இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-42
(சுவாமி விவேகானந்தர்)
-
காரணம், தூய்மையாகவும் முழுமையாகவும் இருக்கும்போது, காரியம் வேறுபட்டிருப்பது எப்படி? என்பதே கேள்வி.
-
(இறைவனும் பிரபஞ்சமும் ஒன்றா?)
-
இதற்கு விசிஷ்டாத்வைதிகள் என்ன பதில் சொல்கிறார்கள்? அவர்களுடைய கொள்கை மிகவும் விசித்திரமானது.
-
கடவுள், இயற்கை, ஆன்மா ஆகிய மூன்றும் உண்மையில் ஒரே பொருள்தான் என்கிறார்கள் விசிஷ்டாத்வைதிகள்.
-
இயற்கையும் ஆன்மாக்களும் கடவுளின் உடம்பு போலவும் கடவுள்தான் ஆன்மா என்றும் கூறுகிறார்கள் அவர்கள்.
-
எனக்கு ஓர் உடலும் ஓர் ஆன்மாவும் இருப்பது போலவே, பிரபஞ்சமும் எல்லா ஆன்மாக்களும் சேர்ந்து கடவுளின் உடலாகவும் ,கடவுளே ஆன்மாக்களுக்கெல்லாம் ஆன்மாவாகவும் இருக்கிறார்.
-
உடல் மாறலாம்; இளமையாகவோ, முதுமையாகவோ, பலம் படைத்ததாகவோ, பலவீனமாகவோ ஆகலாம். அது ஆன்மாவை எந்தவிதத்திலும் பாதிப்பதில்லை.
-
உடலின் மூலம் தன்னை வெளிப்படுத்தியவாறு ஆன்மா எப்போதும் நிரந்தரமாக இருக்கிறது.
உடல்கள் வரும், போகும். ஆனால் ஆன்மா மாறுவதில்லை.
-
அதேபோல் பிரபஞ்சம் முழுவதுமே கடவுளின் உடல்தான். அந்த விதத்தில் பிரபஞ்சம் கடவுளே. ஆனால் பிரபஞ்சத்தில் ஏற்படும் மாறுதல்கள் கடவுளை எந்தவிதத்திலும் பாதிப்பதில்லை.
-
இந்த மூலப்பொருளிலிருந்தே அவர் பிரபஞ்சத்தைப் படைக்கிறார். ஒரு கல்பத்தின் முடிவில், அவரது உடல் நுட்பமானதாகி சுருங்கி விடுகிறது. அடுத்த கல்பத்தின் ஆரம்பத்தில் அது மறுபடியும் விரிவடைந்து, அதிலிருந்து பல்வேறு உலகங்களும் வெளிப்படுகின்றன.
-
ஆன்மா இயல்பாகவே தூய்மையானது; ஆனால் அதனுடைய செயல்களாலேயே அது தன் தூய்மையை இழந்துவிடுகிறது என்று துவைதிகள், விசிஷ்டாத்வைதிகள் இருவருமே ஒப்புக்கொள்கிறார்கள்.
-
-
தொடரும்...

No comments:
Post a Comment