சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-35
-----
🌿 தன்னைத் தேடும்படியும் உணரும்படியும் உங்களைத் தூண்டுவது, உங்களுக்கு உள்ளே இருக்கும் கடவுள்தான்
---
🌿 கோயில்களிலும் சர்ச்சுகளிலும் மண்ணிலும் விண்ணிலும் மற்றெல்லா இடங்களிலும் பல காலமாகக் கடவுளைத் தேடிவிட்டு, ஆரம்பித்த இடத்திற்கே அதாவது உங்கள் ஆன்மாவிற்கே கடைசியில் வந்து சேருகிறீர்கள்.
---
🌿 இந்த ஆன்மாவைத் தான் நீங்கள் உலகமெல்லாம் தேடினீர்கள். இந்த ஆன்மாவை உணர்வதற்காகத்தான் கோயில்களிலும் சர்ச்சுகளிலும் அழுதீர்கள். பிரார்த்தனை செய்தீர்கள். இந்த ஆன்மாவைத்தான் மேகங்களுக்குமேல் மறைந்திருக்கும் மர்மங்களுக்குள் மர்மம் என்று நினைத்தீர்கள்.
---
🌿 இந்த ஆன்மா உங்கள் உயிருக்கு உயிராக, அருகிலுள்ள அனைத்திலும் மிக அருகில் இருக்கிறது.
---
🌿 உங்கள் உடல், பொருள், ஆவி இவற்றின் உண்மையான உருவம் இந்த ஆன்மாதான். இதுதான் உங்கள் உண்மையான இயல்பு.
---
🌿 நீங்களே பரம்பொருள், நீங்கள் எங்கும் நிறைந்தவர்கள் என்று சொன்னால் மனிதர்களுக்குப் பயம் ஏற்படுகிறது, நீங்கள் எல்லா பொருட்களின் மூலமாகவும் செயல்படுகிறீர்கள்; எல்லா கால்களின் மூலமாகவும் நடக்கிறீர்கள்; எல்லா உதடுகளின் மூலமாகவும் பேசுகிறீர்கள்; எல்லா இதயங்களின் மூலமாகவும் உணர்கிறீர்கள். இப்படிச் சொன்னாலே மக்கள் நடுங்குகிறார்கள். தங்கள் தனித்துவம் என்ன ஆவது? என்று அவர்கள் திரும்பத் திரும்பக் கேட்கிறார்கள்
----
🌿 நான் இந்தச் சிறிய உடம்பு என்று நினைத்த உடனேயே, மற்ற உடல்களுக்குக் கேடு செய்தாவது இந்த உடம்பைப் பாதுகாக்கவும் காப்பாற்றவும் அழகாக வைத்துக் கொள்ளவும் விரும்புகிறேன். அப்போதே நீங்கள் வேறு, நான் வேறு என்றாகி விடுகிறது. இந்தப் பிரிவுணர்ச்சியே எல்லா தீமைகளுக்கும் துன்பங்களுக்கும் காரணமாகிறது.
---
🌿 நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த எல்லைக்கு உட்பட்ட அற்பமான வாழ்க்கை மரணம், மரணமேதான், இதனால்தான் நமக்கு மரண பயம் ஏற்படுகிறது. இவ்வுலகில் ஒரேஓர் உயிர் வாழ்ந்திருக்கும்வரை நானும் வாழ்வேன் என்று உணரும் போதுதான் மனிதனால் மரண பயத்தை வெல்ல முடியும்.
----
🌿 எல்லாவற்றிலும் நான் இருக்கிறேன். எல்லோருள்ளும் நான் இருக்கிறேன். எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் நான் இருக்கிறேன். பிரபஞ்சமே நான்தான் என்று எப்போது ஒரு மனிதன் உணர்கிறானோ அப்போதுதான் பயமற்ற நிலை அவனுக்கு வருகிறது.
----
🌿 நீங்களே பரம்பொருள், நீங்கள் இறைவன். நீங்கள் எங்கும் நிறைந்தவர்கள். நீங்கள் எல்லா பொருட்களின் மூலமாகவும் செயல்படுகிறீர்கள்; எல்லா கால்களின் மூலமாகவும் நடக்கிறீர்கள்; எல்லா உதடுகளின் மூலமாகவும் பேசுகிறீர்கள்; எல்லா இதயங்களின் மூலமாகவும் உணர்கிறீர்கள்.
----
🌿 பழைய மூடநம்பிக்கைகளை எல்லாம் விட்டுவிட்டு உண்மையை உணருங்கள்.

No comments:
Post a Comment