Friday, 13 January 2017

யார் இந்த விவேகானந்தர்?


யார் இந்த விவேகானந்தர்?
-
நமது மதத்தின் பெருமைகளை சுவாமி விவேகானந்தர் வெளிநாடுகளில் சென்று பிரச்சாரம் செய்தார். அதற்கு முன்பு வரை, இந்தியர்களிடம் இருக்கும் மதம் நாகரீகமற்ற, பண்படாத காட்டுவாசிகளின் மதம் என்றே வெளிநாட்டினர் கருதிவந்தனர்.அந்தநாட்டு பாடபுத்தகங்களில் இவ்வாறே சொல்லிக்கொடுக்கப்பட்டது.
.இந்தியர்களை பண்படுத்த வேண்டுமானால் பல கிறிஸ்தவ பாதிரிகளை அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்து அதற்காக கணக்கிலடங்காத அளவு பணத்தை செலவு செய்து வந்தனர்.
ஆனால் சுவாமி விவேகானந்தரின் அமெரிக்காவில் ஆற்றிய சொற்பொழிவுகளை கேட்ட வெளிநாட்டினர் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.அவர்கள் இது நாள்வரை நினைத்து வந்த எண்ணங்கள் அனைத்தும் தவிடு பொடியாயின. கிறிஸ்தவர்கள் ,இந்துமதத்தின் பெருமைகளை உணர்ந்து சுவாமி விவேகானந்தரின் பின்னால் சென்றார்கள். பண்பாடு உள்ள அமெரிக்காவிலேயே கிறிஸ்தவர்கள்,இந்து மதத்தை ஏற்றுக்கொள்ளும் போது, இந்தியாவில் சென்று கிறிஸ்தவ மதத்தை பிரச்சாரம் செய்வது எவ்வளவு அறிவீனம் என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள். பத்திரிக்கைகளிலும் அது பற்றி செய்திகள் வெளியாயின.
மக்களின் இந்த நடவடிக்கையால் அது நாள்வரை பணம் பெற்றுவந்த பாதிரிகளின் வயிற்றில் மண்விழுந்தது. அவர்கள் நிலைதடுமாறிபோனார்கள். சுவாமி விவேகானந்தரை பல வழிகளில் கொடுமைப்படுத்த ஆரம்பித்தார்கள்,ஒருநாள் அவர் குடிக்கும் காப்பியில் விசம் வைத்து அவரிடம் குடிக்க கொடுத்தார்கள். நல்ல வேளையாக இறைவன் அவரை காப்பாற்றினார். பாதிரிகளின் சூழ்ச்சிகள் அனைத்தும் தவிடுபொடியாயின.
சுவாமி விவேகானந்தர் வெளிநாடுகளில் சென்று பிரச்சாரம் செய்வதற்கு முன்பு வரை இந்துக்கள் தங்களின் பெருமையை உணராமல் இருந்தார்கள். ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே மதத்தை தங்கள் கைகளில் வைத்திருந்தார்கள்.
நமது மதத்தில் இவ்வளவு பெருமைகள் இருக்கின்றனவா! வெளிநாட்டினர் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு அது உலகத்திலேயே உயர்ந்ததா என நினைத்து இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இந்துவும் பெருமைப்பட்டான்.
அதனால் தான் சுவாமி விவேகானந்தர் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த போது, அரசர்கள் சுவாமிஜியின் குதிரை வண்டியை அவர்களே கையால் இழுத்துவந்தார்கள். ராமநாதபுரம் மன்னர், சுவாமிஜி கப்பலில் இருந்து இறங்கும் போது,சுவாமிஜயியில் முதல் பாதம் தனது தலையில் படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.ஆனால் சுவாமிஜி அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
அவர் தமிழ்நாட்டில் ரயிலில் பயணம் செய்யும் போது, அவரை காண்பதற்காக மக்கள் ரயில் நிலையங்களில் கூடினார்கள். ரயில் நிற்காத இடங்களில் ரயில் தண்டவாளங்களில் படுத்துக்கொண்டார்கள்,சுவாமி விவேகானந்தரை மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக ரயில் பலமுறை நிறுத்தப்பட்டது. எந்த தலைவரையாவது பார்ப்பதற்காக மக்கள் ரயில் முன்படுத்திருக்கிறார்களா? அந்த காலம் வெள்ளையர்கள் ஆட்சி செய்த காலம்.ரயிலை மக்கள் மேல் ஏற்றுவார்களே தவிர.ஒரு இந்தியருக்காக நிறுத்தமாட்டார்கள். ஆனால் வெள்ளையர்கள் ஒரு இந்தியனுக்காக ரயிலை நிறுத்தியதை இதற்கு முன் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
சுவாமி விவேகானந்தரின் காலத்திற்கு முன்பு படித்த இளைஞர்கள், இந்தியாவின் வீழ்ச்சிக்கு இந்துமதமே காரணம் என நினைத்தார்கள். ஆனால் சுவாமிஜியின் சொற்பொழிவுகள் அவர்களின் அனைத்து கருத்துக்களையும் தவிடுபொடியாக்கின. மீண்டும் இந்தியா எழுர்ச்சியடைந்தது. அதே இந்துமதம் தான் மீண்டும் இந்தியாவை எழுர்ச்சியடையவைத்தது.
இப்போது சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட போராட்ட வீரர்கள் அனைவரும் சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகளால் புத்துயிர் பெற்று,உயிரை துச்சமென மதித்து போராட ஆரம்பித்தார்கள் .அவர்கள் அவ்வாறு போராட எது தூண்டியது? சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்.நீங்கள் மனிதர் அல்ல,நீங்கள் ஆன்மா.உங்களுக்கு மரணம் இல்லை.
அதற்கு முன்புவரை வெள்ளையனை எதிர்த்தால் இறந்துவிடுவோம் என்று கருதிய மக்கள் பயந்து வாழ்ந்துவந்தார்கள். சுவாமிஜியின் சொற்பொழிகளை கேட்டு தனக்கு சாவே இல்லை என்பதை புரிந்துகொண்டார்கள். இந்த உலகத்தில் வெள்ளையின் காலில் மிதிபட்டு கூடுதலாக சில நாட்கள் துன்பப்பட்டு வாழ்வதைவிட, அவனை எதிர்த்து நின்றால் நாம் வலிமைபெற்று,நமது ஆன்மாவை உணரமுடியும் என்று நினைத்தார்கள். அவர்கள் வெள்ளையனை எதிர்ப்பதை ஒரு ஆன்மீக போராட்டமாக நினைத்தார்கள். தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் எதிரான யுத்தமாக கருதினார்கள். அந்த தர்மயுத்தத்தில் பலர் வீரமரணம் அடைந்திருந்தாலும், தான் உடல் அல்ல, தான் ஆன்மா என்ற ஞானத்தை பெற்றிருப்பார்கள் என்பது சந்தேகமில்லாத உண்மையாகும்.
அந்த காலத்தில் சுதந்திரபோராட்டத்தில் ஈடுபட்டவர்கள்கள் கையில் பகவத்கீதை இருந்தது,உபநிடதங்கள் இருந்தன.சுவாமி விவேகானந்தரின் புத்தகங்கள் இருந்தன். ஜெயிலுக்கு சென்றவர்கள் பல துன்பங்களை அனுபவித்தபோதிலும் கிடைக்கும் சிறிது நேரத்தில் பகவத்கீதை படிப்பதில்,அதற்கு விளக்க உரை எழுதுவதிலும் நேரத்தை செலவிட்டார்கள்.
இந்தியா பெற்ற சுதந்திரம் இந்துக்களின் ஆன்மீக எழுர்ச்சியால் பெற்றதாகும். அதை முதலில் துவங்கிய பெருமை சுவாமி விவேகானந்தரையே சாரும்.
அவர் கனவு கண்டார்.இந்தியா இன்னும் ஐம்பது ஆண்டுகளில் சுதந்திரம் பெறும் என்றார்.அவர் கனவு பலித்தது.
இதே போல் இந்துக்களே சுவாமி விவேகானந்தர் கண்ட கனவுகளில் இன்னும் ஒன்று, இந்தியா உலகை வெல்ல வேண்டும் என்பதே. அது போர்களில் மூலம் உலகை வெல்வதல்ல, வியாபாரம் மூலம் உலகை வெல்வதல்ல, ஆன்மீகத்தின் மூலம் உலகை வெல்வதே. ஓ இந்துவே உனது ஆன்மீகத்தால் உலகை வெற்றி கொள் என்று அவர் சொன்னார். அவரது கனவு நனவாகும் . அவரது கனவு நனவாக உங்கள் மேலான பங்களிப்தை தாருங்கள்
-
--சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment