கர்மயோகம்(வாழும் வழி)-பாகம்-4
(சுவாமி விவேகானந்தர்)
-
நீங்கள் ஒருவரது உண்மையான குணத்தை அறிய விரும்பினால், அவரது மகத்தான் காரியங்களைப் பார்த்து முடிவுக்கு வராதீர்கள். முட்டாள்கூட எப்போதாவது சிலநேரங்களில் மகத்தான் மனிதனாக முடியும்.
-
ஒருவன் மிகமிகச் சாதாரணச் செயல்களைச் செய்யும்போது கவனியுங்கள். அவையே அவனது உண்மையான குணத்தைத் தெரிவிப்பவை.
-
எந்தச் சூழ்நிலையிலும் யாருடைய குணம் எப்போதும் உயர்ந்ததாகவே இருக்கிறதோ அவனே உண்மையில் சிறந்த மனிதன்.
-
குணத்தை உருவாக்குவதில் செயலின் பங்கு முக்கியமானதாகும்.
-
பிரபஞ்சத்தில் உள்ள எல்லா ஆற்றல்களையும் தன்னை நோக்கிக் கவர்ந்திழுத்து, தன்னுள்ளே அவற்றை ஒருங்கிணைத்து, மாபெரும் சக்தியாக வெளியே அனுப்புகின்ற ஒரு மையம்போல் இருக்கிறான் மனிதன்.
-
அந்த மையம்தான் ,உண்மை மனிதன். எல்லாம் வல்லவன்,. எல்லாம் அறிந்தவன்.
-
பிரபஞ்சம் முழுவதையும் அவன் தன்னை நோக்கிக் கவர்ந்திழுக்கிறான். நன்மை தீமை இன்பம் துன்பம் எல்லாமே அவனை நோக்கி ஓடி வருகின்றன. அவனைச் சுற்றிச் சுழல்கின்றன. குணம் என்று அழைக்கப்படுகின்ற, தன் தனிப்போக்கை அவன் இவற்றிலிருந்து உருவாக்கிப் பேராறுபோல் வெளியில் பரவவிடுகிறான்.
-
தன்னிடம் எதையும் இழுத்துக் கொள்வதற்கான ஆற்றல் போலவே அதனை வெளியில் விடும் ஆற்றலும் அவனிடம் இருக்கிறது.
-
தொடரும்....
-
--விவேகானந்தர் விஜயம்-
No comments:
Post a Comment