்லாம்
கேட்கவே எனக்குப் பயமாக இருக்கிறது என்று கூறினார் அவர்.
ஒரு குழந்தையைச் சமாதானப்படுத்துவது போல் கால்வேக்கு
உண்மையைப்புரிய வைத்தார் சுவாமிஜி. இதோ பாரம்மா,
ஒரு நாள் மழைத்துளி ஒன்று கடலில் விழுந்தது. பரந்த கடலில் தன்னைத் தனியாகக் கண்ட மழைத்துளி உன்னைப்போலவே பயந்து போய்
அழ ஆரம்பித்தது. அதைக்கண்ட கடல் சிரித்தது.பிறகு அந்த மழைத்துளியிடம், ‘‘ நீ ஏன் அழுகிறாய்? என்று கேட்டது. எங்கே நான்
இல்லாமல் போய்விடுவேனே” என்று எனக்குப் பயமாக இருக்கிறது
என்றது மழைத்துளி. உரக்கச்சிரித்தது கடல். பிறகு கனிவுடன் அந்த மழைத்துளியிடம் கூறியது. உனது பயத்திற்குக்காரணம் எனக்குப் புரிய
வில்லை. நீயும் உன் போன்ற எண்ணற்ற உன் சகோதர மழைத்துளிகளும் சேர்ந்ததே நான். எனவே நீ என்னிடம் சேரும்போது உண்மையில்
நீ உன் சகோதர சகோதரிகளுடன் இணைகிறாய். துளியாக இருந்த நீ கடலாக மாறுகிறாய். கடலாக ருந்து
பலன் அளிப்பது மட்டுமல்ல, ஒரு நாள் நீ நினைத்தால் ஒரு சூரியக் கிரணத்தைப் பற்றிக்கொண்டு
மேலே சென்று, மீண்டும் மழைத்துளியாகி பூமியில் வீழ்ந்து உலகின் தாகத்தைத் தணிப்பாய்.
உயிரினங்களுக்கே ஒரு வரப்பிரசாதம் ஆவாய். அது போலவே, தனித்துவத்தை இழப்பது என்பது உண்மையில்
பெரிய தனித்துவத்தை அடைவது என்பதை அவருக்குப் புரிய வைத்தார்
சுவாமிஜி.சிகாகோவில்
சுவாமிஜி சந்தித்த மற்றொரு முக்கிய மான நபர், பின்னாளில் மிகப்பெரிய செல்வந்தர்களில்
ஒருவரான ராக்ஃபெல்லர். அன்று அவர் அவ்வளவு பிரபலம் ஆகவில்லை. அவர் பல நண்பர்களிடமிருந்து
சுவாமிஜியைப்பற்றி கேள்விப்பட்டிருந்தார்.
ஆனாலும் என்னவோ அவரைச் சந்திக்கத் தயங்கினார். பல டங்களில் தங்கியவாறு சொற்பொழிவுகள்
செய்து கொண்டிருந்த சுவாமிஜி ஒரு முறை ராக்ஃபெல்லரின் நண்பர் ஒருவரது வீட்டில் தங்கினார்.
அப்போது சுவாமிஜியைச் சந்திக்க வேண்டும் என்ற
உள்ளுந்தல் ஒரு நாள் திடீரென்று ராக்ஃபெல்லருக்கு ஏற்பட்டது. அந்த வேகத்தில் அவர் சுவாமிஜி
தங்கியிருந்த வீட்டிற்குச்சென்றார். கதவைத்திறந்த வேலையாளை பிடித்துத் தள்ளிவிட்டு,
முன் அனுமதிகூடப்பெறாமல் சுவாமியின் அறையில் நுழைந்தார்.
சுவாமிஜி
அப்போது அமர்ந்து ஏதோஎழுதிக் கொண்டிருந்தார். இவ்வளவு வேகமாக ராக்ஃபெல்லர்
சென்றும் சுவாமிஜி முகத்தைத்தூக்கி, வந்தது யாரென்று பார்க்கவில்லை. சிறிது
நேரம் கழிந்தது. கால்வே சென்ற நாள் நடைபெற்றதுபோலவே
அன்றும் நடைபெற்றது. தலை கவிழ்ந்திருந்த நிலையிலேயே திடீரென்று சுவாமிஜி, ராக்ஃபெல்லரின்
வாழ்க்கையைப்பற்றி, அவர் மட்டுமே அறிந்திருந்த அவரது கடந்த காலங்களைப் பற்றி கூறத்தொடங்கினார்.
இறுதியாக, நீங்கள் சேர்த்துள்ள பணம் உண்மையில் உங்களுக்கு உரியது அல்ல. உலகிற்கு நன்மை செய்வதற்காக கடவுள் உங்களிடம் அந்தப் பணத்தைத் தந்து
வைத்திருக்கிறார், அவ்வளவு தான். எனவே உங்கள் பணத்தால் உலகிற்கு நன்மை செய்யுங்கள்
என்று கூறினார்.
சுவாமிஜி
கூறியவை ராக்ஃபெல்லருக்குப் பிடிக்கவில்லை. தாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இன்னொருவர்
சொல்வதா என்று அவருக்குத் தோன்றியது. எனவே
வணக்கம் கூட சொல்லாமல் வேகமாக அறையை விட்டு வெளியேறி விட்டார். ஆனால் சுவாமிஜியின்
ஆளுமை எல்லைக்குள் வந்த ஒருவர் அவரால் ஆட்கொள்ளப்படாமல் ருப்பாரா? ராக்ஃபெல்லரிடமும்
சுவாமிஜியின் ஆற்றல் வேலை செய்தது.
ஒரு வாரம்
கழிந்திருக்கும். ஒரு பொதுத்தொண்டு நிறுவனத்திற்குப்பெரிய தொகையை நன்கொடை அளிக்க முடிவு
செய்தார் ராக்ஃபெல்லர். அதற்கான திட்டங்களை
விரிவாக எழுதி, அதை எடுத்துக்கொண்டு முன்பு போல் அதே வேகத்தில் மீண்டும் சுவாமிஜியிடம்
வந்தார். அது போலவே அனுமதியின்றி அவரது அறைக்குள் சென்றார் . அன்றும் சுவாமிஜி ஏதோ படித்துக்கொண்டிருந்தார். ராக்ஃபெல்லர் தாம்
கொண்டு சென்றிருந்த காகிதத்தைஅவர் முன்பு வேகமாக வீசி, இதோ, இதைப் படித்துப் பாருங்கள்.
நீங்கள் எனக்கு நன்றி சொல்ல வேண்டியிருக்கும்” என்றார்.
