Friday, 13 January 2017

கர்மயோகம்(வாழும் வழி)-பாகம்-1


கர்மயோகம்(வாழும் வழி)-பாகம்-1
(சுவாமி விவேகானந்தர்)
-
மனித சமுதாயத்தின் குறிக்கோள் அறிவு. மனிதனின் லட்சியம் இன்பம் அல்ல. அறிவே. 
-
இன்பமும், போகமும் ஒரு முடிவுக்கு வந்தே தீரும். இந்த இன்பத்தை லட்சியமாக எண்ணுவது தவறு.
-
தான் அடைய வேண்டிய லட்சியம் இன்பமே என்று மனிதன் முட்டாள்தனமாக நினைப்பதுதான் இன்று உலகில் காணப்படும் எல்லாவிதமான துன்பங்களுக்கும் காரணம்.
-
இன்பமும் அதுபோல் துன்பமும் பெரிய ஆசிரியர்கள், நன்மையைப் போலவே தீமையிலிருந்தும் அவன் படிப்பினை பெறுகிறான். இவையெல்லாம் காலப்போக்கில் அவனுக்குத் தெரியவருகிறது.
-
இன்பமும் துன்பமும் மனித மனத்தைக் கடந்து செல்லும்போது, அவை அதன்மீது பல்வேறு அனுபவங்களைப் பதித்துச் செல்கின்றன. இந்த மொத்தப் பதிவுகளின் விளைவே குணம் என்று அழைக்கப்படுகிறது.
-
குணத்தை உருவாக்குவதில் துன்பமும் இன்பமும் சரிசமமான பங்கு வகிக்கின்றன. குணத்தைச் செப்பனிடுவதிலும் நன்மை, தீமை இரண்டிற்கும் சம இடம் உண்டு. சிவேளைகளில் இன்பத்தைவிடத் துன்பமே சிறந்த ஆசிரியராக அமைகிறது.
-
உலகம் தந்துள்ள உயர்ந்த மனிதர்களின் வாழ்வை ஆராய்ந்தோமானால், பெரும்பாலோரது வாழ்க்கையில் இன்பங்களைவிடத் துன்பங்களே, செல்வத்தைவிட வறுமையே அவர்களுக்குப் பாடமாக அமைந்துள்ளன; புகழ்மொழிகளைவிட ஏமாற்றங்களே அடிகளே அவர்களது அக ஆற்றல்களை வெளியே கொண்டு வந்துள்ளன என்று நான் துணிந்து கூறுவேன்.
--
தொடரும்....
-
--விவேகானந்தர் விஜயம்-

No comments:

Post a Comment