Thursday, 17 November 2016

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -45

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -45
--
அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு ஐரோப்பா வழியாக சுவாமிஜி இந்தியாவிற்கு புறப்பட்டார்.முதலில் லண்டன் பிறகு பிரான்ஸ் வழியாக ரயிலில் பயணித்து ரோமை அடைந்தார்.அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயங்களின் ஆடம்பரங்களை கண்டு இதுவா இயேசுகிறிஸ்து போதித்த மதம்?ஆடம்பரங்களை வெறுத்து ஒதுக்கிய ஏசுகிறிஸ்துவுக்கும் ஆடம்பரங்களில் மூழ்கிக்கிடக்கும் இந்த மதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.1896 டிசம்பர் 30 ல் நேபிள்ஸிலிருந்து கப்பலில் புறப்படார்.அவருடன் சில ஆங்கிலேய சீடர்களும் பயணித்தார்கள்.
கப்பல் போர்ட் துறைமுகத்தை நெருங்கிக்கொண்டிருந்த வேளை,சுவாமிஜிக்கு வினோத கனவு ஒன்று வந்தது.தாடி வைத்த முதியர் ஒருவர் அவரது கனவில் தோன்றினார்.அவரே அதை பிறகு விளக்கினார். மத்திய தரைக்கடல் வழியாக கப்பல் வந்து கொண்டிருந்தது.அப்போது வயதான ரிஷி ஒருவர் எனது கனவில் தோன்றினார்.அவர் என்னிடம் எங்கள் பழைய நிலையை எங்களுக்கு மீட்டுத்தாருங்கள்.நாங்கள் இந்தியாவின் புராதன ரிஷிகளாகிய தேராபுத்தர்களின் வழி வந்தவர்கள்(புத்தமதபிரிவு).நாங்கள் போதித்த உண்மையை ஏசுகிறிஸ்து என்று ஒருவர் போதித்ததாக பிரச்சாரம் செய்கிறார்கள்.உண்மையில் ஏசு என்று ஒருவர் பிறக்கவில்லை.இந்த இடத்தை தோண்டிப்பார்த்தால் அதற்கான ஆதாரங்கள் கிடைக்கும் என்றார்.உடனே நான் எந்த இடத்தை தோண்டிப்பார்க்க வேண்டும் என்றேன்.உடனே அவர் துருக்கியின் ஒரு பகுதியைக்காட்டி இதோ இந்த இடம்தான் என்றார்.எனது கனவு கலைந்தது.உடனே கப்பலின் மேல் தளத்திற்கு ஓடிச்சென்று கப்பல் கேப்டனிடம், இப்போது நாம் எந்த இடத்தில் சென்று கொண்டிருக்கிறோம் என்று கேட்டேன்.கிரீட் தீவுக்கு அருகில்.அதோ பாருங்கள் அங்கே தான் துருக்கியும் கிரீட் தீவும் உள்ளன என்றார்.
இந்த நிகழ்வுக்கு பிறகு இயேசுகிறிஸ்து என்று ஒருவர் உண்மையிலேயே பிறந்தாரா?அல்லது தேராபுத்தர்களின் உபதேசத்தை கிறிஸ்தவர்கள் மாற்றி பரப்புகிறார்களா என்ற சந்தேகம் சுவாமிஜிக்கு வந்தது.இது பற்றி உரிய ஆராய்ச்சி நடத்தவேண்டும் என்று சுவாமிஜி விரும்பினார்.அது குறித்து ஆங்கிலேய நண்பருக்கு கடிதம் எழுதினார்.(சுவாமிஜி மறைந்த பிறகு இதற்கான ஆராய்ச்சி நடைபெற்றது.ஆனால் ஆராய்ச்சி முடிவுகள் முறையாக வெளியிடப்படவில்லை)
-
கடற்பயணத்தின் போது இரு பாதிரியார்கள் அவ்ரிடம் வந்து கிறிஸ்தவ மதம் ஹிந்து மதம் ஆகிய இரு மதங்களுக்கிடையே உள்ள நல்ல் அம்சங்கள் மற்றும் தீய அம்சங்களைப் பற்றி விவாதிக்க வலியுறுத்தினர். வாதம் ஆரம்பமானது.தங்கள் பக்கம் தோல்வி நிச்சயம் என்ற சூழ்நிலையில் அந்த பாதிரிமார்கள் இருவரும் மிக மோசமாக ஹிந்து மதத்தையும் ஹிந்துக்களையும் திட்ட ஆரம்பித்தனர். ஸ்வாமிஜி பொறுத்துப் பார்த்தார்.வசை பாடல் தொடர்ந்தது. ஸ்வாமிஜியால் பொறுக்க முடியாத சூழ்நிலை. ஸ்வாமிஜி இருவரில் ஒருவரின் காலரைப் பற்றினார்.சிரித்தவாறே ஆனால் மிகவும் தீவிரமான தொனியில் , :”இனியும் என் மதத்தைப் பற்றி தூஷித்தால் இந்தக் கடலில் உங்களைத் தூக்கி வீசி எறிந்து விடுவேன்” என்றார்.ஸ்வாமிஜியின் கட்டுமஸ்தான உடல் வாகு அனைவரும் அறிந்ததே!நடுநடுங்கிப் போன பாதிரியார், “ஐயா! என்னை விட்டு விடுங்கள். நான் போகிறேன்.இனிமேல் இப்படிப் பேச மாட்டேன்” என்று கெஞ்சலானார்.ஸ்வாமிஜி அவரை விடுவித்தார். அன்று முதல் அந்த்ப் பயணம் முழுவதும் ஸ்வாமிஜியிடம் அந்தப் பாதிரியார் மிகுந்த மரியாதையுடன் நடக்கலானார்.கல்கத்தாவில் தன்னைச் சந்திக்க வந்த சிஷ்யர் பிரியநாத் சின்ஹாவிடம், ‘ஒரு மனிதன் தன் ம்தத்தை உண்மையாக நேசிக்கையில் அவன் தைரியசாலியாகவும் துணிச்சலுடனும் திகழ்வான். அப்படிப்பட்ட தைரியம் ஒற்றுமையை உருவாக்கும்.அது தான் ஹிந்துக்களிடையே இல்லை’ என்று ஸ்வாமி விவேகானந்தர் கூறினார். ஸ்வாமிஜி பிரியநாத்திடம், “உன்னிடம் உன் தாயாரைப் பற்றி ஒருவர் தூஷித்தால் நீ என்ன செய்வாய்?” என்று கேட்டார்.“அவன் கழுத்தைப் பிடித்து அவனுக்குத் தக்க பாடம் கற்பிப்பேன்” என்றார் பிரியநாத்.அந்த பதிலால் ஸ்வாமிஜி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.“நன்றாய் சொன்னாய், சின்ஹா! நீ இப்படி அசைக்க முடியாத நம்பிக்கையை உன் ம்தத்தின் மீது கொண்டால், இந்த பாரத நாட்டின் மீது கொண்டால், உன் சகோதர ஹிந்துக்களை இந்த பாதிரிமார்கள் மதமாற்றம் செய்வதைக் காணப் பொறுக்கமாட்டாய்.. ஒவ்வொரு நாளும் இந்த மதமாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. என்றாலும் கூட நீ சும்மாதான் இருக்கிறாய்? எங்கே உன் மதப்பற்று? எங்கே உன் தேசபக்தி? ஒவ்வொரு நாளும் கிறிஸ்தவ பிரசாரகர்கள் உன் கண் முன்னாலேயே ஹிந்து மதத்தை இழிவு படுத்திப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதைக் கண்டித்து ஹிந்து மதத்தைக் காப்பாற்றும் வகையில் எத்தனை பேர் முன் வருகிறார்கள்?” என்று கேட்டார்.ஸ்வாமிஜி எல்லா மதத்தையும் மதிக்க வேண்டும் என்று சொன்ன அதே தருணம் நம் மதத்தை நேசித்துப் போற்றுதல் மட்டும் போதாது; மதமாற்றம் என்று வரும் போது அதைத் தடுக்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தினார்.அதற்குத் தானே உதாரணமாக இருந்ததை தன் கடல் பயண சம்பவம் மூலம் உணர்த்தினார்.
-
தொடரும்....
-
--விவேகானந்தர் விஜயம்---அட்மின் சுவாமி வித்யானந்தர்

1 comment:

  1. ஹிந்து சமயத்தில் இல்லாதது எது மாற்று மதங்களில் உள்ளதாகக் கருதி மதம் மாற்றுகிறார்கள்...???

    ReplyDelete