சுவாமிஜி
அசையவும் இல்லை. தலை நிமிர்ந்து ராக்.பெல்லரைப் பார்க்கவும் இல்லை. அமைதியாக அனைத்தையும்
படித்தார். படித்து முடித்ததும், நன்றி சொல்ல வேண்டியது நான் அல்ல, நீங்கள் தான் என்றார்.
ராக்ஃபெல்லர் தமது வாழ்க்கையில் அளித்த முதல்
பெரிய நன்கொடை அது!
கடவுள் வழிகாட்டுகிறார்.
-
சர்வமத மகாசபை நிறைவுற்ற பிறகு சுமார் 2 மாதங்கள்
சுவாமிஜி சிகாகோவில் தான் தங்கினார். ந்த நாட்களில் அவர் இந்து மதம், அத்வைதம், மறுபிறவி,
ஜாதி, வர்ணாசிரமம், இந்து சமுதாய பழக்க வழக்கங்கள், சுயநலமின்மை பற்றிய இந்துக் கருத்து
என்று பல தலைப்புகளில் பல சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். அப்போது வீடுகள், ஹோட்டல்கள்
என்று பல இடங்களில் அவர் தங்க நேர்ந்தது. ஒவ்வொரு சூழ்நிலையும் இறைவனிடமிருந்தே வருவதாகக்கொண்டு,
அதற்கு ஏற்ப அமைதியாக என்னை அமைத்து வந்துள்ளேன். அமெரிக்காவில் முதலில் நான் சற்று
குழப்பத்தில் தான் இருந்தேன். இறைவனால் வழிகாட்டப்படுபவனாக இருப்பதே எனது வழக்கம். அந்த முறையை விட்டுவிட நேருமோ,
எனக்கு நானே வழி தேடிக்கொள்ள வேண்டியிருக்குமோ
என்று பயந்தேன். எவ்வளவு மோசமான நன்றிகெட்ட செயல்! இமயத்தின் பனிமூடிய உச்சிகளிலும்
, எரியும் வெப்பம் மிகுந்த இந்தியச் சமவெளிகளிலும்
என்னை வழிகாட்டி அழைத்துச்சென்ற அதே இறைவன்
இங்கும் எனக்கு உதவி செய்யவும், வழிகாட்டவும்
சித்தமாக உள்ளதை நான் தெளிவாக காண்கிறேன். அந்தப்
பரந்தாமனின் பெருமை ஓங்குக! நான் அமைதியாக எனது பழைய முறையைக் கடைப்பிடிக்கிறேன்.
யாரோ தங்குமிடமும் உணவும் தந்து உதவுகிறார். யாரோ வந்து இறைவனைப் பற்றிப்பேசுமாறு கேட்கிறார்.
இறைவனே அவர்களை அனுப்பி வைப்பதை நான் அறிகிறேன்.
என் கடமை கீழ்படிவதே. தினசரி வாழ்வில் எனக்குத்தேவையானவை
கிடைக்குமாறு அவரே உதவுகிறார். ஆக, அவரது விருப்பப்படியே அனைத்தும் நிகழும், என்று
எழுதுகிறார் சுவாமிஜி.
தொடர்ந்த சொற்பொழிவுகள், வகுப்புகள், பேட்டிகள்,
பயணங்கள் என்று சுவாமிஜியின் வாழ்க்கை எவ்வளவு தூரம் பரபரப்பாக அமைந்ததோ, அவ்வளவு தூரம்
அவரது மனம் உயர் தளங்களில் திளைத்தது. அவர் எங்கு தங்கினாலும், எந்த வேலைகளில்ஈடுபட்டிருந்தாலும் இறைவுணர்விலேயே திளைத்தார்.
பேராசிரியர்
ரைட்டிற்கு எழுதிய கடிதத்தில் பேராசிரியரின் குழந்தைகளுக்கு எழுதுகிறார். என் அன்பு
க்குழந்தைகளே, கடவுள் உங்கள் தாய் தந்தையரைவிட உங்களுக்கு மிக நெருங்கியவராக இருக்கிறார்.
நீங்கள் மலர்போல் களங்கமற்றவர்கள், தூயவர்கள், அப்படியே இருங்கள். அவர் தம்மை உங்களுக்கு
அறிவித்தருள்வார். அன்பு ஆஸ்டின், நீ விளையாடும்போது விளையாட்டுத்தோழர் ஒருவரும் உன்னுடன்
விளையாடுகிறார். மற்ற யாரையும் விட அவர் உன்னை அதிகமாக நேசிக்கிறார். அது மட்டுமா?
ஆகா! அவர் வேடிக்கையும் வினோதமும் நிறைந்தவர் அவர். எப்போதும் விளையாடியவாறே ருக்கிறார்-
சிலவேளைகளில், சூரியன், பூமி என்றெல்லாம் நாம் கூறுகின்ற மிகப்பெரிய பந்துகளுடன் விளையாடுகிறார்.
வேறு சில வேளைகளில் உங்களைப்போன்ற சிறு குழந்தைகளுடன் சிரித்துக் களிக்கிறார். அவரைப்
பார்ப்பதும் அவருடன் விளையாடுவதும் எவ்வளவு வேடிக்கை வினோதமாக ருக்கும்! என் அன்பே,
அதை எண்ணிப்பார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்
தடுக்கிறார்.
-
இ றைவனை
அருகில் உணர்ந்து மட்டுமல்ல. இறையுணர்வால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டு, ஆன்மீகத்தின்
மிக உயர்ந்த நிலைகளிலும் சுவாமிஜி திளைத்தார். பரபரப்பான, ஓய்வு ஒழிச்சலற்ற செயல்பாடுகளுக்கு நடுவில் அவர் இந்த நாட்களில் வாழ்ந்து
வந்தார். ஆனால் புற உலகம் அவரது அக நாட்டத்திற்கு எந்த விதத்திலும் தடையாக இருக்கவில்லை..
சில வேளைகளில் டிராமில் பயணம் செய்துகொண்டிருக்கும்போது கூட அவர் தியானத்தில் ஆழ்ந்து
விடுவதுண்டு. அவர் செல்ல வேண்டிய இடத்தையே அந்த டிராம் பலமுறை சுற்றிவரும். ஆனால் எதுவும்
தெரியாமல் தியானத்தில் மூழ்கியிருப்பார் அவர். கடைசியில் அதிக பயணம் செய்ததற்காக அதிகக்
கட்டணம் செலுத்திவிட்டு இறங்குவார். இத்தகைய நிலைமையை சுவாமிஜி விரும்பவில்லை. எனினும்
அவரால் தடுக்க இயலவில்லை.இந்தியா ஆனாலும், அமெரிக்கா ஆனாலும் குருதேவர் கூறிய ”தியான
சித்தர்” தியான சித்தராகவே இருந்தார்.
ஒரு நாள்
அவர் மிக்சிகன் ஏரிக்கரையில் நின்று கொண்டிருந்தார். வழக்கமாகவே உயர் நிலைகளில் திளைக்கின்ற
மனம் யற்கை அழகில் ஈடுபடும்போது சட்டென்று அகமுகப்படுகிறது. அப்படித்தான் அன்று சுவாமிஜிக்கும் நிகழ்ந்தது.ஸ்ரீராமகிருஷ்ணர் தட்சிணேசுவரத்தில்
ஒரு நாள் அவரைத்தொட்டபோது நிகழ்ந்ததே இ ங்கும் நிகழ்ந்தது. மரங்கள், சூரியன், வீடுகள்,
அவர் நின்றிருந்த ஏரி உட்பட அனைத்தும் சுழன்று பறந்து அணுக்களாக உடைந்து சிதறி எங்கோ
மறைந்தன. எல்லாம் கரைந்து அவர் நிர்விகல்ப சமாதியில் லயிக்க இருந்தார். அப்போது திடீரென்று
அங்கே ஸ்ரீராமகிருஷ்ணர் தோன்றினார். சுவாமிஜியைத் தொட்டு, நரேன், எனது பணி இன்னும்
உள்ளது” என்று கூறி அவரை
அந்த அறுதிநிலையில் கரைய விடாமல் உலக
நிலைக்கு மீட்டு வந்தார்.
ஜோனாவைப்போல்
வெளிவந்தேன்.
-
சுவாமிஜியின் சொற்பொழிவுகள் எல்லா இடங்களிலும் வரவேற்பைப்பெற்றன.
பரந்த மனப்பான்மை உடையவர்களான யூனிடேரியன்கள்
அவரை மிகவும் விரும்பி அழைத்தார்கள். யூனிடேரியன் கிறிஸ்தவப் பாதிரிகள் அவரைத் தங்கள் சர்ச்சுக்கு விரும்பி அழைத்ததுடன், அங்கேயே சொற்பொழிவு செய்யுமாறும்
கேட்டுக்கொண்டார்கள்.
ஆனால் சுவாமிஜி
கூறிய கருத்துக்கள்? அவை அவ்வளவு சுலபமாக ஏற்கக் கூடியவை அல்லவே! காலங்காலமாக இந்தியாவைப் பற்றி தாங்கள் கேள்விப்பட்ட கருத்துக்கள்
அனைத்தும் ஒரு பக்கச்சார்புடையவை,,பெரும்பாலானவை முற்றிலும் தவறானவை என்று ஒருவர் கூறுவதைச்சட்டென்று அவர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?ஆனால் சொல்பவர்
சாதாரணமானவர் அல்ல.சொல்வதற்கென்றே இறைவனின்
ஆணை பெற்று வந்தவர். எனவே அவர்களால் சுவாமிஜியின் கருத்துக்களை நம்பாமல் இருக்கவும்
முடியவில்லை. அதனால் பல கேள்விகளை எழுப்பினார்கள். சுவாமிஜியும் அவற்றைத் தயக்கமின்றி
எதிர்கொண்டார். உண்மையைத் தைரியமாக எடுத்துச்சொல்வதற்கான துணிச்சல் அவரிடம் இருந்தது.
சிலநேரங்களில் நேரடியாகப் பதில் கூறினார். சிலவேளைகளில் பீரங்கிக் குண்டு போல் வெடித்தார்.
சிலசமயங்களில் வேடிக்கையாகப் பதிலளித்தார்.
இப்படித்தான்
ஒரு முறை அவர் மின்னாபொலிஸில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது கூட்டத்தில் ஒருவர் எழுந்து, ஆமாம், சுவாமிஜி, இந்துத் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை முதலைகளின் வாயில் எறிவார்களாமே!
என்று கேட்டார். முகத்தில் கேலிப்புன்னதை எழுந்து பரவ சுவாமிஜி, ஆம், அது உண்மைதான்.
என்னையும் அப்படித்தான் எறிந்தார்கள். நான் என்னவோ உங்கள் ஜோனாவைப்போல் முதலையின் வாயிலிருந்து
தப்பி வந்துவிட்டேன்
என்றார். கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.
உண்மையைச்
சொல்வதற்குத்துணிவு வேண்டும். அதனால் வரும் விளைவுகளை எதிர்கொள்வதற்கு உரம் படைத்த
மனம் வேண்டும். அந்தத் துணிவும் உரம் படைத்த மனமும் உண்மையிலிருந்து மட்டுமே வரமுடியும்.(பழைய
ஏற்பாட்டில் வரும் கதை ஒன்று இங்கே குறிப்பிடப்படுகிறது. ஜோனா என்பவர் கடவுளின் கட்டளையை
மறுத்தார். அதனால் அவரது ஆணைப்படி சுறா ஒன்று ஜோனாவை விழுங்கியது. மூன்று நாட்கள் இரவும்
பகலும் ஜோனா சுறா மீனின் வயிற்றிலேயே இருந்தார். அப்போது மனமுருகி கடவுளைப் பிரார்த்தித்தார்.
அதன் பிறகு அந்த மீன் கரையில் வந்து ஜோனாவை உமிழ்ந்தது.)
அதாவது சொல்பவர் உண்மையில் நிலைநிற்பவராக இ ருக்க
வேண்டும்..
துப்பாக்கிக்குண்டு
பொழிவில்
-
ஒரு முறை
சுவாமிஜி இறையனுபூதி பற்றி பேசினார் . இறைவனின் நேரடி அனுபவம் பெற்ற ஒருவர் எந்தச்
சூழ்நிலையிலும் கலங்குவதில்லை. பதற்றப்படுவதில்லை என்று அவர் பேசினார். இதனைக்கேட்டுக்
கொண்டிருந்தவர்களுள் சில இளைஞர்களும் இருந்தார்கள்.
இவர்கள் நன்றாகப் படித்தவர்கள். ஆனால் மனம் போனபடி வாழ்பவர்கள். சுவாமிஜி பேசியதை அவர்கள்
சோதிக்கத் துணிந்தார்கள். அவரை ஒரு சொற்பொழிவுக்காக அழைத்தார்கள். சுவாமிஜி சென்றார்.
ஆரம்பத்திலிருந்தே சுவாமிஜியைச் சோதிப்பது போலவே அவர்கள் நடந்துகொண்டார்கள். ஒரு மரப்பெட்டியைக்
கவிழ்த்துப்போட்டு, இது தான் மேடை, இதில் நின்று தான்பேசவேண்டும், என்றார்கள். சுவாமிஜி எந்த மறுப்பும் கூறாமல் அதனை
ஏற்றுக் கொண்டார். பேசத்தொடங்கினார். சிறிது
நேரத்தில் பேச்சின் பொருளில் கரைந்தவராக சூழ்நிலையையே மறந்துபேசினார்.
திடீரென்று சுற்றிலும் துப்பாக்கி க் குண்டுகள் வெடித்தன.
காதைப் பிளக்கும் ஓசை எழுந்தது. சில குண்டுகள் சுவாமிஜியின் காதில் அருகேயும் பாய்ந்து
சென்றன. எங்கும் பதற்றமும் கூக்குரலும் எழுந்தது. ஆனால் சுவாமிஜியிடம் எந்தச் சலனமும் இல்லை. அவர் சூழ்நிலையால் பாதிக்கப் படவில்லை. அவர்
தொடர்ந்து பேசிக்கொண்டே ருந்தார். சோதித்தவர்கள் தோற்றார்கள். எதுவுமே நடக்காதது போல்
உரிய நேரத்தில் சொற்பொழிவை முடித்தார் சுவாமிஜி. அவரிடம் வந்து அழாத குறையாக மன்னிப்புக்
கேட்டார்கள். அந்த இளைஞர்கள்.
சுவாமிஜி மிகவும் பரபரப்பாகச் சொற்பொழிவுகள் செய்து கொண்டிருந்த ஆரம்ப காலம் அது. ஒரு பை மட்டுமே
அவருக்குச் சொந்தமாக இருந்தது. ஒவ்வோர் இடத்திலும்
சென்று பேசிவிட்டு, உடனே அடுத்த இடத்திற்குச்
செல்வார். இப்படித்தான் ஒரு முறை ஒரு ஊருக்குப்போயிருந்தார். அவரை அழைத்த அமைப்பின்
தலைவர், சிறிது நேரத்தில் சொற்பொழிவை ஆரம்பிக்கலாம், என்று கூறி, சுவாமிஜியை ஓர் அறைக்குக்
கூட்டிச்சென்று தங்கவைத்தார். அந்த அறை போதிய வெளிச்சமின்றி மங்கலாக இருந்தது. அவர் வரும்வரை அமர்ந்திருக்கலாம் என்று எண்ணிய சுவாமிஜி
அங்கே கிடந்த ஒரு நாற்காலியில் சென்று அமர்ந்தார். அதுவோ, எப்போது உடையலாம் என்று காத்திருப்பது
போல், சுவாமிஜி அமர்ந்ததும் உடைந்து தடதடவென்று கீழே சாய்ந்தது. அதில் வசமாக மாட்டிக்கொண்டார்
அவர். விடுபடுவதற்கு அவர் முயற்சித்த அளவிற்கு நிலைமை மோசமாகியது. கடைசியில் முயற்சியைக்கைவிட்டு,
நாற்காலியுடன் பிணைந்த படி அப்படியே கிடந்தார்.
சிறிது நேரம்
கழிந்தது. அமைப்பாளர் வந்து, சுவாமிஜி, வாருங்கள். அனைவரும் உங்களுக்காகக் காத்திருக்கிறார்கள்.
என்றார். கீழே படுத்த நிலையிலேயே சுவாமிஜி, அவர்கள் காத்திருப்பது இருக்கட்டும். முதலில்
என்னைக் காப்பாற்றுங்கள். அதன் பிறகு தான் நான் அவர்களுக்காக ஏதாவது செய்ய முடியும்
என்றார். நிலைமையைக்கண்ட அமைப்பாளர் ஓடிவந்து சுவாமிஜி எழுந்திருக்க உதவிசெய்தார்.
ந்த நிகழ்ச்சியைப் பின்னாளில் கூறும்போதெல்லாம் சுவாமிஜி தம்மை மறந்து சிரிப்பார்.
கேட்போரையும் வயிறு வலிக்கச் சிரிக்கச்செய்வார்.
இனவெறி
-
மனிதனிடம் நேசமும் பாசமும் நன்மையும் குடிகொண்டிருப்பது
போலவே வெறுப்பும் பகைமையும் தீமையும் அவனை விட்டு விலகா உடைமைகளாக உள்ளன போலும்! மதம்,இனம்,
மொழி, என்று ஏதாவது ஒரு வேறுபாட்டைத் தனக்குத்தானே கற்பித்துக்கொண்டு ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டத்தொடங்கிவிடுகிறார்கள்.
மனிதர்கள், உலகம், முழுவதிலும் இது இவ்வாறே உள்ளது. அமெரிக்காவிலும் நிறவெறி அந்த நாட்களில்
தலைவிரித்தாடியது.கறுப்பின மக்களின் உழைப்பால் உயர்ந்த அதே நேரத்தில் அவர்களை அடிமைகளாக
நடத்தினான் வெள்ளையன். அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டன. பொது இடங்களில் அங்கீகாரம்
மறுக்கப்பட்டது. ஹோட்டல்களில் கூட அவர்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்பட்டனர்.
பல இடங்களில் சுவாமிஜியையும் அமெரிக்கர்கள் அவமதித்தார்கள். சுவாமிஜியைச் சொற்பொழிவுக்கு அழைப்பவர்கள்
அவருக்கென்று ஒரு விடுதியிலோ ஹோட்டலிலோ அறை பதிவு செய்வார்கள். ஆனால் அவர் வெள்ளையன்
அல்ல என்பது தெரிந்ததும் ஹோட்டல் உரிமையாளர்கள் அனுமதி மறுத்துவிடுவார்கள்.அமைப்பாளர்கள்
வேறு இடம்தேட நேரும். ஓரிரு நாட்களில் சுவாமிஜியின் பெயர் அந்தப் பகுதி முழுவதும் பரவும்.
பத்திரிகைகளில் அவரைப் பற்றிய செய்திகள் வரும். புகைப்படங்கள் எங்கும் பிரபலமாகக் காணப்படும்.
இவ்வளவு புகழைக்காணும் போது அதே விடுதி உரிமையாளர்கள் வந்து மன்னிப்பக்கேட்பதும் உண்டு. பலநேரங்களில்
சாப்பாடின்றி சுவாமிஜி ஹோட்டல்களிலிருந்து
வெளியேற்றப்பட்டிருக்கிறார். முடிவெட்டுகின்ற இடங்களில் மறுக்கப் பட்டிருக்கிறார்.
மேலை நாட்டின்
கீழ் வகுப்பினர் பாமரர்கள் என்பது மட்டுமல்ல, பண்பாடும் அற்றவர்கள். ஒரு நாள் நான்
லண்டனில் ஒரு தெருவழியாகச் சென்று கொண்டிருந்தேன். அப்போது நான் ந்திய உடை உடுத்தியிருந்தேன்.
அந்த வழியாக நிலக்கரி வண்டி ஒன்று சென்றது, வண்டி ஓட்டுபவன் எனதுஇ ந்திய உடையைப் பார்த்து,
கையில் ஒரு பெரிய நிலக்கரிக் கட்டியை எடுத்து என்மீது வீசி எறிந்தான். நல்லவேளை, அது
என்மீது படாமல் காதைஉரசி ச்சென்றது என்று சுவாமிஜி ஒரு முறை கூறினார்.
