Sunday, 20 November 2016

வாழ்வில் நடந்த சில சம்பவங்கள்--பகுதி-22

சுவாமி விவேகானந்தர் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள்--பகுதி-22
-
தடியை ஓங்கினால் தானம்..
---
அல்மோராவிலிருந்து கர்ண பிரயானை, ருத்u பிரயாகை வழியாக சுவாமிஜி, சாரதானந்தர், அகண்டானந்தர், கிருபானந்தர் ஆகியோர் ஸ்ரீநகரை அடைந்தனர். அளகானந்தா நதிக்கரையில் துரியானந்தர் ஒரு சமயம் வாழ்ந்த குடிசையில் அனைவரும் தங்கினர். இங்கே சுமார் ஒன்றரை மாதங்கள் தங்கி, பிச்சையுணவு ஏற்று வாழ்ந்தனர். முழு நேரமும் பிரார்த்தனை, தியானம், சாஸ்திரப் படிப்பு என்று நாட்கள் கழிந்தன.
ஸ்ரீநகரில் தமது பள்ளி ஆசிரியர் ஒருவரைச் சந்தித்தார் சுவாமிஜி. இவர் சமீபத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர். சுவாமிஜி அவரிடம் இந்து மதத்தின் பெருமைகளை எடுத்துக் கூறினார். சுவாமிஜியின் வார்த்தைகளைக் கேட்ட ஆசிரியர், தாம் மதத்திற்கு வர ஏங்கினார். பின்னாளில் துறவியரிடம் மிகுந்த மதிப்புக் கொண்டவராக வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் அவர்களைத் தம் வீட்டில் அழைத்து உபசரித்தார்.
அங்கிருந்து அனைவரும் ஸ்ரீநகர் வழியாக டெஹ்ரியை அடைந்தனர். ஒரு கிராமத்தில் சென்று கொண்டிருந்தபோது இரவு கவியத் தொடங்கியது. பசியால் அவர்கள் மிகவும் களைப்புற்றிருந்தனர். பாழடைந்த ஒரு சத்திரத்தில் சாமான்களை வைத்துவிட்டு பிச்சைக்காக வெளியில் சென்றனர். வீடுகளில் கேட்டும் எதுவும் கிடைக்கவில்லை. யாரும் இவர்களைப் பொருட்படுத்தவே இல்லை. 'இமயப் பகுதி இல்லை. ஆனால் அவர்கள் தானம் தர வேண்டுமானால் நாம் தடியை ஓங்க வேண்டும்' என்ற பழமொழி ஒன்று உள்டு. அதனை நினைவுகூர்ந்தார் அகண்டானந்தர். எனவே எல்லோரும் கைத்தடிகளை ஓங்கி, 'உணவு தராவிட்டால் கிராமத்தையே சூறையாடி விடுவோம்' என்று உரத்த குரலில் ஆவேசமாகக் கூறி அனைவரையும் பயமுறுத்தினர். அவ்வளவுதான், உணவும் தேவையான அனைத்தும் அவர்கள் இருந்த இடத்திற்குத் தானாக வந்து சேர்ந்தன. வேண்டியவற்றைக் கொடுத்துவிட்டு பயபக்தியுடன் கைகட்டி நின்றனர் அந்தக் கிராம மக்கள்!
--
--விவேகானந்தர் விஜயம்---அட்மின் சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment