-
சுவாமி வித்யானந்தரிடம்
கேட்கப்பட்ட கேள்விகள்-பாகம்-1
-
-
கேள்வி-1
-
ஐயா இந்து
மதம் சைவ மதமா?அதன் உணவு கட்டுப்பாடு ஒழுக்க முறை என்ன?
//இந்து மதத்திற்கும்,
உணவு பழக்கங்களுக்கும் தொடர்பில்லை.உணவு பழக்கம் என்பது தனிப்பட்ட நபரின் வாழ்க்கையை
பொறுத்தது. எதை சாப்பிட்டால் நன்றாக,உடல் ஆரோக்கியமாக வாழமுடியுமோ, அதை சாப்பிடுவது
அவரவர் தனிப்பட்ட நிலை.இறைவனை காணவேண்டும்
என்று நினைப்பவன் எதை சாப்பிட்டால் தனக்கு நல்லது என்பது அவனுக்கு தெரியும், இறைவனை
தற்போது காண முயற்சிக்க வேண்டாம், வாழ்வின் கடைசிகாலத்தில் பார்த்துக்கொள்ளலாம் என
பலர் நினைப்பார்கள், அவர்கள் தங்களுக்கு தேவையான உணவை உண்பார்கள். தனிப்பட்ட மனிதனின்
உணவு பழக்கத்தில் இந்துமதம் தலையிடுவதில்லை///
-
கேள்வி-2
-
விவேகானந்தரை
ஏன் சுவாமி என்கின்றார்கள் ??இறைவன் மனிதரும் ஒன்றா??
///சுவாமி
என்றால் இறைவன் என்று அர்த்தம். நமது சொந்த இயல்பு இறைவன்தான். ஆனால் நாம் அதை அறியவில்லை.
நான் இறைவன் என்ற நிலையை அடைந்தவர்களை சுவாமி என்கிறோம். கணவனை மனைவி சுவாமி என்று
அழைப்பதுண்டு. கோவிலில் குடியிருப்பவரும் சுவாமி தான். நான் இறைவன் என்ற அந்த நிலையை
அடையாதவர்கள் கூட சுவாமி தான். அந்த வகையில் பார்த்தால் இந்த உலகத்தில் உள்ள அனைவரும்
சுவாமி தான். அதனால் தான் சுவாமி விவேகானந்தர் அனைவரையும் பார்த்து, நீங்கள் அனைவரும்
தெய்வங்கள் என்று கூறுகிறார். நாம் சுவாமி என்று கூறும்போது உடலை குறிப்பதாக நினைத்துவிடக்கூடாது.நமது
சொந்த இயல்பு உடல் இல்லை. உடல் என்பது நமது சட்டை போன்றது. நமது சொந்த இயல்பு உருவமற்றது.
வேதங்களில் இறைவனுக்கு உருவம் இல்லை என்று மீண்டும்,மீண்டும் சொல்லப்படுகிறது. நமக்கும்
உருவம் இல்லை. அப்படியானால் இந்த உடல் எங்கிருந்து வந்தது? இதை தெரிந்துகொள்ள வேண்டுமானால்
வேதாந்த தத்துவத்தை உரிய குருவிடம் , சிஷ்யனாக சேர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
///
-
கேள்வி-3
-
கடவுளை எப்படி
வழிபட வேண்டும்?
-
///கடவுளை
வழிபடுவதற்கு மூன்று வழிமுறைகள் உள்ளன.1.துவைதம்2.விசிஷ்டாத்வைதம்3.அத்வைதம்.
1.இறைவனை
உங்களுக்கு பிடித்த உருவத்தில் வழிபட்டால் அது துவைத வழிபாடு.2. கடவுளே அனைத்து உருங்களையும்
தாங்கி நடமாடிக்கொண்டிருக்கிறார் என்ற எண்ணத்தில் அனைத்து உயிர்களுக்கும் சேவை செய்தால்,
அது விசிஷ்டாத்வைத வழிபாடு 3. கடவுளுக்கு உருவம் இல்லை. எனக்கும் உருவம் இல்லை, நானும்
கடவுளும் ஒன்றே என்ற எண்ணத்தில் தியானத்தில் மூழ்குவது, அத்வைத வழிபாடு. உடல் உணர்வு
இருக்கும்வரை, அத்வைத வழிபாடு சாத்தியம் இல்லை.