தம்மை அவமதிக்கின்ற இடங்களில், சுவாமிஜி தாம் ஓர்
கறுப்பு இனத்தினன் அல்ல என்பதைத் தெரியப்படுத்தி இருந்தால்போதும், அவரை ஏற்றுக்கொண்டிருப்பார்கள்.
ஆனால் சுவாமிஜி அதைச்செய்யவில்லை. இது பற்றி பின்னாளில் அவரது சீடர் கேட்டபோது சுவாமிஜி,
என்ன! ஒருவனைத் தாழ்த்தி நான் உயர்வதைா? அதற்காக நான் பிறக்கவில்லை என்று கூறினார்.
மற்றொரு முறையும் இதே கேள்வி கேட்கப்பட்டபோது அவர், அது என் சகோதரனை நானே மறுப்பது
ஆகாதா? என்று கேட்டார். வெள்ளை நிறத்தினராகிய ஆரியர் எனது முன்னோர் என்பதில் பெருமைப்படுகிறேன்.
மஞ்சள் நிறத்தினராகிய மற்கோலியர் என் முன்னோர் என்பதில் அதைவிடப்பெருமைப்படுகிறேன்.
கறுப்பு நிறத்தினராகிய நீக்ரோக்கள் என் முன்னோர் என்பதில் மிகமிகப்பெருமை கொள்கிறேன்
என்பார் அவர்.
அதே நேரத்தில்
சுவாமிஜியைத் தங்களில் ஒருவராகக்கொண்டு, அவரது வெற்றிகளைத்தங்கள் வெற்றியாக கறுப்பின
மக்கள் களித்ததும் உண்டு. ஓர் ஊரில் சுவாமிஜி வழக்கம்போல் மிகவும் விமரிசையாக வரவேற்கப்பட்டார்.
அப்போது கறுப்பின போர்ட்டர் ஒருவர் சுவாமிஜியை அணுகி, எங்களில் ஒருவர் இவ்வளவு புகழ்
பெறுவது எங்களுக்கெல்லாம் மிகவும் பெருமையாக ருக்கிறது என்று கூறி, அவருடன் கைகுலுக்க விரும்பினார். சுவாமிஜியும் கைகளையும் நீட்டி அவரை ஆதரவுடன் வரவேற்று , நன்றி
சகோதரா, நன்றி என்று கூறினார்.
ஒருமுறை ஸ்ரீராமகிருஷ்ணரிடம் பக்தர் ஒருவர், உங்களால் எப்படி
இவ்வளவு விஷயங்களைப்பேச முடிகிறது? என்று வியப்புடன் கேட்டார். அதற்கு அவர், நானா பேசுகிறேன்!
என் அன்னை காளி அல்லவா என்னைப்பேச வைக்கிறாள்! நெல் அளக்கின்ற இடத்தில் நீ பார்த்ததில்லையா?
ஒருவன் அளந்து கொண்டே ருப்பான், மற்றொருவன் தள்ளித்தருவான். அது போல் காளி தேவி என்
பின்னால் இருந்து தள்ளித்தருகிறாள் என்றார். குருவின் வாழ்க்கையில் நடந்தது சீடரின் வாழ்க்கையிலும் தொடர்ந்தது. சுவாமிஜி
சொன்னதை ஒரு போதும் திருப்பிச்சொல்வதில்லை. ஒவ்வொரு நாளும் அவர் பேசுவது புதிய விஷயங்களாகவே
ருக்கும் என்று எழுதுகிறார் சகோதரி நிவேதிதை.
சுவாமிஜிக்கு
அப்படி குவியலை யார் தள்ளித்தந்தது?
-
சுவாமிஜியின் வாழ்க்கையில் நிகழ்ந்த எத்தனையோ அறிபுதங்களைப்போல்
இதுவும் ஓர் அற்புதம்.
ஒரு வாரத்தில்
12முதல் 14 வரை சொற்பொழிவுகள், சிலநேரங்களில் தினசரி மூன்று சொற்பொழிவுகள் என்று சுவாமிஜி
செய்ததுண்டு. சொற்பொழிவு நிறைவுற்ற பிறகு களைத்து, சோர்ந்து போய், அப்பாடா, என்று படுக்கையில்
விழுவார். “நாளை சொற்பொழிவுக்கு என்ன செய்வேன்?
எதைப்பேசுவேன்? என்று தமக்குத்தாமே கேட்டுக்
கொள்வார். அப்போது அற்த அற்புதம் நிகழும்.திடீரென்று
எங்கிருந்தோ ஒருவர் பேசுவார். மறுநாள் அவர் பேசுவதற்கான சிந்தனைகள் அதில் இருக்கும்.
சிலவேளைகளில் அந்தக்குரல் மிகத்தொலைவிலிருந்து கேட்கும். பிறகு அது அவரை நோக்கி வந்து
அவருக்கு மிக அருகில் ஒலிக்கும். சிலவேளைகளில்
அருகில் நின்று ஒருவர் சொற்பொழிவு செய்வது போல் இருக்கும். சிலவேளைகளிலோ ரண்டு
குரல்கள் விவாதிக்கும். சுவாமிஜி சிந்தித்துப் பார்த்திராத கருத்துக்கள் அந்த விவாதத்தில்
நிறைந்திருக்கும். இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்தக் குரலை சுவாமிஜி மட்டுமல்ல,
பக்கத்து அறைகளில் உள்ளவர்களும் கேட்டிருப்பார்கள்.
ஆனால் சுவாமிஜி
இத்தகைய நிகழ்ச்சிகளுக்குப் பெரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை. சுவாமிஜி, நேற்றிரவு
நீங்கள் யாருடன் பேசிக்கொண்டிருந்தீர்கள்? உரத்த
குரலில் மிகவும் உற்சாகமாகப்பேசினீர்களே? என்று யாராவது கேட்டால் சுவாமிஜி மென்மையாகச்சிரித்து
மழுப்பி விடுவார். விடாமல் அவரை அது பற்றி கேட்டால், அவையெல்லாம் மனத்தின் ஆற்றல்கள்
என்று கூறிவிடுவார். மனத்திடம் ஒரு கேள்வியையோ
பிரச்சனையையோ கொடுத்தால் அதற்கு மனமே விடை கண்டுவிடும். மனத்திற்கு எந்த அளவுக்கு
நாம் பயிற்சி கொடுத்திருக்கிறோமோ, எந்த அளவுக்கு
மனத்தை நாம் வசப்படுத்தியிருக்கிறோமோ அந்த அளவுக்கு மனம் துரிதமாக விடை காண்கிறது.
