Sunday, 20 November 2016

பலவீனங்களை நேரில் கூறினால் திருத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்

பலவீனங்களை நேரில் கூறினால் திருத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்
மைசூர் மாகாண திவானான சேஷாத்ரி ஐயரின் விருந்தினராக மூன்று நான்கு வாரங்கள் தங்கினார் சுவாமிஜி. மைசூர் அரசவையின் முக்கியப் பிரமுகர்கள் பலரை அங்கே அவரால் சந்திக்க முடிந்தது.
சுவாமிஜியின் ஆழ்ந்த அறிவையும் உன்னதமான லட்சியங்களையும் கண்ட திவான் அவரை மைசூர் மன்னரான சாமராஜேந்திர உடையாருக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதன்பிறகு சுவாமிஜி மைசூர் மன்னரின் விருந்தினராக அரண்மனையில் தங்கினார். சுவாமிஜியுடன் இயன்ற அளவு நேரத்தைச் செலவிட்டார் மன்னர்.
ஒருநாள் அரசவைப் பிரமுகர்கள் பலரது முன்னிலையில் மன்னரும் சுவாமிஜியும் பேசிக் கொண்டிருந்தனர்.
மன்னர் தனது அமைச்சர்களை புகழ்ந்து சுவாமிஜியிடம் பேசிக்கொண்டிருந்தார்
சுவாமிஜி: 'மன்னா! நீங்கள் பரந்த இதயம் படைத்தவர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, உங்களைச் சூழ்ந்துள்ளவர்கள் மற்ற அரசவையினரைப் போன்றவர்கள் தான். அதாவது, அவர்களைப்பற்றி பெரிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை.'
மன்னர் தனது திவானை குறித்து பெருமையாக பேசினார்
சுவாமிஜி: 'ஆனால் மகாராஜா, திவான் என்றாலே மன்னனை வஞ்சித்து ஆங்கிலேயனுக்குப் பொருள் சேர்ப்பவர்தானே!
இதன்பிறகும் இந்த உரையாடலை நீட்டிக் கொண்டு போக விரும்பாத மன்னர் வேறு விஷயம்பற்றி பேசத் தொடங்கினார். பின்னர் சுவாமிஜியிடம் தனிமையில் இதுபற்றி கூறினார்.
மன்னர்: 'என் அன்பிற்குரிய சுவாமிஜி! வெளிப்படையாகப் பேசுவது சிலவேனைகளில் பிரச்சினையாகிவிடும். அரசவைப் பிரமுகர்களின் முன்னிலையிலேயே அவர்களைப்பற்றி இப்படிப் பேசினால் அவர்களில் யாராவது உங்களை விஷம் வைத்துக் கொல்லக்கூட துணிந்துவிடுவார்கள்.'
சுவாமிஜி: 'செய்யட்டும்! உயிர் போய்விடும் என்று பயந்து ஓர் உண்மையான சன்னியாசி சத்தியத்தைக் கைவிடுவானா? மகாராஜா! ஒரு வேளை உங்கள் மகனே நாளை என்னிடம் வந்து,"எ்ன அ்பபாவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்பதாக வைத்துக் கொள்வோம். உங்களிடம் இல்லாத குணங்களையெல்லாம் இருப்பதாகக்கூறி உங்களை ", "இந்திரன், சந்திரன்" என்று புகழ்வேனா என்ன! நான் பொய் சொல்வதா! அது ஒருபோதும் நடக்காது.'
உண்மை என்பதில் தீவிர உறுதிப்பாடு கொண்டவராக இருந்தார் சுவாமிஜி. இதற்காக, உண்மை என்ற பெயரில் பிறரது மனத்தைப் புண்படுத்துவதை அறவே வெறுத்தார் அவர். ஒருவரின் பலவீனத்தை அவர் முன்னிலையில் கூறுவதும், அவரது நற்பண்புகளை அவர் இல்லாதபோது புகழ்வதும் பெரியோர் இயல்பாகும். சுவாமிஜியிடம் அந்தப் பண்பு ஊறியிருந்தது. பின்னாளில் தமது சீடர்களிடம்கூட சுவாமிஜி இப்படியே நடந்து கொண்டார். பலவீனங்களை எடுத்துக் கூறுவதால் அவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும். நற்பண்புகள் நேராகப் புகழ்ந்தால் ஆணவம் தலைதூக்க நேரும். எனவே அதனைத் தவிர்த்தார் சுவாமிஜி.
--
-- விவேகானந்தர் விஜயம் --- அட்மின் சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment