இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-58
(சுவாமி விவேகானந்தர்)
-
கடவுள் என்ற வார்த்தை, நினைவுக்கெட்டாத காலத்திலிருந்தே பழக்கத்தில் இருந்து வருகிறது. பிரபஞ்சப் பேரறிவு, புனிதம், உன்னதம் போன்ற வார்த்தைகளால் குறிக்கப்படுகின்ற அனைத்துமே இந்த வார்த்தையில் அடங்கியிருக்கின்றன. யாரோ ஒரு முட்டாள் இந்த வார்த்தை சரியில்லை என்று சொன்னதற்காக அதைத் தூக்கி எறிந்துவிட வேண்டுமா என்ன?

ஒருவன் வந்து, நான் சொல்லும் வார்த்தையைத்தான் உபயோகிக்க வேண்டும் என்று சொல்லலாம். மற்றொருவன் வந்து, நான் சொல்வதைத்தான் உபயோகிக்க வேண்டும் என்று சொல்லலாம். முட்டாள்தனமான வார்த்தைகளுக்கு முடிவே இருக்காது. பழைய வார்த்தையையே நாம் பயன்படுத்துவோம். ஆனால் அதை அதனுடைய உண்மையான பொருளில் பயன்படுத்த வேண்டும். அதைச் சார்ந்துள்ள மூடநம்பிக்கைகளை அகற்ற வேண்டும். அத்துடன் இந்தப் பழம்பெரும் வார்த்தையின் உண்மைப் பொருளை உணர வேண்டும்.
பலகோடி மக்கள் இத்தகைய வார்த்தைகளைப் பயபக்தியோடு பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். மிகவும் உன்னதமான, சிறந்த, அறிவுபூர்வமான, அன்புக்கு இலக்கான, ஏன், மனித இயற்கையிலேயே மிகவும் மேலான கருத்துக்களுடன் இவை இணைந்திருக்கின்றன. இந்த வார்த்தைகள் அந்தக்கருத்துக்களை நினைவூட்டுவனவாக இருப்பதால், அவற்றைக் கைவிட முடியாது.
கடவுள் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்று மட்டுமே கூறி இந்தக் கருத்துக்களையெல்லாம் விளக்குவதற்கு நான் முயன்றிருந்தால், உங்களுக்கு என் பேச்சின் பொருள் விளங்கியே இருக்காது. ஆனாலும் இந்த எல்லா போராட்டங்களுக்கும் பிறகு அந்தப் புராதனப் பரம்பொருளை மறுபடியும் நாம் வந்து அடைந்துவிட்டோம்.
ஜடப்பொருள், எண்ணம், சக்தி, அறிவு மற்றும் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்துள்ள பல்வேறு சக்திகளும் பிரபஞ்சப் பேரறிவின் வெளிப்பாடுகளே.
இனிமேல் நாம் அந்தப் பேரறிவுப் பொருளை ஆண்டவன். என்று குறிப்பிடுவோம். நாம் பார்க்கின்ற கேட்கின்ற உணர்கின்ற எல்லாம், ஏன், பிரபஞ்சம் முழுவதும் அவருடைய படைப்பே; இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமானால், அவரது வெளிப்பாடே, மேலும் சரியாகச் சொல்ல வேண்டுமானால், அவரே.

சூரியனாக நட்சத்திரங்களாகப் பிரகாசிப்பதும், அன்னைபூமியாக இருப்பதும் அவரே; சமுத்திரம் அவரே; மென்மையான மழைத்தூறல் அவரே; நாம் சுவாசிக்கும் மென்காற்று அவரே; நம் உடலில் சக்தியாக இயங்குவது அவரே; பேச்சு, பேசும் மனிதன் எல்லாம் அவரே; இங்கே சொற்பொழிவைக் கேட்கக் கூடியிருக்கும் கூட்டம் அவரே. நான் நிற்கும் மேடை அவரே; உங்கள் முகங்களைப் பார்ப்பதற்கு எனக்கு உதவுகின்ற ஒளி அவரே; எல்லாம் அவரே. இந்தப்பிரபஞ்சத்தின் நிமித்த காரணமும் உபாதான காரணமும் அவரே; மிகச் சிறிய முதல் உயிரணுவுக்குள் ஒடுங்கி நின்று, பிறகு விரிந்து, கடைசியில் கடவுளாக வெளிப்படுவதும் அவரே; மிகச் சிறிய, தாழ்ந்த நிலையிலிருக்கும் அணுவாக ஒடுங்கி, பிறகு விரிந்து, தன்னையே போய் அடைவதும் அவரே; பிரபஞ்சத்தின் ரகசியம் இதுவே.
ஓ, பிரபுவே, ஆணும் நீயே; பெண்ணும் நீயே; இளமை மதர்ப்புடன் நடக்கும் வலிமை வாய்ந்த வாலிபனும் நீயே; ஊன்றுகோலுடன் தள்ளாடும் முதிர்ந்த கிழவனும் நீயே; எல்லாவற்றிலும் இருப்பதும் நீயே; எல்லாமாக இருப்பதும் நீயே. மனித அறிவைத் திருப்தி செய்கின்ற பிரபஞ்சத்தைப் பற்றிய கருத்து இது ஒன்று தான்.
ஒரே வார்த்தையில் சொல்லப்போனால் நாம் அவரிலிருந்தே தோன்றினோம். அவரிலேயே வாழ்கிறோம், அவரிடமே திரும்புவோம்.
----
----
No comments:
Post a Comment