Tuesday, 3 January 2017

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-50



இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-50
(சுவாமி விவேகானந்தர்)
-
புலன்களின் மூலமாகப் பார்க்கும்போது ஜடப்பொருளாகவும், 
-
அறிவின் மூலமாகப் பார்க்கும்போது ஆன்மாக்களாகவும்,
-
உணர்வின் வழியாகப் பார்க்கும் போது கடவுளாகவும் அதுவே தெரிகிறது.
-
தீமை என்று உலகம் சொல்கின்ற முகமூடியைப் போட்டுக் கொண்டவனுக்குப் பிரபஞ்சம் பயங்கரமான இடமாகத் தெரிகிறது.
-
இன்பத்தை நாடுகின்ற மனிதனுக்கு அது உருமாறி, சொர்க்கமாகத் தெரிகிறது.
-
நிறைநிலையை அடைந்தவனுக்கோ எல்லாம் மறைந்து அது அவனது ஆன்மாவாக விளங்குகிறது.
-
இப்போது சமுதாயம் இருக்கும் நிலையில், இந்த மூன்று நிலைகளுமே அவசியம். இவற்றில், ஒன்று மற்றொன்றிற்கு முரண்பாடானது அல்ல; ஒன்று மற்றொன்றை நிறைவு செய்கிறது.
-
அத்வைதியோ விசிஷ்டாத்வைதியோ துவைதம் தவறு என்று சொல்வதில்லை. அது சரியான கருத்துதான்; ஆனால் சற்று தாழ்ந்த கருத்து. அதுவும் உண்மையை நோக்கித்தான் போகிறது. ஒவ்வொருவரும் தங்கள் கருத்துப்படி இந்தப் பிரபஞ்சத்தைக் கற்பனை செய்து கொள்ளட்டும். யாரும் மற்றவர்களுடைய கருத்துக்களை மறுத்து, அவர்களைப் புண்படுத்த வேண்டாம்.
-
மனிதனை அவனிருக்கும் நிலையிலேயே ஏற்றுக்கொள்ளுங்கள். முடிந்தால் அவர்கள் மேல்நிலைக்கு உயர உதவுங்கள். ஆனால் அவர்களைப் புண்படுத்தாதீர்கள், அழிக்க முயற்சிக்காதீர்கள்.
-
எல்லோருமே காலப்போக்கில் உண்மையை அடைவார்கள். இதயத்தில் உள்ள எல்லா ஆசைகளையும் துறந்துவிட்டால், அழியும் தன்மை உள்ள நாம் அழியாத் தன்மை பெறுவோம். அப்போது மனிதனே கடவுளாகி விடுவான்
-

-
தொடரும்...
-

No comments:

Post a Comment