Sunday, 20 November 2016

அற்புதங்கள் நிகழ்த்தும் யோகி

அற்புதங்கள் நிகழ்த்தும் யோகி
---
அசாதாரண ஆற்றல்களில் வல்லவரான யோகி ஒருவரை சுவாமிஜி ஐதராபாத்தில் சந்தித்தார். எந்தப் பொருளை வேண்டுமானாலும் வரவழைக்கும் வல்லமை பெற்றவர் அவர். அன்பர்கள் சிலருடன் சுவாமிஜி அவரைக் காணச் சென்றார். அப்போது அந்தயோகிக்குக் காய்ச்சல் கண்டிருந்தது. சுவாமிஜி அவரிடம் சென்று அவரது ஆற்றல்களைக் காட்டுமாறு கூறியதும் அந்த யோகி' கட்டாயமாகக் காட்டுகிறேன். ஆனால் அதற்கு முன்பு நீங்கள் என் தலையில் கைவைத்து ஆசீர்வதியுங்கள். எனது காய்ச்சல் குணமாகட்டும்' என்றார்.
சுவாமிஜியும் அதுபோல் கை வைத்தார். பிறகு அந்த யோகி அவர்களிடம், "நீங்கள் உள்களுக்குத் தேவையானவற்றை ஒரு காகிதத்தில் எழுதி என்னிடம் கொடுங்கள்' என்றார். அந்தப் பகுதியில் கிடைக்காத திராட்சை, ஆரஞ்சு போன்ற பழங்களின் பெயர்களையெல்லாம் எழுதி அவரிடம் கொடுத்தார்கள். ஒரு கௌபீனம் மட்டுமே உடுத்திருந்த அவருக்கு சுவாமிஜி ஒரு சால்வையைக் கொடுத்தார். அதை அவர் போர்த்திக் கொண்டார். அதனுள்ளிருந்து குலைகுலையாகத் திராட்சை, ஆரஞ்சுப் பழங்கள் என்று அவர்கள் கேட்ட அனைத்தையும் கொடுத்தார். ஆவி பறக்கும் சூடான அரிசி சாதம்கூட வரவழைத்தாராம்! அவற்றை உண்ணுமாறு சுவாமிஜியிடம் கூறினார். அது ஏதோ மனவசிய வேலையாக இருக்கும் என்று கருதிய அன்பர்கள் சுவாமிஜியைத் தடுத்தனர். ஆனால் அந்த யோகியே அதை உண்ண ஆரம்பித்ததும் எல்லோரும் சாப்பிட்டார்கள். எல்லாம் நன்றாகவேஇருந்தன. சடைசியாக, அற்புதமான ரோஜா மலர்களை வரவழைத்தார். இதழ்கள் சற்றும் வாடாமல் வதங்காமல் பனித்துளிகளுடன் புத்தம் புதியவையாக அவை இருந்தன. ஒன்றிரண்டல்ல, ஏராளம் மலர்கள்! 'அது எப்படி? என்று சுவாமிஜி கேட்டபோது, 'எல்லாம் கைவித்தை' என்றார் அந்த யோகி.
--
-- விவேகானந்தர் விஜயம் --- அட்மின் சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment