சுவாமி விவேகானந்தரும் அவரது குரு-ஸ்ரீராமகிருஷ்ணரும்-பாகம்-8
---
கதாதரனுக்கு பத்து வயது நடந்துகொண்டிருந்தது. அந்த ஆண்டு சிவராத்திரியின் போது கதாதரனும் அவனது உயிர்தோழனுமான கயாவிஷ்ணுவும் வேறு பல சிறுவர்களும் உண்ணாநோன்பிருந்தனர்.அன்று சீதாநாத்பைன் என்பவரின் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிவபெருமானின் திருவிளையாடல் சம்மந்தமான நாடகத்தை பார்த்துக்கொண்டே கண்விழிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தான்.

ஆனால் அன்று சிவபெருமான் வேடம் ஏற்று நடிக்க வேண்டியவர் நோய்வாய்ப்பட்டதால்,கதாதரனை அந்த வேடத்தில் நடிக்கும் படி கேட்டுக்கொண்டார்கள்.பலரின் வேண்டுகோளுக்கு இணங்கி கதாதரன் சிவபெருமானைப்போல ஜடாமுடி,ருத்ராட்சமாலை,திருநீறு முதலியவற்றை தரித்து சிவவேடம் பூண்டான். ஆனால் மேடையில் அவன் ஏறியதும், சிவபெருமானின் நினைவில் ஆழ்ந்து அதில் மூழ்கிப்போனான்.அவனது வெளியுலக நினைவு முற்றிலும் நின்றுபோனது.நீண்டநேரம் ஆகியும் அவனுக்கு இந்த உலக நினைவு வராததால், அன்றிரவு நாடகம் நடைபெறவில்லை.
இந்த நிகழ்வுக்கு பிறகு இதேபோல் தெய்வங்களை நினைக்கும்போது தன்னையே மறந்து அதில் லயித்துவிடுவான்.
ஆன்மீக வாழ்வில் கதாதரன் உயர்ந்த நிலைகளில் எட்டிக்கொண்டிருக்கும் வேளையில் ஏட்டுப்படிப்பில் அவன் விருப்பம் காட்டவில்லை.ஏட்டு கல்வியை கற்றவர்கள் பண்டிதர்,பட்டாச்சாரியர் என்றெல்லாம் பட்டங்களை பெற்றிருந்தும் அவர்களது மனம் உலக இன்பங்களை நாடி சென்றது பணம் சம்பாதிப்பதிலேயே அவர்களது முழு கவனமும் சென்றது. நூலறிவை கற்றுக்கொள்வதால் என்ன பயன் என்று தனக்குள்ளே கேட்க ஆரம்பித்தான்.
வயது ஏறஏற அவனது மனத்தில் இந்த உலகின் நிலையாமை, அறியாமையால் மக்கள் படும் துன்பங்கள் இவைகளை நினைத்து பார்க்க ஆரம்பித்தான்.
பதினொன்று பன்னிரண்டு வயது பாலகனுக்கு இப்படிப்பட்ட எண்ணங்கள் மனத்தில் எழுமா?மக்களின் வாழ்க்கையை பற்றி ஆராயும் அளவுக்கு நுண்ணறிவு இருக்குமா என்று நீங்கள் கேட்கலாம். கதாதரன் சாதாரண சிறுவன் அல்ல, சாதாரண சிறுவர்களுக்கு இந்த வயதில் இப்படிப்பட்ட எண்ணங்கள் வராது. பிறக்கும் போதே அசாதாரண ஆற்றலுடன் கதாதரன் பிறந்தால், நன்கு பக்குவம் பெற்ற மனிதனுடைய மனநிலையை சிறுவயதிலேயே பெற்றிருந்தான்.இதில் வியப்படைவதற்கு ஒன்றும் இல்லை.

ஏட்டுக்கல்வியின் மீது கதாதரனுக்கு வெறுப்பு இருந்தாலும், அவன் பள்ளிக்கு செல்வதை நிறுத்தவில்லை.தன்னுடைய நண்பர்களை காணவேண்டும் என்ற ஆசையும் அதற்கு காரணம். தாய்மொழி நூல்களை படிப்பதிலும் எழுதுவதிலும் பயிற்சிபெற்றிருந்தான். சீதாநாத்பைன் , மதுஜுகி போன்றவர்கள் அவனை தங்கள் இல்லத்திற்கு அழைத்து சென்று பிரகலாத சரித்திரம்,துருவ சரித்திரம், ராமாயணம்,மகாபாரதம் போன்ற நூல்களை வாசிக்க கேட்டு மகிழ்ந்தனர்.
அந்த காலத்தில் பெரும்பாலானோர் எழுத படிக்க தெரியாதவர்களாக இருந்தார்கள். யாராவது புத்தகங்களை சத்தமிட்டு வாசிப்பதை கண்டால் சிறிது நேரம் நின்று அவைகளை கேட்டு செல்வார்கள். இவ்வாறு கதாதரன் இதிகாசங்களை படிப்பதை மக்கள் கேட்டு ரசிப்பார்கள்.
கதாதரனுக்கு பன்னிரண்டு வயது நடந்துகொண்டிருக்கம்போது, தனக்கு முன் பிறந்த அண்ணன் ராமேசுவரருக்கு இருபத்திரண்டு வயது.தங்கை சர்வமங்களாவிற்கு வயது ஒன்பது. சர்வமங்களாவை ராம்சதய் என்பவர் திருமணம் செய்துகொண்டார். ராம்சதய்யின் தங்கையை ராமேசுவரர் திருமணம் செய்துகொண்டார்.இதனால் வரதட்சிணை கவலை இல்லை.
கதாதரனது மூத்த அண்ணன் ராம்குமாரின் மனைவி திடீரென இறந்துவிட்டதால் அவரது வாழ்க்கை துன்பம் நிறைந்ததாக மாறியது. அவரால் முன்பு போல சம்பாதிக்க முடியவில்லை. இன்னொரு அண்ணன் ராமேசுவரரின் வருமானம் குடும்பத்தை நிர்வகிக்க போதுமானதாக இல்லை.குடும்பம் மீண்டும் வறுமையை நோக்கி செல்ல ஆரம்பித்தது. எனவே வேறு வருமானத்திற்காக ராம்குமார் கல்கத்தா வந்தார்.
---
தொடரும்....
---
---
தொடரும்....
---
No comments:
Post a Comment