தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர்-பாகம்-32
-
-
சுவாமி விவேகானந்தர் மானாமதுரையில் பேசியது
-
இந்த ஆன்மீக செல்வம் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்றால் உலகமே அழிந்து போகும். அதனை வெளியே கொண்டு வாருங்கள். எல்லோருக்கும் கொடுங்கள். உலகம் முழுவதற்கும் அதைப்பற்றிக் கூறுங்கள்.

தானம் ஒன்றுதான் கலியுகத்தில் செய்யக்கூடியது என்று வியாசர் கூறுகிறார். நம்மால் கொடுக்க முடிந்தவற்றுள் ஆன்மீக தானம்தான் மிக உயர்ந்தது. அதற்கு அடுத்ததாக லௌகீக அறிவு. அடுத்து, ஒருவரது உயிரைக் காப்பாற்றுதல். அதற்கு அடுத்து கடைசியாக, பசித்தவர்களுக்கு உணவைத் தரும் அன்னதானம.
நாம் தேவையான அளவு அன்னதானம் செய்துவிட்டோம். வேறு எந்த நாடும் நம்மைப்போல் கொடையாளியாக இருந்ததில்லை ஒரு பிச்சைகாரன்கூட, தன் வீட்டில் ஒருபிடிச்சோறு இருக்கும்வரை, அதில் பாதியைத் தானமாகக் கொடுக்கவே செய்வான் இத்தகைய விசித்திரத்தை இந்தியாவில் மட்டும் தான் காண முடியும். இது போதும் .
இப்போது மற்ற இரண்டு தானங்களான ஆன்மீகம் மற்றும் லௌகீக அறிவை (விஞ்ஞான கல்வி, தொழில் கல்வி போன்றவை)அளிப்போம். நாம் எல்லோரும் வீரர்களாக, உறுதி வாய்ந்த உள்ளம் படைத்தவர்களாக முழுக்கமுழுக்க உண்மை யானவர்களாக இருந்து, சக்கரம் சுழலத் தோள் கொடுப் போமானால் இருபத்தைந்து ஆண்டுகளில் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து போகும். அதன்பிறகு நாம் எதிர்த்துப் போரிட எதுவுமே இருக்காது. இந்தியா மீண்டும் ஆரிய (பண்பட்டவர்களின்)நாடாகிவிடும்.
--

தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர்-பாகம்-33
-
இப்போதைக்கு நான் உங்களிடம் சொல்ல வேண்டுவதெல்லாம் இவைதாம் எனது திட்டங்களைப் பற்றியெல்லாம் நான் அவ்வளவாக எதுவும் சொல்லவில்லை. சொல்வதைவிடச் செயலில் காட்டவே நான் விரும்புகிறேன். அதன் பின்னர் திட்டங்களைப்பற்றிப் பேசுகிறேன்.

எனக்கென்று திட்டங்கள் உள்ளன. இறைவன் திருவுளம் கொள்ளவும் எனக்கு நீண்ட ஆயுளை அளிக்கவும் செய்வாரானால்(சுவாமிஜிக்கு நீண்ட ஆயுள் கிடைக்கவில்லை) அவற்றைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளும் கிடைக்கவே செய்யும். இதில் நான் வெற்றி பெறுவேனா, மாட்டேனா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஓர் உயரிய லட்சியத்தை மேற்கொள்வதும், அதற்காகத்தன் வாழ்நாளை அர்ப்பணிப்பதும் ஒரு மகத்தான காரியமாகும் அப்படி இல்லாமல் உணர்வற்ற கீழான ஜட வாழ்க்கை வாழ்வதில் என்ன பெருமை இருக்கிறது ?
ஓர் உயரிய லட்சியத்திற்கு அர்ப்பணிப்பதில் மட்டுமே வாழ்க்கை மதிப்புப் பெறுகிறது. இதுதான் இப்போது இந்தியாவில் செய்யப்பட வேண்டிய மகத்தான காரியம். தற்போதைய மத மறுமலர்ச்சியை நான் வரவேற்கிறேன். இரும்பு பழுத்திருக்கும்போதே அதை அடித்து நீட்டுவதற்கான வாய்ப்பை நழுவவிடுவது முட்டாள்தனம் அல்லவா?
--
--
-
No comments:
Post a Comment