///
-
கேள்வி-4
-
புத்தர் அரண்மனையை
விட்டுவிட்டு ஞானம் பெற சென்றது சரியா? யசோதையின் கேள்விக்கு பதிலழிக்க முடியாமல் புத்தர்
தடுமாறினார்.
-
///உங்கள்
கேள்விகளிலிருந்து, முதலில் ஞானம் என்றால் என்ன என்பதை சிறிது விளக்குகிறேன்,இரண்டாவது
கர்மங்கள் பற்றியும் விளக்குகிறேன்.
ஞானம் பெற
வேண்டுமானால் முதலில் அனைத்தையும் விடவேண்டும். மனத்தளவில் மட்டுமல்ல, உடலளவிலும் அனைத்தையும்
துறந்துவிடவேண்டும். ஞானம் என்பது எங்கோ சுற்றுலா செல்வது என்று நினைக்காதீர்கள். உடல்
இயக்கங்களை முற்றிலும் நிறுத்த வேண்டும்.மனஇயக்கத்தை முற்றிலும் நிறுத்த வேண்டும்.
மனிதர்கள் தொடர்பிலிருந்து முற்றிலும் தனிமைப்பட்டு இருக்க வேண்டும். ஞானம் கிடைக்கும்
போது உடலில் ரத்தஓட்டம் கூட நின்றுவிடுகிறது, இதயம் துடிப்பதை நிறுத்திவிடுகிறது. மூச்சு
முற்றிலும் நின்றுவிடும். ஆனால் அவன்மட்டும் சாவதில்லை. நான் உடலல்ல, மனமல்ல, எனக்கு
சாவே இல்லை என்பதை நேரடியாக அறிகிறான். இவ்வாறு ஞானம் பெற்ற பிறகு சாதாரண மனிதர்களால்
மீண்டும் உலக வாழ்க்கைக்கு திரும்ப முடியாது. அவர்கள் மீண்டும் உடலுக்குள் திரும்புவதில்லை.
அவ்வாறு மீண்டும் உடலுக்கு திரும்பவேண்டுமானால் அதற்கு ஒரு தேவை இருக்க வேண்டும். இந்த
உலகத்தில் தர்மத்தை காத்து அதர்மத்தை அழிக்கும் பொறுப்பு தனக்கு இருக்கிறது என்று உணர்பர்கள்
மட்டுமே ஞானம் பெற்ற பிறகு மீண்டும் உடலுக்குள் திரும்பமுடியும்.
உங்கள் பார்வையில்
இருந்தே பார்ப்போம். ஒரு வேளை புத்தர் அரண்மனையை விட்டு செல்லாமல் இருந்திருந்தால்
என்ன நடந்திருக்கும்? அவர் ஞானம் பெற்றிருப்பார். ஆனால் மீண்டும் இந்த வாழ்க்கைக்கு
திரும்பியிருக்க மாட்டார். இத்தனை பணிகளை அவர் செய்திருக்க மாட்டார்.
புத்தர் அரண்மனையை
விட்டு செல்ல வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். அவரால் அதை செய்யாமல் இருக்க முடியாது.
அதற்காகவே அவர் பிறந்தார். புத்தர் உலகத்தை துறந்து செல்வார் என்பது முன்கூட்டியே கணிக்கப்பட்டது.
மனைவியையும், குழந்தைகளையும் ஒரு கையில் பிடித்துக்கொண்டு.
இன்னொரு கையில் ஞானம் அடைய முயற்சிப்பவன் வாழும் காலத்தில் ஞானம் அடைவதில்லை. ஒரு வேளை
குருவின் அருள் இருந்தால் கடைசி காலத்தில் முக்தி கிடைக்கலாம்.
