சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-46
----
நமது தேசீய இரத்தத்தில் ஒரு பயங்கரமான நோய் ஊர்ந்து கொண்டிருக்கிறது . அதாவது எதை எடுத்தாலும் எள்ளி நகையாடுவது, சிரத்தை இல்லாமல் இருப்பது. இந்த நோயை ஒழித்துக் கட்டுங்கள். வலிமையுடன் சிரத்தையைப் பெற்றவர்களாக இருங்கள் மற்றவை அனைத்தும் தாமாக நிச்சயம் வந்து சேரும்.
-
தாழ்ந்த நிலையிலுள்ள நம்முடைய மக்களுக்குக் கல்வியைத் தந்து இழந்து விட்ட தங்களின் உயர்ந்த நிலையை அவர்கள் வளர்த்துக் கொள்ளும்படி செய்ய வேண்டும். இதுதான் நாம் இப்போது செய்ய வேண்டிய ஒரே சேவையாகும்... உயர்ந்த கருத்துக்களை அவர்களுக்குக் கொடுங்கள் அந்த ஒரே ஒரு உதவி தான் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. பிறகு அதன் விளைவாக மற்ற நன்மைகள் எல்லாம் வந்து சேரும். இரசாயனப் பொருள்களை ஒன்றுசேர்த்து வைப்பதுதான் நமது கடமை பின்பு அவை இயற்க்கையின் விதியையொட்டித் தாமாகவே படிகங்களாக மாறிவிடும் இப்போது மலை முகமதுவிடம் செல்லாவிட்டால், முகமதுதான் மலையிடம் செல்ல வேண்டும். ஏழைப் பையன் கல்வியை நாடி வர முடியாவிட்டால், கல்வி தான் அவனை நாடிப்போக வேண்டும்.
--
. எத்தகைய கல்வி நல்ல ஒழுக்கத்தை உருவாக்குமோ மனவலிமையை வளர்க்கச் செய்யுமோ, விரிந்த அறிவைத் தருமோ ஒருவனைத் தன்னுடைய சுய வலிமையைக் கொண்டு நிற்கச் செய்யுமோ அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை.
--
.மேலைநாட்டு விஞ்ஞானத்தோடு இணைந்த வேதாந்தமும் பிரம்மசரியமும் வாழ்க்கையின் அடிப்படை இலட்சியங்களாக நமக்குத் தேவைப்படுகின்றன.

எல்லா விதமான அறிவும் மனிதனுக்குள்ளேயே இருக்கிறது என்று வேதாந்தம் சொல்கிறது. இந்த அறிவு ஒரு சிறுவனிடம் கூட இருக்கிறது. இந்த அறிவை விழித்து எழும்படி செய்வதுதான் ஆசிரியனுடைய வேலையாகும்.
--
மதம் தான் எல்லாவற்றிற்கும் உயிர் நாடி. சமய வாழ்க்கை சோறு போன்றது. மற்றவை எல்லாமே கறி, கூட்டுப் போன்றவை. கறி, கூட்டு வகைகளை மட்டும் உண்பதனால் அஜீர்ணம் ஏற்படு கிறது. அப்படியே சோற்றை மட்டுமே சாப்பிட்டாலும் அஜீர்ணம் ஏற்படும்.
--
.பிரம்மசரியத்தை உறுதியாக அனுஷ்டிக்கிற ஒரே ஒரு காரணத்தாலேயே எல்லா விதமான கல்வியறிவையும் மிகக் குறுகிய காலத்தில் கற்றுத்தேர்ச்சி பெற்றுவிட முடியும். அத்தகையவன் ஒரே ஒரு முறை தான் கேட்டதையும் அறிவதையும் மறவாமல் நினைவில் வைத்துக் கொள்கிறான். இப்படிப்பட்ட பிரம்மசரியம் நம் நாட்டில் இல்லாமல் போனதனால் தான் எல்லாமே இன்று அழிந்து போகும் நிலையில் இருக்கின்றன.
-
. கற்பு நிலையிலிருந்து வழுவுவதுதான் ஒரு நாட்டின் அழிவிற்கு முதல் அறிகுறி என்பதை வரலாற்றில் நீ பார்க்கவில்லையா? கற்புத் தவறுதல் என்ற கேடு சமுதாயத்தில் நுழையும்பொழுது அந்த இனத்திற்கு முடிவுக் காலம் நெருங்குவது தெளிவாகிவிடுகிறது.
-
.ஒரு கொள்கையை எடுத்துக் கொள். அதற்காகவே உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக்கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும்.
--
.அன்பு நேர்மை , பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றுமே நமக்குத் தேவையில்லை அன்புதான் வாழ்க்கை ஆகும்.

சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய- 97 89 37 41 09 அட்மின்-சுவாமி வித்யானந்தர்
--
No comments:
Post a Comment