விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -47
--
உலக அரங்கில் இந்து மதத்தின் புகழைத் தன் சொற்பொழிவால் நிலைநிறுத்தியவர் சுவாமி விவேகானந்தர்,அமெரிக்கப் பயணத்தை முடித்து விட்டு இலங்கை மார்க்கமாக 26.01.1897 அன்று பாம்பன் குந்துகால் பகுதியில் வந்திறங்கினார் . பாம்பனில் மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தார் அன்றைய ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதி. விவேகானந்தரின் பாதங்கள் தன் தலையில் பட்ட பிறகே தரையைத் தொடவேண்டும் என முழங்காலிட்டு அமர்ந்த சேதுபதி மன்னரின் செயலை மறுத்து அவரை ஆரத் தழுவினார் விவேகானந்தர்.
-
பாம்பன் வரவேற்பு விழாவில் பேசிய விவேகானந்தர், “உலக சர்வசமய மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று பாஸ்கர சேதுபதி தனக்கு வந்த அழைப்பிதழை என்னிடம் கொடுத்து, என்னை கலந்துகொள்ள வலியுறுத்தினார். இடையறாது என்னைத் தூண்டி முழு உதவியும் செய்து வழியனுப்பினார். இதுவரை வெளியுலகு அறியாது சாதாரணத் துறவியாக இருந்த என்னை உலகறிய உலக ஞானியாக மாற்றியவரும் பாஸ்கர சேதுபதியே. இந்த நல்ல பணிக்கு இந்திய நாடே கடமைப்பட்டுள்ளது. இந்து மதத்திற்கு என்னால் ஏதேனும் நன்மை உண்டாகுமானால் அதன் சிறப்பனைத்திற்கும் பாத்திரமானவர் சேதுபதி” என்று தமது அருகில் இருந்த பாஸ்கர சேதுபதி மன்னரை நெகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்டி மகிந்தார் விவேகானந்தர்.
பாம்பனிலிருந்து அருகில் உள்ள மாளிகைக்கு சுவாமிஜி அரசரின் குதிரை வண்டியில் அழைத்து சென்றார்கள்.சிறிது தூரம் சென்றதும் குதிரைகளை அவிழ்த்துவிட்டு மன்னரும் மற்றவர்களும் வண்டியை இழுத்து வந்தார்கள்
-
ராமநாதபுரத்தில் சுவாமிஜி சொற்பொழிவாற்றினார்.அங்கு சுவாமிஜிக்கு ராஜரிஷி என்ற பட்டம் வழங்கப்பட்டது.ராமநாதபுரத்த ிலிருந்து புறப்பட்டு பரமகுடியை அடைந்தார்.சில நேரங்களில் குதிரை வண்டியும் சில இடங்களில் மாட்டுவண்டியும் என சுவாமிஜியின் பயணம் நடந்தது. பரமகுடியில் மக்கள்மத்தில் சொற்பொழிவாற்றிவிட்டு,மானா மதுரை பிறகு அங்கிருந்து மதுரையை அடைந்தார்.அங்கே சொற்பொழிவை முடித்துவிட்டு கும்பகோணத்திற்கு ரயிலில் புறப்பட்டார். ரயில் நிலையங்கள் அனைத்திலும் ஏராளமான மக்கள் திரண்டிருந்தார்கள்.பல இடங்களில் சுவாமிஜியை பாரட்டி பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.
-
சென்னையை நோக்கி சுவாமிஜி வரும்போது ஒரு சிறிய ஸ்டேசனில் ரயில் நிற்காது.ஆனால் அங்கு திரண்டமக்கள் ரயிலை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டார்கள். ரயிலை நிறுத்த முடியாது என்று ஸ்டேன்மாஸ்டர் சொன்னதும்.சுவாமிஜியை காணவந்த மக்கள் அனைவரும் ரயில் தண்டவாளங்களில் படுத்துக்கொண்டனர்.கடையில் வேறுவழியின்றி ரயில் நின்றது. சுவாமிஜியை மக்கள் தரிசிக்க வாய்ப்புகிடைத்து.மக்களின் இந்த செயல் சுவாமிஜியை உணர்ச்சிவசப்படுத்தியது.
-
தொடரும்....
-
--விவேகானந்தர் விஜயம்---அட்மின் சுவாமி வித்யானந்தர்
--
உலக அரங்கில் இந்து மதத்தின் புகழைத் தன் சொற்பொழிவால் நிலைநிறுத்தியவர் சுவாமி விவேகானந்தர்,அமெரிக்கப் பயணத்தை முடித்து விட்டு இலங்கை மார்க்கமாக 26.01.1897 அன்று பாம்பன் குந்துகால் பகுதியில் வந்திறங்கினார் . பாம்பனில் மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தார் அன்றைய ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதி. விவேகானந்தரின் பாதங்கள் தன் தலையில் பட்ட பிறகே தரையைத் தொடவேண்டும் என முழங்காலிட்டு அமர்ந்த சேதுபதி மன்னரின் செயலை மறுத்து அவரை ஆரத் தழுவினார் விவேகானந்தர்.
-
பாம்பன் வரவேற்பு விழாவில் பேசிய விவேகானந்தர், “உலக சர்வசமய மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று பாஸ்கர சேதுபதி தனக்கு வந்த அழைப்பிதழை என்னிடம் கொடுத்து, என்னை கலந்துகொள்ள வலியுறுத்தினார். இடையறாது என்னைத் தூண்டி முழு உதவியும் செய்து வழியனுப்பினார். இதுவரை வெளியுலகு அறியாது சாதாரணத் துறவியாக இருந்த என்னை உலகறிய உலக ஞானியாக மாற்றியவரும் பாஸ்கர சேதுபதியே. இந்த நல்ல பணிக்கு இந்திய நாடே கடமைப்பட்டுள்ளது. இந்து மதத்திற்கு என்னால் ஏதேனும் நன்மை உண்டாகுமானால் அதன் சிறப்பனைத்திற்கும் பாத்திரமானவர் சேதுபதி” என்று தமது அருகில் இருந்த பாஸ்கர சேதுபதி மன்னரை நெகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்டி மகிந்தார் விவேகானந்தர்.
பாம்பனிலிருந்து அருகில் உள்ள மாளிகைக்கு சுவாமிஜி அரசரின் குதிரை வண்டியில் அழைத்து சென்றார்கள்.சிறிது தூரம் சென்றதும் குதிரைகளை அவிழ்த்துவிட்டு மன்னரும் மற்றவர்களும் வண்டியை இழுத்து வந்தார்கள்
-
ராமநாதபுரத்தில் சுவாமிஜி சொற்பொழிவாற்றினார்.அங்கு சுவாமிஜிக்கு ராஜரிஷி என்ற பட்டம் வழங்கப்பட்டது.ராமநாதபுரத்த
-
சென்னையை நோக்கி சுவாமிஜி வரும்போது ஒரு சிறிய ஸ்டேசனில் ரயில் நிற்காது.ஆனால் அங்கு திரண்டமக்கள் ரயிலை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டார்கள். ரயிலை நிறுத்த முடியாது என்று ஸ்டேன்மாஸ்டர் சொன்னதும்.சுவாமிஜியை காணவந்த மக்கள் அனைவரும் ரயில் தண்டவாளங்களில் படுத்துக்கொண்டனர்.கடையில் வேறுவழியின்றி ரயில் நின்றது. சுவாமிஜியை மக்கள் தரிசிக்க வாய்ப்புகிடைத்து.மக்களின் இந்த செயல் சுவாமிஜியை உணர்ச்சிவசப்படுத்தியது.
-
தொடரும்....
-
--விவேகானந்தர் விஜயம்---அட்மின் சுவாமி வித்யானந்தர்
No comments:
Post a Comment