ஞானம் அடைய
வேண்டுமானால் நம்மிடம் உள்ள பாவகர்மங்கள் அனைத்தையும் அனுபவித்து தீர்க்க வேண்டும்.
பாவங்களை அனுபவிப்பது என்பது நரகத்தில் வாழ்வதாகும். காடு,மலை, குகைகளில் வாழந்து பிச்சையேற்று
அலையும் துறவிகள் தங்கள் பாவத்தை தீர்த்துக்கொள்கிறார்கள். கர்மங்கள் அனைத்தும் முடியும்
போது ஞானம் கிடைக்கிறது.கர்மங்களை தீர்பதற்காகவே இந்த வாழ்க்கை.ஞானம் என்பது தியானம்
செய்வதால் சுலமாக கிடைத்துவிடும் என்று நினைப்பது முற்றிலும் தவறு. கடந்த பிறவிகளில்
நாம் சேர்த்து வைத்துள்ள, மற்றும் இந்த பிறவியில் நாம்,நம்மை சார்ந்தவர்கள் செய்யும்
பாவங்கள் அனைத்தும் நம்மிடம் உள்ளது. இவைகள் அனைத்தையும் அனுபவிக்க வேண்டும். மலைகளிலும்,
காடுகளிலும் கோவில் கட்டிவைப்பதற்கு காரணம் என்னவென்றால், அங்கு பல இன்னல்களை அனுபவித்து
பக்தன் செல்லும்போது அவனது பாவ கர்மங்கள் ஓரளவுக்கு நீங்குகின்றன. பாவங்கள் முற்றிலும்
நீங்கினால் தான் இறைவனை காண முடியும் .நடந்தே கோவில்களுக்கும், தீர்த்ததலங்களுக்கும்
செல்லும் படி சொல்வதற்கு காரணம் இது தான். நீண்ட தூரம் தீர்த்ததலங்களுக்கு செல்பவர்கள்பல்வேறு
இன்னல்களை அனுபவிக்கிறார்கள் இவ்வாறு தங்கள் பாவங்களை தொலைக்கிறார்கள்.
புத்தரின்
போதனை என்ன? ஞானம் பெற வேண்டுமானால் துறவியாகி பிச்சையேற்று வாழவேண்டும் என்பதாகும்.
அப்படியானால்
மனைவி யசோதையிடம் ஏன் அப்படி கூறினார்? ஞானம் பெறவேண்டுமானால் துன்பங்களை அனுபவிக்க
வேண்டும் என்று புத்தர் தெரிந்து வைத்திருந்தார். தனது துன்பங்களை தெரிந்தே அனுபவித்தார்.
ஆனால் யசோதை ஏன் துன்பத்தை அனுபவிக்க வேண்டும்? தெரிந்தே அனுபவிக்கும் துன்பத்தைவிட
ஏன் துன்பப்படுகிறோம் என்று தெரியாமல் அனுபவிக்கும் துன்பபங்கள் இன்னும் கொடுமையானது.அதை
யசோதை அனுபவித்தாள்.
கணவன் பிரிந்து
சென்றதால் தான் ,தான் துன்பப்படுகிறேன். எனது அத்தனை துன்பங்களுக்கும் புத்தரே காரணம்
என அவள் நினைத்தாள். பல இன்னல்களை அனுபவித்தன் மூலம் யசோதையும் தனது பாவகர்மங்கள் அனைத்தையும்
அனுபவித்து முடித்து,ஞானம் பெற தகுதியான நிலைக்கு வந்திருந்தாள்.இதனால் தான் இருந்த இடத்தில் இருந்து ஞானம் பெற முடியாதா என்று
கேட்கிறாள்.பெண்கள் இருந்த இடத்தில் இருந்தே ஞானம் பெற முடியும், ஆனால் யசோதையை போல
இவ்வளவு இன்னல்களை அனுபவிக்க வேண்டும் என்பதை அவளது வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம்.
ஒவ்வொரு செயலிலும் தர்மம், அதர்மம் என்று ஒன்று உண்டு. கணவன் மறைவியை பிரிந்து செல்வது
அதர்மம்.புத்தர் யசோதையை பிரிந்து சென்றது அதர்மம். அவ்வாறு பிரிந்து சென்றதால் இருவருக்கும்
ஞானம் கிடைத்தது என்பது ஒருபுறம் இருந்தாலும். அங்கே யசோதை புத்தர் தன்னை விட்டுச்சென்றது
அதர்மம் என்று நினைக்கிறாள். இந்த எண்ணத்துடன் உள்ளுக்குள் கோபத்துடன் அவள் வருகிறாள்.
இந்த நேரத்தில்
புத்தர், நான் செய்ததது சரி தான். நீ துன்பப்பட்டது சரியானது தான்.அதனால் உனது பாவம்
தொலைந்தது என்று சொல்லியிருந்தால், யசோதையில் கோபம் அவரை தாக்கியிருக்கும்.
ஆனால் அவர்
அந்ந உண்மையை புரிந்துகொண்டார். மனைவிக்கு கணவன் புரிந்தது அதர்மம் என்ற நிலையில்
,தன் மனைவிக்கு ஆறுதலான வார்த்தையை சொல்ல வேண்டும் என்பதற்காக, அவள் பக்கம் இருக்கும்
நியாயத்தை ஆமோதித்து பேசினார்.அவளை சமாதானப்படுத்தினார்.அவளுக்கு ஞானத்தை கொடுத்து,புத்தமதத்தில்
சேர்த்துக்கொண்டார்.
அதே நேரத்தில்
மற்றவர்களுக்கு உபதேசிக்கும் போது,இருந்த இடத்திலிருந்தே ஞானம் பெறலாம் என்று அவர்
உபதேசிக்கவில்லை.அனைத்தையும் துறந்து செல்லும்படி போதித்தார்.
முடிவுரை...
யசேதையை போல வாழ்க்கை முழுவதும் கடினதுன்பத்தை அனுபவித்தவர்கள் இருக்கும் இடத்திலிருந்தே
ஞானம் பெறாலாம் .புத்தரைபோல சுகமாக வாழ்ந்துவருபவர்கள் அனைத்தையும் விட்டுவிட்டு, அலைந்து
நிரிந்து தான் ,துன்பங்களை அனுபவித்த பிறகு தான் ஞானத்தை பெற முடியும்.
///
கேள்வி-5
-
இஸ்லாமியர்கள்,
இந்து மதத்தை குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கிறார்களே, அவர்களுக்கு உங்களால் பதில்
சொல்ல முடியுமா?
-
//நான் மற்ற
மதத்தினரின் கேள்விகளுக்கு பதிலளிப்பதில்லை. இந்துக்களின் கேள்விகளுக்கு மட்டுமே இங்கு
பதில் தரப்படுகிறது. என்னை முஸ்லீம் ஒருவர் வாதத்திற்கு அழைந்தார், நான் சொன்னேன்.
நீங்கள் உங்கள் மதத்தின் கருத்துக்களை நம்புகிறீர்கள்.நான் எனது மதத்தின் கருத்துக்களை
நம்புகிறேன். நாம் இருவரும் நமது நம்பிக்கையை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. நம்பிக்கை
என்பது யாரோ சொன்னதை ஏற்றுக்கொள்வதாகும். யாரோ சொன்னதை நாம் இருவரும் நம்பிக்கொண்டு,
நமக்கும் வாதம் செய்தால், நம்மை முட்டாள் என்று தான் அழைப்பார்கள். உங்களுக்கு இந்து
மதத்தை பற்றிய கேள்விகள் இருந்தால், நீங்கள் அதற்கான பதிலை பெறவேண்டுமானால், ஒரு இந்துவாக
மதம் மாறவேண்டும். உரிய குருவை அடைந்து அதை முறைப்படி கற்றுக்கொள்ள வேண்டும். நான்
இந்துமதத்தை பற்றி விவாதம் செய்ய வேண்டுமானால் இந்துக்களிடம் மட்டுமே செய்வேன். ஏனென்றால்
நாங்கள் சில விஷயங்களை நம்புகிறாம், சில விசயங்களில் கருத்து வேறுபாடு இருக்கலாம்.அதை
பேசி தீர்த்துக்கொள்வோம்.முடிவில் இருவருக்கும் நன்மை கிடைக்கும். ஆனால் மற்ற மத்தினருடன்
இவ்வாறு பேச முடியாது, ஏனென்றால் அடிப்படை நம்பிக்கையே வேறுபட்டிருக்கிறது.ஒருமித்த
கருத்தை எட்டுவதற்கான வாய்ப்பே இல்லை. முடிவு எட்ட முடியாது என்று தெரிந்த பிறகு அவர்களுடன்
மதம் தொடர்பாக பேசுவதே தேவையற்றது. அதையும் மீறி பேசினால் முடிவில் இருவருக்கும் துன்பம்தான்
ஏற்படும்.
