இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-43
(சுவாமி விவேகானந்தர்)
-
ஆன்மாவின் தூய்மையும் பரிபூரணத் தன்மையும் சுருங்கி, பின்னர் விரிகின்றன. அதன் பேரறிவு, தூய்மை, அதற்கே இயல்பான சக்தி எல்லாவற்றையும் மறுபடியும் வெளிப்படுத்தவே நாம் முயன்று கொண்டிருக்கிறோம் என்று அவர்கள் சொல்கிறார்கள்.
-
ஆன்மாக்களுக்குப் பல குணங்கள் இருக்கின்றன. ஆனாலும் அவற்றிற்குச் சர்வ வல்லமையோ, எல்லாம் அறியும் தன்மையோ இல்லை. ஒவ்வொரு தீய செயலும் ஆன்மாவின் இயல்பைச் சுருக்குகிறது. ஒவ்வொரு நற்செயலும் அதை விரிவடையச் செய்கிறது.
-
இந்த ஆன்மாக்கள் எல்லாம் கடவுளின் அம்சங்களே. கொழுந்து விட்டெரியும் நெருப்பிலிருந்து, அதே இயல்புள்ள பல கோடிக்கணக்கான தீப்பொறிகள் சிதறுவதுபோல், எல்லையற்ற பரம்பொருளிடமிருந்து இந்த ஆன்மாக்கள் தோன்றியிருக்கின்றன. எல்லா ஆன்மாக்களுக்கும் குறிக்கோள் ஒன்றுதான்.
-
விசிஷ்டாத்வைதிகளின் கடவுளும் சகுணமானவரே. அவர் நற்குணக் களஞ்சியமாக விளங்குகிறார்; பிரபஞ்சத்திலுள்ள எல்லாவற்றிலும் ஊடுருவியிருக்கிறார்; எங்கும் எதிலும் அந்தர்யாமியாக இருக்கிறார்.
-
கடவுளே எல்லாமாக இருக்கிறார் என்று சாஸ்திரங்கள் சொல்லும் போது, அவர் எல்லாவற்றிலும் ஊடுருவி நிற்கிறார் என்பதே பொருள்.
-
கடவுளே சுவராக இருக்கிறார் என்பது அல்ல, கடவுள் சுவருள் இருக்கிறார் என்பதே பொருள். அவர் இல்லாத துகளோ அணுவோ பிரபஞ்சத்தில் இல்லை.
-
ஆன்மாக்களுக்கு எல்லை உண்டு. அவை எங்கும் நிறைந்தவை அல்ல. அவற்றின் சக்தி விரிவடைந்து அவை நிறைநிலை பெற்றவுடன், பிறப்பு இறப்பு அற்றவை ஆகிவிடுகின்றன; என்றென்றைக்குமாகக் கடவுளுடன் வாழ்கின்றன.
-
இனி நாம் இறுதித் தத்துவமான அத்வைதத்திற்கு வருவோம்.

தொடரும்...
No comments:
Post a Comment