இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-55
(சுவாமி விவேகானந்தர்)
----
நுட்பமான உருவங்கள் வெளிப்பட்டுச் சிறிதுசிறிதாகத் தூலத் தன்மையை அடைகிறது. தூல நிலையிலேயே வளர்ந்து அந்தத் தன்மையின் எல்லையை அடைந்தவுடன், பின்னோக்கிப் போக ஆரம்பித்து, மறுபடியும் சிறிதுசிறிதாக நுட்ப நிலையை அடைகின்றன. நுட்ப நிலையிலிருந்து வெளிப்பட்டுத் தூலத் தன்மை அடைவதைத்தான், அதாவது பகுதிகளின் அமைப்பில் மாறுபாடு ஏற்படுத்திக் கொள்வதைத்தான் பரிணாமம் என்று தற்காலத்தில் சொல்கிறார்கள்.

இது உண்மை, நிச்சயமான உண்மை. நம் வாழ்க்கையிலேயே நாம் இதைக் காண்கிறோம். பகுத்தறிவுள்ள யாரும் பரிணாமத் தத்துவவாதிகளுடன் வாதிட முடியாது. ஆனால் நாம் இன்னும் ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். இன்னும் ஒரு படி மேலே போக வேண்டும். அது என்ன ?
ஒவ்வொரு விரிவுக்கும் முன்னால் ஓர் ஒடுக்கம் உண்டு என்பதுதான் அது. விதைதான் மரத்திற்குத் தந்தை. அந்த விதைக்கு இன்னொரு மரம் தந்தையாக இருந்திருக்கிறது. விதை என்ற நுட்பமான உருவத்திலிருந்து தான் பெரிய மரம் வெளிவருகிறது, ஆனால் ஏற்கனவே வேறொரு பெரிய மரம் ஒடுங்கியதால் தோன்றியதுதான் இந்த விதை. இந்த விரிவான பிரபஞ்சம் முழுவதுமே நுட்பமான பிரபஞ்சத்திற்குள் ஒடுங்கியிருக்கிறது. பின்னால் மனிதனாகப் போகின்ற ஒரு சிறிய உயிரணு, உண்மையில், ஒடுங்கிய நிலையிலுள்ள மனிதனே. அது விரிவடைந்து முழு மனிதனாகிறது. இதை மட்டும் தெளிவாகப் புரிந்து கொண்டுவிட்டால், பரிணாமத் தத்துவவாதிகளுக்கும் நமக்கும் இடையே கருத்து வேற்றுமை இருக்காது. இந்த வாதத்தை அவர்கள் ஒப்புக் கொண்டால், மதத்தை அழிப்பவர்களாக இல்லாமல், மதத்தை ஆதரிப்பவர்களாக மாறிவிடுவார்கள்.
ஆகவே சூன்யத்திலிருந்து எதுவும் தோன்ற முடியாது என்பதை நாம் தெரிந்து கொள்கிறோம். எல்லாம் எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கிறது; இருந்து கொண்டேதான் இருக்கும்.
ஆனால் இயக்கம்தான் நுட்பத்திற்குச் செல்வதும், அதிலிருந்து தூலமாக வெளிப்படுவதும், மறுபடியும் நுட்பத்திற்குச் செல்வதுமாக, அலைபோல் எழுவதும் விழுவதுமாகத் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.
ஆனால் இயக்கம்தான் நுட்பத்திற்குச் செல்வதும், அதிலிருந்து தூலமாக வெளிப்படுவதும், மறுபடியும் நுட்பத்திற்குச் செல்வதுமாக, அலைபோல் எழுவதும் விழுவதுமாகத் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.
இந்த ஒடுக்கமும் விரிவும் இயற்கை முழுவதிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மிகவும் சிறிய உயிர் முதல் முழுமையடைந்த மனித வெளிப்பாடுவரை எல்லா பரிணாம வளர்ச்சியுமே, வேறு ஏதோ ஒன்றின் ஒடுக்கமாகவே இருக்க வேண்டும். எதனுடைய ஒடுக்கம்? எது ஒடுங்கியிருக்கிறது என்பதுதான் கேள்வி.
மிகவும் சிறிய உயிர் முதல் முழுமையடைந்த மனித வெளிப்பாடுவரை எல்லா பரிணாம வளர்ச்சியுமே, வேறு ஏதோ ஒன்றின் ஒடுக்கமாகவே இருக்க வேண்டும். எதனுடைய ஒடுக்கம்? எது ஒடுங்கியிருக்கிறது என்பதுதான் கேள்வி.
அது கடவுள்தான் என்ற நம் கருத்து தவறு என்று பரிணாமத் தத்துவவாதிகள் கூறுவார்கள். ஏன்?
ஏனெனில் கடவுள் அறிவு வடிவானவர் என்று நாம் சொல்கிறோம். ஆனால் பரிணாம வளர்ச்சியில் அறிவு மிகவும் தாமதமாக அல்லவா தோன்றுகிறது என்று பரிணாமவாதிகள் சொல்கிறார்கள்.
மனிதனிடமும் உயர்நிலையிலுள்ள மிருகங்களிடமும் தான் அறிவு காணப்படுகிறது, எனவே உயிர் தோன்றிப் பலகோடி வருடங்கள் கழிந்த பின்னரே, இந்த அறிவு தோன்றியிருக்கிறது என்றும் பரிணாமவாதிகள் சொல்கிறார்கள்.
நமது கொள்கையின் முன் பரிணாமவாதிகளின் ஆட்சேபம் அடிபட்டுப் போகிறது.
-
தொடரும்....
--
-
தொடரும்....
--
No comments:
Post a Comment