சுவாமி விவேகானந்தரிடம் கேளுங்கள்-பகுதி-27
---
---
கேள்வி...சுவாமிஜி, நாகரீகம் என்பது என்ன? எதிர்காலத்தில் இந்தியா எப்படிப்பட்ட நாகரீகத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்?
-
(இந்திய நாகரீகம், மேலை நாகரீகத்துடன் இணைவதால் உலகில் ஒரு புது யுகம் தோன்றும் என்பதை சுவாமி விவேகானந்தர் விளக்கலானார்)
-
சுவாமி விவேகானந்தர்..ஆன்மீகத்தில் ஒரு நாட்டினர் அல்லது சமுதாயத்தினர் முன்னேறி இருக்கும் அளவிற்கு அவர்களது நாகரீகமும் உயர்ந்ததாக உள்ளது. பல எந்திரங்களையும், அது போன்ற பிறவற்றையும் கொண்டு வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொண்டதால் மட்டும் ஒரு நாட்டினரை நாகரீகம் படைத்தவர்கள் என்று கூறிவிட முடியாது .
-
இந்தக் காலத்து மேலை நாகரீகம் நாள்தோறும் மக்களின் தேவைகளையும் துன்பங்களையும் தான் பெருக்கிகொண்டு போகிறது. மாறாக பழைய இந்திய நாகரீகம் ஆன்மீகம் முன்னேற்றத்திற்குரிய வழிகளைக் காட்டியதன் மூலம் உலகியல் தேவைகளை முற்றிலுமாக நீக்காவிட்டாலும் பெருமளவிற்குக் குறைத்தது.
-
இந்த இருவகை நாகரீகத்தையும் சமன்படுத்துவதற்காகவே இந்த யுகத்தில் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் தோன்றினார். இன்று மனிதர்கள் செயல்புரிவதில் வல்லவர்களாக இருப்பதுடன் ஆழ்ந்த ஆன்மீக ஞானத்தையும் அடைய வேண்டியிருக்கிறது.
-
இந்திய நாகரீகம், மேலை நாகரீகத்துடன் இணைவதால் உலகில் ஒரு புது யுகம் தோன்றும்
-
நல்லது, இன்னொரு விஷயம் ஒருவன் ஆன்மீக வாழ்வில் ஈடுபடுந்தோறும் அவன் பிறரிடமிருந்து ஒதுங்கிவிட வேண்டும் என்றும் பிற விஷயங்களைப்பற்றி அவன் வாயிலிருந்து ஒரு வார்த்தைகூட வரக் கூடாது என்றும் மேலை நாட்டினர் எண்ணுகின்றனர்.
-
எனது சொற்பொழிவுகளில் பரந்த கருத்துக்களைக் கண்ட பாதிரிகள் மிகவும் வியந்தனர்: சொற்பொழிவின் முடிவில் நான் நண்பர்களுடன் பேசிச் சிரிப்பதைக் கண்டு மலைத்தேவிட்டனர். அவர்களுள் சிலர் என்னிடம் வந்து நேராகவே சுவாமி, நீங்கள் ஒரு குரு சாதாரண மனிதர்களைப் போல் சிரிக்கவும் விளையாடவும் கூடாது. இந்த விளையாட்டுத்தனம் உங்களுக்கு ஏற்றதல்ல என்று கூறினார்கள்.
-
அதற்கு நான் அவர்களிடம் , நாங்கள் ஆனந்தத்தின் குழந்தைகள், கவலை தோய்ந்த முகத்துடனும் சிடுசிடுப்பாகவும் ஏன் இருக்க வேண்டும் ? என்று கூறினேன் என் வார்த்தைகளின் பொருளை அவர்கள் சரியாகப் புரந்துகொண்டார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது.
-
---விவேகானந்தர் விஜயம்---

No comments:
Post a Comment