வசப்பட்ட தூய மனம், தானே குருவாகி ஒருவனை வழி நடத்துகிறது என்று கூறுவது இதைத்தான். இதனை விளக்கி விட்டு சுவாமிஜி, வேத கால
ரிஷிகளும் உபநிஷதங்களை இப்படித்தான் அருளினார்கள்
என்று கூறினார். உண்மை தானே! ஆங்கிலத்தில் உபநிஷதம் அருளியவர் அல்லவா சுவாமிஜி!
அதிமன ஆற்றல்கள்
-
இந்த நாட்களில் சுவாமிஜியிடம் யோக சக்திகள் மிகவும்
வெளிப்பட்டுத்தோன்றின. ஒரு முறை தொடுவதால்
மட்டுமே சிலருடையவாழ்க்கையின் போக்கை அவரால் மாற்ற முடிந்தது. தொலை தூரங்களில்
நடப்பவற்றை அவரால் காண முடிந்தது. சிலவேளைகளில், அவரது சீடர்கள் இதனைச்சோதித்து, அவை
அப்படியே நிகழ்ந்திருப்பதைக் கண்டதுண்டு. பல சந்தகங்களுடனும் கேள்விகளுடனும் வந்தவர்கள்,
தாங்கள் கேட்காமலேயே தங்கள் கேள்விகளுக்கான விடையை சுவாமிஜி கூறுவதைக் கண்டார்கள்.
ஒரு பார்வையில் ஒருவனுடைய முற்பிறவிகளை அறியவும், அவனுடைய மனத்தை ஒரு திறந்த புத்தகம்போல்
படிக்கவும் அவரால் முடிந்தது.
சிகாகோவின்
செல்வந்தரான ஒருவர் சுவாமிஜியின் இத்தகைய ஆற்றல்களைப் பற்றி கேள்விப்பட்டார்.
அதில் சந்தேகம் கொண்ட அவர் சுவாமிஜியிடம் வந்து, அப்படியானால் எனது முற்பிறவியைப் பற்றி
சொல்லுங்கள் பார்க்கலாம். எனது மனத்தில் உள்ளவற்றை உங்களால் அறிய முடிகிறதா, பார்க்கிறேன்,
என்றார் . சுவாமிஜி தமது இத்தகைய ஆற்றல்களைப் பயன்படுத்தவோ, பிறருக்குத்தெரிவிக்கவோ
விரும்புபவர் அல்ல. எனவே ஒரு கணம் தயங்கினார். வந்தவர் பிடிவாதமாக இருப்பதைக் கண்டதும்
தமது பார்வையை அவர் மீது செலுத்தினார். அந்த மனிதரின் மனத்தைக் குடைந்து ,உள்ளிருப்பவை அனைத்தையும் அன்னி வெளியே வீசி விடுவது போல் சுவாமிஜியின் பார்வை ஊடுருவியது.
அந்த மனிதரால் தாக்குப்பிடிக்க இயலவில்லை. ஓ!சுவாமிஜி, என்னை என்ன செய்கிறீர்கள்! என்
வாழ்க்கையின் ரகசியங்கள் அனைத்தையும் குடைந்து
வெளியே கொண்டு வந்து விடுவீர்கள் போலிருக்கிறதே! என்று அலறிவிட்டார்.
சுவாமிஜி
தமது சுற்றுப்பயணத்தின்போது மிசஸ் பாக்லேயின் வீட்டில் ஒரு முறை தங்கியிருந்தார். அங்கும்
ஒரு முறை சுவாமிஜி இந்த அதிமன ஆற்றல்களைப் பயன்படுத்தியதாகத்தெரிகிறது. அந்த வீட்டில்
வந்த விருந்தினர்களுள் ஒருவர் சுவாமிஜியை மிசஸ் பாக்லேயின் கணவருடைய படிப்பறையில் வைத்துப் பூட்டி, சாவியைக்கையில்
வைத்துக்கொண்டார். அது ஒருபெரிய வீடு. அதன் மறுபகுதியில் உள்ள வரவேற்பறையில் அனைவரும் கூடினர். சுவாமிஜி
திடீரென்று அங்கே தோன்றினார். சாவியை வைத்திருந்தவர் ஓடிச்சென்று படிப்பறையைத் திறந்தார்.
ஆச்சரியம்! அறையைப் பூட்டும் போது சுவாமிஜி எப்படி அமர்ந்திருந்தாரோ அப்படியே அங்கும்
இருந்தார்.
இத்தகைய
சித்துவேலைகளில் எங்களுக்குச் சிறிதும் நம்பிக்கை
கிடையாது. இவை இயற்கைக்கு அதிதுமானவை போல் தோன்றுகின்றன. ஆனால் இவையும் இயற்கையின் நியதிகளுக்கு ஏற்பவே நடைபெறுகின்றன.ஹடயோகிகள் இவற்றை
அனாயாசமாகச் செய்வார்கள். என்று ஒரு பத்திரிகைக்கான பேட்டியில் சுவாமிஜி கூறினார்.
குகைகளில் தன்னை அடைத்துக்கொண்டு பல வருடங்கள் உணவின்றி வாழ்ந்த ஒருவரைப்பற்றி தமக்குத்தெரியும்
என்று சுவாமிஜி தெரிவித்தார். ஒருவனை மண்ணுக்குள் புதைத்து, அதன் மீது பார்லி பயிரிட்டு
அறுவடை செய்து, அதன் பிறகு மண்ணைத்தோண்டி அவனை உயிருடன் மீட்டது பற்றியும் கூறினார். இந்த அதிமன ஆற்றல்களை சுவாமிஜி ஒரு போதும் ஆன்மீகத்தின்
வெளிப்பாடாகக் குரதவில்லை. இந்த ஆற்றல்களை அவர் மிகவும் அபூர்வமாக சில நேரங்களைத்தவிர
பயன்படுத்தவில்லை.
மனங்களைக்
கவர்கிறார்
-
சுவாமிஜி தமது அதிமன ஆற்றல்களைப் பயன்படுத்தினாரா,
இல்லையா, பயன்படுத்தினார் என்றால் ஏன் பயன்படுத்தினார் என்பதெல்லாம் முற்றிலுமாக விடைகாண
முடியாத கேள்விகள். அதிசயங்களிலும் அற்புதங்களிலும் மாயமந்திரங்களிலும் மனித குலத்திற்கு
அன்றுமுதல் இன்று வரை என்றும் உள்ள வசீகரத்தை அறியாதவர் அல்ல சுவாமிஜி. அத்தகைய சித்துவேலைகளைப்
பயன்படுத்தினால் கூட்டம் அதிகமாக வரும் என்பதையும்
சுவாமிஜி அறிந்தேயிருந்தார். ஆனால் அந்தக்
கூட்டத்தை அவர் விரும்பவில்லை. மனிதன் தெய்வீகமானவன்,
அந்தத்தெய்வீகத்தை உணர்வதே மனித வாழ்வின் லட்சியம்” என்பதை மேலை நாட்டினருக்கு உணர்த்துவது
என்ற மாபெரும் செய்தியுடன் சென்றவர் அவர். எனவே இத்தகைய ஆற்றல்களை அவர் பயன்படுத்தவில்லை.
