சுவாமி விவேகானந்தர் உலகிற்கு அளித்தது என்ன?
-
1.மனிதனைப்பற்றி ஒரு புதிய கண்ணோட்டம்.
-
ஒவ்வொரு மனிதனும் தெய்வீகமானவன்.மனிதன் என்பவன் பரிணாமத்தின் சிகரத்தில் இருப்பவன்,தெய்வாம்சம் பொருந்தியவன்.தன் விதியை தானே உருவாக்குபவன் என்ற புதிய கண்ணோட்டத்தை வழங்கினார்
-
2.கடவுளைப்பற்றிய புதிய கண்ணோட்டம்.
-
கடவுள் என்பவர் நவீன விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகளுக்கு எதிரானவர் அல்ல.அவர் வான மண்டலத்தில் அமர்ந்து மனிதனை ஆட்டிவைக்கின்ற கடவுள் அல்ல.அவர் மனிதர்களின் உள்ளே ஆன்மாவாக உறைபவர்.
-
3.வாழ்க்கையைப் பற்றிய ஒரு புதிய கண்ணோட்டம்.
-
கடவுளை அடைவதற்காகவே இந்த வாழ்க்கை இருக்கிறது.சாதாரண வாழ்க்கையையே ஆன்மீகமயமாக்கிக்கொண்டால்,இந்த இயற்கையின் பிடியிலிருந்து விடுதலை அடையமுடியும்.மனிதன் ஆன்மீகத்தை அடைய குகைகளுக்கு செல்ல வேண்டியதில்லை. தொழிற்சாலைகளிலும்,வயல்வெளிகளிலும், அன்றாடம் செய்யும் வேலைகளின் மூலம் இறைவனை அடையமுடியும்.
-
4.நல்வழி,நல்லொழுக்கம் ஆகியவை பற்றிய ஒரு புதிய கண்ணோட்டம்.
-
நல்லொழுக்கம் என்பது பயத்தாலோ,வற்புறுத்தலாலோ,ஏதோ ஒரு புற சக்திக்கு அடிபணிவதாலோ வரவேண்டிய ஒன்று அல்ல.நாம் தெய்வீகமானவர்கள்,நாம் தெய்வங்கள்.அதனால் நல்லவர்களாக இருக்க வேண்டும்.
-
5.புதியதொரு சமுதாயம்.
-
ஏழைகள் அடக்குமுறைகளும் சுரண்டல்களும் அற்ற சமுதாயம்.ஜாதி,மத வேறுபாடுகள் இன்றி,அனைவரும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு வாய்ப்பு அளிக்கின்ற சமுதாயம்,சுதந்திரம்,சமத்துவம்,பெண்களுக்கு மதிப்பு ஆகியவை கொண்ட சமுதாயம்.
-
6. மதம் பற்றிய ஒரு புதிய கண்ணோட்டம்.
-
மூடநம்பிக்கைகள்,கொள்கைவெறி போன்றவை இல்லாத மதம்.இறைவனை நேருக்கு நேராக காண்பதே மதம்.ஏதோ சொர்க்கத்திற்கு சென்றபிறகு இறைவனை காண்பது அல்ல மதம். வாழும் போதே இறைவனின் தரிசனத்தை பெறுவது தான் மதத்தின் நோக்கம்.
-
7.ஜாதி,இனம்,மொழி,ஆண்பெண் என்ற எவ்வித பாகுபாடும் இன்றி மதம் அனைவருக்கும் சொந்தமானது. குறிப்பிட்ட பிரிவினரே இறைவனை காணமுடியும் என்றில்லாமல்,இறைவன் ஒவ்வொரு மனிதனுக்கும் சொந்தமானவர் என்ற கருத்தை புரியவைத்தார்.
-
விவேகானந்தர் விஜயம்- சுவாமி வித்யானந்தர்

No comments:
Post a Comment