Friday, 13 January 2017

சுவாமி விவேகானந்தரிடம் கேளுங்கள்-பகுதி-38


சுவாமி விவேகானந்தரிடம் கேளுங்கள்-பகுதி-38
---
சீடர்: மன ஒருமைப்பாட்டை அடைந்த பிறகும் ஆசைகள் தோன்றுகின்றனவே அது எப்படி?
-
சுவாமிஜி: அவை சம்ஸ்காரங்களால் உண்டாகின்றன. புத்தர் சமாதியில் ஒன்றப்போகின்ற நேரத்தில் காமன் வெளிப்பட்டான் .காமன் என்று எதுவும் வெளியே உண்மையில் இல்லை. முந்தைய சம்ஸ்காரங்களே நிழல் வடிவில் வெளியில் தோன்றியது.
-
சீடர் : ஆனால் நிறைநிலையை அடையுமுன் பல வகையான பயங்கர அனுபவங்களை அடைய வேண்டும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவையும் மனத்தின் கற்பனை தானா?
-
சுவாமிஜி: கற்பனை அல்லாமல் வேறு என்ன? அவை மனத்தின் புறத் தோற்றங்கள் என்பதைச் சாதகன் அந்த வேளையில் அறிவதில்லை .மனத்திற்கு வெளியே எதுவும் இல்லை. நீ வெளியே இருப்பதாகக் காண்கின்ற உலகம்கூட வெளியில் இல்லை. எல்லாமே மனத்தின் கற்பனைதான்.
-
மனம் அலைகளற்றுப் போகும் போது அது பிரம்ம உணர்வைப் பிரதிபலிக்கிறது .அப்போது எல்லா உலகங்களின் காட்சிகளும் ஏற்படலாம். யம் யம் லோகம் மனஸா ஸம்விபாதி - எந்த உலகத்தை காண வேண்டும் என்று நினைக்கிறானோ, அதை உடனடியாகக் காண முடியும் .
-
அவன் எதை எண்ணுகிறானோ அது உடனே கைகூடும். நினைப்பது நடைபெறுகின்ற இத்தகைய சத்திய சங்கல்ப நிலையை அடைந்த பிறகும் எச்சரிக்கையாக இருந்து எந்த ஆசைகளுக்கும் அடிமையாகாமல் இருப்பவன் பிரம்ம ஞானம் பெறுகிறான். அந்த நிலையை அடைந்த பிறகு வழிதவறியவன் பல்வேறு சித்திகளைப் பெறுவான் ஆனால் அறுதி லட்சியத்திலிருந்து வழுவி விடுவான்.
-
வாழ்க்கையின் இந்த மேலான ரகசியத்தைத் தியாகத்தின் மூலமாக மட்டுமே அறிந்து கொள்ள முடியும். தியாகம் தியாகம்,தியாகம் .இதுவே உங்கள் வாழ்க்கையின் மூல மந்திரம் ஆகட்டும் . “ஸர்வம் வஸ்து பயான்விதம் புவிந்ருணாம் வைராக்யமேவாபயம் “மனிதர்களும் உலகில் உள்ள பொருட்களும் அச்சத்தால் குழப்பட்டிருக்கின்றன
வைராக்கியம்(துறவு) மட்டுமே பயமின்மையைத் தரும்.
--

No comments:

Post a Comment