அசாதாரண
ஆற்றல்களை அவர் பயன்படுத்த வேண்டியிருக்கவும் இல்லை, அவரிடம் பொலிந்த ஆன்மீக ஆற்றல்
அவற்றைவிட பன்மடங்கு வசீகரம் மிக்கது அல்லவா! தூய மனங்கள் இயல்பாகவே அவரிடம் இழுக்கப்பட்டதில்
வியப்பு இல்லை. சாதாரணமானவர்களும் ஒரு கணம் நின்று அவரை வியப்புடன் பார்க்கின்ற அளவிற்கு
அவரிடமிருந்து ஆன்மீக அலைகள் பெருகின. நல்ல மனங்கள் அவரை நாடின. அவர் காட்டிய பாதையில்
செல்ல முற்பட்டன.
பெரும்பாலும் சுவாமிஜி அன்பர்களின் வீடுகளில் தான்
தங்க வேண்டியிருந்தது. பெரியவர்கள் அவரைத் தங்கள் சொந்த மகனாக எண்ணினார். லியான தம்பதிகள்,
ஹேல் தம்பதிகள், மிசஸ் சாரா போன்ற பலர் அவரை மகனாகக் கருதியது மட்டுமல்ல. அந்த உறவு
முறையிலேயே அவருடன் பழகவும் செய்தனர். இளையவர்கள்- ஆணாயினும், பெண்ணாயினும்- அவரை த்
தங்கள் சகோதரனாக பாவித்தனர். அந்த அளவிற்கு சுவாமிஜி புனிதராக இருந்தார்.
எல்லை கடந்தவர்
சுவாமிஜியைப் பலரும் மகனாக எண்ணினர். சகோதரனாகக்
கருதினர். என்றெல்லாம் கூறும்போது அதன் ஆழத்தைப்புரிந்து கொள்வது இன்றியமையாதது. இதெல்லாம்
நடப்பது இந்தியாவில் அல்ல. அமெரிக்காவில். இந்தியாவில் இத்தகைய உறவு முறைகள் புதியவை
அல்ல. ஆனால் அமெரிக்காவில் இத்தகைய கண்ணோட்டம் முற்றிலும் புதிய விஷயம். அதுமட்டுமின்றி
இனவெறியும், நிறவெறியும் தலைவிரித்தாடிய காலம் அது. சுவாமிஜி ஓர் அடிமை நாட்டிலிருந்து
சென்றவர். கறுப்பின மக்களை வெறுக்கின்ற அளவிற்கு இல்லாவிட்டாலும் இந்தியர்களையும், அமெரிக்கர்கள் மனிதர்களாகவே கருதவில்லை.
அந்த அமெரிக்காவில் சுவாமிஜி இப்படி எண்ணற்ற மனங்களை வென்றார் என்பது தான் கருத்தில்
கொள்ள வேண்டிய விஷயம். மதம், இனம், நிறம், போன்ற வேறுபாடுகள் அவர்கள் மனத்தில் எழவேயில்லை.
யார் அஹிம்சையில்
நிலைபெற்றவனோ அவனது முன்னிலையில் வெறுப்புகள் மறைகின்றன என்கிறார் பதஞ்சலி முனிவர்.
உண்மையில் நிலைபெற்றவனின் முன்னிலையில் பொய் ஒழிகிறது. இவ்வாறே தூயவனின் முன்னிலையில்
தீமைகள் மறைகின்றன. அனைத்து எல்லைகளையும் கடந்த ஆன்ம ஞானத்தில் நிலைபெற்றவர் சுவாமிஜி.
அவரது முன்னிலையில் எந்த வேறுபாடுகளும் தலைதூக்குவது சாத்தியம் அல்ல. செல்வந்தரான ராக்ஃபெல்லர்
முதல் சாதாரண கறுப்பின போர்ட்டர் வரை அனைவரையும் அன்புக் கண்ணால் பார்க்க சுவாமிஜியால்
இயன்றது. ஒவ்வொருவருக்கும், அவர்களுக்கு உரிய மதிப்பையும் மரியாதையையும் வழங்க அவரால்
முடிந்தது. அவர்களும், அந்த நேரத்திற்காவது, அவரைச் சம நோக்குடன் பார்த்தனர்.
சுவாமிஜி
சிகாகோவில் இருந்தபோது அவரது ஆன்மீக சக்தி பற்றி எங்கும் பேசத்தொடங்கினர். இதனால் பலர்
அவரிடம் நெருங்கிப் பழகவும், அவரைத் தனிமையில் சந்திக்கவும் விரும்பினர். அவரது அருகில்
இருக்கும்போது மனம் அமைதியில் திளைக்கிறது என்பதை உணர்ந்த அவர்கள் மேலும் மேலும் வரத்தொடங்கினர்.
சுவாமிஜியும் கருணைமயமாக அனைவரையும் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு வழிகாட்டினார்.
எதிர்ப்பு
அலைகள்
-
லெக்சர் பீரோ
-
மேலை நாடுகளுக்குச் செய்தியை அளிக்க வேண்டும்- இது
சுவாமிஜியின் மேலை நாட்டு விஜயத்தின் ஒரு பக்கம். மற்றொரு பக்கம். இந்தியாவை, அதன் பழைய உன்னதத்திற்குத்தேவையான பணத்தைப்பெறுவது, ஆனால்
நடந்தது வேறு. பணிக்கு என்றல்ல. வாழ்க்கைச் செலவுகளுக்கான பணமே அவருக்குக் கிடைக்கவில்லை.
எனது நாட்டின் ஏழை மக்களுக்காக உதவி தேடி இங்கே வந்தேன். ஆனால் ஒரு கிறிஸ்தவ நாட்டில்
இந்துக்களுக்கு உதவி கிடைப்பது எவ்வளவு கடினம் என்பதைப் புரிந்து கொண்டேன். என்று சர்வமத
மகாசபையிலேயே செப்டம்பர் 20-ஆம் நாள் அவர்பேசினார்.
எனவே பணம் திரட்டும் நோக்கத்துடன் சொற்பொழிவுகள்
நிகழ்த்த முடிவு செய்தார் சுவாமிஜி. எனது திட்டங்களுக்காகக் னடுமையாகப்பாடுபடப்போகிறேன்.
எனது திட்டங்களை உடனடியாக நான் வெளியிடப் போவதில்லை. அவற்றைப் பின்னணியில் வைத்துக்கொண்டு
மற்ற சொற்பொழிவாளர்களைப்போல் நானும் வேலை செய்யப்போகிறேன்” என்று அளசிங்கருக்கு எழுதினார் சுவாமிஜி. மற்ற சொற்பொழிவாளர்கள்
என்று அவர் குறிப்பிட்டது பூனாவைச்சேர்ந்த கிறிஸ்தவப்பெண்ணான குமாரி சோரப்ஜியையும்
சர்வமத மகாசபையில் சமண மதத்தின் பிரதிநிதியாகக் கலந்து கொண்ட வீர்சந்த் காந்தியையும்
தான். அவர்கள் ஏற்கனவே பல இடங்களில் சொற்பொழிவுகள் செய்து பணம் திரட்ட ஆரம்பித்திருந்தனர்.
இந்தச் சொற்பொழிவுத்
திட்டத்துடன் மூன்று வருடங்களுக்கு ஸ்லேய்டன்
லைசியம் என்ற லெக்சர் பீரோவுடன் சுவாமிஜி மூன்று வருடத்திற்கான ஓர் ஒப்பந்தம்
செய்து கொண்டார். அதன்படி அவரது சொற்பொழிவுகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படும். அவர்கள்
ஒரு குறிப்பிட்ட தொகையை சுவாமிஜிக்குக் கொடுப்பார்கள். இப்படி சுவாமிஜியின் சொற்பொழிவுகள்
தொடர்ந்தன.
நவம்பர்
20-ஆம் நாள் சிகாகோவிலிருந்து மேடிசனுக்குப் புறப்பட்டார் சுவாமிஜி. இந்த நாட்கள் மிகவும்
பரபரப்பானவையாக இருந்தன. சிறிதும் ஓய்வின்றி பம்பரமாகச் சுழன்றார் அவர். சுமார் ஆயிரம்
மைல் எல்லைக்குள் உள்ள விஸ்கான்ஸின், மின்னஸோட்டா, அயோவா என்ற மூன்று மாநிலங்களில்
தொடர்ந்து பயணம் செய்தபடியே அவர் சொற்பொழிவுகள் செய்தார். 1894-ஜனவரியில் சிகாகோ திரும்பினார்.
தான் பிறந்த
ஒரு குடும்பத்தைத் துறக்கிறான் துறவி. ஆனால் உலகம் என்னும் பெரிய குடும்பத்தைத் தழுவிக்கொள்கிறான்.
அங்கும் தந்தை, தாய், சகோதரன், சகோதரி, உற்றார், உறவினர் என்று அனைவரும் உண்டு. ஆனால்
அந்த உறவுகள் சிறிய, சுருங்கிய பரிமாணத்தில் அல்லாமல் விரிந்த, மிகவும் பரந்த பரிமாணத்தில்
அமைகின்றன. ரத்த பந்தங்களோ, உலகின் எந்தத் தொடர்புகளோ அற்ற புனிதமான உறவுகள் அவை.
இந்தியாவில்
சகோதரத்துறவிகளும் சீடர்களும் சுவாமிஜியின் சகோதரர்களாக, மகன்களாக விளங்கியது போலவே,
அமெரிக்காவிலும் பலர் அவரது நெருங்கிய உறவினராக அமைந்தனர். ஹேல் குடும்பத்தினர் அந்த
வகையைச் சேர்ந்தவர்கள். ஆரம்பத்தில் கதியற்ற நிலையில் தெருவோரமாக அமர்ந்திருந்தபோது, கதவைத் திறந்து அவருக்குச் சர்வமத
மகாசபைக்கு வழிகாட்டியவர் மிசஸ் ஹேல். அவரை சுவாமிஜி ”மதர் சர்ச்” என்று அழைப்பார். சுவாமிஜி சந்தித்தபோது இவருக்கு வயது
56. இவரை சுவாமிஜி தாயாகவே கருதினார். மிசஸ் ஹோலும் சுவாமிஜியை ஒரு மகனாகவே கண்டார்.
மேலை நாட்டின் வழி முறைகளில் பழக்கம் இல்லாத சுவாமிஜிக்கு அவற்றைக்கற்றுக்கொடுத்ததுடன்,
சில வேனைகளில் அவரைக் கண்டிக்கவும் செய்தார். மிசஸ் ஹேல், மிஸ்டர் ஹேலை ஃபாதர் போப்
என்று அழைத்தார் சுவாமிஜி.
ஹேல் தம்பதியினருக்கு
இரண்டு பெண்கள்-மேரி ஹேல், ஹேரியட் ஹேல். ஒரு பையன்-சாமுவேல். அவர் களின் சம வயதினரான
சகோதரி முறை உறவுப் பெண்கள் இருவர்- இசபெல் மெகின்ட்லி, ஹேரியட் மெகின்ட்லி, அவர்களும்
அந்த வீட்டிலேயே வாழ்ந்தனர்.
இந்த நான்கு பெண்களும் சுவாமிஜியைவிட இளையவர்கள்.
இவர்களுக்கு சுவாமிஜி பல கடிதங்கள் எழுதியுள்ளார். இந்தக் கடிதங்களிலிருந்து, இந்தப்பெண்கள் சுவாமிஜியின் வாழ்க்கையில் பெற்றிருந்த இடம் சிறப்பாகப்
புரிகிறது. எனது பரபரப்பான, வேகம் நிறைந்த வாழ்க்கையில் நீங்களே இனிமையான இசையாக விளங்குகிறீர்கள்.
உங்களுக்கும் அம்மாவிற்கும் எல்லா ஆசிகளும் நிறையட்டும். என்று இவர்களைப் பற்றி குறிப்பிடுகிறார்
அவர்.
ஆரம்ப நாட்களில்
ஹேல் குடும்பமே சுவாமிஜியின் செயல்மையமாகத் திகழ்ந்தது. சுவாமிஜியின் கடிதப்போக்கு
வரத்தைக் கவனித்துக்கொண்டதுடன், அவரது புத்தகங்கள், துணிமணிகள் போன்ற உடைமைகளையும்
அவர்களே பாதுகாத்தனர். அவருக்குத் தேவைகள் ஏற்பட்டபோது பணம் தந்து உதவினர். சுருக்கமாகச்
சொல்வதானால் , உழைத்துக் களைத்து வருகின்ற ஒருவனுக்கு அமைதியையும் ஓய்வையும் அளிக்கின்ற
வீடுபோல், சூறாவளியாகச் சுழன்று சொற்பொழிவுகள் செய்து களைத்து வருகின்ற சுவாமிஜிக்கு
அமைதியாக வீட்டுச் சூழ்நிலையை அளித்தனர் ஹேல் குடும்பத்தினர்.
No comments:
Post a Comment