Sunday, 20 November 2016

வேதாந்த விளக்கம் –சுவாமி விவேகானந்தர்-பகுதி-2

வேதாந்த விளக்கம் –சுவாமி விவேகானந்தர்-பகுதி-2
-
ச்ருண்வந்து விச்வே அம்ருதஸ்ய புத்ரா.....(சுவேதாஸ்வதர உபநிடதம்2.5.மற்றும்3.8)
---
”ஓ அழியாத பேரின்பத்தின் குழந்தைகளே! கேளுங்கள்,உயர் உலகங்களில் வாழ்பவர்களே கேளுங்கள் அனைத்து அருளையும் அனைத்து மாயையையும் கடந்த ஆதிமுதலை நான் கண்டுவிட்டேன்.அவரை அறிந்தால்தான் நீங்கள் மீண்டும் இறப்பிலிருந்து காப்பாற்றப்படுவீர்கள்”
---
அழியாத பேரின்பத்தின் குழந்தைகளே! ஆ,ஆ!எவ்வளவு இனிமையான எவ்வளவு நம்பிக்கை ஊட்டும் பெயர்! அருமை சகோதரர்களே!இந்த இனிய பெயரால் நான் உங்களை அழைக்க அனுமதி தாருங்கள்.ஆம் உங்களை பாவிகள் என்று அழைக்க இந்து மறுக்கிறான். நாம் ஆண்டவனின் குழந்தைகள்,அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள்,புனிதமானவர்கள்.வையத்துள் வாழும் தெய்வங்களே நீங்கள் பாவிகளா?மனிதனை அப்படி சொல்வது தான் பாவம்,மனித இயல்புக்கே அது அழியாத களங்கம்.மாயையை உதறித்தள்ளுங்கள்.நீங்கள் ஜடப்பொருள் அல்ல,நீங்கள் உடல் அல்ல நீங்கள் ஆன்மாக்கள்.சுதந்திரமானவர்கள்.
--
(கம்பிளீட் ஒர்க் ஆப் சுவாமி விவேகானந்தா(தமிழ்)புத்தகம்1.பக்கம்41)
--
விவேகானந்தர் விஜயம்-சுவாமி வித்யானந்தர்9789374109

No comments:

Post a Comment