கர்மயோகம்(வாழும் வழி)-பாகம்-13
(சுவாமி விவேகானந்தர்)
-
கடமை என்பது என்ன?-2
-
லட்சியங்களும் பழக்க வழக்கங்களும் எல்லா சமூகங்களிலும் எல்லா நாடுகளிலும் ஒரே போல் இருப்பதில்லை என்பதை நாம் கட்டாயம் நினைவில்கொள்ள வேண்டும். இதனை அறியாதது தான் நாடுகளுக்கு இடையேயுள்ள வெறுப்புணர்ச்சிக்கு முக்கியக் காரணம். தன் நாட்டின் நடைமுறையை ஒட்டிதான் என்ன செய்தாலும் அவையே செய்த்தக்கவற்றுள் சிறந்தவை. அதைக் கடைப்பிடிக்காதவர்கள் தீயவர்கள் என்று அமெரிக்கன் கருதுகிறான். இந்துவோ தன் பழக்க வழக்கங்கள் மட்டுமே சரியானவை, உலகத்திலேயே உயர்ந்தவை. அவற்றை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கொடியவர்கள் என்று நினைக்கிறான். இது நாம் எல்லோருமே செய்யக்கூடிய சர்வ சாதாரணமான தவறு. இது தீங்கு விளைவிப்பது.

நான் இந்த நாட்டிற்கு வந்து சிகாகோ பொருட்காட்சி சாலையைச் சுற்றிப் பார்த்தபடியே போய்க் கொண்டிருந்தபோது, பின்னாலிருந்து ஒருவன் என் தலைப்பாகையைப் பிடித்து இழுத்தான். நான் திரும்பிப் பார்த்தேன். அவன் நன்றாக உடை உடுத்தி, நல்ல மனிதன் போலவே இருந்தான். அவனிடம் பேசத் தொடங்கினேன். எனக்கு ஆங்கிலம் தெரியும் என்று கண்டபோது அவன் குறுகிப் போனான் மற்றொருமுறை அதே பொருட்காட்சிச் சாலையில் வேறொருவன் என்னைப் பிடித்துத் தள்ளினான். ஏன் இப்படிச் செய்கிறாய்? என்று நான் கேட்டேன். நான் கேட்டவுடனே அவனும் வெட்கிப்போய் சற்று தடுமாற்றத்துடன், ஏன் நீ இப்படி விசித்தரமாக உடை உடுத்தி இருக்கிறாய்? என்று மன்னிப்புக் கேட்கும் தொனியில் கேட்டான். இவர்களின் கனிவெல்லாம் சொந்த மொழி, சொந்த உடை என்ற எல்லைக்குள் நின்றுவிடுகின்றன. வல்லரசுகள் சாதாரண நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு இத்தகைய எண்ணமே முக்கியக் காரணம். இந்த எண்ணம் அவர்களிடம் மனிதாபிமானத்தையே வற்றச் செய்துவிடுகிறது.
தன்னைப்போல் நான் ஏன் உடை உடுத்தவில்லை என்று கேட்டுவிட்டு, என் உடை காரணமாக என்னைக் கேவலப்படுத்த முயன்றானே ஒருவன் அவன் ஒரு நல்ல மனிதனாக, நல்ல தந்தையாக, நல்ல குடிமகனாக இருக்கலாம். ஆனால் மாறுபட்ட உடையில் ஒருவனைக் கண்டதும் அவனது இயல்பிலுள்ள கனிவு மறைந்து விடுகிறது.

இதனை நாம் முக்கியமாக நினைவில்கொள்ள வேண்டும், மற்றவர்களின் கடமைகளை எப்போதும் அவர்களின் கண்கொண்டே பார்க்க வேண்டும். பிறருடைய பழக்கவழக்கங்களை ஒருபோதும் நமது சொந்த அளவுகோலால் மதிப்பிடக் கூடாது. நான் உலகின் அளவுகோலாக இருக்க முடியாது. நான்தான் உலகை அனுசரித்துப் போக வேண்டும் தவிர, உலகம் என்னை அனுசரித்துப் போகாது.
எனவே, ஒவ்வொரு குறிப்பிட்ட வேளையில் நமக்கென்று அமைந்த கடமைகளை அந்தந்த வேளைகளில் செய்வதே இந்த உலகில் நாம் செய்யத் தக்கவற்றுள் மிகச் சிறந்தது.

மனித இயல்பில் பெரிய அபாயம் ஒன்று உள்ளது. அவன் ஒருபோதும் சுய ஆராய்ச்சி செய்வது கிடையாது. சிம்மாசனத்தில் அமர்ந்து ஆளத் தகுந்த அரசனாகவே அவன் தன்னைக் கருதிக் கொள்கிறான். அத்தகையவனாகவே அவன் இருந்தாலும், தனது நிலைக்கு உரிய கடமைகளை முதலில் செய்து முடித்துக் காட்டவேண்டும். மேலான கடமைகள் அதன்பிறகு அவனுக்கு வந்து சேரும்.
உலகில் நாம் நேர்மையாக வேலை செய்யத் தொடங்கினாலே போதும், இயற்கை நமக்குத் தேவைப்படுகின்ற அடிஉதைகளைக் கொடுத்து நமது நிலை எதுவென்பதை நாம் அறியுமாறு செய்துவிடும். தனக்குத் தகுதியில்லாத ஓர் இடத்தில் யாரும் நெடுங்காலம் சுகமாக இருக்க முடியாது. இயற்கையின் இத்தகைய வேலைமுறைக்கு எதிராக முணுமுணுப்பதில் பயனில்லை.
எனவே கீழான வேலையைச் செய்பவன் தாழ்ந்தவனில்லை. கடமைகளை வைத்து யாரையும் எடைபோடக் கூடாது. அவன் அவற்றை எந்த விதத்தில், எத்தகைய உணர்வுடன் செய்கிறான் என்பதைக் கொண்டே எல்லோரையும் மதிப்பிட வேண்டும்.
-
தொடரும்....

No comments:
Post a Comment