சுவாமி விவேகானந்தரிடம் கேளுங்கள்-பகுதி-32
--
கேள்வி....யார் ஆன்மீகவாதி?
----
சுவாமி விவேகானந்தர்...
-
ஒரு அறையில் திருடன் ஒருவன் தனியாக இருப்பதாக வைத்துக்கொள்வோம்.அடுத்த அறையில் ஒரு பொற்குவியல் பாதுகாப்பின்றி இருப்பதாக அவனுக்கு தெரியவருகிறது.இரண்டு அறைக்கும் இடையே ஒரு மெல்லிய சுவர் மட்டுமே இருக்கிறது.அந்த திருடனின் நிலை என்னவாக இருக்கும்?அவனால் உறங்கமுடியுமா? சரியாக உண்ணமுடியுமா?வேறு எதையாவது சிந்திக்கமுடியுமா?அவனது மனம் முழுவதும் அந்தபொன்னை பற்றியே இருக்கும்.
---
பேரானந்தமும்,பெருநன்மையும் மகிமையும் கொட்டிக்கிடக்கின்ற சுரங்கமாகிய இறைவன் இங்கே இருக்கிறான் என்று மக்கள் உண்மையிலேயே நம்பினால்,அந்த பேரானந்தத்தை அடைய முயலாமல் சும்மா இருப்பார்களா?
---
இறைவனைக்காண்பது தான் பேரானந்தம் என்பதை ஒருவன் உண்மையிலேயே நம்பினால் அவரைக்காண ஏக்கத்தால் பித்தனாவான்.எப்போதும் அவரைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பான்.இந்த பைத்தியம்,இந்த தாகம்,இந்த வெறிதான் ஆன்மீக விழிப்புணர்வு எனப்படுகிறது.இது தொடங்கிய பிறகுதான் ஒருவன் ஆன்மீகவாதியாகிறான்.இந்த விழிப்புணர்வு தோன்றாதவர்களை ஆன்மீகவாதி என்று அழைக்க முடியாது.
No comments:
Post a Comment