கர்மயோகம்(வாழும் வழி)-பாகம்-2
(சுவாமி விவேகானந்தர்)
-
இந்த அறிவு என்பது மனிதனிடம் இயல்பாக இருக்கின்ற ஒன்று. எந்த அறிவும் மனிதனுக்கு வெளியேயிருந்து வருவதில்லை. அவை உள்ளேயே இருக்கின்றன
-
ஒரு மனிதன் அறிகிறான் என்பதைச் சரியான மன இயல் மொழியில் கண்டுபிடிக்கிறான். அல்லது திரையை விலக்குகிறான் எனறே சொல்ல வேண்டும்.
-
அதுபோலவே ஒரு மனிதன் கற்கிறான் என்பது உண்மையில் அவன் எல்லையற்ற அறிவுச் சுரங்கமாகிய தன் சொந்த ஆன்மாவை மூடியிருக்கும் திரையை விலக்கிக் கண்டுபிடிப்பதையே குறிக்கும்.
-
இதுவரை உலகம் பெற்றுள்ள எல்லா அறிவும் மனத்திலிருந்து வந்ததேயாகும். பிரபஞ்சத்தின் எல்லையற்ற நூற்களஞ்சியம் உங்கள் சொந்த மனத்திற்குள்ளேயே இருக்கிறது.
-
மரத்திலிருந்து ஆப்பிள் விழ்ந்தது நியூட்டனும் ஒரு தூண்டுதலாக அமைந்தது. அவர் அதன்மூலம் தன் மனத்தை ஆராய்ந்தார். ஏற்கனவே தன் மனத்திலிருந்த சிந்தனைத் தொடர்களை எல்லாம் முறைப்படுத்தித் திருத்தி அமைத்தபோது அவற்றுக்கு இடையே ஒரு புதிய தொடர்பைக் கண்டுபிடித்தார். அதை நாம் புவியீர்ப்பு விதி என்று கூறுகிறோம். இந்த விதி ஆப்பிளிலோ பூமியின் மையத்திலோ இருக்கவில்லை.
-
லவுகீக அறிவோ, ஆன்மீக அறிவோ எல்லாமே மனத்தில்தான் இருக்கிறது. பலரிடம் இவை கண்டுபிடிக்காமல் மூடப்பட்டிருக்கிறது.
-
தொடரும்....
-
--விவேகானந்தர் விஜயம்-
No comments:
Post a Comment