சுவாமி விவேகானந்தர் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள்--பகுதி-34
-
-
"காவி" - பிச்சைக்காரர்களின் உடை!
--
1891 பிப்ரவரியில் ஆல்வார் ரயில் நிலையத்தில் இறங்கினார் சுவாமிஜி. அங்கிருந்து கால்போன திசையில் மெதுவாக நடக்கலானார். இரு பக்கங்களிலும் பூத்துக் குலுங்கிய மலர்ச் சோலைகள், பரந்து விரிந்த வயல்வெளிகள், வரிசை வரிசையாக வீடுகள் என்று மாறிமாறி வந்த அழகிய காட்சிகளில் உள்ளத்தைப் பறிகொடுத்தவாறு நடந்து அரசு மருத்துவமனையை அடைந்தார். அங்குள்ள டாக்டரான குரு சரண்லஸ்கர் வெளியே நின்றிருந்தார். சுவாமிஜியின் தோற்றம் அவரை மிகவும் கவர்ந்தது. சுவாமிஜி நேராக அவரிடம் சென்று, 'துறவிகள் தங்குவதற்கு இங்கு ஏதாவது இடம் இருக்கிறதா?' என்று கேட்டார். குரு சரண் அங்குள்ள கடைத்தெரு ஒன்றிற்கு அழைத்துச் சென்றார். ஒரு கடையின் மாடியில் துறவிகள் தங்குவதற்கென்று ஓர் அறை இருந்தது. அதனை சுவாமிஜிக்குக் காட்டி, அங்கே அவரைத் தங்கச் செய்து வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்தார்.

சுவாமிஜியிடம் அறிமுகக் கடிதங்கள் எதுவும் இல்லை. எனவே உணவிற்கோ தங்கவோ வேறு ஏற்பாடுகள் இல்லை. அப்போது அந்தக் கடைக்கு அருகில் வாழ்ந்த முதிய பெண்மணி ஒருத்தி சுவாமிஜியிடம் ஈடுபாடு கொண்டாள். அவள் அவரை 'லாலா' (குழந்தாய்!)என்று அன்புடன் அழைப்பாள். தன் கையாலேயே சப்பாத்தி செய்து தினமும் கொண்டுவந்து சுவாமிஜிக்கு ஊட்டுவாள். சிலவேளைகளில் ராமஸ்னேஹி என்ற வைணவத் துறவியும் சுவாமிஜியுமாகப் பிச்சைக்குச் செல்வார்கள். கோதுமை மாவு பெற்று வருவார்கள். ராமஸ்னேஹி சப்பாத்தி செய்வார். இருவருமாகச் சாப்பிடுவார்கள். இவ்வாறு சுவாமிஜியின் நாட்கள் கழிந்தன.
சுவாமிஜியை ஆரம்பத்தில் அங்கே பெரிதாக மக்கள் அறியவில்லை. பின்னர் படிப்படியாகக் கூட்டம் வரத் தொடங்கியது. காலை மாலை வேளைகளில் சுவாமிஜி பாடுவார். அதைக் கேட்கவே கூட்டம் திரளும். ஒருநாள் அவர்களில் ஒருவர் 'சுவாமிஜி, நீங்கள் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்?' என்று கேட்டார். 'காயஸ்தர்' என்றார் சுவாமிஜி. மற்றொருவர், 'நீங்கள் ஏன் காவி அணிந்துள்ளீர்கள்?' என்று கேட்டார். 'ஏனெனில் அது பிச்சைக்காரர்களின் உடை' என்றார் சுவாமிஜி.
--
-- விவேகானந்தர் விஜயம் --- அட்மின் சுவாமி வித்யானந்தர்
--
-- விவேகானந்தர் விஜயம் --- அட்மின் சுவாமி வித்யானந்தர்
No comments:
Post a Comment