நாம் பேசுவதால்
நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். நமது பேச்சை கேட்பவர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும். இல்லாவிட்டால்
பேசாமல் இருப்பது நல்லது.
///
கேள்வி-6
இந்து மதத்தின்
நோக்கம் முக்தியாக இருக்கும்போது ,மிருகாதி உணவான அசைவ உணவை உட்கொண்டு எப்படி மோட்சம்
அடையமுடியும்?பகவத்கீதை அசைவத்தை ஏற்கிறதா?நம் ஆன்மீக பணியில் சைவத்தையும் தொடர்ந்து
வலியுறுத்தினால் நம் மக்களின் ஆன்மபலம் பெருக துணையாக இருக்குமே !
-
///1.இந்துமதத்தின்
நோக்கம் முக்தி தான். ஆனால் ஒரே பிறவியில் அனைவரும் முக்தியடைய வேண்டும் என்று அது
கூறவில்லை
2.இந்த பிறவியில்
முக்தியடைவிரும்புபவர்களின் உணவும், பல பிறவிகளின் பிறகு முக்தியடைய விரும்புபவர்களின்
உணவும் ஒரே போல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை
3.சைவ மதம்,
சைவ உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம், சாக்தமதம்(காளி-சிவன் வழிபாடு)அசைவ உணவுக்கு
முக்கியத்துவம் தருகிறது.காளிக்கு அசைவ உணவு படைக்கப்படுகிறது. இன்னும் வைணவ மதத்தில்
வேறு மாதிரி உணவு பழக்கம் உள்ளது.ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு மாதிரி உணவு பழக்கம் உள்ளது.
ஆகவே எல்லோருக்கும் ஒரே மாதிரி உணவு முறைகளை கொண்டு வர முடியாது.
4.பகவத்கீதையில்
அசைவ உணவு, சைவ உணவு பற்றி எந்த இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது? அர்ஜுனரும் மற்றவர்களும்
சைவ உணவு தான் உண்டார்கள் என்று எங்கே குறிப்பிடப்பட்டுள்ளது?
///
-
கேள்வி-7
-
கோயிலில்
சென்று வழிபாடு செய்வது அல்லது தியானம் செய்வது எது அதிக பலன் தரும்?
-
//உங்கள்
நோக்கம் என்ன? உங்களுக்கு என்ன பலன் வேண்டும்?. ஒரு அரசனை பார்க்க பலர் வந்திருந்தார்கள்,
அவர்களில் அனேகம் பேர். அரசே எனக்கு அது வேண்டும்,இது வேண்டும் என்று தோன்றிய ஆசைகள்
அனைத்தையும் கேட்டார்கள்.ஒரே ஒருவன் மட்டும் அரசே உங்களை பாரக்க வேண்டும் என்பதற்காகவே
உங்களை காணவந்தேன்.உங்களை காண்பதால் மனத்தில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. எனக்கு தேவையானவற்றை
நானே உழைத்து சம்பாதித்துக்கொள்வேன் என்றான். இவர்களில் யாரை அரசன் விரும்புவான்?யாருடன்
பேச விருப்பப்படுவான். இப்போது நீங்கள் உங்களுக்குள்ளே கேட்டுக்கொள்ளுங்கள்.நீங்கள்
இந்த பிரபஞ்சத்தை படைத்து,காத்து,வழிநடத்திக்கொண்டிருக்கும் இறைவனை காண கோவிலுக்கு
ஏன் செல்கிறீர்கள்?///
-
கேள்வி-8
-
சுவாமிஜி
கடவுள்அநீதிகள்,அதர்மங்களை அழித்து மக்களைகாப்பாற்றுவார் என புராணங்கள்கூறுகின்றன ஆனால்
நாட்டில்அதர்மங்கள் உச்சத்தில்இருக்கிறதே ஏன்?
///ஒரு நாட்டை
மொத்தமாக எடுத்து பார்த்தால், சிலவருடங்கள் நாட்டில் அதர்மங்கள் அதிகரித்து காணப்படும்.ஆட்சியாளர்களே
அதர்மத்தை கண்டுகொள்ளாமலும்,அதை ஆதரிப்பது போல காணப்படுவார்கள்.இந்த காலகட்டத்தில்
தர்மவான்கள் துன்பப்படுவார்கள்,அதர்மவான்கள் இன்பமடைவார்கள்.இது ஒரு உச்சநிலையை அடையும்போது,
அங்கே மிகப்பெரிய மாற்றம் நிகழும் ஒட்டுமொத்தமாக, அதர்மத்திலிருந்து தர்மத்தை நோக்கி
நாடு பயணப்படும். அதர்மம் புரிந்தவர்கள் வேதனையடைவார்கள். தர்மவழியில் செல்பவர்கள்
மகிழ்ச்சியடைவார்கள்.சில வருடங்களுக்கு பின் மீண்டும் தர்மம்குன்றி அதர்மம் தலை தூக்க
ஆரம்பிக்கும். இது ஒரு வட்டம் போல தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும். இது இயற்கையின்
நியதியாகும். ஏன் இவ்வாறு நிகழ்கின்றது என்று நீங்கள் கேட்கலாம். துன்பத்தை அனுபவிக்காமல்
இன்பத்தை பெறமுடியாது. இன்பத்திலேயே இருப்பவன் துன்பத்தையும் அனுபவிக்க வேண்டும் இது
நியதி.ஒரு நாட்டிற்கும் இது பொருந்தும். நாம் மிகவும் அவசரப்படுகிறோம்.பொறுமையாக பல
நூறு ஆண்டுகள் வரலாற்றை பார்க்க தவறுகிறோம். இந்தியாவின் ஒட்டுமொத்த வரலாற்றை பார்த்தால்
இதை புரிந்துகொள்ளலாம். இதே இந்தியாவில் தான் பண்பாடுநிறைந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாக
வெளிநாட்டில் வசிக்கும் மக்கள் கருதிய காலம் ஒன்று உண்டு.அது இந்தியாவின் பொற்காலம்.
அதே போல் இதே இந்தியாவில் தான் இரக்கமற்ற மனிதர்கள் வாழ்ந்துவருவதாக வெளிநாட்டினார்
கருதிய காலம் உண்டு.ஆகவே தர்மமும் நிலையாக
இருப்பதில்லை,அதர்மமும் நிலையாக இருப்பதில்லை.ஆனால் மற்ற நாடுகள் அதர்மவழியில் சென்று
கடைசியில் முற்றிலும் அழிந்துவிடும். ஆனால் இந்தியாவில் மட்டும் அவ்வாறு நடக்கவில்லை.
தர்மம் குன்றி அதர்மம் அதிகரிக்கும் போது இறைவன் அவதாரம்புரிகிறான். அல்லது தனது அடியார்
ஒருவரை அனுப்பி வைக்கிறான். அவர்களின் வருகையில் இந்த புண்ணியபூமி மீண்டும் தர்மத்தை
நோக்கி செல்கிறது.///
No comments:
Post a Comment