Friday, 13 January 2017

சுவாமி விவேகானந்தரிடம் கேளுங்கள்-பகுதி-28

சுவாமி விவேகானந்தரிடம் கேளுங்கள்-பகுதி-28
---
சீடர்..இந்துக்களிடையே இவ்வளவு திருவிழாக்களும் சடங்குகளும் இருக்கின்றனவே. இவை தேவையா?
-
சுவாமிஜி சீடரிடம், ..வெறும் கருத்துக்களை மட்டும் வைத்துக்கொண்டு வாழ்வது முடியாது இதுபோன்ற விழாக்களும் மற்றவையும் அவசியம். அப்போதுதான் அந்தக் கருத்துக்கள் படிப்படியாக மக்களிடையே பரவும். 
-
இந்துக்கள் ஆண்டு முழுவதும் விழாக்களை வைத்திருப்பதைப் பார். மதத்தின் பெரிய தத்துவங்களைப் படிப்படியாக மக்களின் மனத்தில் புகுத்துவதுதான் அவற்றின் ரகசியம். ஆனால் இந்த விழாக்களால் தீமையும் இருக்கவே செய்கிறது.
-
பொதுவாக மக்கள் இந்த விழாக்களின் உட்பொருளை விட்டுவிட்டு வெறும் வெளிக்கொண்டாட்டங்களில் மூழ்கிவிடுகிறார்கள். விழாக்கள் முடிந்தபின் மறுபடியும் முன்போலவே ஆகிவிடுகிறார்கள்.
-
எனவே உண்மையான ஆன்மீகத்தையும் ஆன்ம ஞானத்தையும் மறைக்கின்ற திரையாக இந்த விழாக்கள் ஆகிவிட்டன என்பதும் உண்மைதான்.
-
ஆனால், மதம், ஆன்மா, என்பவற்றைச் சிறிது கூடப் புரிந்து கொள்ள முடியாதவர்கள், இத்தகையவிழாக்கள் மூலமும் சடங்குகள் மூலமும் படிப்படியாக அந்த உண்மைகளை உணர்ந்து கொள்ள முயல்கிறார்கள்.
-
சீடர்: ஆனால் இந்த விழாக்களும் சடங்குகளுமே எல்லாம் என்று நினைப்பவர்கள் முன்னேறுவார்களா? அவர்களும் படிப்படியாக சஷ்டி மங்கள சண்டி போன்ற தேவதைகளை வழிபடுகின்ற சாதாரண நிலைக்கு வந்து விடுவார்கள். சாகும் வரை மக்கள் இத்தகைய சடங்குகளைப் பின்பற்றுகிறார்கள். இந்தச் சடங்குகளின்மூலம் பிரம்மஞானத்தை அடையும் ஒருவரைக்கூடக் காணமுடியவில்லை!
-
சுவாமிஜி:ஏன் காண முடியாது? இந்தியாவில் மகத்தான ஆன்மீக வீரர்கள் பிறந்தார்கள்.அவர்கள் ஆன்மீகத் தின் உச்ச நிலைகளில் திளைக்க இவை கருவிகளாக இருக்க வில்லையா? இவற்றைப் பின்பற்றி ஆன்ம ஞானத்தைப் பெற்ற பின்னர் அவர்கள் இவற்றைப் பொருட்படுத்த வில்லை. எனினும் சமுதாயத்தின் சமச்சீர் நிலையைக் காப்பதற்காக அவதார புருஷர்கள் கூட இத்தகைய சடங்குகளைச் செய்கின்றனர்.
-
எல்லா சடங்குகளும் பலன் உள்ளவையே. மனிதனின் தகுதிகளுக்கு ஏற்ப அவை பலனைத் தரவே செய்கின்றன. இதையே ஸ்ரீராமகிருஷ்ணர், ஒரு தாய் தனது பிள்ளைகளின் உடல்நிலைக்கேற்ப ஒரு மகனுக்கு மீன் வறுவலையும் இன்னொருவனுக்குக் கஞ்சியையும் கொடுக்கிறார்கள்.என்று கூறுவர்.
--
---விவேகானந்தர் விஜயம்---

No comments:

Post a Comment